200. கலக்குது இளசு

ஒரு நல்ல விஷயம் அல்லது ஒரு பொருளை எப்படி கெடுத்து குட்டி சுவர் ஆக்க முடியும் அப்படிங்கிறதுக்கு ஆர்குட் ஒரு அருமையான உதாரணம். ஒரு காலத்தில் படித்த நண்பர்களை எல்லாம் சில பேர் கண்டுபிடித்து சந்தோசப்பட்டுக்கொண்டு இருக்கும் வேளையில். அதையே நாடுகளுக்கும், சமுதாயங்களுக்கும் எதிரான கருத்துக்களை பரப்பி அதை தடை செய்யும அளவுக்கு அழித்து குட்டிச்சுவர் ஆக்கிக்கொண்டு இருக்கிறது ஒரு கூட்டம். அதையே நல்ல விஷயத்துக்கும் உபயோகப்படுத்த முடியும் என்று ஒரு இளைஞர் கூட்டம் நிரூபித்து உள்ளது.

உங்களுக்கு எல்லாம் தெரிந்து இருக்கும் ஆர்குட்டில் குழுக்களை உருவாக்க முடியும் என்று. அப்படி ஒரு குழு தான் “upliftment of the orphans” என்ற குழு. இதில் உள்ள இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் மாதம் ஒரு முறை ஒரு அனாதை இல்லத்தை தேர்ந்து எடுத்து அதில் உள்ள குழந்தைகளுக்கு நேரில் சென்று தன்னாலான உதவிகளை செய்கின்றனர். இதை செய்யும் அனைவரும் 25 அல்லது 26 வயதுக்குள்ளான இளைஞர்கள். எனக்கு தெரிந்த வரையில் அனைவரும் தன்னுடைய சொந்த காசையே இதற்கு செலவு செய்கின்றனர். சென்னையில் துவங்கிய இவர்களது பணி ஹைத்திரபாத்திலும் துவங்கியுள்ளது.

இவர்களைப்பற்றி மேலும் விவரம் அறிய இவர்களின் ஆர்குட் குழுமத்தை இங்கே கிளிக்கி பாருங்க (இதை பார்க்க உங்களுக்கு ஆர்குட் account அல்லது கூகுள் account தேவை). இவர்கள் மாதம் ஒரு முறை, பெரும்பாலும் பிரபலமில்லாத ஒரு அனாதை இல்லத்தை தேர்ந்து எடுத்து அவர்களை தொடர்பு கொண்டு அவர்களின் தேவையறிந்து தங்களால் என்ன முடியுமோ அதை செய்கின்றனர். இவர்கள் அடுத்து எந்த இல்லத்தை சென்று பார்க்க போகிறார்கள் போன்ற விவரங்களை பற்றி மேலும் விவரம் அறிய அவர்களின் குழுமத்தில் உள்ள “topic” பகுதியினை பாருங்க.

நான் இந்த வயதில் இதை பற்றி எல்லாம் யோசித்து கூட பார்த்தது இல்லை. ஏதோ யாராவது வந்து கேட்டால் என்னால் முடிந்ததை குடுப்பதோடு சரி. இன்றைக்கு பொழுது போக்கவும், பணத்தை செலவு செய்யவும் பல இடங்களும் வழிகளும் இருந்தும் கூட அதையும் தாண்டி இது போன்ற நல்ல காரியங்களை செய்யும் நீங்கள் உண்மையிலேயே பாராட்டுக்கு உரியவர்கள். Hatsoff guys you are doing a very wonderful job.

26 Comments

  1. 1
    இராம் Says:

    200′க்கு வாழ்த்துக்கள் சந்தோஷ்… :) )

  2. 2
    Anonymous Says:

    Eppadi poi weekly sevai seiyarathaivida…alukku oru Kuzandhaiyai dathu eduthukkalame…athu unmaiyana puratchi, sevai ellam…ethellam show than…Nalla kariyam enbadhal motive pakkarathillai…

  3. 3
    தம்பி Says:

    நல்ல செய்தி! அந்த குழுவினருக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

  4. 4
    சந்தோஷ் Says:

    // இராம் said…

    200′க்கு வாழ்த்துக்கள் சந்தோஷ்… :) ) //
    நன்றி ராம்..

  5. 5
    சந்தோஷ் Says:

    / Anonymous said…

    Eppadi poi weekly sevai seiyarathaivida…alukku oru Kuzandhaiyai dathu eduthukkalame…athu unmaiyana puratchi, sevai ellam…ethellam show than…Nalla kariyam enbadhal motive pakkarathillai… //

    Dude,
    Are you mentally okey? How can you expect a 23-25 yr old kid to adopt a child? btw have you ever thought of going to such places. எதையாவது செய்யணும் செய்றவங்களை வாய் நோவாம கமெண்டு அடிக்கிறது ரொம்ப சுலபம்.

  6. 6
    தம்பி Says:

    இந்த 200 பதிவிலே சரிபாதி மொக்கைப்படங்களுக்கு எழுதிய விமர்சன பதிவுகள்.

    இனிமேலாவது நல்ல நல்ல திரைப்படங்களை கண்டு பின் விமர்சனம் எழுத வேண்டுகிறோம்.

  7. 7
    சந்தோஷ் Says:

    // தம்பி said…

    நல்ல செய்தி! அந்த குழுவினருக்கு என்னுடைய பாராட்டுக்கள். //
    நன்றி தம்பி, ஊருக்கு வரும் பொழுது முடிந்தால் நீங்களும் அவர்களுடன் ஒரு முறை போய்வரலாம்.

  8. 8
    சந்தோஷ் Says:

    // தம்பி said…

    இந்த 200 பதிவிலே சரிபாதி மொக்கைப்படங்களுக்கு எழுதிய விமர்சன பதிவுகள்.//
    நாங்க என்ன வெச்சிகிட்டா வஞ்சனை பண்றோம் பொதுவுல ஏன் ஏன் இந்த மாதிரி எல்லாம்.

    // இனிமேலாவது நல்ல நல்ல திரைப்படங்களை கண்டு பின் விமர்சனம் எழுத வேண்டுகிறோம்.//
    எனக்கும் அப்படி ஒரு நல்ல படம் பார்க்கவேண்டும் என்று ஆசை தான் என்ன பண்றது வரமாட்டேங்குதே?

  9. 9
    குட்டிபிசாசு Says:

    தகவல் மற்றும் 200 இடுகைக்கும் வாழ்த்துக்கள்!!

  10. 10
    கப்பி பய Says:

    தகவலுக்கு நன்றி!

    200-க்கு வாழ்த்துக்கள் :)

  11. 11
    குசும்பன் Says:

    சந்தோஷ் இங்கு ஆர்குட் பிளாக் செய்து இருக்கிறார்கள், என்னால் பார்க்க இயல வில்லை.

    உண்மையில் இது பாராட்ட பட வேண்டிய செயல்தான்.

    உங்களையும்.

  12. 12
    நாகை சிவா Says:

    200 வாழ்த்துக்கள்….

    சலாம் அந்த குழுவினர்க்கு

  13. 13
    மங்கை Says:

    நல்ல முயற்சி சந்தோஷ்..வாழ்த்துக்கள்..

  14. 14
    மணிகண்டன் Says:

    200க்கு வாழ்த்துக்கள் சந்தோஷ்

  15. 15
    நாமக்கல் சிபி Says:

    அட 200 ஆ!

    கலக்குங்க!

  16. 16
    ILA(a)இளா Says:

    Congrats on 200.
    நல்ல பதிவு 200ல். வாழ்த்துக்கள் சந்தோஷ்-இளசு

  17. 17
    Anonymous Says:

    / Anonymous said…

    Eppadi poi weekly sevai seiyarathaivida…alukku oru Kuzandhaiyai dathu eduthukkalame…athu unmaiyana puratchi, sevai ellam…ethellam show than…Nalla kariyam enbadhal motive pakkarathillai… //

    Dude,
    Are you mentally okey? How can you expect a 23-25 yr old kid to adopt a child? btw have you ever thought of going to such places. எதையாவது செய்யணும் செய்றவங்களை வாய் நோவாம கமெண்டு அடிக்கிறது ரொம்ப சுலபம்.

    My mental health may be questionable but u mean to say that “U r going to adopt a child once reach 30 – 35.” Comment adikkarathu pathi ennala badhil solla mudium But u will not understand. Neway i just wrote my first thought after reading the post.

  18. 18
    இலவசக்கொத்தனார் Says:

    200க்கு வாழ்த்துக்கள் சந்தோஷ்.

  19. 19
    தேவ் | Dev Says:

    200க்கு வாழ்த்துக்கள் சந்தோஷ்.

  20. 20
    முத்துலெட்சுமி Says:

    200 க்கு வாழ்த்துக்கள்.

  21. 21
    thurgah Says:

    200 ah?congrats dude :)

  22. 22
    கோபிநாத் Says:

    200க்கு வாழ்த்துக்கள் தலைவா ;) ))

    அந்த குழுவினருக்கு என் பாராட்டுக்கள்.

  23. 23
    சந்தோஷ் Says:

    // குட்டிபிசாசு said…

    தகவல் மற்றும் 200 இடுகைக்கும் வாழ்த்துக்கள்!!//

    அருண் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    //கப்பி பய said…

    தகவலுக்கு நன்றி!

    200-க்கு வாழ்த்துக்கள் :) //

    வாழ்த்துக்களுக்கு நன்றி கப்பி.

  24. 24
    சந்தோஷ் Says:

    //இலவசக்கொத்தனார் said…

    200க்கு வாழ்த்துக்கள் சந்தோஷ்.//

    நன்றி கொத்ஸ்

    //தேவ் | Dev said…

    200க்கு வாழ்த்துக்கள் சந்தோஷ்.//

    நன்றி தேவ்…

    //முத்துலெட்சுமி said…

    200 க்கு வாழ்த்துக்கள்.//

    வாத்துக்களுக்கு நன்றி முத்துலட்சுமி மேடம்..

  25. 25
    Rams Says:

    டபுள் செஞ்சுரி அடித்த தங்கத்தலைவர் வாழ்க வாழ்க… மேலும் பல செஞ்சுரிகள் அடிக்க வாழ்த்துக்கள்

    இராம்ஸ்

  26. அந்த குழுவினருக்கு என்னுடைய பாராட்டுக்கள்


RSS Feed for this entry

Leave a Comment