202. புதிய உலக அதிசயங்களும் ஏமாளி இந்தியர்களும்

புதிய உலக அதிசயங்களை தேர்ந்து எடுக்குறேன் அப்படின்னு சுவிட்சர்லாந்தை ஒரு தனியார் நிறுவனம் new7wonders கிளம்பி இருக்கு. அவங்க யாரு அப்படிங்கறத்துக்கு சரியான விளக்கம் இல்ல (ஆனால் அவர்கள் தாங்கள் ஒரு profitable organisation என்பதை தெளிவாக கூறி இருக்கின்றனர்.). எந்த நாட்டின் அரசாவது இவர்களை அங்கீகரித்து இருக்காங்களா? அப்படி எதுவும் தெரியலை. ஜ.நாவும் இவங்களை அங்கீகரிச்ச மாதிரி தெரியலை. ஆனாலும் உலக அதிசியங்களை தேர்ந்து எடுக்குறேன் அப்படின்னு ஒரு ஏகப்பட்ட சுற்று தேர்தலை நடத்தி பொதுமக்களிடம் இருந்து ஒரு கணிசமான தொகையை கறந்துவிட்டாங்க. 1999 ஆம் வருசம் ஆரம்பித்த இந்த சுரண்டல் நேற்று முடிந்தது.

இவர்களின் தேர்தலை முறையை பாருங்களேன். யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் உலக அதிசயங்களாக பரிந்துரை செய்யலாம். அப்புறம் ஓட்டெடுப்பின் வாயிலாக உலக அதிசயங்களை தேர்ந்து எடுப்பதாக சொல்லி இருக்கின்றனர். ஆனால் ஒட்டெடுப்பு முறையில் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஒட்டளிக்க எவ்விதமான தடையும் இல்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட ஒட்டுக்களை அளிக்க வேண்டுமானால் தொலைபேசி அல்லது குறுஞ்செய்தி வசதிகளை உபயோகப்படுத்துங்கள் என்று அவர்களின் தளத்திலேயே பரிந்துரை செய்துள்ளனர். ஏனெனில் நீங்கள் தொலைபேசி அல்லது குறுஞ்செய்தி வழியாக ஒவ்வொரு முறையும் ஓட்டளிக்கும் பொழுதும் இவர்களுக்கு ஒரு கணிசமான தொகை செல்கிறது இதன் மூலம் இந்நிறுவனம் பல கோடி வருவாயை ஈட்டி உள்ளது.

இந்த போட்டியின் முடிவுகளை இவர்கள் நேற்று அவர்களின் இணைய தளத்தில் அறிவித்து இருக்கின்றனர், மொத்தம் கிடைத்த ஓட்டுக்கள் எத்தனை அது போன்ற எந்த ஒரு விபரமும் இல்லை. அதே போல வெற்றி பெற்ற இடங்களை பாருங்கள் பெரும்பாலும் தென் அமெரிக்க நாடுகளில் உள்ள இடங்களே (மொத்தம் 7 அதிசயங்களில் 3 தென் அமெரிக்க நாட்டில் உள்ளவை). ஏனெனில் அந்த நாடுகளில் உள்ளவர்கள் தான் அதிகபடியாக ஒட்டளித்து உள்ளனர்.

இந்த நிறுவனத்துக்கு ஜக்கிய நாடுகளின் (பொதுவாக இந்த உலகத்தின் பழமையான இடங்களை அங்கீகாரம் செய்வது ஜக்கிய நாடுகளின் ஒரு உபநிறுவனமான UNESCO – United Nations Education, Scienticfic and Cultural Organisation ஆகும்.) அங்கீகாரமோ இல்லை உலக நாடுகளின் அங்கீகாரமோ இல்லை அப்படி இருந்த பொழுதும் எப்படி இந்த ஊடகங்கள் அவங்க போட்ட ஜந்து,பத்து பிச்சைக்கு ஆசைப்பட்டு இதை இப்படி தாங்கிப்பிடிக்கின்றன என்று தெரியவில்லை? உள்ளூர் ஊடகம் தினமலர் முதல் கொண்டு சர்வதேச உடகங்கள் வரை இடத்துக்கு தகுந்த மாதிரி உங்க ஊருக்கு ஓட்டு போடுங்க அப்படின்னு மக்களை உணர்வுப்பூர்வமாக ஏமாற்றி புண்ணியம் தேடிக்கொண்டது. சில பொட்டி தட்டும் கலைஞர்களும் உணர்ச்சி பெருமும் இமெயில் மூலமாக இதை பலருக்கு கொண்டு சென்று புண்ணியம் தேடிக்கொண்டனர்.

இதுல ஒரு காமெடி என்னானா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் முதல் 200 இடங்களில் வந்ததும். அதுக்கு தமிழக அரசே கோவிலுக்குள் ஓட்டளிக்க வசதி செய்து கொடுத்தது தான். மீனாட்சி அம்மன் கோவில் எந்த வகையில் architectural acheivement என்று தெரியவில்லை. அப்படி பார்த்தால் தஞ்சை பெரிய கோவில், இராமேஸ்வரம் கோவில் போன்றவை ஏன் தேர்ந்தெடுக்க வில்லை? மதுரை மீனாட்சி கோவிலில் கூட்டம் அதிகமாக வருகிறது நல்லா கல்லா கட்டலாம் என்பதாலா?

இதுல செம காமெடி எகிப்திய பிரமீடுகள் 7 உலக அதிசயங்களுல் இல்லையாம். வாக்கெடுப்பு முடிந்த உடன் கிரேக்க பிரமீடுகள் முதல் 7 இடங்களில் இடம்பெறாதது கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானது. அதைப்பற்றி கேட்ட பொழுது அந்த நிறுவனத்தின் செய்தியாளர் சொல்கிறார் “We absolutely had no problem with this,” Viering told the AP. As of Saturday, there will be eight world wonders including the Pyramids of Giza, she added. அடடா இது தெரிஞ்சி இருந்தா நாலு லாரியில் ஆளுங்களை கூட்டிட்டு போயி அவனுங்களை மிரட்டி எங்க தாத்தாவோட பழைய வீட்டையும் இதுல சேர்த்து இருப்பேனே.

அடுத்தா இவனுங்க உலகத்தின் இயற்கையால் ஏற்படுத்தப்பட்ட இடங்களுக்கான தேர்தலை துவக்கி இருக்கிறார்கள். எவனாவது ஒரு புண்ணியவான் கூவம் நதியையும் அதன் நதிக்கரையையும் அதுல சேர்த்துவிட உள்ளூர் ஊடகங்களும் அதை ஊதிவிடும், வெட்டியா இருக்கும் பொட்டி தட்டும் கோஷ்டி அதுக்கும் நெஞ்சை நக்குற மாதிரி ஒரு இமெயிலை ரெடி பண்ணி fwd பண்ணும். தேர்தலுக்கே ஓட்டு போடாத உண்மை இந்தியர்கள் அதையும் உண்மையென நம்பி அதுக்கு கைகாசு போட்டு ஓட்டுப்போடுவான் நல்லா இருங்கடா.

25 Comments

  1. 1
    சந்தோஷ் Says:

    நாகை சிவா has left a new comment on your post “202 – புதிய உலக அதிசயங்களும் ஏமாளி இந்தியர்களும்”:

    பங்காளி, இதுல பெரிய கூத்து என்னானா, பெரிய பெரிய ஸ்டார்கள் பல ஐடி ஒபன் பண்ணி 4,5 ஒட்டு போடுங்க என்று சொன்னது தான்…

    இதை எல்லாம் பாக்கும் போது நம்ம அரசியல்வாதிகள் எப்படி இன்னும் தங்கள் பதவியை தக்க வச்சு இருக்காங்க என்பது புரியுது

  2. 2
    சந்தோஷ் Says:

    புலி,

    பழைய இடுக்கையை தமிழ்மணத்துல சேர்க்க முடியலை அதை அழிக்க வேண்டியதப்போச்சி. புதுசையும் சேர்க்க முடியலை என்னான்னு தெரியலை.அதனால தான் உன்னோட கமெண்டை இப்படி போட வேண்டியாதாப்போச்சி.

    //பங்காளி, இதுல பெரிய கூத்து என்னானா, பெரிய பெரிய ஸ்டார்கள் பல ஐடி ஒபன் பண்ணி 4,5 ஒட்டு போடுங்க என்று சொன்னது தான்…//
    ஆமாம் நானும் கேள்விப்பட்டேன் முதலில் இது இந்தியாவுல சரியா சூடு பிடிக்கலையாம் பின்னாடி சினிமா நடிகர்களையும், சில அரசியல்வாதிகளின் தயவாலும் தான் சூடு பிடித்தது என்று.
    //இதை எல்லாம் பாக்கும் போது நம்ம அரசியல்வாதிகள் எப்படி இன்னும் தங்கள் பதவியை தக்க வச்சு இருக்காங்க என்பது புரியுது//

    இன்னுமா நீ அரசியலை விடலை?.. :) )

  3. 3
    நாமக்கல் சிபி Says:

    :)

    You Dont Worry Santhosh!

    I Added this post in Thamizmanam under VaNigam/Porulaadharam.

  4. 4
    குட்டிபிசாசு Says:

    //சர்வதேச உடகங்கள் வரை இடத்துக்கு தகுந்த மாதிரி உங்க ஊருக்கு ஓட்டு போடுங்க அப்படின்னு மக்களை உணர்வுப்பூர்வமாக ஏமாற்றி புண்ணியம் தேடிக்கொண்டது//

    நம்ம ஊரு உட்டாலக்கடி ஊடக்ங்களும்் தாஜ்மஹால், மீனாட்சி அம்மன் கோவில்னு பேசி…புருடாவிட்டு…மக்களை ஏமாற வச்சி இருக்கானுங்க, நம்மாளுங்க ஏமாளி தான்!!

    //கிரேக்க பிரமீடுகள் 7 உலக அதிசயங்களுல் இல்லையாம//

    இது ஒன்னு போதும், இவனுங்க காசுக்காக தான் இதை செய்தானுங்க தெரிய!!

    //அவனுங்களை மிரட்டி எங்க தாத்தாவோட பழைய வீட்டையும் இதுல சேர்த்து இருப்பேனே.//

    அப்படி என்னோட பாட்டி சமாதிக்கு ரெகமெண்ட் பண்ணுங்க!!

    //இவனுங்க உலகத்தின் இயற்கையால் ஏற்படுத்தப்பட்ட இடங்களுக்கான தேர்தலை துவக்கி இருக்கிறார்கள//

    ராமர் பாலத்தை விட்டுபோட்டீங்க!!

  5. 5
    இலவசக்கொத்தனார் Says:

    அண்ணா, முதலில் இந்த கிரேக்க பிரமிடுகள் அப்படின்னு இருக்கிறதை எகிப்து நாட்டின் பிரமிடுகள் அப்படின்னு மாத்துங்க. இல்லைன்னா கிரேக்க பிரமிடுகளும் ஏமாளி எகிப்தியர்களும் அப்படின்னு அவங்க ஊர்க்காரன் எவனாவது பதிவு போடப் போறான்!! :) )))

  6. 6
    கோபிநாத் Says:

    தல

    இதை வேற “முக்கிய செய்தி”ன்னு சொல்லி ஊருல இருந்து SMS எல்லாம் வரும்.

    சரி தல ஒரு கேள்வி

    யாரு தான் இவைகள் தான் உலக அதியசங்கள்ன்னு தேர்ந்து எடுக்க முடியும்?

  7. 7
    குசும்பன் Says:

    “தேர்தலுக்கே ஓட்டு போடாத உண்மை இந்தியர்கள் அதையும் உண்மையென நம்பி அதுக்கு கைகாசு போட்டு ஓட்டுப்போடுவான் நல்லா இருங்கடா. “

    உண்மை உண்மை உண்மையை தவிர வேறு ஏதும் இல்லை.

  8. 8
    உண்மைத் தமிழன் Says:

    //உண்மை உண்மை உண்மையை தவிர வேறு ஏதும் இல்லை. //

    என்னை யாராச்சும் கூப்பிட்டீங்களா?

  9. 9
    Boston Bala Says:

    :)

    நன்றி

  10. 10
    SurveySan Says:

    சூப்பர் மேட்டரு.

    பிரமிட் இல்லாத டாப் 7 கொடுமதான் :) லூசுப் பஸங்க.

    Top7 Wonder toursனு, இப்போ தனியா காசு பண்ணும் முயற்சி வேற நடக்குது.

    மீனாக்ஷி அம்மன் கோயில்ல வாக்களிக்க ஏற்பாடு பண்ணதெல்லாம் செம காமடி!

    இதுக்கு பவர் பாயிண்ட் எல்லாம் போட்டு, தாஜ் மஹாலுக்கு வாக்கு சேகரித்தவரின் நாட்டுப் பற்றை பாராட்டாம இருக்க முடியாது :)

    புத்திசாலிங்கதான் ஸ்விஸ் காரனுங்க :)

    ஒரு மலை மேல ‘ஏசு சிலையை’ (RioDeJaneiro) வெக்கரதும், Great Wall கட்டரதும், ஒரே லெவல்ல வச்சு பாக்கரது சூப்பரோ சூப்பர் காமெடி!!!

    (இதுக்கு ஒரு சர்வே போட்டே ஆகணும் :) )

  11. 11
    மாயாவி Says:

    சந்தோஷ்,

    “புதிய உலக அதிசயங்களும் இளிச்சவாய் இந்தியர்களும்” அப்படீன்னு தலப்பு வச்சிருக்கனும்.

    எதிலுமே சம்பந்தபடாத ஒரு சுவிஸ் நிறுவனம் இப்படி ஒரு போட்டியை ஆரம்பித்து எஸ்.எம்.எஸ் மூலமாக பணம் பண்ணியிருக்கிறது.

  12. 12
    மருதநாயகம் Says:

    நாம ஒரு ஓட்டு நடத்தினா செம காசு அள்ளலாம் போல் இருக்கே. நான் ரெடி நீங்க ரெடியா

  13. 13
    செல்வன் Says:

    தலை,

    அடுத்து இயற்கை அதிசயம் 7 தேர்தல் நடக்குதாம்.இன்னும் எத்தனை நூறுகோடி அடிக்க போறானுகளோ?

  14. 14
    சுந்தர் / Sundar Says:

    Good one Sir .
    Thanks for the article . This helps lot of ppl who still belives it .

  15. 15
    சீனு Says:

    நல்ல வேளை! நான் ஓட்டு போடலை.

  16. 16
    Sripathy Says:

    santhosh , neenga eludhuradhu ellam sari dhan.. irundhalum namma ooru paya evan kasu kuduthu vote pottanu theriyalaye… ellam oc sms , oc internetla dhan vote poduvanga..

  17. 17
    தேவ் | Dev Says:

    //இது தெரிஞ்சி இருந்தா நாலு லாரியில் ஆளுங்களை கூட்டிட்டு போயி அவனுங்களை மிரட்டி எங்க தாத்தாவோட பழைய வீட்டையும் இதுல சேர்த்து இருப்பேனே.//

    எங்க தாத்தா வூடும் கேப்பாரத்து கிடக்குதுப்பா.. 9 ஓன்டர் ஒங்க தாத்தா வூடோடச் சேர்த்து லிஸ்ட் வூடுப்பா.. பொட்டித் தட்டுரத விட இதுல்ல சில்லறை ஜாஸ்தியா இருக்கும் போலகீதே

  18. 18
    ILA(a)இளா Says:

    ஒரு பேச்சுக்குன்னே வெச்சுக்குவோம், இந்த 7ஐயும் உலக அதிசயங்களா ஐ.நா சபை ஏத்துக்கிட்டா என்ன சொல்லுவீங்க? இந்தியர்கள் புத்திசாலின்னா? சரி, அப்படியே இருக்கட்டும்.
    தாஜ்மஹால் முதலேயும் உலக அதிசயமாத்தான் இருந்துச்சு. அடுத்த முறை வந்தாலும் வரலாம். இன்னிக்கு CNN, FOX எல்லாத்துலயும் இந்த செய்தி பரபரப்பா இருக்கு. அப்போ அமெரிக்காகாரங்க என்ன மேதாவிங்களோ? தலைப்ப மாத்துங்க சார். என்னமோ இந்தியனுங்க இளிச்சவாயனுங்க, முட்டாளுங்கன்னு பேசிக்கிட்டு. மத்த ஊர்க்காரங்க என்ன ரொம்ப அறிவாளிங்களோ?

  19. 19
    ILA(a)இளா Says:

    மாப்பி. இதையும் உங்க பதிவுல சேர்த்துக்குங்க. தெளிவா இது ஒரு தனியார் எடுத்த முடிவுன்னு சொல்லிடலாம். இப்பவும் சொல்றேன், இந்தியனுங்க மட்டும் முட்டாளுங்க இல்லே.
    http://portal.unesco.org/en/ev.php-URL_ID=38482&URL_DO=DO_TOPIC&URL_SECTION=201.html

  20. 20
    யோசிப்பவர் Says:

    //புதிய உலக அதிசயங்களும் ஏமாளி இந்தியர்களும்//
    ஏமாளிகள் இந்தியர்கள் மட்டுமல்ல!!!;-)

  21. 21
    சுதர்சன்.கோபால் Says:

    இதில லாபம் பார்த்தது மொபைல் சர்வீஸ் ப்ரொவைடர்ளும் இதர மீடியா இம்சைகளும் தான்.

    பி.கு:-அப்புறம் எங்கள் கனவுக்கன்னி பிப்ஸ்ஸைப் பற்றிக் குறிப்பிடாமால் பதிவெழுதிய குற்றத்திற்காக உங்கள் பதிவினை எதிர்த்து இங்கே வார இறுதியில் பிப்ஸ் மராத்தான் நடத்தலாம்னு முடிவாகியிருக்கு.

  22. 22
    Anonymous Says:

    Sorry for the comment in English.
    When i first heard this, i thought Dinamalar only does this. So i sent the below email. Later when i found more people are involved, then i realized that a big fraud is going on. Dinamalar editor never bothered to acknowledge/reply my email.

    From: prabu anand Kalivarathan
    To: webeditor@dinamalar.com
    Sent: Friday, December 17, 2004 8:34:41 PM
    Subject: new7wonders is a fraud website. Don’t promote it on dinamalar website

    Dear Editor,

    The website http://www.new7wonders.com/ is a fraud
    website. It’s trying to stroke emotional feelings from
    people to call IDD calls to complete the voting(call
    +372 54 111 444 or +372 54 111 443). These calls go to
    Estonia and the local telecom player will pay part of
    the IDD profits to the one who registered the number.
    This is similair to PREMIUM RATE (PRM) SERVICE offered
    by BSNL where revenue earned is shared between service
    provider and network provider. For details goto
    (BSNL)http://www.bsnl.co.in/service/prm.htm

    Please don’t promote this fraud website on your
    dinamlar website as many tamils will believe what you
    put in dinamalar website. Please alert your viewers
    about this fraud and stop this immediately.

    Cheers,
    Prabu

  23. 23
    சீனு Says:

    // realized that a big fraud is going on.//

    It seems, 100 billion votes have been cast. 100 Billion * 5 (INR) = 500 Billion Rs…

  24. 24
    Rodrigo Says:

    Oi, achei teu blog pelo google tá bem interessante gostei desse post. Quando der dá uma passada pelo meu blog, é sobre camisetas personalizadas, mostra passo a passo como criar uma camiseta personalizada bem maneira. Se você quiser linkar meu blog no seu eu ficaria agradecido, até mais e sucesso. (If you speak English can see the version in English of the Camiseta Personalizada. If he will be possible add my blog in your blogroll I thankful, bye friend).

  25. 25
    ulagam sutrum valibi Says:

    //தேர்தலுக்கே ஓட்டு போடாத//

    சந்தோசு,
    என் ஓட்டை யாரோ போட்டுட்டான்,
    அதனாலே தான் நான் ஓட்டுப் போடரது இல்லை,எப்படிக் கண்டு பிடிச்ச உலக அதிசயத்தை விட அதிசயமாய் இருக்கு!!


RSS Feed for this entry

Leave a Comment