கொஞ்ச நாளைக்கு முன்னாடி சி.என்.என் ஜபிஎனின் டெவில்ஸ் அட்வகேட் நிகழ்ச்சியில் கனிமொழியை பேட்டி கண்டார்கள். கனிமொழி கரணின் கேள்விகளுக்கு நன்றாகவே பதில் சொன்னார்கள். நான் பார்த்த வரையில் அந்த நிகழ்ச்சியில் கேள்விகள் மிக சாதாரணமாக இருந்தன. பல இடங்களில் கனிமொழியை அட்டாக் செய்ய வாய்ப்பு கிடைத்த பொழுதும் கரண் அதை அப்படியே விட்டு விட்ட மாதிரி தான் எனக்கு தெரிகிறது. சரி அதை விடுங்க அதுல ஒரு முக்கியமான கேள்வி,
பந்த் அன்று உச்ச நீதி மன்றம் கண்டனம் எழுப்பியவுடன் உங்க தந்தையும் மற்ற அமைச்சர்களும் உண்ணாவிரத பந்தலை விட்டு ஏன் வெளியேறி அலுவலகம் சென்றனர்? காலையில் இருந்து ஓடாத பஸ் உடனடியாக ஓடத்துவங்கியது ஏன்? மூடிய கடைகள் திடீரென திறந்த மாயம் என்ன?
அதுக்கு உட்டாங்க பாருங்க ஒரு பதில் பொதுமக்கள்(யாருங்க அந்த பொது சனம் இங்க வாங்க சாமி கொஞ்சம்?) மற்றும் அரசியல் தலிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர் பந்தலுக்கு திரும்ப வரவில்லையாம். மேலும் தலிவரு உண்ணாவிரதம் இருக்க போகிறேன்னு எப்ப சொன்னாரு? அவரு அதை துவக்கி வைக்கத்தான் வந்தார், நீயூஸ் மீடியா தான் அதை திரித்து வெளியிட்டு விட்டதுன்னு ஒரு அந்தர் பல்டி அடிச்சாரு பாருங்க. இப்ப சொல்லுங்க புலிக்கு பொறந்தது பூனையாகுமான்னு?
இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் தலிவரோட வாரிசுங்க, பேரப்புள்ளைங்களும் கலந்துகிட்டு இங்லீபீசிலையும் ஹிந்திபீசிலையும் பொளந்து கட்டும் பொழுது ஹிந்தி ஒழிப்பு போராட்டம் நியாபகத்துக்கு வந்து தொலைக்குது.
//ஹிந்தி ஒழிப்பு போராட்டம் நியாபகத்துக்கு வந்து தொலைக்குது.
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!!
Enn ungalukku oru ponnu saamarthiyama, smart aa pesitta pedikaathaa??… enn ethanaiyo arasiyal vaathegal enna ennavo pesaraanga.. pathivu pottu thaaka vendiyathu thaanea.. poda mateengalea..yaaravathu ilacha vaai kedaicha pothumea.. !! hmm… kavitha blog la ellanu bayam ellama pochi ungalukku
இந்தி எதிர்ப்பு எல்லாம் அந்த காலத்தோட முடிஞ்சு போயிருச்சு. சில வெவரம் இல்லாத “Wooden” பிறப்புகள்தான் அதையே புடிச்சுக்கிட்டு அழுவறாங்க. Update பண்ணிக்குங்க பிறப்புகளா..
ராசா அவங்க என்னமோ தடவு தடவுனு தடவின மாதிரி எனக்குப்பட்டுச்சு.. நீ உல்டாவா சொல்லுறீயே…..
“ஆம்மாம் நானும் அந்த செய்தியைப் பார்த்தேன்.உங்களைப்போலவே நானும் ஆச்சரியம் அடைந்தேன்”இப்படிக்கூட சொதப்ப (அல்லதுமழுப்ப)முடியுமா”என்று.டமால்னு தயா நிதியைத் தள்ளி விட்டுட்டு மத்தியில் உட்கார்ந்து கொன்ட கனிமொழிக்கு இந்த மழுப்பல் cum சொதப்பல் கூடத் தெரியல்லேன்னா என்ன இருக்கு அப்புறம்?