காவிரி மன்ற தீர்ப்பை அரசு இதழில் வெளியிட ஒரு வருடம் ஆகும் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறி உள்ளார். இந்த தாமதற்கு காரணமாக அவர் கூறியுள்ளது, இந்த ஒரு வருடத்தில் இரு மாநில அரசும் இந்த தீர்ப்பு சம்மந்தமாக ஏதாவது சந்தேகம் இருந்தால் நடுவர் மன்றத்திடம் கேட்டுத்தெரிந்து கொள்ளலாமாம். விசாரணை என்ற பெயரில் இவர்கள் இந்த தீர்ப்பை வெளியிடவே ஒரு ஆறு ஏழு வருடம் ஆகிவிட்டது. இந்த ஆறுவருடத்தில் ஏற்படாத சந்தேகம் இந்த ஒரு வருடத்தில் [...]