ஹர்பஜன்சிங்கை மூன்று டெஸ்டு போட்டிகளில் இருந்து தடை செய்ததை எதிர்த்து போராட்டம் — செய்தி
நந்திகிரமுல நூத்துக்கணக்கான பேர் செத்துப்போனாங்க, ஒரு பொம்பளை புள்ளையை ஒட்டு துணி இல்லாம தெருவுல ஓட விட்டாங்க(அந்த புள்ளைக்கு துணி குடுக்குறதை விட்டுட்டு அதையும் சுத்தி சுத்தி படம் புடிச்சி TRB ரேட்டிங்கை ஏத்திகிட்டாங்க நம்ம மானங்கெட்ட பத்திரிக்கைகாரனுங்க).
இது வரைக்கும் நூத்துக்கணக்கான விவசாயிங்க சோத்துக்கு வழியில்லாம செத்து போயி இருக்காங்க.
நாட்டை எப்படிடா அமெரிக்காகாரனுக்கு அடகு வெக்கலாமுன்னு அதிகாரத்துல இருக்குற ஒரு கூட்டம் ரூம் [...]
Archive for the 'கருத்து கந்தசாமி' Category
நல்லாஇருங்கடா
ஜனவரி 7, 2008சபாஷ் சரியான தீர்ப்பு
நவம்பர் 27, 2007நாட்ல இந்த குறைந்த விலை விமான நிறுவனங்களின் தொல்லைக்கு ஒரு அளவே இல்லை. குறைந்த விலைக்கு விமான சேவையை அளிக்கிறேன் அப்படின்னு இவங்க அடிக்கிற லூட்டி இருக்கே யப்பா தாங்காது. விமானத்தில் போதிய பயணிகள் இல்லாட்டி, பயணிகளை பல மணி நேரம் காத்திருக்க செய்து அப்புறம் விமானத்தை கேன்ஸல் செய்வது, காலை விமானத்தில் கூட்டம் இல்லாட்டி அந்த விமானத்தில் உள்ள பயணிகளை அடுத்த விமானத்துக்கு மாற்றம் செய்வது, சில சமயம் விமானத்தை கேன்ஸல் செய்து அதுக்கு பதிலா [...]
சாப்டுவேர் என்ஜினியர்களும் சமூக சீரழிவும்
நவம்பர் 14, 2007இப்பொழுது தலை தூக்கி வரும் பிரச்சனைகளில் மிக முக்கியமானது சாப்டுவேர் கம்பெனியில் வேலை செய்பவர்களால் உண்டாகும் செயற்கை விலை உயர்வு. இதை பத்தி கொஞ்சம் பார்ப்போம்
1. தி.நகரில் ஒரு சாப்பாடு(Meals) 30+ ரூபாய், அதுவே OMR சாலையில் ஏதாவது ஒரு சாப்டுவேர் கம்பெனிக்கு அருகில் இருக்கும் ஓட்டலில் சாப்பாடு குறைந்த பட்சம் 60. என்னுடைய அலுவலகத்திற்கு பக்கத்தில் உள்ள ஆந்திர உணவகத்தில் அது 99 + VAT (ஏறக்குறைய 120 ரூபாய் வரும் டிப்ஸை சேர்த்தால். 10 [...]
புலிக்கு பொறந்தது பூனையாகுமா?
அக்டோபர் 23, 2007கொஞ்ச நாளைக்கு முன்னாடி சி.என்.என் ஜபிஎனின் டெவில்ஸ் அட்வகேட் நிகழ்ச்சியில் கனிமொழியை பேட்டி கண்டார்கள். கனிமொழி கரணின் கேள்விகளுக்கு நன்றாகவே பதில் சொன்னார்கள். நான் பார்த்த வரையில் அந்த நிகழ்ச்சியில் கேள்விகள் மிக சாதாரணமாக இருந்தன. பல இடங்களில் கனிமொழியை அட்டாக் செய்ய வாய்ப்பு கிடைத்த பொழுதும் கரண் அதை அப்படியே விட்டு விட்ட மாதிரி தான் எனக்கு தெரிகிறது. சரி அதை விடுங்க அதுல ஒரு முக்கியமான கேள்வி,
பந்த் அன்று உச்ச நீதி மன்றம் கண்டனம் [...]
206. இது தாங்க உண்மை
அக்டோபர் 1, 2007சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று உண்மையான அக்கரை உள்ளது போல தி.மு.காவும் அதன் கூட்டணி கட்சிகளும் நாடகமாடுகின்றன அவர்களுக்கு ஈடுஈணையாக எதிர்கட்சிகளும் நாடகம் ஆடுகின்றன. உண்மையான அக்கரை இருந்தால், இந்த திட்டம் விரைவாக முடிக்கபடாவிட்டால் நாங்கள் எங்களின் ஆதரவை வாபஸ் வாங்கிக்கொள்வோம் என்று சொல்ல வேண்டியது தானே? பேரனுக்கு அமைச்சர் பதவி பெற்றுத்தர டில்லிக்கு நடையா நடந்தவர், தமிழ்நாட்டின் வாழ்வாதார பிரச்சனையான இந்த பிரச்சனைக்கு ஒரு பந்த்/உண்ணாவிரத்த்தோட முடிச்சிக்கிட்டாரு.
அதையாவது ஒழுங்கா செய்தாரா? பதவி [...]
205. சர்தார்கள் பிச்சை எடுப்பதில்லை
ஜூலை 20, 2007இன்று காலை வழக்கமாக வரும் forward மின்னஞ்சலில் சர்தார்கள் உழைத்து தான் சாப்பிடுவார்கள் என்றும், பிச்சைக்கார சர்தார்களை எங்கேயும் பார்க்க முடியாது என்று கூறி உள்ளனர். அதே மாதிரி வயதான, மன நலம் குன்றிய சர்தார்கள் மற்றும் ஏதோ ஒரு காரணத்தினால் சம்பாதிக்க முடியாத சர்தார்களை அவர்களின் குருத்துவாரா(அவர்களின் கோவில்) தத்து எடுத்துக்கொள்ளுமாம். அட ஆமாம்! நான் கூட சர்தார்கள் பிச்சை எடுத்து பார்த்தது இல்லை.எந்த அளவுக்கு இந்த செய்தி உண்மை என்று தெரியவில்லை, நீங்க யாராவது [...]
202. புதிய உலக அதிசயங்களும் ஏமாளி இந்தியர்களும்
ஜூலை 8, 2007புதிய உலக அதிசயங்களை தேர்ந்து எடுக்குறேன் அப்படின்னு சுவிட்சர்லாந்தை ஒரு தனியார் நிறுவனம் new7wonders கிளம்பி இருக்கு. அவங்க யாரு அப்படிங்கறத்துக்கு சரியான விளக்கம் இல்ல (ஆனால் அவர்கள் தாங்கள் ஒரு profitable organisation என்பதை தெளிவாக கூறி இருக்கின்றனர்.). எந்த நாட்டின் அரசாவது இவர்களை அங்கீகரித்து இருக்காங்களா? அப்படி எதுவும் தெரியலை. ஜ.நாவும் இவங்களை அங்கீகரிச்ச மாதிரி தெரியலை. ஆனாலும் உலக அதிசியங்களை தேர்ந்து எடுக்குறேன் அப்படின்னு ஒரு ஏகப்பட்ட சுற்று தேர்தலை [...]
200. கலக்குது இளசு
ஜூலை 5, 2007ஒரு நல்ல விஷயம் அல்லது ஒரு பொருளை எப்படி கெடுத்து குட்டி சுவர் ஆக்க முடியும் அப்படிங்கிறதுக்கு ஆர்குட் ஒரு அருமையான உதாரணம். ஒரு காலத்தில் படித்த நண்பர்களை எல்லாம் சில பேர் கண்டுபிடித்து சந்தோசப்பட்டுக்கொண்டு இருக்கும் வேளையில். அதையே நாடுகளுக்கும், சமுதாயங்களுக்கும் எதிரான கருத்துக்களை பரப்பி அதை தடை செய்யும அளவுக்கு அழித்து குட்டிச்சுவர் ஆக்கிக்கொண்டு இருக்கிறது ஒரு கூட்டம். அதையே நல்ல விஷயத்துக்கும் உபயோகப்படுத்த முடியும் என்று ஒரு இளைஞர் கூட்டம் நிரூபித்து உள்ளது.
உங்களுக்கு [...]
199 – தி பாஸ்கர்
ஜூன் 28, 2007‘தளபதி’ வந்த டைம்லதான் ‘தலைவா’ன்னு தறிகெட்ட ரஜினி ஃபேனாகி சுத்த ஆரம்பிச்சான் பாஸ்கர். அப்ப அவனோட எதிரி நாட்டு மன்னன் கமல், ‘குணா’வோடு களத்துக்கு வந்திருந்தாப்ல. அங்கிட்டு, ‘அப்பன் குடுத்த மூஞ்சி… அப்பன் குடுத்த மூஞ்சி’னு கமல் ஃபீலிங் பிர்காவைப் போட, இங்கிட்டு ரஜினி சட்டையை ஏத்திக்கட்டி, ‘ராக்கம்மா கையத் தட்டு’ன்னு குத்துல ஆட… ஏரியாவுக்கு ஈரக்கொல நடுங்க ஆரம்பிச்ச நேரம்… எக்ஸ்ட்ரா கட்டிங்கை உள்ள விட்ட பாஸ்கரு, ‘எவன்டாவன் என் தலைவனைப் பத்தித் தப்பா பேசினது..? [...]
188. அருணாச்சல பிரதேசம் எங்களுக்கு சொந்தம் என்கிறது சீனா
மே 28, 2007பல காலமாக அருணாச்சல பிரதேசத்தை சீன ஆக்கிரமிக்க பல வேலைகளை செய்து உள்ளது. இதில் நம்முடைய பிரதமர் நேருவின தவறான அணுகுமுறையால் நம் ராணுவம் போரிட்டு தோற்க வேற நேர்ந்தது. அதற்கு பிறகு அதன் ஆட்டம் மேலும் அதிகரித்தது. சில காலம் பேச்சு வார்த்தைகளால் அமைதியாக இருந்த சீனா, கடந்த நவம்பர் மாதம் முதல் பழைய படி ஆட்டத்தை தொடர்ந்தது.
கடந்த நவம்பர் மாதம் சீன அதிபரின் வருகையின் பொழுது சீன தூதர் அருணாச்சல பிரதேசம் சீனாவின் பகுதி [...]