சில்லரை வணிகத்தில் பெருவியாபாரிகள்

இந்த பதிவில்  நான் சில்லரை வணிகத்தில் பெருவியாபாரிகளின் வருகை வாடிக்கையாளர்களுக்கோ அல்லது விவசாயிகளுக்கோ எவ்வித நன்மையும் தராது என்று கூறி இருந்தேன், அதை செல்வனும் சிலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனால் சமீபத்தில் சிக்காகோவில் உள்ள ஒரு பல்கலைகழகம் (இந்த ஆய்வின் முடிவுகளை பற்றி சில மாதங்களுக்கு முன்பு Business World ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தது, சுட்டி கிடைக்க வில்லை கிடைத்தால் தருகிறேன்.) செய்த ஆய்வில் இது உண்மை என்று நிரூபணம் ஆகி உள்ளது. அவர்களின் ஆய்வின் முடிவுகள் இதோ :1. பெரும் வியாபாரிகள் மற்றவர்களை விட 10% குறைவான விலையையே விவசாயிகளுக்கு அளிக்கின்றனர்.2. அவர்களின் விற்பனை விலையும் சற்று அதிகமாகவே உள்ளது.

3. பெரும் வியாபாரிகள் விரும்பும் பொருட்களை விவசாயிகள் விளைவிக்க சில இடங்களில் நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

4. விதைகள், உரங்களின் உபயோகம் வரை அவர்களின் ஆதிக்கம் விவசாயிகளின் மீது உள்ளது.

இதற்கு வியாபாரிகளின் பதிலை கேட்டால் வாயால் சிரிக்க மாட்டீர்கள்:

1. நாங்க விவசாயம் படித்தவர்களை வேலைக்கு வைத்துள்ளோம். — ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது கதையாக, இவர்களின் படிப்பு விவசாயிகளின் அறிவுக்கு கால் தூசுக்கு கூட ஈடாகாது. மேலும் மெத்த படித்த மேதாவிகளின் பேச்சை கேட்டு நாம் மண்ணையும், விளை பொருட்களையும் ஏற்கனவே நஞ்சாக்கிவிட்டோம். போதும் மெத்த படித்த மேதாவிகளின் அறிவுரைகள்.  இவர்கள் விவசாயம் படித்தவர்களை வேலைக்கு வைத்துள்ளதால் விவசாயிகளுக்கு என்ன லாபம்? எப்படியும் இவர்களின் அறிவுரைகள் கம்பெனிகளுக்கு சாதகமாகத்தான் இருக்கும்.

2. நாங்க தரமான electronic scales(எலக்ட்ரானிக் எடை மெஷின்கள்), உபயோகம் செய்து பொருட்களை அளக்கிறோம் – வியாபார பிண்னணி உள்ள குடும்பத்தில் இருந்து வந்த எனக்கு இது அடுத்த ஜல்லியாக தெரிகிறது. முன்னாடி எல்லாம் விவசாயிகளை சுலபமாக ஏமாற்றி வந்தனர் ஆனால் இப்பொழுது அவர்கள் கடைக்கு கொண்டு வருவதற்கு முன்னரே பொருட்களை எடை போட்டு எடுத்து வருகின்றனர், எடை ஏமாற்றுவது எல்லாம் இப்பொழுது முடியாத காரியம்.3. நாங்க பொருட்களை வாங்கியவுடன் பணத்தை கொடுத்து விடுகிறோம் – எனக்கு தெரிந்த வரையில் சிறு வியாபாரிகள் கூட இதையே தான் செய்கின்றனர். விவசாயிகளிடம் எல்லாம் கடன் சொல்லி பொருட்களை வாங்க முடியாது. பொருளை எடை போட்ட உடன் காசு குடுத்து ஆக வேண்டும்.4. விவசாயிகளின் இடங்களுக்கே சென்று பொருட்களை கொள்முதல் செய்கிறோம் – இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை, ஏனெனில் பெரிய விவசாயி என்றால் அவர்களின் இடத்துக்கு சென்று வாங்கலாம் சிறு விவசாயிகளிடமும் இவர்கள் இதை செய்கிறார்கள் என்று சொல்வது நம்பும்படியாக இல்லை. இந்த ஒரு காரணத்திற்காக 10% விலை குறைப்பு என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

நான் கூட இங்கே ரிலையன்ஸ், சுபிக்ஷா, Spencer போன்ற கடைகளில் பொருட்களை வாங்கியவன் என்ற முறையில் சொல்கிறேன், இவர்கள் சொல்வது போல காய்கறி எல்லாம் அவ்வுளவு freshஆக இல்லை, விலையும் சற்று கூடுதல் தான்.அதே போல மெதுவாக இவர்கள் டின்னில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை ஊக்குவிக்க ஆரம்பித்து விட்டார்கள். 

19 Comments

  1. 2
    VM Says:

    //நான் கூட இங்கே ரிலையன்ஸ், சுபிக்ஷா, Spencer போன்ற கடைகளில் பொருட்களை வாங்கியவன் //

    நல்ல பதிவு சந்தோஷ். எனக்கும் இந்த அனுபவம் உண்டு.. ஒரு முறை ச்பென்செர்ஸ் ல் ஒரு flavoured milk பாட்டில் எடுத்தேன்.. அது expiry date தான்டியும் அங்கே ஷோ கேசில் விற்பனைக்கு
    இருந்தது..

    வி எம்

  2. //மங்களூர் சிவா Says:
    வருகை பதிவு.
    :-) )))//
    சிவா இதெல்லாம் ரொம்ப ஓவர். உங்களை மாதிரி பொருளாதார ஆளுங்களே இதைப்பத்தி கருத்து சொல்லாட்டி எப்படி சொல்லுங்க?

    //VM Says:
    //நான் கூட இங்கே ரிலையன்ஸ், சுபிக்ஷா, ஸ்பென்cஎர் போன்ற கடைகளில் பொருட்களை வாங்கியவன் //

    நல்ல பதிவு சந்தோஷ். எனக்கும் இந்த அனுபவம் உண்டு.. ஒரு முறை ச்பென்செர்ஸ் ல் ஒரு flavoured milk பாட்டில் எடுத்தேன்.. அது expiry date தான்டியும் அங்கே ஷோ கேசில் விற்பனைக்கு இருந்தது..
    வி எம்//

    வாங்க வி.எம்.சார், பாலுக்கே இந்த நிலைமையா அய்யோ… வேற கடையை பாக்க வேண்டியது தான்.

  3. இப்படி சில்லரை மருந்து வணிகத்தில் அப்பல்லோ வும் இறங்கி விட்டது. பெரு நகரங்களில் மட்டும் அல்லாது, சிறு நகரங்களிலும் கிளைகளை ஆரம்பித்துள்ளது.

  4. ரிலையன்ஸின் வணிக முறை பத்தி இங்கன பாருங்க விலாவரியா எழுதியிருக்கேன்.

    http://pothuvudaimai.blogspot.com/2007/09/blog-post_05.html

  5. சந்தோஷ்

    பிசினஸ் வர்ல்ட் சர்வே அமெரிக்காவில் எடுக்கப்பட்டது என நினைக்கிறேன்.அங்கே பெரும்பாலும் விவசாயி என்பவன் நாலாயிரம் ஏக்ராவில் பயிர் செய்பவன்.பெரும்வியாபாரி என்பவன் உலகம் முழுக்க விற்பவன்.நீண்டகால காண்டிராக்ட் அடிப்படையில் இருவரும் வணிகம் செய்யும்போது விலை குறைவாகவும்,அதே சமயம் விவசாயிக்கு செலவும் குறைவது வழக்கம்.

    காண்டிராக்ட் வணிகத்தில் விவசாயிக்கு பொருளை விளம்பரம் செய்யும் செலவு இல்லை,டெண்டர் விடும் செலவு இல்லை,போக்குவரத்து செலவு இல்லை,மார்க்கட் ஏற்றதாழ்வு பிரச்சனை இல்லை,வட்டிக்கு கடன் வாங்கவேண்டியதில்லை..ஆக விலை குறைந்தாலும் லாபம் அதிகரிக்கும்.வாங்குபவனுக்கும் லாபம்,விற்பவனுக்கும் லாபம்.

    பொருளின் விலையை குறைத்தால் லாபம் குறையவேண்டும் என அவசியமில்லை.விலையை 10% குறைத்து செலவை 15% குறைத்தால் லாபம் 5% அதிகரிக்கும் என்பது உண்மைதானே?

    பதப்படுத்தப்பட்ட உணவுகள் விற்பனைக்கு வருவது விவசாயிக்கு நல்லது.சீசன் இல்லாதபோதும் பொருளை விற்கமுடிவது கன்ஸ்யூமருக்கும் நல்லது.டிசம்பரில் மாங்காய் வேண்டுமென்றால் டின்னில் சாப்பிட்டால்தானே உண்டு?

  6. 7
    sukisenthil Says:

    yennai pondra naduthara nagarangalil ullavarkalukku santhiyil pooi kaikarivanginal thaan theriyum reliance fresh matrum spencer pondra kadaikalin arumai. yengal ooril santhaikul sendru oru foreigner oru round adithal avar angeyae sethuviduvaar.

  7. ஒரேடியாக இது போன்ற நிறுவனங்களைக் குறை சொல்வதில் அர்த்தம் இல்லை. இவர்கள் இல்லை என்றால் நாம் என்ன நேராக விவசாயிகளிடமிருந்தா வாங்குகிறோம். இவர்கள் இல்லை என்றால் வேறு ஒரு கடை. நல்ல பொருட்களாகவும், வாங்கி வருவதை ஒரு நல்ல அனுபவமாக்கக் கூடிய கடைகளில் சற்றே விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லைதான்.

  8. இல்ல செல்வன் Business World இல் வந்த கட்டுரை இந்தியாவைப்பற்றியது. Business World பத்திரிக்கை இந்தியாவை மையாமாக வைத்து வெளிவரும் ஒரு வியாபார பத்திரிக்கை.

  9. 10

    //ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது கதையாக, இவர்களின் படிப்பு விவசாயிகளின் அறிவுக்கு கால் தூசுக்கு கூட ஈடாகாது. //

    Before green revolution and adoption of new technologies, india was not able to feed 50 crores people. We begged US to get spoiled wheat from them. Due to modernization of agriculture, we increased productivity to 2-3 folds and can able to feed our people by us. Now populatation reached 100 crore. Due to agriculture scientist and technicians, we achieved self sufficiency

    // மேலும் மெத்த படித்த மேதாவிகளின் பேச்சை கேட்டு நாம் மண்ணையும், விளை பொருட்களையும் ஏற்கனவே நஞ்சாக்கிவிட்டோம்.//

    We use petrol/petro products and make air poisonous. Plastic-soil poisonous. Most of the products that we are using is one way or other dangerous to enviornment. Is it possible to stop using car/bike/etc to save the environment?
    But we expect farmers to avoid all chemicals and go for organics. Already their profit margin is less. Agriculture is not productive.
    I am not telling they have to use only Chemicals. Integrated approches for Pest/weed/Nutrient management are avialable.

  10. //வெங்கட்ராமன் Says:
    இப்படி சில்லரை மருந்து வணிகத்தில் அப்பல்லோ வும் இறங்கி விட்டது. பெரு நகரங்களில் மட்டும் அல்லாது, சிறு நகரங்களிலும் கிளைகளை ஆரம்பித்துள்ளது.//
    உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி வெங்கட்.

    //பிரதாப் குமார் Says:
    ரிலையன்ஸின் வணிக முறை பத்தி இங்கன பாருங்க விலாவரியா எழுதியிருக்கேன்.
    http://pothuvudaimai.blogspot.com/2007/09/blog-post_05.html//
    இதுல இவ்வுளவு தில்லாலங்கடி நடக்குதா? அருமையா எழுதி இருக்கீங்க பிரதாப், மன்னிகவும் பிளாக்கர் தடை செய்ய்ப்பட்டுள்ளதால் உங்கள் பதிவில் பின்னூட்டமிடமுடியவில்லை.
    செல்வன் மேலே பிரதாப் கொடுத்துள்ள சுட்டியை படியுங்கள் உங்களுக்கு இன்னும் சில விஷயம் புரியும்.

  11. //sukisenthil Says:
    yennai pondra naduthara nagarangalil ullavarkalukku santhiyil pooi kaikarivanginal thaan theriyum reliance fresh matrum spencer pondra kadaikalin arumai. yengal ooril santhaikul sendru oru foreigner oru round adithal avar angeyae sethuviduvaar.//
    சுகி மேடம்,
    நானும் சந்தைக்கு எல்லாம் போயி இருக்கேங்க, அதில் புறச்சூழல் சரியாக இருக்காது ஆனால் காய்கறிகள் பிரஷ்ஷாக கிடைக்குமே? ரிலையன்ஸ் பிரஷ் போன்ற கடைகள் நமக்கு வசதியாக இருக்கும் ஆனால் நாம நிறைய விஷயங்களை யோசிக்க வேண்டும், பிரதாப் சார் தனது பதிவில் ரிலையன்ஸின் கொள்முதல் திட்டத்தை அருமையாக விளக்கு உள்ளார் படிச்சி பாருங்களேன் உங்களுக்கு நிறைய விஷயம் புரியும்.

    //இலவசக்கொத்தனார் Says:
    ஒரேடியாக இது போன்ற நிறுவனங்களைக் குறை சொல்வதில் அர்த்தம் இல்லை. இவர்கள் இல்லை என்றால் நாம் என்ன நேராக விவசாயிகளிடமிருந்தா வாங்குகிறோம். இவர்கள் இல்லை என்றால் வேறு ஒரு கடை. நல்ல பொருட்களாகவும், வாங்கி வருவதை ஒரு நல்ல அனுபவமாக்கக் கூடிய கடைகளில் சற்றே விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லைதான்.//
    கொத்ஸ்,
    நான் சொல்வதெல்லாம் துவக்கத்தில் இது போன்ற கடைகள் நன்றாகத்தான் இருக்கும். ஒரு கட்டத்தில் இது போன்ற பெரு வணிகர்கல் ஏக போகத்தை கொண்டு வருவார்கள் அப்பொழுது தான் பிரச்சனையே.

  12. //Sathukapootham Says:
    Before green revolution and adoption of new technologies, india was not able to feed 50 crores people. We begged US to get spoiled wheat from them. Due to modernization of agriculture, we increased productivity to 2-3 folds and can able to feed our people by us. Now populatation reached 100 crore. Due to agriculture scientist and technicians, we achieved self sufficiency
    // மேலும் மெத்த படித்த மேதாவிகளின் பேச்சை கேட்டு நாம் மண்ணையும், விளை பொருட்களையும் ஏற்கனவே நஞ்சாக்கிவிட்டோம்.//
    We use petrol/petro products and make air poisonous. Plastic-soil poisonous. Most of the products that we are using is one way or other dangerous to enviornment. Is it possible to stop using car/bike/etc to save the environment?
    But we expect farmers to avoid all chemicals and go for organics. Already their profit margin is less. Agriculture is not productive.
    I am not telling they have to use only Chemicals. Integrated approches for Pest/weed/Nutrient management are avialable.//

    சார் அதற்கான விலை என்ன கொடுத்து இருக்கிறோம் தெரியுமா? பெரும்பான்மையான விளைச்சல் நிலங்கள் இப்பொழுது பாழ் பட்டுக்கிடக்கிறது. ஏற்கனவே பல விஞ்சானிகள் பசுமை புரட்சியின் விளைவால் தான், இந்த சுட்டியில போயி படிச்சுப்பாருங்க சார், விகட்னில் வந்த ஒரு செய்தி இது. நம்ம முன்னோற்களுக்கு தெரியாதா? மூன்று போகம் விளைவிக்க, நம்ம விஞ்ஞானிகள் மூன்று போகம் விளைவியுங்க, பூச்சி கொல்லிகளை உபயோகபடுத்துக்க அப்படி இப்படின்னு சொல்லி இன்னிக்கு விளை நிலை பூராவும் பாழாப்போச்சி, இப்ப பழையபடி இயற்கை உரங்களை போட்டு நிலத்தை சீர் படுத்திட்டு இருக்காங்க. நிறைய விஞ்ஞானிகள் நம்முடைய பசுமை புரட்சிக்கொள்கையே தவறுன்னு பேசிட்டு இருக்காங்க. உலக வங்கி என்னும் அமெரிக்க அடிவருடி நிறுவனமும், பல அமெரிக்க பூச்சி கொல்லி நிறுவனங்களும் சேர்ந்து கொண்டு தங்கள் பொருட்களை விற்கவே இப்படி பல விஷயங்களை செய்து வருகின்றன.

    இல்ல சார் இயற்கை விவசாயம் தற்பொழுது மார்டன் விவசாயத்தை காட்டிலும் நல்ல லாபம் தருவதாக நிறைய செய்திகள் வருகின்றன. ஆனால் இங்க பிரச்சனையே நாம் நிலத்தை பசுமை புரட்சிக்காரர்கள் சொன்னதை கேட்டு, அதிகபடியான உபயோகம்(over utilization)செய்தும், பூச்சி கொல்லிகளை தொளித்து பாழ் படுத்தி விட்டோம். அதனால் நிறைய விவசாய நிலங்கள் இயற்கை விவசாயத்துக்கு உபயோகப்படாது.

  13. 15

    //சார் அதற்கான விலை என்ன கொடுத்து இருக்கிறோம் தெரியுமா? பெரும்பான்மையான விளைச்சல் நிலங்கள் இப்பொழுது பாழ் பட்டுக்கிடக்கிறது//

    We are degarding air,soil etc for our comfort ,money and happiness(urban population). Same is happening in rural also. If you and I can stop using vehicles using petrol, we can talk about this. Since this is not possible.In the same way, agri without chemical also not possible

    //இல்ல சார் இயற்கை விவசாயம் தற்பொழுது மார்டன் விவசாயத்தை காட்டிலும் நல்ல லாபம் தருவதாக நிறைய செய்திகள் வருகின்றன. //

    It is not possible to get the same yield gain from organic farming. Now lots of nutrients are locked due to improper use of chemical fertilizer for long years. When we go for organic farming,it will be having lots of microbes which will convert unavailable form of N,P,K,Micronutrients to available form. Once these nutrients are over, yield will decrease.

    Indian solis are inheriantly deficient in lot of nutrients. We need to supply them externally. You can not quantify amount of nutrient in organic manure.Different nutrients required from different region of soil and different period of crop cycle. It will be difficult to quantify nutrient from organic source and way to feed the crop in specific period to get good yield.

    //நம்ம முன்னோற்களுக்கு தெரியாதா? மூன்று போகம் விளைவிக்க, //

    Indian population when our forefathers lived, is 50 crores. During that time , Famine is frequent. We used to beg food grains from foreign countries. Now we got selfsufficiency. Only problem is distribution. That is due to green revoltion.

    //பூச்சி கொல்லிகளை உபயோகபடுத்துக்க அப்படி இப்படின்னு சொல்லி இன்னிக்கு விளை நிலை பூராவும் பாழாப்போச்சி//
    If you get diseases , will you go for our forefathers way to take “Kashayam” and herbs. 90% population goes for english treatment. (Even though, our forefathers found lots of way to cure those diseases). Because it gives immediate effect.Even though it will leave serious side effects.

    As i told, we can think about integrated way. Always try for preventive organic pest control spray . If that doesn’t prevent pest atttack, try organic sprays till it reaches Economic Threshhold level(ETL). If it exceeds that, go for pesticide.

    //நிறைய விஞ்ஞானிகள் நம்முடைய பசுமை புரட்சிக்கொள்கையே தவறுன்னு பேசிட்டு இருக்காங்க. //

    For any decision, there will be opposite side. They do have some good points. (You can read “Violence of Green Revolution” by Vandana Siva.)
    But current situation force us to use these chemicals

    // உலக வங்கி என்னும் அமெரிக்க அடிவருடி நிறுவனமும், பல அமெரிக்க பூச்சி கொல்லி நிறுவனங்களும் சேர்ந்து கொண்டு தங்கள் பொருட்களை விற்கவே இப்படி பல விஷயங்களை செய்து வருகின்றன.
    //

    This is partially true. But for survival of farmes and for survival of 100crore people, we donot have any other way

    //இல்ல சார் இயற்கை விவசாயம் தற்பொழுது மார்டன் விவசாயத்தை காட்டிலும் நல்ல லாபம் தருவதாக நிறைய செய்திகள் வருகின்றன.//

    Another big problem in india is that, most of our land are river.canal irrigated. Everytime you irrigate the land, top soil with nutrients will be depleted. Nutrient also will be washed away. we need to replenish the soil with nutrients.
    Please check the quantity of N,P,K,ca,mg,Mn,etc in chemical fertilizer and organic nutrient

    Sorry for replying in english

  14. 16
    jamalan Says:

    அருமையான பதிவு. காலத்திற்கேற்ற பிரச்சனைகளைப் பேசுகிறது. பாராட்டுக்கள்.

  15. 17
    thiyaagu Says:

    மிக நல்ல கட்டுரை

    செல்வன் போன்றோர் இந்த ஜென்மத்தில் திருந்த போவதில்லை

    அவரை பற்றி கவலை படாமல் உங்கள் கருத்துக்களை பதியுங்கள்

  16. 19

    When Mayawathi banned Reliance Fresh in UP, there was stiff opposition from farmers who now have to be at the mercy of old mandis and brokers. all the arguments that in future Reliance Fresh, etc will become monopolies after ‘eliminating’ competition are all unsubstantiated. the same arguments were used until 1991 in almost all sectors ; esp in cement and steel ; crippling controls and permits actually created acute shortages and corruption and black markets. only when the licensing system was dismantled did the production increased and demand is met.

    the small grocers in midldle class and poor areas can never be supplanted by Rel Fresh ,etc. and in small towns and villages even lesser chance. hence all the fears are, just groundless fears. and there is always competition to take care of any monopoly formation. see the dramatic fall in STD and other tariffs in telecom. would anyone have belived in 1994 that such low rates and cell use by all and sundry in will happen in future ?


RSS Feed for this entry

Leave a Comment