பெற்றோரை கவனிக்காவிட்டால் பத்தாண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கும் வகையில் ஒரு சட்டம் இயற்ற அரசு முயன்று வருவதாக ஒரு செய்தி வந்துள்ளது.
இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. பெரும்பாலான பெற்றோர்கள் குடும்ப மானம், பெற்ற பாசம் அது இது என்று பிள்ளைக்கு எதிராக புகார் குடுக்க முன்வர மாட்டார்கள். அப்படியே வந்தாலும் அதிகாரிகள், “குடும்ப நல விரும்பிகள்”, சொந்த பந்தங்கள், அறிவுரை சொல்கிறேன் பேர்வழிகள் “வயசான காலத்துல எதுக்கு இந்த வேண்டாத வேலை இருக்க போவது இன்னும் கொஞ்ச நாளு சின்ன பசங்க கொஞ்சம் அப்படி இப்படிதான் இருப்பாங்க நீங்க தான் பாத்து பக்குவமா நடந்து கொள்ள வேண்டும்” என்று சொல்லி அனுப்புவார்கள். அப்படியே அவர்கள் புகாரை ஏற்றுக்கொண்டாலும் நம்ம ஆளுங்களுக்கு சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளையும், குறுக்கு வழிகளையும் சொல்லி அவர்களை வெளியே கொண்டுவர தயாராக இருக்கும் சட்ட நிபுணர்கள். இந்த சட்டம் நாட்டில் உள்ள செயல்படுத்தப்படாத சட்டங்களுல் ஒரு சட்டமாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை.
குடும்பம் போன்ற விஷயங்களில் சட்டம் இயற்றி பெரியதாக எதுவும் செய்து விட முடியாது. பெற்றோரை கவனிக்கும் எந்த ஒரு பிள்ளைக்கும் சட்டம் தேவையில்லை அப்படி கவனிக்க தவறுபவர்களை சட்டம் இயற்றி கட்டாயமாக கவனிக்கும் படி செய்தால் அவர்கள் வாழும் பொழுதே அவர்களை நரகத்தில் தள்ளி கொல்லவும் தயங்கமாட்டார்கள் Infact கொல்லவும் தயங்க மாட்டார்கள் இது போன்ற நாய்கள்.
enga irunthuthaan news laam pudikireengalo….
neenga solrathu 100% correct.. athathaan vaathiyaar annaikke sonnaaru
“thirudanaa paarthu thirunthaa vittaal thiruttai ozikka mudiyaathu”
கவனிக்காவிட்டால் சிறைன்னா எப்படி தப்பிக்கலாம்னு தான் கணக்கு போடுவாங்க கவனிக்காதவங்க.
நீங்க சொல்றது முற்றிலும் உண்மை.
அதனால என் காக்கா சைஸ் மூளைய நல்லா கசக்கி …
கவனித்தால் Tax Detection, கூட பயணித்தால் அனைவருக்கும் கட்டணத்தில் Discount, இப்படி போட்டா இதுக்காகவே வீட்டுல வச்சு ஊரெல்லாம் சுத்தி காமிக்கலாம் எல்லா நல்லவங்க நாலுந்தெரிஞ்சவங்களும்! இது ஒரு Capitalist Solution, கேவலமாத்தான் இருக்கு சொல்றதுக்கு, ஆனா இந்த முறை வெற்றி பெரும்னு ஒரு இரண்டு அணாவுக்கு உதவாத கருத்தை இங்கு வைக்கும் என்னை கொத்து ப்ரோட்ட போடுபவர்கள் வருவதற்குள் தப்பி செல்கிறேன்.
உங்க சவுண்டுக்கு நன்றி ஜி.
“thirudanaa paarthu thirunthaa vittaal thiruttai ozikka mudiyaathu”
இதை இதைத்தான் நானும் சொல்ல வந்தேன் ஆனா பாருங்க எனக்கு பாட்டு மறந்து போச்சு
)..
வாங்க மதுரா மேடம்,
)..
//அதனால என் காக்கா சைஸ் மூளைய நல்லா கசக்கி …//
என்னாது மூளை காக்கா சைசா? யப்பா அதனால் தான் என்னைய மாதிரி மூளை கொஞ்சம் கம்மியா இருக்குற பசங்க உங்க எரியா பக்கம் வந்தா எதுவுமே புரிய மாட்டேங்குது
//கவனித்தால் Tax Detection, கூட பயணித்தால் அனைவருக்கும் கட்டணத்தில் Discount, இப்படி போட்டா இதுக்காகவே வீட்டுல வச்சு ஊரெல்லாம் சுத்தி காமிக்கலாம் எல்லா நல்லவங்க நாலுந்தெரிஞ்சவங்களும்! இது ஒரு Capitalist Solution, கேவலமாத்தான் இருக்கு சொல்றதுக்கு//
இது என்னவோ நல்லா தான் இருக்கு ஆனா பாருங்க பாசம் எல்லாம் unconditionalஆ இருக்கணும் அது தான் நம்ம கட்சி. இல்லாட்டி நம்ம ஆளுங்க என்ன சட்டம் போட்டாலும் அதுல இருக்குற ஓட்டயை தேடிகிட்டே இருப்பாங்க. வயசான காலத்துல அவங்களுக்கு தேவை பாசமே தவிர காசு பணம் எல்லாம் இல்ல.