178. சபரி – உனக்கு ஏன் இந்த கொலைவெறி

உங்களுக்கு ஒரு முளு நீள காமெடி படம் பார்க்க வேண்டுமா அப்ப நீங்க பார்க்க வேண்டிய படம் சபரி, நெஞ்சை ஈரமாக்கும் (படத்துல அந்த நக்கு நக்கறாங்கப்பா ஆளுக்கு ஒரு டஜன் துண்டு வாங்கிவெச்சோம் முதல் பகுதி முடியும் பொழுதே வாங்குன எல்லா துண்டும் ஈரமாயிடிச்சி) படத்தை பார்த்து ரொம்ப நாள் ஆச்சா அப்ப நீங்க பார்க்க வேண்டிய படம் சபரி, நெட்டுல பாடாவதி printடோட படம் பார்த்து வெறுத்து போயி எப்படா இதுக்கு எல்லாம் ஒரு விடிவு காலம் வந்து நல்ல ப்ரிண்டோட ஒரு படம் பார்க்க வேணுமா(பங்காளிங்க எல்லாம் நம்ம கேப்டனே உலகம் முழுவதும் வாழும் டமில் மக்களின் நலனுக்காக upload செய்து இருப்பாருங்ன்னு பேசிக்கிறாங்க) அப்ப நீங்க கண்டிப்பா பார்க்க வேண்டிய படம் சபரி. சரி படத்துக்கு ஏகப்பட்ட ஹைலைட்டு, படத்தோட பேரு சபரின்னு வெச்சதுக்கு ஹைலைட்டுன்னு வெச்சி இருக்கலாம் அந்தளவுக்கு பட்த்துல ஹைலைட்டு பதிவின் நீளம் கருதி கொஞ்சமா இங்க தரேன்.

முதலாவது ஹைலைட்டும் படத்தோட Heavy weightடும் நம்ம கேப்பு கேப்டன் தான். நல்லவருன்ன நல்லவரு நல்லதே இப்படி ஒரு நல்லவரான்னு யோசிக்கிற அளவுக்கு அப்படி ஒரு நல்லவரு. அவரு ஒரு டாக்டரு, உலகத்துலேயே பெரிய இருதய அறுவை சிகிச்சை நிபுணரு (body sizeலயான்னு தெரியலை). 3 வருசத்துல 1000 heart operation செஞ்சி இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், பாகிஸ்தான் அப்படின்னு உலகம் முழுவதும் இருக்குற நோயாளிகளை குணப்படுத்துற டாக்டர் cum தெய்வம் இவரு. இம்முட்டு பெரிய டாக்டரு அரசாங்க ஆஸ்பத்திரியில தான் வேலை செய்றாரு. தனியா கிளினிக் வெச்சி நடத்துனாலும் அதுல வருகிற காசை அப்படியே ஏழைங்களுக்கு குடுத்துடுவாரு. இவருக்கு காபி குடுக்க ஆஸ்பத்திரிக்கு வருகிற அவரது அப்பாவே டோக்கன் போட்டு லைன்ல நின்னு தான் குடுக்குறாருன்னா பாத்துகோங்க எம்முட்டு நல்லவருன்னு.

அடுத்த ஹைலைட்டு படத்தோட வில்லன். கேப்டனுக்கு ஈடு இணையா இவரும் நல்லவரு, பக்திமான் எப்படின்னு கேக்கறீங்களா? கொலை செஞ்சிட்டு வந்த கையோட அதுக்கு பரிகாரமும் செஞ்சிடுவாராம் இவரு. அப்புறம் வழக்கம் போல நீதிபதி, மந்திரி, கலெக்டர், அப்படின்னு கேப்டனை தவிர மத்த அரசாங்க ஊழியர்கள் எல்லாம் இவரோட கையாள்.

சென்னை என்னங்க நான் இங்க வந்த ரெண்டு வருசத்துல இம்முட்டு மோசமாயிடிச்சி. அரசு மருத்துவமனையில் special wardல நம்ம டாக்டர் சபரி வந்து அடிச்சி கேக்குற வரைக்கும் விபச்சாரம் நடக்குது, தண்ணி அடிக்கிறாங்க, ரெஸ்டு எடுக்க பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் வராங்க என்னவோ போங்க. அடுத்து என்னங்க இப்படி நடுரோட்டுல ஒரு 5000 பேர் சுத்தி நின்னுட்டு இருக்கும் பொழுது ஒரு அரசாங்க அதிகாரியை வில்லனோட அடியாளுங்க நிக்க வெச்சி வசனம் பேசி வெட்டிட்டு போறாங்க. சென்னையில் அரசாங்க அதிகாரிங்களுக்கு எல்லாம் பாதுகாப்பே இல்லையா?

அடுத்து ஒரு இன்ஸ்பெக்டர் என்னடான்னா lockupல வெச்சி கைதியை விசாரணை செய்யாம கொலை நடந்த இடத்துக்கு கூட்டிட்டு வந்து எப்படிடா வெட்டுன அப்படின்னு கேக்குறாரு, நம்ம வில்லன் வந்து அவரை வெட்டிட்டு இப்படி தான் அப்படின்னு live demo காட்டுறாரு. எனக்கு படம் பார்க்கும் பொழுது ரொம்ப பயமா போச்சிங்க.

அடுத்து எப்படியோ வில்லனோட மச்சானை கைது செஞ்சிடறாங்க, அவரை தப்பிக்க வெச்சி கூட்டிட்டு போக ஒரு 50-60 ரவுடிங்க சும்மா டூமில் டூமில்னு நடுரோட்டுல போலிசை எல்லாம் சுட்டுபுட்டு கூட்டிட்டு போறாங்க. ஊருல இருக்குறவங்க எல்லாம் கொஞ்சம் பார்த்து இருந்துகோங்க, இப்படி தெனமும் நடக்குற சண்டையில் நீங்க போயி மாட்டிகாதிங்க.

அடுத்த என்னானா ஒரு பத்து நிமிசத்துல நீதிமன்றத்துல விசாரணை முடிஞ்சி, தூக்கு தண்டனை குடுத்துடறாங்க அதுவும் அவருக்கு எதிரா சாட்சி சொல்ல யாருமே இல்லாத போதும். அதை விட பெரிய ஹைலைட்டு என்னானா தூக்கு தண்டனை குடுத்த மறு நிமிசம் அவரை தூக்குல போட்டுறாங்க. சே இந்தியாவின் நீதித்துறை இம்முட்டு வேகமா, புல்லரிச்சிப்போச்சிங்க (இது மாதிரி புல்லரிக்கும் காட்சிகள் நிறைய இருக்கு தனியா அதுக்கும் மருந்து வாங்க் தனியா வெச்சிகோங்க).

அடுத்த ஹைலைட்டு படத்தோட இறுதிக்காட்சியில ஒரு இடத்துல வில்லனுக்கு ஒரு டயலாக் விடுவாரு அதை கேட்டுட்டு வில்லன் இவரை கொல்லாம போயிடுவாரு சரி இம்சை முடிச்சிடிச்சிடா சாமியோவ் அப்படின்னு எஸ்கேப் ஆகலாம் அப்படின்னு பாத்தா அதுக்கு அப்புறம் சுமார் அரை மணி நேரம் படம் இருக்குது. படம் எப்ப முடியும் அப்படின்னு ஒரு திரில்லாவே இருக்கும் உங்களுக்கு.

அடுத்த ஹைலைட்டு சரியா பதினைந்து நிமிசத்துக்கு ஒரு தரம் படத்துல யாராவது ஒருத்தரு நம்ம கேப்டன் வந்து பிரச்சனையை தீர்க்கும் வரை அழுது ஆர்பாட்டம் பண்ணி ஒப்பாரி வெக்கிறாங்க. தாங்கலைடா சாமியோவ்.

படத்துல புல்லரிக்கு காட்சி இருக்குன்னு சொன்னே இல்லிங்களா அதுல ஒண்ணு நம்ம கேப்டனு ஒரு ஆப்ரேசன் செஞ்சிகிட்டே இருக்காரு டபால்ன்னு கரண்டு கட்டு ஆயிடுது. கூட இருக்குற டாக்டருங்க எல்லாம் டாக்டர் இன்னும் 5 செகண்டு தான் இருக்கு ஏதாவது பண்ணுங்கன்னு சொல்ல நம்ம ஆளு உடனே டக்குன்னு எல்லாருடைய மொபைல் போனையும் ஆன் பண்ண சொல்லி அந்த வெளிச்சத்துல அறுவை சிகிச்சையை முடிச்சி நோயாளியை காப்பாத்திடராரு (தலை முடியலை எப்படி உங்களால மட்டும் இப்படி எல்லாம் முடியுது எந்த ஹோட்டலில் ரூம் போட்டு இப்படி யோசிக்கிறீங்க). அப்புறம் முக்கியமான மேட்டரு heart weakஆ இருக்குறவங்க இந்த சீனை பாக்காம இருக்குறது நல்லதுங்க, ஏன்னா தலை அந்த நோயாளியை எப்படி காப்பாத்துவாருன்னு தெரியாம tensionஆகி ஒரு நாலு ஜந்து பேரு நெஞ்சி வெடிச்சி செத்து போயிட்டதா ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.

ஹீரோயினை பத்தி சொல்றத்துக்கு பெருசா எதுவும் இல்லிங்க, வழக்கமா கேப்டன் படத்துல எப்படி ஹுரோயின் எல்லாம் லூசா இருப்பாங்களோ இதுலையும் அதே மாதிரி ஜோதிர்மயி. இன்னொரு ஹைலைட்டு என்னானா நம்ம மாளவிகா ஒரு பாட்டுக்கு ஆட்டத்தை போட்டுட்டு நம்ம தலை மேல தெரியாம மோதி அவரோட காந்தத்துல attractஆகி இன்னொரு முறை இடிங்கன்னு கேக்குறாங்க. அப்புறம் கேப்டனின் அரை பக்க டயலாக்கை கேட்டு என்னை விட்டுடு சாமியோவ் அப்படின்னு அவரை விட்டு ஓடிப்போறாங்க (நம்மால முடியலைங்க).

அப்பா மற்றும் தங்கை வழக்கம் போல இவரோட அருமை பெருமைகளை ஊர் முழுக்க சொல்லுவது அப்புறம் நம்ம ஹீரோவை பொங்கி எழச்செய்வதற்காக வில்லனால் கொலை செய்யப்படுகிறார்கள்.

படத்துல ஜஸ்வர்யா கொஞ்ச நேரமே வந்தாலும் கலக்கி இருக்காங்க.

அப்புறம் கேப்டன் சார் தமிழ் மக்கள் மேல ஏன் உங்களுக்கு இந்த கொலைவெறி. எலக்சன் நேரத்துல இந்த மாதிரி படத்தை எடுத்து வெளியே விட்டுடாதிங்க அப்புறம் உங்களுக்கு வோட்டு போடலாம் அப்படின்னு நினைச்சிகிட்டு இருக்குற கொஞ்ச பேரும் படத்தை பாத்து செத்து போயிடப்போறாங்க. அப்புறம் உங்களுக்கு தான் ஓட்டு நஷ்டம்.

11 Comments

  1. 1
    Anonymous Says:

    unga blog really kalakkal
    enaku sabari pakkara ennamae poiduchu

  2. 2
    இலவசக்கொத்தனார் Says:

    படம் வந்து முதல்நாளே அடிச்சு பிடிச்சு பார்க்கணும். அப்புறம் இப்படி அழுது ஒப்பாரி வைக்கணும். இதே வேலையாப் போச்சுப்பா உங்களோட!

  3. 3
    தம்பி Says:

    உங்களுக்கு கேப்டன் மேல கொலவெறி!

    எப்படி நடிச்சாலும் கிண்டல் பண்ணுறிங்களேய்யா! :)

  4. 4
    கண்மணி Says:

    சந்தோஷ் நான் மண்டையப் பிச்சிகிட்டு ஒரு பதிவெழுதி சிரிக்க வக்கறத சும்மா கேப்டன் படம் விமர்சனத்திலயே நீங்க செஞ்சிட்டீங்க போங்க

  5. 5
    Radha Sriram Says:

    படம் செம காமெடி போல?? கலக்கிடீங்க….

    கொஞ்ச நேரம் ஓரமா போய் உக்காந்து த்யானம் பண்ணுங்க,சரியாயிடும்:):)

    மத்தபடி இந்த படத்தை பார்க்குமாரு நான் நம்ம பொறுமையின் பூஷணம் “நாகை சிவா”விற்க்கு பரிந்துரை செஞ்சுகிரேன்:):)

    சந்தோஷ், உங்களுக்கு ஒண்ணும் ஆட்சேபனை இல்லையே?

  6. 6
    மணிகண்டன் Says:

    //படத்துல புல்லரிக்கு காட்சி இருக்குன்னு சொன்னே இல்லிங்களா அதுல ஒண்ணு நம்ம கேப்டனு ஒரு ஆப்ரேசன் செஞ்சிகிட்டே இருக்காரு டபால்ன்னு கரண்டு கட்டு ஆயிடுது. கூட இருக்குற டாக்டருங்க எல்லாம் டாக்டர் இன்னும் 5 செகண்டு தான் இருக்கு ஏதாவது பண்ணுங்கன்னு சொல்ல நம்ம ஆளு உடனே டக்குன்னு எல்லாருடைய மொபைல் போனையும் ஆன் பண்ண சொல்லி அந்த வெளிச்சத்துல அறுவை சிகிச்சையை முடிச்சி நோயாளியை காப்பாத்திடராரு (தலை முடியலை எப்படி உங்களால மட்டும் இப்படி எல்லாம் முடியுது எந்த ஹோட்டலில் ரூம் போட்டு இப்படி யோசிக்கிறீங்க). //

    சான்ஸே இல்லங்க. நிச்சயமா இந்த சீனுக்காகவே இவங்களுக்கு ஆஸ்கர் அவார்ட் குடுக்கலாம். இந்த லட்சணத்துல தான் நடிச்ச படங்கள்ல் இந்த படத்துலதான் எல்லாம் சரியா மைஞ்சிருக்குன்னு விஜயகாந்த் பேட்டி வேற.

    நம்ம கேப்டனை பத்தி தெரிஞ்சும் இந்த படத்தை தைரியமா பாத்ததுக்கு உங்களுக்கும் ஒரு அவார்ட் குடுக்கலாம் :)

  7. 7
    சந்தோஷ் aka Santhosh Says:

    //Anonymous said…

    unga blog really kalakkal
    enaku sabari pakkara ennamae poiduchu//

    ரொம்ப டாங்க்ஸ் அனானி. அடிக்கடி ஏரியாபக்கம் வாங்க.

    //இலவசக்கொத்தனார் said…

    படம் வந்து முதல்நாளே அடிச்சு பிடிச்சு பார்க்கணும். அப்புறம் இப்படி அழுது ஒப்பாரி வைக்கணும். இதே வேலையாப் போச்சுப்பா உங்களோட!//

    நம்ம எல்லாம் கைப்புள்ளையோட direct சிஷ்யங்க. தலை எப்படி சந்து சந்தா அனுப்பி அடிச்சாலும் அழாம தாங்குறாரு அது மாதிரி தான் நாங்களும் இதுக்கு எல்லாம் அசரமாட்டோம்.

    //தம்பி said…

    உங்களுக்கு கேப்டன் மேல கொலவெறி!

    எப்படி நடிச்சாலும் கிண்டல் பண்ணுறிங்களேய்யா! :) //

    ஆகா கதிரு ஒரு கொலை வெறியோட இருக்கேன் உன்னைய நேருல பாத்தேன்னு வையி மவனே அன்னிக்கு பூரா கேப்டன் படத்தை கட்டிப்போட்டு பாக்க வெப்பேன். வெந்த புண்ணுல வேலை பாய்சாதப்பா.

  8. 8
    சந்தோஷ் aka Santhosh Says:

    //கண்மணி said…

    சந்தோஷ் நான் மண்டையப் பிச்சிகிட்டு ஒரு பதிவெழுதி சிரிக்க வக்கறத சும்மா கேப்டன் படம் விமர்சனத்திலயே நீங்க செஞ்சிட்டீங்க போங்க//
    அய்யோ என்னங்க கண்மணி உங்க அளவுக்கு முடியுமா நீங்க கமெடில பின்னி பெடல் எடுக்கறீங்க நான் எல்லாம் ஏதோ பஞ்சத்துக்கு இப்படி பொழப்பை ஓட்டிகிட்டு இருக்கேன்.

    //Radha Sriram said…

    படம் செம காமெடி போல?? கலக்கிடீங்க….//

    அதை ஏன் கேக்குறீங்க அந்த படம் எந்த வகைன்னே தெரியலை காமெடி மாதிரியும் இருக்கு, Tragedy மாதிரியும் இருக்கு ஒண்ணிமே புரியலை.

    // கொஞ்ச நேரம் ஓரமா போய் உக்காந்து த்யானம் பண்ணுங்க,சரியாயிடும்:):)//

    நீங்க வேற அந்த படத்தை பாத்ததுல இருந்து கண்ணை மூடினாலே கேப்டன் பின்னாங்கால்ல வில்லனை ஒதைக்குற கனவு தாங்க வருது.

    // மத்தபடி இந்த படத்தை பார்க்குமாரு நான் நம்ம பொறுமையின் பூஷணம் “நாகை சிவா”விற்க்கு பரிந்துரை செஞ்சுகிரேன்:):)

    சந்தோஷ், உங்களுக்கு ஒண்ணும் ஆட்சேபனை இல்லையே?//

    நீங்க வேற மாப்பி எல்லாம் ரொம்ப வேகம் இந்த நேரத்துக்கு ஒரு மூணு தடவை பாத்து இருப்பான் படத்தை.

    புலி,
    ஆகா மாப்பி பாத்து இருந்துக்கோடா உன்மேல பாசத்தை கொட்ட இப்படி பாசக்கார கூட்டம் சுத்திகிட்டு இருக்கு பாக்கும் போது எனக்கு பொறாமையா இருக்கு என்சாய்.

  9. 9
    .:: மை ஃபிரண்ட் ::. Says:

    சபரி விமர்சனம்ன்னதும் அந்த அப்பரேஷன் சீன்தான் முதல் பபத்தியில எழுதியிருப்பீங்கன்னு நெனச்சேன். க்க்கீழ்ழ்ழ்ழே எழுதியிருக்கீங்க.. ஒரு அகில உலக மருத்துவருக்கு அது அவமானமாச்சே! கேப்டன் உங்க மேலே கேஸ் போட்டுட போறார்.

    எனக்கு ஒரு கேள்வி. அந்த நாடி துடிப்பு செக் பண்ற மிஷினும் கரண்ட்ல ஓடுறதுதானே.. அது மட்டும் இவங்களுக்கு ஓடுது பார்த்தீங்களா? :-P

  10. 10
    .:: மை ஃபிரண்ட் ::. Says:

    கேப்டனுடைய அடுத்த பரிமாணம்தான் இந்த படம்.. என்ன சொல்றீங்க சந்தோஷ்?

    இவரு எப்போதும் செய்யுற வேலை:

    1- போலிஸ்
    2- அதிகாரி
    3- வக்கில்
    4- மக்கள் அக்கரை கொண்டவன்
    5- ராணுவம் (1 man army) :-P
    6- காமெடியன்

    இதெல்லாம் தாண்டி இந்த படத்துல

    1- டாக்டர்
    2- ப்ரேக் இன்ஸ்பெக்டர் (ஸ்பெஷல் அப்பியரண்ஸ்)

    ஒரு படத்துல இத்தனை ரோல்ஸ்ஸா? :-P

  11. 11
    .:: மை ஃபிரண்ட் ::. Says:

    போலிஸ் காரங்க கூட ரவுடிகளிடம்ருந்து உண்மைகளை வர வைக்க முடியவில்லை.. இவரால மட்டும் முடியுதாம்.. அய்யோ அய்யோ!!!

    இப்படி சொல்லனும்ன்னா நிறைய இருக்கு சந்தோஷ்..


RSS Feed for this entry

Leave a Comment