182. சாப்டுவேர் கம்பெனிகளின் Foundationகள்

பொதுவா எல்லா கணிப்பொறி நிறுவனங்களுமே foundations என்கிற பெயரில் ஒரு சமுதாய நற்பணிகள் செய்வதற்காக ஒரு துணை நிறுவனங்கள் அமைத்துக்கொள்கின்றன. அப்படி அமைத்துக்கொண்டு அவர்கள் அடிக்கும் கூத்துக்கு ஒரு அளவே கிடையாது. எனக்கு தெரிந்த நிறுவனத்தில் பெண்களுக்கு என்றே ஒரு அமைப்பு உண்டு அதுல சமூக சேவை செய்து நான் கேள்விப்பட்டது இல்லை. அப்படியே இருந்தாலும் கம்பெனிக்கு பயன்படாத ஓட்டை கம்யூட்டர்கள் 50ஜ இவங்களுக்கு அளித்தோம் அவங்களுக்கு அளித்தோம் அப்படின்னு பெரிய பெரிய விளம்பரத்துடன் இவர்கள் அளிக்கும் charity மாதிரியானவை.

ஆனா மாசம் தவறாம கோலப்போட்டி, மாறுவேடப்போட்டி இந்தப்போட்டி அந்தப்போட்டி என்று நடத்துவார்கள். தீபாவளி பொங்களுக்கு பக்கத்துல இருக்குற அனாதை இல்லங்களுக்கு பட்டாசு குடுப்பாங்க. இந்த அமைப்பு கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி அட்லாண்டாவில் ஒரு கூட்டம் ஏற்பாடு. அதில் கலந்து கொள்ள இந்தியாவில் இருந்து அந்த அமைப்பின் தலைவி வந்து இருந்தாங்க. கொடுமையை பாருங்க இங்க வந்து அந்த அம்மா செய்தது என்ன தெரியுமா குழந்தைகளுக்காக நடந்த மாறு வேடப்போட்டியில் ஜெயித்தவர்களுக்கு பரிசு அளித்தது. இதுக்காக அந்த அம்மா இந்தியாவுல இருந்து வந்து இருந்தாங்க.

வந்தது பெரிய இடம் ஆச்சே (பொதுவா இது போன்ற அமைப்புக்களுக்கு அந்த கம்பெனியின் CEO பொண்டாடி புள்ளைங்க மற்றும் Board Memberகளின் சொந்த பந்தங்கள் தான் நிர்வாக பொறுப்பில் இருப்பார்கள்) உங்களுக்கே தெரியும் விமானத்துல முதல் வகுப்பு, மினிமம் 5 நட்சத்திர ஹோட்டல், வந்தவங்க சும்மா இருப்பாங்களா அவங்க சுற்றமும் நட்பும் இங்கன பல மாநிலங்களில் இருப்பாங்க அவங்களை எல்லாம் நேரில் பார்த்து குசாலம் விசாரிப்பு, அப்படியே இங்கன எங்க எல்லாம் சுத்தி பார்க்க முடியுமோ அத்தைனையும் பார்த்துட்டு போனாங்க. எல்லாம் யாரு அப்பன் ஊட்டு காசு என்னையும் உங்களையும் மாதிரியான ஆட்கள் ராத்திரி பகலா உழைச்சி கொட்டினதை, இவனுங்க foundation அப்படிங்கிற பெயரில் இப்படி கூத்து அடிக்கிறானுங்க.

இவங்க இப்படி வாழ்றாங்க. அதுவே ஒரு சாதாரண employee என்ன கேட்டாரு தெரியுமா, கைக் குழந்தை இருக்குங்க இங்க இருந்து நேரடியா சென்னை போகிற விமானத்தில் ஒரு டிக்கெட் எடுத்து குடுங்க அப்படின்னு அதுக்கு “No No Company Policy doesnt allows that” அம்முட்டு தான் ஒரு வரி பதில் 50 stop overகளுடன் நடந்து போயி இருந்தாலும் நிம்மதியா போயி இருக்கலாம் அப்படின்னு தோணும் அளவுக்கு சலிப்பையும் வலியையும் ஏற்படுத்தக்கூடிய ஒரு விமான பயணம்.

கேட்க ஆள் இல்லை அப்படி கேட்டாலும் companyயின் Internet Policyக்கு எதிராக நீ போக கூடாத தளத்துக்கு போனாய் ஒழுங்க resignation letter குடுத்துட்டு ஓடிப்போயிடு இல்லாட்டி நாங்க வேலையை விட்டு தூக்கிடுவோம் அப்படின்னு அன்பா வேலையை விட்டு தூக்கும் பண்பாளர்கள். இல்லாட்டி இருக்கவே இருக்கு யாருக்குமே புரியாத, தொழிலாளியை வேலையை விட்டு தூக்க மட்டுமே பயன்படுத்தப்படும் company ethics. ஆடுங்கடா ஆடுங்க இன்னும் எம்முட்டு நாள் தான்.

இதை எல்லாம் ஏன் சொன்னேன் என்றால் Infosys நாராயண மூர்த்தி பற்றி எனக்கு நல்ல அபிப்ராயம் இருந்தது, அவரை அடுத்த ஜனாதிபதியா தேர்ந்து எடுக்கலாம் அப்படின்னு சொன்ன தளத்துக்கு எல்லாம் போயி ஓட்டு போட்டேன், இமெயிலை மெயிலே அனுப்பாதவனுக்கு எல்லாம் forward செய்தேன். அவரோட சந்தியை இங்க (இந்த பக்கத்தில் கொஞ்ச கீழே போனால் “Charity Narayan Murthy Style”, “Cornell loves Narayana Murthy” போன்ற சுட்டிகளை படிச்சி பாருங்க, முடிந்தால் மொத்த கதையையும் படிச்சி பாருங்க.)எப்படி சிரிக்க வெச்சி இருக்காங்க பாருங்க.

கோடிக்கணக்கான வருமானம் 150% வரை லாபம் கணக்கு கேட்க ஆள் இல்லை, லஞ்சமும் ஊழலும் கணிப்பொறி நிறுவனங்களில் தலை தூக்க ஆரம்பித்து விட்டது. படித்தவர்கள் வந்தால் லஞ்சமும் ஊழலும் குறைந்துவிடும் அப்படிங்கிறது எல்லாம் சும்மாங்க மனுசன் இருக்குற வரைக்கும் அதை எல்லாம் ஒண்ணுமே செய்ய முடியாதுங்க.

9 Comments

  1. 1
    Anonymous Says:

    Thanks for the post…

  2. 2
    சந்தோஷ் aka Santhosh Says:

    // Anonymous said…

    Thanks for the post…
    //
    இதை சொல்ல ஏங்க அனானியா வரணும்?

  3. 3
    பெருசு Says:

    சந்தோசு

    நாளைக்கு நீங்களே ஒரு கம்பேனி வெச்சி அதுலே $$$$$ லே சம்பாதிச்சா
    இப்படித்தான் செய்ய வேண்டி இருக்கும்.

    அதுக்காக மூர்த்தி செய்யரது சரின்னும் சொல்ல வர்ல.

    மூர்த்திக்கு கொள்ளுதாத்தா பில்கேட்ஸ் ஒரு தடவை mcdonalds queueலே நின்னு பத்து டாலர் நோட்டு ஒண்ணு குடுத்து மீதி சில்லறைய வாங்கி
    அப்படியே பாக்கட்லே போட்டுகிட்டார்.
    அவுரு மீதிய முன்னால வெச்சிருந்த உண்டியல்லே போடலை.இதை டிவி லே காட்டுனாங்க.

    சந்தோசு, கம்முன்னு ஆணி புடிங்குங்க.
    இல்லேன்னா கைப்ஸ் க்கு ஆன கதிதான் உங்களுக்கும்.

    சாபமில்லங்க, வரம் குடுக்குறேன்.

  4. 4
    சந்தோஷ் aka Santhosh Says:

    //நாளைக்கு நீங்களே ஒரு கம்பேனி வெச்சி அதுலே $$$$$ லே சம்பாதிச்சா
    இப்படித்தான் செய்ய வேண்டி இருக்கும்.//
    அப்படி இல்ல தலை சும்மா எதுக்கு மக்களை ரொம்ப நல்லவன் மாதிரி ஏமாத்திகிட்டு ஹும் அதுல இருக்குற எல்லா கட்டுரைகளையும் படிச்சி பாருங்க கொதிச்சி போயிடுவிங்க.
    //மூர்த்திக்கு கொள்ளுதாத்தா பில்கேட்ஸ் ஒரு தடவை mcdonalds queueலே நின்னு பத்து டாலர் நோட்டு ஒண்ணு குடுத்து மீதி சில்லறைய வாங்கி
    அப்படியே பாக்கட்லே போட்டுகிட்டார்.
    அவுரு மீதிய முன்னால வெச்சிருந்த உண்டியல்லே போடலை.இதை டிவி லே காட்டுனாங்க.//
    இதுல தப்பே இல்ல பெருசு அவரு குடுக்க வேண்டிய காசுல ஒண்ணும் ஏமாத்தவில்லையே. Tip என்பது optionalலே தவிர கண்டிப்பு கிடையாது இல்ல. Bill Gates ஒரு Bad tipper என்பது ஒரு உலகறிஞ்ச விஷயம், ஆனாலும் Gates & Melinda Foundation அப்படின்னு ஒண்ணு ஆரம்பிச்சி எய்ட்ஸ் நோயாளிகளுக்காக அவங்க நிறைய செலவு செய்றாங்க.

    //சந்தோசு, கம்முன்னு ஆணி புடிங்குங்க.
    இல்லேன்னா கைப்ஸ் க்கு ஆன கதிதான் உங்களுக்கும்.
    //

    :) ) பெருசு சொன்னா சரியா தான் இருக்கும் :) )

  5. 5
    பெருசு Says:

    //சும்மா எதுக்கு மக்களை ரொம்ப நல்லவன் மாதிரி ஏமாத்திகிட்டு //

    இது மேட்டரு.

  6. 6
    ulagam sutrum valibi Says:

    நீங்க பேருசுனு சொல்லுரிங்க நீங்களே இப்படி சொன்ன எப்படிங்க?
    எல்லாரும் ஆணிமாத்திரம் பிடுங்கிட்டு இருத்தா ஒரு நாள் நம்ம
    தலையில் ஆணி அடக்கமாடாங்கனு என்ன நிச்சயம் இளைஙஞர்களால்தான்
    முடியுங்க ,வாய்மையே வெல்லுமுன்னு வாயால மட்டும் சொன்னா எப்படிங்க
    கடவுள் தான் வாய்மைங்க,அவர் அதன் பக்கம் இருக்கும்பேது பயம்
    எதுகுங்க.ஊதுரசங்கை ஊதுங்க சந்தோஷ் முழுச்சுகரவங்க முழுச்சுக்கிட்டும்

  7. 7
    மணிகண்டன் Says:

    Foundations பேர்ல நடக்கற கூத்தை நல்லா சொல்லியிருக்கீங்க. நன்றி சந்தோஷ்.

  8. 8
    Anonymous Says:

    தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

    தமிழ் ஒலி ஒளி நாடா
    தமிழ் படப்பாடல்
    தமிழ் நகைச்சுவை
    தமிழ் படம்
    தமிழ் நடிகர் நடிகை புகைபடம்

    மற்றும் அன்பு……
    தமிழ்.ஹப்லாக்.காம்
    (Tamil.Haplog.com)

  9. 9
    Anonymous Says:

    தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

    தமிழ் ஒலி ஒளி நாடா
    தமிழ் படப்பாடல்
    தமிழ் நகைச்சுவை
    தமிழ் படம்
    தமிழ் நடிகர் நடிகை புகைபடம்

    மற்றும் அன்பு……
    தமிழ்.ஹப்லாக்.காம்
    (Tamil.Haplog.com)


RSS Feed for this entry

Leave a Comment