விவசாயிகளின் தேவதை

இங்கிலாந்தை சேர்ந்த Reutuers நிறுவனமும், மகாராஷ்டிராவை சேர்ந்த MCX நிறுவனமும் இணைந்து மகாராஷ்டிராவில் உள்ள விவசாயிகளின் நலனுக்காக Market Light என்ற சேவையை துவக்கி உள்ளது. இதன் நோக்கம் விவசாயிகளுக்கு விவசாய பொருட்களின் தற்போதைய சந்தை விலை, அதாவது பல்வேறு மண்டிகளில் ஒரு குறிப்பிட்ட பொருளுக்கான விலை எவ்வுளவு என்று தெரியப்படுத்துவதே. இத்திட்டதில் சேரும் விவசாயிகளுக்கு  அவர்கள் விரும்பும் பொருளுக்கான வாங்கும் விலை அதாவது எந்த எந்த மண்டிகளில் எவ்வுளவு விலை தருவார்கள் என்று  தகுந்த இடைவெளியில் அல்லது அவர்கள் விரும்பும் பொழுது, குறுஞ்செய்தி(SMS) மூலம் தெரிவிப்பார்கள். தற்பொழுது இந்த திட்டம் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டதில் சேர்த்தின் மூலம் விவசாயிகளுக்கு அவர்களின் பொருட்களுக்கு அதிகபட்ச விலை கொடுக்கும் மண்டியை பற்றி தெரியவரும். இந்த திட்டத்தில் சேர்ந்ததன் மூலம் சுமார் 30% வரை அதிக விலை கிடைத்ததாக பல்வேறு விவசாயிகள் கூறி இருக்கின்றனர். இலவச சேவையாக செயல்பட்டு வரும் இந்த சேவைக்கு மாதம் 60 ரூபாய் வரை செலுத்த விவசாயிகள் தயாராக உள்ளனர். இந்த சேவையில் விலை பொருட்களுக்கான விலை மட்டுமில்லாமல், விவசாயம் பற்றிய செய்திகள்,வானிலை அறிவுப்புகள் முதலானவையும் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படுகிறதாம்.

தற்பொழுது இத்திட்டத்தின் மூலம் மகாராஷ்டிராவில் உள்ள  25 மண்டிகளின் விலை நிலவரம் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படுகிறதாம், சுமார் 4000 விவசாயிகள் வரை இந்த சேவையை பயன்படுத்துகிறார்களாம்.எனக்கு இந்த திட்டம் மிகவும் அருமையான திட்டமாக தெரிகிறது. தமிழகத்திலும் இது போன்ற திட்டம் அமல்படுத்தப்பட்டால் அது விவசாயிகளுக்கு மிகப்பெரிய நன்மையாக இருக்கும். ஏர்டெல். வோடாபோன் போன்ற நிறுவனங்கள் இதை செயல்படுத்த முயற்சிக்கலாம், அது இருவருக்கும் பெரிய லாபமாக இருக்கும்.

9 Comments

  1. 1

    That is really a good scheme.
    To the next step, SAFEL (AMUL’s sister concern) is doing direct marketing of farmers produce in big cities(Bangalore). Lots of farmers especially AP, is benefitting.

    Regarding Market Light, software professionals like us should create these kind of websites as service to farming community and that can be reached to farmers through NGO’s

    Revolution should start from us first

  2. SMS களை இப்படி கூட உபயோகமா செயல்படுத்துறாங்களே…
    நல்ல விஷயம்.

  3. 3
    jamalan Says:

    Sathukapootham Says:

    //Regarding Market Light, software professionals like us should create these kind of websites as service to farming community and that can be reached to farmers through NGO’s

    Revolution should start from us first//

    Repeat…

    குறுஞ்செய்திகள் இந்தியாவில் படும்பாடு தாங்க முடியல. இப்படி எதாவது உருப்படியா செய்யலாம். என் மகன் இந்தியாவில் குறுஞ்செய்தி மூலம் அடிக்கும் லூட்டி தாங்கமால் என் மகள் அதற்கு வைத்திருக்கும் பெயர் சோம்பேறிகள் முட்டாள்கள் சங்கம்(SMS). அதுவும்கூட உண்மைதான்..

  4. மிக நல்ல முயற்சி. தொடர்ந்து நடைபெற்றால் நல்ல விலை விவசாயிகளுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. கணனி வல்லுனர்கள் இதில் கவனம் செலுத்தவேண்டுகிறேன். Moving average இருந்தால் மிக்க வசதியாக இருக்கும்.

  5. நல்ல முயற்சி…நம்ம ஊருல செய்வாங்களான்னு தான் தெரியல!

  6. நல்ல முயற்சிதான். விவசாயிகள் இடையே அந்த அளவிற்கு செல்பேசிகள் ஊடுறுவி இருக்கிறதா? நாம் சிறுவிவசாயிகள் மிகவும் கஷ்டப்படுவதைப் பற்றி அடிக்கடி படிக்கிறோம் என்பதால்தான் இந்தக் கேள்வி. அல்லது கொஞ்சம் பெரிய விவசாயிகள் மட்டுமே பயனடைவார்களா?

  7. ஏற்கனவே கேள்விப்பட்டு இருக்கேன்..

    நல்லது நடந்தால் சரி தான் :)

  8. 9

    MCX is part of the institutions accused by communists and leftisits of
    being speculators and exploiters of farmers while raising prices ,etc.
    but results show otherwise.

    Mentha (oil) farmers are reaping bonanza while middlemen are now bypassed ; quantity and quality of output is increasing rapidly, while both farmers and consumers get better deals than ever before. these are some of the examples. but for this liberalsiation process initiated in 90s this exchange and improvement would never have been possible.

    from MCX website :

    MCX is an independent and de-mutulised multi commodity exchange. It was inaugurated on November 10, 2003 by Mr. Mukesh Ambani, Chairman and Managing Director, Reliance Industries Ltd.; and has permanent recognition from the Government of India for facilitating online trading, clearing and settlement operations for commodities futures market across the country. Today, MCX features amongst the world’s top three bullion exchanges and top four energy exchanges.
    MCX offers a wide spectrum of opportunities to a large cross section of participants including producers/ processors, traders, corporate, regional trading centre, importers, exporters, co-operatives and industry associations amongst others. Headquartered in the financial capital of India, Mumbai, MCX is led by an expert management team with deep domain knowledge of the commodities futures market. Presently, the average daily turnover of MCX is around USD1.55 bn (Rs.7,000 crore – April 2006), with a record peak turnover of USD3.98 bn (Rs.17,987 crore) on April 20, 2006. In the first calendar quarter of 2006, MCX holds more than 55% market share of the total trading volume of all the domestic commodity exchanges. The exchange has also affected large deliveries in domestic commodities, signifying the efficiency of price discovery.

    Being a nation-wide commodity exchange having state-of-the-art infrastructure, offering multiple commodities for trading with wide reach and penetration, MCX is well placed to tap the vast potential poised by the commodities market.

    Key shareholders

    Financial Technologies (I) Ltd., State Bank of India and it’s associates, National Bank for Agriculture and Rural Development (NABARD), National Stock Exchange of India Ltd. (NSE), Fid Fund (Mauritius) Ltd. – an affiliate of Fidelity International, Corporation Bank, Union Bank of India, Canara Bank, Bank of India, Bank of Baroda , HDFC Bank, SBI Life Insurance Co. Ltd., Merrill Lynch and Citigroup


RSS Feed for this entry

Leave a Comment