Lance Armstrong அப்படிங்கிற Cyclistஇன் சுயசரிதம் (Autobiography). உலகத்திலேயே மிகவும் கடினமான Tour De France , சைக்கிள் பந்தயத்தை ஒரு முறை அல்ல இரண்டு முறை அல்ல ஏழு முறை வென்று இருக்காரு. அதுவும் உலகத்தில் மிகவும் கொடிய நோயான புற்று நோய்க்கு ஆளாகி மருத்துவர்களால் பிழைப்பதற்கு மிகக்குறைவான (10%-20%) வாய்ப்பே உள்ள நிலையில், அதில் இருந்து போராடி மீண்டு இந்த சாதனையை செய்து உள்ளார். இந்த புத்தகம் அவர் நேயிக்கான அறிகுறி தென்படுவதில் இருந்து ஆரம்பித்து அவர் அந்த நோயில் இருந்து எவ்வாறு மீண்டு பல போட்டிகளில் கடின உழைப்பின் மூலம் வெற்றி பெறுகிறார் என்பதுடன் நிறைவு பெறுகிறது.
புத்தகத்தின் நடை விறு விறுப்பாகவே உள்ளது. ஒரு சில இடங்களில் மருத்துவ துறை சார்ந்த சொற்கள் மிகையாக தென்படுகிறது, இந்த நோய் காலத்தில் அவரது தாயின் பங்களிப்பை பற்றி அவர் சொல்லும் பொழுது எனக்கு மிகையாக தோன்றியது. எ.கா, என்னுடைய அம்மா பணிவிடுப்பு எடுத்து என்னை பார்த்துக்கொண்டார், எனக்கான உணவை தயாரித்து கொடுத்தார் முதலியவை, இந்திய கலாச்சாரத்தில் வளர்ந்த நமக்கு அவை சராசரியாக எல்லா தாயும் செய்யக்கூடியவை எனவே எனக்கு அப்படி தோன்றியது என்று நினைக்கிறேன்.
இந்த புத்தகத்தில் நான் ரசித்த இன்னொரு பகுதி அவர் நோயூறுவதற்கு முன்னர் அவரை ஸ்பான்சர் செய்ய வந்த பல கம்பெனிகள், அவருக்கு நோய் என்று தெரிந்த உடன் எப்படி பின் வாங்கின என்பதும். நண்பர்கள் அவருக்கு எப்படி உதவி செய்தனர் என்று சொல்லுவது. இறுதியில் ஒரு இடத்தில் சொல்லி இருப்பார், இந்த நோய் வந்தது ஒரு விதத்தில் நல்லது தான், என்னுடைய வாழ்க்கையில் பல நல்ல நண்பர்களை அது இனம் காண உதவியது. இந்த நோய் மட்டும் வராவிட்டால், நான் இவ்வுளவு தூரம் போராடி இது போன்ற வெற்றிகளை பெற்று இருப்பேனான்னு சந்தேகம் அப்படின்னு அவர் சொல்லி இருப்பது.
புற்று நோய் என்பது ஒரு கொடிய நோய் என்று நமக்கு தெரியும். அதை விட கொடுமையானது அதற்கு கொடுக்கப்படும் சிகிச்சை என்பதனை இந்த புத்தகத்தில் இருந்து தெரிந்து கொண்டேன். அவர் அந்த நோய்க்கு அளிக்கப்படும் பெரும்பாலான சிகிச்சைகளை விளக்கமாக கூறியுள்ளார். சில சிகிச்சைகளை கேட்கும் பொழுது எதிரிக்கு கூட இந்த நோய் வரக்கூடாது என்று நமக்கு தோன்றும்.
அனு மேடம் அந்த நோயினால் அவதிப்படுகிறார், அவரும் அந்த நோயைப்பற்றியும் அதற்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி இங்கே எழுதுகிறார்.
புற்று நோயினால் அவதிப்பட்ட Lance Armstrong, அந்த நோயினால் அவதிப்படுபவர்களுக்காக ஒரு அமைப்பை உருவாக்கி புற்று நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.அதைப்பற்றி மேலும் அறிய இங்கே சொடுக்கவும்.
இந்த புத்தகத்தில் எனக்கு பிடித்த பல நல்ல விஷயங்களுல் மிகவும் முக்கியமானது இவருடைய தன்னடக்கம் தான். தன்னுடைய நுரையீரலில்( lungs என்றால் நுரையீரல் தானே?) உள்ள ஒரு கூடுதல் வசதி, அதாவது மற்றவர்களை விட இவரது நுரையீரலால் கூடுதலாக காற்றை சேமிக்க முடியுமாம், இயற்கையின் இந்த வரப்பிராதத்தால் பல போட்டியில் வெற்றி பெற்று உள்ளார் என்று கூறி இருக்கிறான். மேலும் தன்னுடைய அணியிள் இருக்கும் சக அணியினரும் தன்னுடைய வெற்றிக்கு பெரிய அளவில் உதவி புரிந்து, பல வெற்றிகளை சாத்தியமாக்கி உள்ளனர் என்று கூறியிருப்பது.
இதை படித்த எனக்கு பல விஷயங்கள் தெரியவந்தது. அதில் முக்கியமானது, தனி நபர் சைக்கிள் பந்தயத்தின் பொழுதும், ஒரு குழுவாக கலந்து கொண்டு, அதில் அந்த குழுவில் உள்ள ஒவ்வொருவரும், ஒரு குறிப்பிட்ட நபரின் வெற்றிக்கு எவ்வாறு உறுதுணையாக இருக்கின்றனர் என்று. ஒரு போட்டியில் பங்கு பெற சைக்கிளின் எடை, அவரும் உடுத்தும் உடையின் எடை முதல் கொண்டு பல நுணுக்கமான பொருட்களின் பங்களிப்பு எவ்வுளவு முக்கியம் என்று அருமையாக சொல்லி இருக்கிறார். ரொம்ப நாள் கழித்து நான் படித்த ஒரு நல்ல புத்தகம் படிச்சித்தான் பாருங்களேன் உங்களுக்கும் பிடிக்கும்..
//தனி நபர் சைக்கிள் பந்தயத்தின் பொழுதும், ஒரு குழுவாக கலந்து கொண்டு, அதில் அந்த குழுவில் உள்ள ஒவ்வொருவரும், ஒரு குறிப்பிட்ட நபரின் வெற்றிக்கு எவ்வாறு உறுதுணையாக இருக்கின்றனர் என்று. ஒரு போட்டியில் பங்கு பெற சைக்கிளின் எடை, அவரும் உடுத்தும் உடையின் எடை முதல் கொண்டு பல நுணுக்கமான பொருட்களின் பங்களிப்பு எவ்வுளவு முக்கியம்//
ம்ம்ம்.. புதிய தகவல்கள்தான்!
பகிர்வுக்கு நன்றி, சந்தோஷ்!
நல்ல தகவல் அனைவருக்கும் துன்பத்தில் நோயில் இருப்பவருக்கும் புத்துனர்ச்சி தன்னம்பிக்கை ஊட்டும் ஒரு பதிவு உங்கள் சேவைக்கு எனது வாழ்த்துக்கள்
பகிர்வுக்கு நன்றி, சந்தோஷ்
i got to know abt him, only as singer Sheryl crow’s bf
thanks 4 the info, will try 2 read the book.
ஒவ்வொரு விளையாட்டு வீரனுக்கும் இவருடைய மனவலிமை வேண்டும். பலமுறை இவரை பார்த்து(சாதனையை கண்டு) நான் வியந்ததுண்டு.
//தென்றல்
ம்ம்ம்.. புதிய தகவல்கள்தான்!
பகிர்வுக்கு நன்றி, சந்தோஷ்!//
வருகைக்கு ரொம்ப நன்றி தென்றல் சார்.
//theera ravanan
நல்ல தகவல் அனைவருக்கும் துன்பத்தில் நோயில் இருப்பவருக்கும் புத்துனர்ச்சி தன்னம்பிக்கை ஊட்டும் ஒரு பதிவு உங்கள் சேவைக்கு எனது வாழ்த்துக்கள்//
வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி சார்.
//shanshiva
பகிர்வுக்கு நன்றி, சந்தோஷ்//
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் ரொம்ப நன்றி ஷான்சிவா
//ஒரு பொடிச்சி
i got to know abt him, only as singer Sheryl crow’s bf
thanks 4 the info, will try 2 read the book.//
கண்டிப்பாக படிச்சி பாருங்க மேடம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.
//லொடுக்கு
ஒவ்வொரு விளையாட்டு வீரனுக்கும் இவருடைய மனவலிமை வேண்டும். பலமுறை இவரை பார்த்து(சாதனையை கண்டு) நான் வியந்ததுண்டு.//
ஆமாம் லொடுக்கண்ணே அருமையான மனவலிமை இவருக்கு. இவரிடம் இருந்து நிறைய கற்க வேண்டும்.
//சந்தோஷ் Says:
//லொடுக்கு
ஒவ்வொரு விளையாட்டு வீரனுக்கும் இவருடைய மனவலிமை வேண்டும். பலமுறை இவரை பார்த்து(சாதனையை கண்டு) நான் வியந்ததுண்டு.//
ஆமாம் லொடுக்கண்ணே அருமையான மனவலிமை இவருக்கு. இவரிடம் இருந்து நிறைய கற்க வேண்டும்.//
மொதோ தடவயா ஸ்ட்டாருக்கு ர்ப்பீட்டு