இன்று காலை வழக்கமாக வரும் forward மின்னஞ்சலில் சர்தார்கள் உழைத்து தான் சாப்பிடுவார்கள் என்றும், பிச்சைக்கார சர்தார்களை எங்கேயும் பார்க்க முடியாது என்று கூறி உள்ளனர். அதே மாதிரி வயதான, மன நலம் குன்றிய சர்தார்கள் மற்றும் ஏதோ ஒரு காரணத்தினால் சம்பாதிக்க முடியாத சர்தார்களை அவர்களின் குருத்துவாரா(அவர்களின் கோவில்) தத்து எடுத்துக்கொள்ளுமாம். அட ஆமாம்! நான் கூட சர்தார்கள் பிச்சை எடுத்து பார்த்தது இல்லை.எந்த அளவுக்கு இந்த செய்தி உண்மை என்று தெரியவில்லை, நீங்க யாராவது சர்தார்கள் பிச்சை எடுத்து பார்த்து இருக்கீங்களா? அவங்களை மடப்பசங்க மடப்பசங்க அப்படின்னு ஜோக்கடிச்சி இதை எல்லாம் கேக்கும் பொழுது யாரு மடப்பசங்க?..
205. சர்தார்கள் பிச்சை எடுப்பதில்லை
9 Comments
RSS Feed for this entry
இது உண்மைன்னு வேணா சொல்லிக்கிலாம். ஆனா பாட்டியாலா போனா உண்மை தெரியும். ஒரு தடவை போய் பாருங்க. ஆனா ஒரு உண்மை, சர்தார்ங்க காசு பணத்தில பெரிய கில்லாடிங்க. எப்பட்டியாவது ஒரு பிஸ்னஸ் பண்ணி பெரிய ஆளாகிடுவாங்க. இல்லைன்னா வெளிநாடு போயிருவாங்க.
நான் பார்த்ததில்லை…
//நீங்க யாராவது சர்தார்கள் பிச்சை எடுத்து பார்த்து இருக்கீங்களா? //
நான் பார்த்தது இல்லை!
நானும் பார்த்ததில்லை
சர்தார்கள் பிச்சை எடுக்கும் நிலை இதுவரை ஏற்பட்டதில்லை.உழைக்க இயலாத,வயது முதிர்ந்த மனநோயால் பாதிக்கப்பட்ட சீக்கியர்களை அந்தந்த குருத்வாராக்கள் பராமரிக்கும்.
அது சரி.தமிழ்நாட்டில் பிச்சை எடுக்கும் நாடார் இனத்தவரைப் பார்த்திருக்கிறீர்களா?இருக்கவே இருக்காது.ஒரு நாடார் இனத்தவர் வறிய நிலைக்கு வந்துவிட்டால் அவர் ஊர் சார்ந்த நாடார் மகா ஜன சங்கம் அவரைத் தத்து எடுத்துக் கொண்டு விடும்.அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் என்ன தொழில் தெரியுமோ அதைச் செய்யப் பொருளுதவி கொடுத்து ஆதரித்து நல்ல நிலைக்குக் கொண்டு விடும்.
இன்னும் ஒரு செய்தி.
நாடார் இனத்தவர்கள் அன்றாடம் கடையைத் திறந்ததும் முதல் வேலையாக அன்றைய மகிமைக் காசாக ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்து வைத்து விடுவார்கள்.சங்கத்திலிருந்து ஒரு வேலையாள் தினந்தோறும் கடைக்கு வந்து அன்றைய மகிமைக் காசைப் பெற்றுக் கொண்டு அதற்குறிய சங்க ரசீதைக் கொடுத்துவிட்டுச் செல்வார்.
இவ்வாறு சேரும் தொகை மேற்சொன்ன குடும்பங்களுக்கு உதவவும்,வறிய குடும்பத்திலிருந்து வந்த மாணவ மாணவியரை எவ்வளவு வேண்டுமானாலும் படிக்க வைக்கவும்,ஏனைய சமூக நற்காரியங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆமா பிச்சை எடுக்கும் போது யார் turban உம் தாடியும் வச்சிருக்கப்போறாங்க ?,
சரியான லூசுப் பதிவு
Amristarkum torontovukum ulla PERIYA connectiona adipadiyaaga vachi paakum podhu, avingaluku atltantic kadaluku appala nalla velainga sikkudhunra vishayam theriya varudhu..Idhanalayo ennamo,
நானும் பார்த்தது இல்லீங்க சர்தார்கள் நிறைய பேரு ஏதாவது பொருட்களை விற்பனை செஞ்சு பார்த்திருக்கேன் ஆனா யாரும் பிச்சை எடுத்து பார்த்ததில்ல. சந்தோசமான விசயம்தான் இது. சாதி சாதினு பேசிட்டு நேரத்த வீணடிக்கறதுக்கு குருத்துவாரா பண்ற வேலை பயனுள்ளது பாராட்ட வேண்டியது.
இது.. இது.. இது சர்தார்ஜி பாசம்!சும்மாச் சொல்லக்கூடது சர்தார்ஜீக்கள் சரக்குள்ளவங்கதான்!பார்ப்பனர்கள் மதிரி இல்லை நம்ம வே.மதிமாறன் கிட்ட தினமும் அர்ச்சனை வாங்காமல் தங்கள் ஜாதிக்கு உருப்படியாக ஒரு சேவையைச் செய்து கொன்டிருக்கிறார்கள்.இதற்கு மதிமாறன் என்ன சொல்வார்?