108. பொண்ணு strip கிளப்பில் வேலை பாக்குறா

இதை சொன்னது என்னுடைய அமெரிக்க நண்பர். சென்ற வாரம் அனைவரது குடும்பத்தை பற்றியும் பேசிக்கொண்டு இருந்தோம் அப்பொழுது அவர் தன்னுடைய குடும்பத்தை பற்றி சொல்லும் பொழுது தன்னுடைய இளைய மகள் strip கிளப்பில் வேலை பார்ப்பதாக சொன்னார்.

strip club பற்றி தெரியாதவர்கள் கூகூளில் தேட வேண்டாம். strip club என்பது ஏழை பெண்கள் அதாவது டிரஸ் வாங்க கூட வசதி இல்லாத பொண்ணுங்க டிரஸ் வாங்க காசு இல்லாததால அந்த கோலத்திலேயே ஆடி ஆடி காசு கேப்பாங்க. சுருக்கமா சொன்ன ஒரு விபச்சார விடுதி.

சரி நம்ம மேட்டருக்கு வருவோம். அவர் அப்படி சொன்ன உடனே எனக்கும் இன்னொரு இந்திய நண்பருக்கும் முகத்தில் ஈ ஆடவில்லை. அட மானங்கெட்ட மகாதேவான்னு நினைச்சிட்டு இருந்தோம். ஆனா கூட இருந்த மத்த ஆங்கில மக்கள் ஏதோ சரவண பவனில் பீரி மீல்ஸ் சாப்பிட்ட மாதிரி WOW awsome அப்படின்னு கூடி நின்னு கூத்தடிச்சாங்க. அட நன்னாரிப்பயலுங்களா அப்படின்னு நினைச்சேன். சரி இத்தோட விட்டானுங்களா சரி அங்கன employee எல்லாம் பீரி பாஸ் கிடைக்குமாமே உன் பொண்ணு கிட்ட கேட்டு வாங்கிட்டு வரீயா மச்சி அப்படின்னு ஒருத்தன் கேக்க “கிடைச்சா நான் ஏன் உன்கிட்ட தரணும் நாங்க போக மாட்டோமா” அப்படின்னு இந்த மானஸ்தர் சொல்ல. ஆகா இது குடும்பம் இல்லை பல்கலைகழகம் போல இருக்கே அப்படின்னு நினைச்சி தலையில் அடிச்சிட்டு ஆளை விடுங்கடான்னு வெளியே வந்தேன்.

சிறிது நேரம் கழித்து ஏன் இப்படி அப்படின்னு கேட்டேன் அதுக்கு அவர் சொன்னாரு. “I cant do any thing she wants to be independent” அப்படின்னு சொன்னாரு. நான் சொன்னே ஏன் நீங்க அதை தட்டி கேட்கக்கூடாதான்னு அவர் சொன்னாரு அவள் இப்பொழுது என்னுடன் இல்லை தனியாக வசிக்கிறாள், சம்பாதிக்கிறாள் and she is above 18 years என்னால் ஏதும் செய்ய இயலவில்லை அப்படின்னு வருத்தம் தேய்ந்த குரலில் ஒரு தகப்பனுக்கே உரிய சோகத்துடன் சொன்னார்.

இதை கலாச்சார சீரழிவின் உச்சம் என்பதா இல்லை என்னான்னு சொல்றது தெரியலை. அமெரிக்க கலாச்சாரத்தை பார்த்து பெண் உரிமை, சுதந்திரம் அப்படி இப்படின்னு பேசி பேசி எங்கே நம்ம நாட்டிலும் இது மாதிரி நடந்திடுமோ அப்படின்னு நினைச்சாலே நடுங்குகிறது. இப்பொழுது நாடு போகிற போக்கையும், திருமண முறிவின் எண்ணிக்கைகளையும், டிஸ்கோ, boy friend கலாச்சாரம் ஆகியவை போகும் போக்கை பார்த்தால் இது மாதிரி நம்ம நாட்டிலும் நடக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே எண்ணுகிறேன்.

36 Comments

  1. 1
    கைப்புள்ள Says:

    //கலாச்சாரம் ஆகியவை போகும் போக்கை பார்த்தால் இது மாதிரி நம்ம நாட்டிலும் நடக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே எண்ணுகிறேன்.//

    நெனச்சிப் பாக்கவே பயமா இருக்குதுங்க. அந்த மாதிரி ஆகக் கூடாதுன்னு எண்ணுவோம்.

  2. 2
    கால்கரி சிவா Says:

    பெண் விடுதலையை தவறாக புரிந்துக் கொண்ட பெண்.

  3. 3
    CAPitalZ Says:

    ஐயோ.. இது தான்யா என் கவலையும்.
    அமெரிக்கா தான் எவ்வாறு இருக்கிறதோ.. அப்படியே மற்றவர்களும் செய்தால் தான் அது “சமத்துவம்” என்று நினைத்து எல்லா நாடுகளிலும் பரப்புகிறது.

    நம்ம நாட்டிலையும் சமத்துவம் கேட்டு சீரழியிரது வெகு தொலைவில் இல்லை!

  4. 4
    மகேந்திரன்.பெ Says:

    //பெண் விடுதலையை தவறாக புரிந்துக் கொண்ட பெண்.//

    இது எனக்கு புரியவில்லை, இங்கே பெண் சுதந்திரம் எங்கே இருக்கிறது?, அப் பெண் பெண்களுக்கான மன்றத்தில் ஆடை உரிக்கவில்லை, ஆண்களுக்கான விடுதி அது. அவிழ்க்கப் படும் பெண்ணின் ஆடைகளை பார்க்க காசுதரும் ஆண்கள் இருக்கும் வரை இது நடக்கும். இன்னும் சொல்லப் போனால் தமிழக கரகாட்ட உதாரணம்தான் அதில் என்ன நடக்கிரது? இதுவே. தெருவில் நடக்கிரது.

  5. 5
    மோகன்தாஸ் Says:

    அப்ப இதுக்கு பேரு கட்டுடைத்தல் இல்லையா????

    //சமூகம் சரியென்று சொல்லியும் ,வலியுறுத்தியும் வைத்திருக்கிற ஒன்றை அவர்களாகவே மீறி வாழ்கிற யாரையும் சமூகம் சொன்னதைக் கட்டுடைத்து வாழ்பவர்கள் என்பேன் நான்.//

    நான் இப்படின்னு இல்லை நினைச்சேன்.

  6. 6
    Samudra Says:

    //பெண் விடுதலையை தவறாக புரிந்துக் கொண்ட பெண்.//

    சந்தோஷ, சிவா சொல்வது தான் உன்மையாக இருக்குமோ என்று தோன்றுகிறது.

    கிடைத்த சுதந்திரத்தை சரியாக பயன்படுத்தி மிக பெரிய அளவுக்கு முன்னேறிய பென்கள் அமெரிக்காவில் ஏராளம் இல்லையா?

    Exceptions dont make a rule.

    அப்புறம் இதை விட கெவலமான விஷயங்கள் நமது “கலாச்சாரத்திலும்” உண்டு நன்பரே.பெங்களூர் நகர பாலியில் தொழிளாலர்கள் நிறைய பேர் சொந்த ஊரில் வரதட்சனை கொடுத்து கலியானம் செய்துகொள்ள பனமில்லாமல் இங்கு வந்து “சம்பாரித்து” திரும்ப போய் வரதட்சனையை செட்டில் செய்கிறார்கள்.

    அங்கே அந்த பென் தானாக தேடி போகிறாள், இங்கே சமூகம் அனுப்புகிறது.

  7. 7
    செல்வன் Says:

    எல்லா ஸ்ட்ரிப் க்ளப்பும் விபச்சார விடுதி இல்லை.அமெரிக்காவில் வெகு சில இடங்களில் மட்டுமே விபச்சாரம் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது.க்ளைமேக்சை தவிர மற்றதை மட்டும் தான் அனுமதிப்பார்கள்.மேலும் அந்த பெண்ணுக்கு விருப்பமிருந்தால் தான் லாப் டான்ஸ்.ஆண்கள் ஸ்ட்ரிப் செய்து ஆடும் க்ளப்களும் உண்டு.

  8. 8
    சிறில் அலெக்ஸ் Says:

    //ஒரு விபச்சார விடுதி.//
    ???

  9. 9
    நாகை சிவா Says:

    கால்கரி சிவா சொல்வது சரி தான். சிறு வயதிலே முடிவு எடுக்கும் உரிமை இருப்பதால் அவர்கள் தவறு செய்யும் வாய்ப்பு சற்று அதிகமாக உள்ளது என்று சொல்லாம்.

  10. 10
    கால்கரி சிவா Says:

    மகேந்திரன், இங்கே பெண்கள் ஆண்களுக்கு சம்மாகவே வேலை செய்கிறார்கள் அதே அளவு சம்பளமும் வாங்குகிறார்கள். யாரும் இவர்களை அவுத்து போட்டு ஆடுங்கள் எனக் கட்டாயப்படுத்தவில்லை.

    (தாய் தந்தையர் கைவிட்டு போன பெண்கள், கள்ளத்தனமாக அமெரிக்காவிற்கு வந்த பெண்கள் கட்டாயபடுத்தபடுவது பற்றி படித்திருக்கிறேன்)

    அவருடைய தகப்பனாரும் அந்த பெண்ணின் நிலையைப் பற்றி கவலைப் பட்டததாகவே தெரிகிறது. இந்த அளவிற்கு சுதந்திரம் தரப் பட்ட பெண் அவளது சுதந்திரத்தை தவறாக தான் பயன் படுத்துகிறாள் என்பது என் கருத்து

  11. 11
    Vajra Says:

    சந்தோஷ்,

    இது மாதிரி டாபிக் எழுதும் போது

    ..
    மத்த ஆங்கில மக்கள் ஏதோ சரவண பவனில் பீரி மீல்ஸ் சாப்பிட்ட மாதிரி WOW awsome அப்படின்னு கூடி நின்னு கூத்தடிச்சாங்க. அட நன்னாரிப்பயலுங்களா அப்படின்னு நினைச்சேன்.
    ..

    இது போன்றவற்றைத் தவிர்த்தல் நலம்…

    ஆமா, உங்களுக்கு Free pass கிடைத்தால் போகமாட்டீர்களா? அவிங்க ஓப்பனா சொல்ற நன்னாரிப்பசங்கன்னா, நீங்க ஊமைக் குசும்பு செய்யுற நன்னாரிதானே…!!?

  12. 12
    செல்வன் Says:

    அங்க போக ப்ரிபாஸ் எதுக்கு சங்கர்?உள்ளே போக $6 – $20 கட்டணும்.அவ்வளவுதான்.விருப்பமிருந்தா லேப்டான்ஸுக்கு $40.ப்ரீபாஸ் எல்லாம் $6 கட்ட முடியாதவனுக்கு தான்.,

  13. 13
    Panruti Says:

    அவள் பெண்விடுதலையை நிலை நாட்டவில்லை. அமெரிக்கா பெண்விடுதலை விஷயங்களை எல்லாம் தாண்டியாகிவிட்டது என்பது என் எண்ணம். அவள் பெற்றோர்களை வெறுப்பேற்றுவதற்கே செய்யலாம்.

    சந்தோஷ் – உங்கள் பதிவு சரியாக தெரியவில்லை. http://www.thamizmanam.com/template.php பயன்படுத்திப் பாருங்கள்.

  14. 14
    சந்தோஷ் aka Santhosh Says:

    சங்கர்,

    நல்ல விமர்சனத்தை குடுத்து இருக்கிங்க சங்கர் கண்டிப்பா அடுத்த முறை இந்த மாதிரி சிரியசான பதிவுகளில் இது போன்றவற்றை தடுக்க முயற்சி செய்கிறேன்.

    பீரி பாஸ் கிடைச்சா போவேன் ஆனா எங்க அப்படின்னு ஒரு வரை முறை இருக்கு. கண்டிப்பா நான் என்னுடைய சக தொழிலாளியிடம்(எனக்கு தெரிந்த யாரிடமும்) இப்படி கீழ்தரமான ஒரு வேண்டுகோளை வைக்க மாட்டேன் அப்படியே கிடைத்தாலும் செல்ல துணிய மாட்டேன். என்ன தான் அவர்கள் மேல் நாட்டில், முன்னேறிய நாகரீகத்தில் இருந்தாலும் அவரும் ஒரு தகப்பன் தான். ஒருவருடைய உணர்வுகளை புண்படுத்தும் அளவிற்கு(அதும் இந்த மாதிரியான விஷயங்களில்) நான் வளர்க்கப்படவில்லை.

    “கிடைச்சா நான் ஏன் உன்கிட்ட தரணும் நாங்க போக மாட்டோமா” அப்படின்னு இந்த மானஸ்தர் சொல்ல.” – இந்த பகுதி மட்டும் நகைச்சுவைக்காக நான் சேர்த்தது. மற்றபடி பீரி பாஸ் கேட்ட பொழுது, என்னுடைய நண்பரின் முகம் சோகமானதும் பிறகு சகஜநிலைக்கு திரும்பிய வேதனையை நான் கண்டேன்.

    ஆனா நான் எதிர்ப்பார்த்த கேள்வி இன்னும் யாரிடமும் வரவில்லை பாக்கலாம் யார் கேட்கிறார்கள் என :) )

  15. 15
    Vajra Says:

    இது போல் Strip bar ல வேலை பார்ப்பது ஒரு தொழில் என்கிற ரீதியில் பார்க்கவேண்டும்…அதை கலாச்சாரம் என்று குழப்பிக் கொள்ளக் கூடாது…

    ஜெர்மனி, ஹாலந்து போன்ற நாடுகளில் விபச்சாரம் என்பது ஒரு அங்கீகரிக்கப்பட்ட தொழில். விருப்பமுள்ளவர்கள் செய்கிறார்கள். நம் நாட்டில் விபச்சாரம் என்பது தொழில் தான், ஆனால் விருப்பமில்லாதவர்கள் செய்கிறார்கள்.

    உலகத்திலேயே பழய தொழில் அது தான்…!!

    மேலும்,

    independence day படம் பார்த்தீர்களா? அதில் Will smith க்கு ஜோடியாக வரும் பெண், Exotic dancer என்று அறிமுகம் செய்து கொள்வதில் ஏற்படும் சங்கோஜம்…! ஏன்?

    வெள்ளைக்காரன் மானங்கெட்டவன், நாம் மானஸ்தர்கள் என்ற எண்ணம் உருவாகின்றது…அது தவறு…அவர்களுக்கும் அது பிடிக்கவில்லை (தந்தையின் சோகத்திலேயே அது தெரியவில்லையா?)

    என்ன, நாம் அதைப் பற்றி பேசியே அவரை தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்குத் தூண்டிவிடுவோம்…அவர்கள் ஜாலியாக அந்தப் பெண்ணின் விருப்பத்தை மதிக்கிறார்கள். அவ்வளவுதான் என் பார்வையில்… நாளையே அந்தப் பெண் வீடிதிரும்பினால் தந்தை நிச்சயம் ஏற்றுக் கொள்வார்…இல்லையா? அவர்கள் சமூகமும் அவர்களை ஏற்றுக் கொள்ளும்…

    நம்மூரில் மாதிரி தவிக்கிற வாய்க்கு தண்ணீர் கொடுதால் ஊரைவிட்டு விலக்கியெல்லாம் வைக்க மாட்டார்கள்…:D

    ..

    40 year old virgin படத்தில் ஒரு இடத்தில் ஹீரோவின் நண்பர் தன்னை விட்டுச் சென்ற பெண்ணைத் திட்டிவிட்டு…அவள் விபச்சாரம் செய்யச் சென்றுவிட்டாள்…என்று கோபப் படுவார்…பின்பு…Hey! thats her wish…i respect that..என்று சொல்லிவிடுவார்…அவர்கள் வாழ்க்கைமுறை அது தான்…They take life as it comes…தனி மனித உரிமை என்பது அங்கே அதிகம்…individual’s decision is respected..than what the society or the socalled society demands..!!

    இதில் கலாச்சாரம், சீர்கேடு, பெண் விடுதலை என்று ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.
    ..

    மேலும் அது சிறந்தது இது தாழ்ந்தது என்று நான் வாதிடவில்லை. அவர் அவர் என்ன கருத்துவேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளலாம்…கருத்துக்கள் மாற்றத்திற்கு உரியது…

  16. 16
    koothaadi Says:

    சுதந்தரம் என்றால் அவங்களுக்குப் பிடித்தமானதை பண்ணுவது தானே ..அந்த சுதந்தரம் இந்த ஊர்ல இருக்குது .அவங்க அப்பா வருத்தப் படலாம் சொல்லலாம் அதற்கு பிறகு அவரால எதுவும் சொல்ல முடியாது ..family value போன்ற வேலை எல்லாம் சொல்லி அழுதுக்கிட்டு இருக்க மாட்டாங்க அப்பசி இருப்பது தான் சரின்ணு நான் நினைக்கிறேன் .
    இந்த மாதிரி பார்ல் நிறைய பேரூ கேர்ள் பிரண்டை கூட்டி கொண்டே வருவாங்க..

  17. 17
    Babble Says:

    பாஸ்,
    விபசார விடுதியா? நல்லா இருக்கே கதை. அது சரி, நீங்க போனதில்லையா? எனக்கு தெரிஞ்சி என் நண்பர்கள்ள போகாத ஆளே இல்ல.

    இது நம்ம கலாசார சார்ந்த சமாச்சாரம்னு நினைக்கிறேன். என் நண்பன் ஒருத்தன் இங்கயே வளர்ந்த ஒரு இந்திய பொண்ண கல்யாணம் பண்ணினான். ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு முன்னாடி பேச்சுலர்/பேச்சுலரட் பார்ட்டி கொண்டாடினாங்க. அவ stripper-அ வரவழிச்சா, இவன் strip club போனான், ஆனா அத பத்தி ஒன்னும் குற்ற உணர்வெல்லாம் கிடையாது. அவளுக்கு எல்லா ஏற்பாடுகளையும் பண்ணது அவ தங்கச்சி :)

  18. 18
    Pot"tea" kadai Says:

    //strip club பற்றி தெரியாதவர்கள் கூகூளில் தேட வேண்டாம். strip club என்பது ஏழை பெண்கள் அதாவது டிரஸ் வாங்க கூட வசதி இல்லாத பொண்ணுங்க டிரஸ் வாங்க காசு இல்லாததால அந்த கோலத்திலேயே ஆடி ஆடி காசு கேப்பாங்க. சுருக்கமா சொன்ன ஒரு விபச்சார விடுதி.//

    strip club & brothel are different.In strip clubs you can find women sex workers with whom you can have a sex.

    And strippers are not necessarily a sex worker instead she could be just a showgirl.

    In western countries brothels are recognized/licensed by the govt and it is an occupation.

    If you do the same in India, no men bastards will dare to enter.

    and also i dont find any difference of seeing those bollywood/kollywood song sequences shits and lapdances in western countries.

    Its lot better than Indian customory practices where they force women as bitches in the name of lord.

    I second vajra sankar’s words.

  19. 19
    Anonymous Says:

    Strip clubs are not prostitution centers as you say – at least not all of them. Even in lap dances one cannot touch the woman – if you cross the line and start behaving like a deprived dude, bouncers will kick you out of the club. You cannot force a woman dancer to do a lap dance for you. It is mostly seen as fun – and even women visit there – with their boyfriends/bed buddies.

  20. 20
    துளசி கோபால் Says:

    இங்கேயும் இது ஒரு அங்கீகரிக்கப்பட்ட ‘தொழில்’தான்.

    பசங்கமேலே பெற்றோர்களுக்கு உரிமை ஒண்ணும் இல்லையாம்.
    அரசாங்கம் அப்படித்தான் சொல்லுது(-:

  21. 21
    கல்வெட்டு (எ) பலூன் மாமா Says:

    அமெரிக்காவின்(எந்த ஒரு நாட்டின்) சுதந்திரம்,கலாச்சரம் பற்றி புரிந்து கொள்ள அனுபவமும் ஆராய்ச்சி மனப்பான்மையும் தேவை. சரியோ தவறோ (உங்கள் பார்வையில்) எடுத்தேன் கவிழ்த்தேன் என்று விமர்சிக்கக்கூடாது.

    நிற்க…

    “இது போல் காம உணர்ச்சிதரும் மூவ்மெண்ட்களை நான் எந்த போர்னோகிராபி படத்திலும் பார்த்ததில்லை. ஆடையுடன் இவ்வளவு சிறப்பான காம உணர்வுகளைத் தூண்டும் சீன்களை எங்கும் கண்டதில்லை.”

    -மேலே இருப்பது எனது அமெரிக்க நண்பர் இந்தியப் படங்களின் (தமிழ்,இந்தி) அரை நிர்வாண பாட்டு டான்ஸ் கூத்துகளைப் பார்த்துவிட்டு என்னிடம் சொன்னது. அவர் அதற்காகவே இந்திய சினிமாக்களின் DVD களை வாங்கிச் செல்வார்.

    Culture is a outsiders view of what insiders produces.

  22. 22
    Anonymous Says:

    முப்பது வருஷங்களுக்குள் சீரழிந்ததுதான் அமெரிக்க கலாசாரம். சற்று வயசான ஆட்களிடம் கேட்டுப் பாருங்கள். ஒரு கட்டுக்குள் இருந்ததைப் பற்றி விளக்குவார்கள்.

  23. 23
    மகேந்திரன்.பெ Says:

    //யாரும் இவர்களை அவுத்து போட்டு ஆடுங்கள் எனக் கட்டாயப்படுத்தவில்லை.//

    அவர்கள் அவிழ்த்துபோட்டு தெருவில் சும்மா ஆடவில்லை, ஆண்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் ஒரு தொழில் அது. அவ்வளவே, நார்த் ஹாலிவுட்டில் இல்லாத புரடக்ஷன் கம்பெனிகளா லாஸ்வேகாஸில் இருக்கிரது? டிமான்ட் எனப்படும் தேவை இல்லாத போது இத் தொழிலே இருக்காதே, இதில் பெண்சு தந்திரத்தை நாம் தான் தவறாக புறிந்து கொண்டோம். இன்னொரு சேதி தெரியுமா? நார்த் ஹாலிவுட்டில் இடம் இல்லாததால் உலகின் வேறு இடங்களுக்கு அந்த ஸ்டுடியோக்களை மாற்றுகிறார்களாம். இன்னும் சொல்லப்போனால் அது தவறாக பயன்படும் பெண்சுதந்திரம் அல்ல ஆண்களின் பசிக்கு அது ஒரு புள்ளி மான் அவ்வளவே.

  24. 24
    சந்தோஷ் aka Santhosh Says:

    Strip Club பற்றி பல சுவாரிஸ்யமான தகவல்களை குடுத்து இருக்கிங்க ரொம்ப நன்றி(செல்வன் ஒரு படிக்கு மேல போயி ரேட்டோட சொல்லி இருக்கிங்க இவ்வுளவு சீப்பா என்ன) :) ).. எனக்கு தெரிஞ்சி அது விபச்சார விடுதி சரியா தெரியலைங்கன்னா ஆராய்ச்சி செய்ய ஆரம்பிக்கவில்லை :) ).. அப்புறம் உடல் உறவு முழுவதுமாக கொண்டால் தான் விபச்சாரம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை எல்லாமே இருக்கு ஆனா உடல் உறவு கிடையாது :) )

  25. 25
    செல்வன் Says:

    சந்தோஷ்,

    அமெரிக்காவில் விபச்சாரம் சட்டப்படி சில மாநிலங்களில் அனுமதிக்கப்படுகிறது.ஆனால் அதற்கு பல விதிமுறைகள் உள்ளன.டாக்டர் சர்டிபிகேட் வாங்குவது,வயது,விளம்பர விதிமுறைகள் என பல சட்டங்கள் உள்ளன.

    ஸ்ட்ரிப் க்ளப்களை பொறுத்தவரை அவை விபச்சாரம் செய்பவை அல்ல.விபச்சாரம் செய்தால் அடுத்த நிமிடம் இழுத்து மூடிவிடுவார்கள்.சில மாநிலங்களில் உடைக்கட்டுப்பாடும் உண்டு(முழு நிர்வாணம் அனுமதி இல்லை என்பது போல).லாப்டான்ஸ் அனுமதிக்காத வெறும் நடனம் மட்டுமே அனுமதிக்கும் க்ளப்கள் உண்டு.

    ஸ்ட்ரிப்பர் என்பது ஒரு தொழில்.Dignity of labor என்பதற்கு இங்கே உயர்வான மதிப்பு உண்டு.பழைய கால் ஆட்கள் முகம் சுழித்தாலும் புதிய தலைமுறை அதை எல்லாம் கண்டு கொள்வதில்லை.பெரும்பாலான ஸ்ட்ரிப்பர்கள் விபச்சாரத்துக்கு கஸ்டமர்கள் கூப்பிட்டால் முகத்தில் அடித்தது போல் “I am not a whore” என்று பதில் சொல்லி விடுவார்கள்.

    //அப்புறம் உடல் உறவு முழுவதுமாக கொண்டால் தான் விபச்சாரம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை எல்லாமே இருக்கு ஆனா உடல் உறவு கிடையாது :) ) //

    ‘எல்லாமே இருக்கு’ என்றால் என்ன என தெரியவில்லை.என்னென்ன இருக்கு என சொன்னால் பிடித்து காய்ச்சி எடுத்து விடுவார்கள் என்பதால் சொல்லாமல் விடுகிறேன்.:))

  26. 26
    செல்வன் Says:

    //ரேட்டோட சொல்லி இருக்கிங்க இவ்வுளவு சீப்பா என்ன) //

    சீப் எல்லாம் கிடையாது சந்தோஷ்.20$ கொடுத்து உள்ளே போனால் ஓசியில் டான்ஸ் பார்த்து விட்டு வரலாம்.லாப்டான்ஸ் ஒரு பாட்டுக்கு 40$.எப்படியும் ஒரு பாட்டோடு யாரும் நிறுத்தப் போவதில்லை.3,4 பாட்டு வாங்கினால் எப்படியும் 200$ கரைந்துவிடும்.அதுபோக மதுவகைகளுக்கும்,உணவுக்கும் செலவாகும்(சாப்பிடாமலும் இருக்கலாம்,choice is yours)

    நம் தேவை,கையில் இருக்கும் காசு ஆகியவற்றை பொறுத்த விஷயம் இது.

  27. 27
    சந்தோஷ் aka Santhosh Says:

    கருத்து சொன்ன பல பேர் இந்த விஷயத்தை அமெரிக்காவின் கலாச்சாரமாவே காட்ட ஆசைப்படுகிறார்கள். என்னை விடுங்க இப்ப வந்த ஆளு என்னுடைய சக தொழிலாளியின் வருதத்தை பார்த்த பிறகும் உங்களுக்கு இது அந்த கலாச்சாரத்தின் அங்கம் போல் இருக்கிறதா என்ன. அது சரி உங்களுக்கு ஒரு கேள்வி இவர்களைப்போன்றவர்களுக்கு இந்த சமுதாயத்தில் என்ன மரியாதை கிடைக்கிறது என்று ஊடகங்களை பார்க்காதீர்கள் மக்களிடம் கேட்டுப்பாருங்க. நீங்க பார்த்து இருப்பிங்களா இல்லையான்னு தெரியலை நிறைய stage commedy showவில் “What your gal friend is a stripper” போன்ற ஏளன வசனங்கள் மிகச்சாதாரணம். இவை உங்களுக்கு அவர்களை பெருமை படுத்துவதாக இருக்கிறதா என்ன?

    //அவர்கள் ஜாலியாக அந்தப் பெண்ணின் விருப்பத்தை மதிக்கிறார்கள். //
    கண்டிப்பாக இது எந்த குடும்பத்திலும் நடை பெறுவதாக தெரியவில்லை.

    //அதை ஒரு தொழிலாக பார்க்க வேண்டும். தேவை இருக்கும் வரை இது இருந்து கொண்டே தான் இருக்கும்//
    கண்டிப்பாக இது தொழில் தான்.ஆனால் அதை செய்தால் சமுதாயத்தில் நமக்கு என்ன மரியாதை கிடைக்கும் என்று ஒன்று இருக்கிறது அல்லவா? தயவு செய்து இவர்களுக்கு மரியாதை கிடைக்கிறது என்று யாரும் சொல்ல வேண்டாம் கண்டிப்பாக அவர்களுக்கு ஒரு சரசரியான பெண்ணுக்கு கிடைக்கும் மரியாதை கிடைக்காது. இந்த வேலை பார்க்கும் எந்த ஒரு பெண்ணாவது அவள் செய்யும் தொழிலை கூறி சபையில் அறிமுகம் செய்து கொள்ள முடியுமா என்ன? மற்றபடி திரைப்படங்களில் காட்டப்படும் விஷயங்கள் எந்த அளவுக்கு நம்பகத்தகுந்தவை அல்லது எடுத்த்க்காட்டுகளாக எடுத்துக்கொள்ளக்கூடியவை என்பதை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

    //முப்பது வருஷங்களுக்குள் சீரழிந்ததுதான் அமெரிக்க கலாசாரம். சற்று வயசான ஆட்களிடம் கேட்டுப் பாருங்கள். ஒரு கட்டுக்குள் இருந்ததைப் பற்றி விளக்குவார்கள்//
    இது தான் நிதர்சனமான உண்மை இப்பொழுது கூட நீங்க பெரிய நகரங்களை விட்டு விலகி சிறிய டவுன்களுக்கும்/கிராமங்களுக்கும் சென்று பாருங்கள் அங்கே இப்பொழுது கூட பார்க்கலாம் நிஜமான அமெரிக்காவை.

    சமுத்திரா, கால்கரி சிவா சொல்லுவதில் நூற்றுக்கு நூறு நியாயம் இருக்கிறது நம்ம நாட்டில் வறுமை,வேலையின்மை, சமுதாயக்கொடுமைகள் நம்ம மக்களை அந்த பாதைக்கு இட்டுச்செல்கிறது ஆனால் இங்கே நிலைமை அப்படியா இருக்கிறது. பணத்தை சுலபமாக சம்பாதிக்க வேண்டும் என்ற ஆவலே அதுக்கு வேறு வழிகள் இருந்தாலும் அவர்களின் கொழுப்பே இவர்களை இந்த வழிக்கு இட்டுச்செல்கிறது.
    மேலும் அவர்களுக்கு கொடுமைகள் நடப்பதிலை என்பது போல் ஒரு பிம்பம் ஏற்படுத்தப்படுகிறது. அவர்களுக்கு நடக்கும் கொடுமைகளை பற்றி அறிய கூகிலில் தேடவும்.

    // Even in lap dances one cannot touch the woman//
    lap dance என்றால் உங்களின் தொடை மீது ஏறி உட்கார்ந்து கொண்டு நிர்வாணமாக அந்த பெண் செய்யும் ஆடும் நடனம் தானே? அவர்களை நீங்க தொட முடியாது அதனால்? அது சரியாகிவிடுமா?செல்வன் சொன்ன மாதிரி climax தான் இல்லை(செல்வன் விளக்கம் எல்லாம் வேணா அப்புறம் கம்பெனியில சிகப்பு விளக்கை ஏத்திடுவாங்க.) மத்தபடி எல்லா விஷயமும் உண்டு. அதனால் அது விபச்சாரம் இல்லையா என்ன?

    அப்புறம் அவர்கள் இதை மகிழ்ச்சியாக தானே செய்கிறார்கள் என்கிற வாதம் அப்படி செய்வதாக இருந்தால் இவர்கள் ஏன் அதை முழு போதையில் செய்ய வேண்டும் சந்தோஷமாக சுய நினைவுடன் செய்ய வேண்டியது தானே? குறைந்த நேரத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளே தவிர வேறு எதும் இருப்பதாக தெரியவில்லை.

    அப்புறம் சட்டப்பூர்வம், அங்கீகாரம் இவை இரண்டுமே சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் என்று சொல்ல முடியாது இல்லையா? நாம் நம்ம சுயநலத்திற்காக வாழவில்லை அது வாழ்க்கையாக எனக்கு படவில்லை நம்ம வாழ்க்கையில் ஒரு சமுதாய நோக்கு இருக்க வேண்டும்.

    மேலும் நாம் எல்லாரும் மனிதர்கள் நமக்கென்று சில கட்டுப்பாடுக்கள் இருக்கின்றன, நாம் ஒண்ணும் ஜந்து அறிவு படைத்த மிருகங்கள் இல்லையே தவறான உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள, நினைத்த நேரத்தில் நினைத்தவர்களுடன் உறவு கொள்ள, உடனே இந்திய சமுதாயத்தில் உள்ள சில சீர்கேடுகளை காட்டி இங்க மட்டும் என்ன வாழுதாம் அப்படின்னு ஒரு கேள்வி கேட்க வேண்டியது. இப்ப எல்லாம் தப்பை நியாயப்படுத்த பழகிக்கொண்டோம். அங்க செய்றாங்க நான் ஏன் செய்யக்கூடாது எனறு.

    அப்புறம் இந்தியர்கள் அமெரிக்கன் ஆக அடிக்கும் கூத்து அதுக்கு தனிப்பதிவே போடலாம்(முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன் உங்களுக்கு தோன்றுவதை எனக்கு அனுப்பினால் அதனுடன் சேர்த்துக்கொள்வேன்)

    மற்ற படி என்னுடைய சிந்தனைகளையே குடுத்தேன்(சிந்தனையா கொஞ்சம் ஓவர் இருக்கு தம்பி பினாத்தல் தான் சரியான சொல் – இது நம்ம மனசாட்சி). கண்டிப்பாக அரைவேர்க்காட்டுத்தனம் நிறைந்த்தாக இருக்கும் பொறுத்துகோங்க. :) )

  28. 28
    G.Ragavan Says:

    வாங்க சந்தோஷ் வாங்க. ஒன்னு செய்யலாமே. பண்பாட்டையும் அந்தப் பொண்ணுங்களையும் காப்பாத்த ஆண்கள் எல்லாரும் கலாச்சாரக் காவலர்களா மாறி அந்த எடத்துக்கே போகாம இருந்திரலாமா? ஆண்கள் எல்லாரும் பண்பாட்டுக் காவலர்களா இருந்துட்டா அந்தப் பொண்ணுக்கு அங்க என்ன வேலை? பேசாம இட்டிலி சுட்டு விக்கப் போயிருக்கும்.

    அந்தப் பொண்ணு செய்றது சரியோ தப்போ…..என்னவோ அந்தப் பொண்ணு மட்டுந்தான் தப்பு செய்ற மாதிரியும் இந்தியர்கள் உத்தமபுத்திரர்கள் மாதிரியும் பேசுறது பெருந்தப்பு. நம்மூர்ல வெளிப்படையா எதுவும் செய்யுறதில்ல. அவ்வளவுதான் அவங்களுக்கும் நமக்கும் வேறுபாடு.

  29. 29
    உங்கள் நண்பன் Says:

    இந்தியாவில் அப்படி ஆகாக்கூடாது மற்றும் ஆகாது என்றே எண்னுவோம்!ஆனால் நடக்கவும் வாய்ப்புகள் அதிகம்,நினைத்துப் பார்க்கவே கஸ்டமான ஒன்று,

    அன்புடன்…
    சரவணன்.

  30. 30
    சந்தோஷ் aka Santhosh Says:

    ராகவன்,
    //வாங்க சந்தோஷ் வாங்க. ஒன்னு செய்யலாமே. பண்பாட்டையும் அந்தப் பொண்ணுங்களையும் காப்பாத்த ஆண்கள் எல்லாரும் கலாச்சாரக் காவலர்களா மாறி அந்த எடத்துக்கே போகாம இருந்திரலாமா?//
    நீங்க சொல்றது சரியான கருத்து தான். ஒரு இந்திப்படம் பாத்தேன் படம் பெயர் சரியாக நியாபகம் இல்லை. அது முதலிரவு தம்பதியினருக்கு தெரியாமல் நீலப்படம் தயாரிக்கும் கும்பல் சம்பந்தமான படம். சுவிஸ்ல போயி எடுத்து இருப்பாங்க. அதுல சொல்லுவான் Demand இருக்குற வரையில் இது தொடரும் என்று. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது அப்படிங்கிற கதை தான்.

    //அந்தப் பொண்ணு செய்றது சரியோ தப்போ…..என்னவோ அந்தப் பொண்ணு மட்டுந்தான் தப்பு செய்ற மாதிரியும் இந்தியர்கள் உத்தமபுத்திரர்கள் மாதிரியும் பேசுறது பெருந்தப்பு.//
    நான் இந்தியர்கள் உத்தம்புத்திரர்கள் என்று சொல்லைலையே. இப்பொழுது கூட நம்ம நாட்டில் இது மாதிரி நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் ஈடுபடும் பெரும்பாலான பெண்கள் கட்டாயத்தின்(பணம் அல்லது கடத்திவரப்பட்டு ஈடுபடுத்தப்படுகிறார்கள்.) பேரில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் அவர்களாகவே வந்து இது மாதிரி செய்வது இல்லையே.

  31. 31
    சந்தோஷ் aka Santhosh Says:

    இந்த பதிவிற்கு பின்னுட்டம் இட்ட அனைவருக்கு நன்றி. தனித்தனிய நன்றி சொல்ல முடியவில்லை மன்னிக்கவும்.

  32. 32
    பாபு Says:

    ஆனானப்பட்ட அமெரிக்காவாக இருந்தாலும் ஆணாதிக்கமே பெண்களை துஷ்பிரயோகம் செய்கிறது. ‘பெண் விடுதலை’பேசும் அனைவரும் மறந்த ஒரு விஷயம்: ‘அமெரிக்காவாவே ஆனாலும் அவுத்துப் போட்டு ஆட ஆண்கள் ஏன் அதிகம் முன்வருவதில்லை? அதைப் பார்க்க பெண்கள் ஏன் முன் வருவதில்லை?’ ‘ஆண் விடுதலை’ வேண்டாமா?

  33. 33
    செல்வன் Says:

    //ஆனானப்பட்ட அமெரிக்காவாக இருந்தாலும் ஆணாதிக்கமே பெண்களை துஷ்பிரயோகம் செய்கிறது. ‘பெண் விடுதலை’பேசும் அனைவரும் மறந்த ஒரு விஷயம்: ‘அமெரிக்காவாவே ஆனாலும் அவுத்துப் போட்டு ஆட ஆண்கள் ஏன் அதிகம் முன்வருவதில்லை? அதைப் பார்க்க பெண்கள் ஏன் முன் வருவதில்லை?’ ‘ஆண் விடுதலை’ வேண்டாமா? //

    ஆண்விடுதலை அங்கே உண்டு

    ஆண் ஸ்ட்ரிப்பர்கள் அமெரிக்காவெங்கும் உண்டு.பிறந்தநாள் கொண்டாட்டங்களின்போது பெண்கள் ஆண் ஸ்ட்ரிப்பர்களை அழைத்து டான்ஸ் ஆட சொல்வதுண்டு,(அமெரிக்காவிலும்,மும்பையிலும்).ஆண் விபச்சாரர்களும் அமெரிக்காவில் உண்டு.

    பெண்களை விபச்சாரம் செய்ய தூண்டி,அவளிடம் போகும் ஆணும் விபச்சாரனே.அந்த வகையில் உலகில் விபச்சாரம் செய்யும் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம்.ஆண் திமிரை செருப்பால் அடித்து அடக்கினால் தான் பெண்கள் இனிமேல் நிம்மதியாக வாழ முடியும்.

  34. 34
    Anonymous Says:

    முதல் கேள்வி: அந்த பெண் அங்கு என்ன வேலை பார்க்கிறாள் என்பதை தெரிந்துகொள்ளாமலே இவ்வளவு பேசியாச்சு. அம்மணமாக ஆடுவதை தவிரவும் அங்கு வேறு வேலைகள் உண்டு. அந்த பெண் டிக்கட் விற்கலாம், பாரில் ட்ரிங்ஸ் விற்கலாம், ஏன் ஒரு செக்யூரிட்டி ஆபீசராக் கூட இருக்கலாமே?

    ஒரே ஒரு உதாரணத்தை எடுத்துக்கொண்டு அமெரிக்காவின் கலாச்சாரத்தை எடை போடுவது, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை ஹனிமூனில் கொன்ற கேஸை வைத்து எல்லா தமிழ் பெண்களையும் தப்பாக எண்ணுவதற்கு சமம்.

    என்ன, அங்க வெளிப்படையா செய்யறாங்க. அதையே நம்ம திருட்டுத்தனமா நம்ம நாட்டிலயும் செஞ்சுகிட்டுதான் இருக்க்கோம். அதனால அது எல்லாருக்கும் எட்டாக்கனியாக இருப்பதால் பஸ்ஸிலும் மார்க்கெட்டிலும் உரசுவதே ஒரு வடிகாலாகிவிட்டது எனபதுதான் விளைவு :-(

  35. 35
    சந்தோஷ் aka Santhosh Says:

    அனானி அண்ணாச்சி,
    //அப்படின்னு வருத்தம் தேய்ந்த குரலில் ஒரு தகப்பனுக்கே உரிய சோகத்துடன் சொன்னார். //
    அந்த பொண்ணு மத்த வேலை செய்வதாக இருந்தால் அவர் வருத்தப்பட வேண்டிய அவசியமே இல்ல.. மேலே உள்ள வாக்கியம் அதைத்தான் சொல்கிறது.
    //ஒரே ஒரு உதாரணத்தை எடுத்துக்கொண்டு அமெரிக்காவின் கலாச்சாரத்தை எடை போடுவது//
    அமெரிக்காவில் மேலும் மேலும் மக்களுடன் பழகும் பொழுது நான் தெரிந்து கொள்வது என்னான்னா they are more traditional and conservative. மக்கள் மாறவே இல்லை இந்த கம்பெனிகள் தான் அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன என்று. மத்தபடி நீங்க சொல்கிற உரசுர மேட்டர் உண்மை தான்.

  36. 36

    ஸ்டிரிப் கிளப் பற்றி பார்த்தேன்!இப்படி என்ன ஆளாளுக்கு வருத்தப்பட்டு பேசி இருக்கீஙங்க?சந்தோஷ் சென்னையில் தெருவே ஸ்டிரிப் கிளப் மாதிரிதான் இருக்கு. நம்ம வீட்டுலடீ வீ யைத்தொறந்தாப் போதும் ஒருவராவது நல்ல முழு டிரெஸ் அணியவில்லை. இந்திய சினிமாவுக்கு ஸ்டிரிப் கிளப் ஒண்ணும் ரொம்ப அதிசயமானதோ அல்லது புதிதோ அல்ல!ஜயமாலினி முதல் இன்று நமிதா வரை யாரும் ஜாக்கெட்டு என்பதையே மறந்து ரொம்ப நாளாச்சு.பாவாடை கட்டினாலும் துடை தெரியற மாதிரி ஒரு ஸ்லிட்டு இல்லாமல் ஒரு ஆடைகூடப்போடுவதில்லை. நம்ம வீடுகளில் நாலு வயது ப்பெண்குழந்தைகள் கூட போடத ஆடைகளைத்தான் சினிமா நடிகர்கள் போடுகிறார்கள்.சிவாஜி ப‌ட‌த்துல‌ ஸ்ரேயாவப் பாத்தீங்க இல்ல?


RSS Feed for this entry

Leave a Comment