Archive for the 'சொந்த கதை' Category

எவன்டா இங்க சந்தோசு?

நவம்பர் 13, 2007

நான் அமெரிக்காவுல இருக்கும் பொழுது ராஜ் அப்படின்னு ஒருத்தன் நமக்கு தோஸ்து ஆனான்.  நம்ம ரும்மேட் ஒருத்தர் சோம பானம் அடிச்ச அழகை (அவன் அவன் குவாட்டருக்கே சாய்ந்துகிட்டு இருக்கும் பொழுது. அந்த குடிகாரன் ஒரு முழு fullஜ மிக்ஸிங் பண்ணாம அடிச்சிட்டு எதுவுமே நடக்காத மாதிரி  ஒக்காந்து இருப்பான்.) பாத்து ரொம்ப Impress ஆகி தானும் அவரை போல வளரணும் (அடடா என்ன ஒரு லட்சியம்?) அப்படின்னு எங்க கூட சேர்ந்து சுத்த ஆரம்பிச்சான். என்ன பண்றது [...]

இந்த வாரம் ரணகளம்தான்டி

நவம்பர் 12, 2007

கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை ஆடிகிட்டு இருந்திச்சாம், அது மாதிரி ஏதோ சமீபகாலமா நல்லா இருக்குற தமிழுக்கும், தமிழ்மணத்துக்கும் வேட்டு வெக்கிற மாதிரி வந்துச்சி பாருங்க ஒரு கடுதாசி. நவம்பர் 12 முதல் 17 வரை நீங்க நட்சத்திரம் இருக்கணுமுன்னு.ஆகா மாட்டினாங்கடா தமிழ் மக்கள் இதை விட்டா கைப்புள்ளைங்களையும், செ.செ.சூ வெச்சிகிட்ட தமிழ்மணத்தையும் போட்டுத்தாக்க நல்ல வாய்ப்பு கிடைக்காது புடிச்சிகோடா சந்தோசுன்னு உள் மனசு சொல்ல, போட்டேன் பாருங்க ஒரு பதிலு அய்யா [...]

ஆபீஸர் இந்த எட்டுக்கு லைசென்ஸ் குடுப்பிங்களா?

ஜூன் 25, 2007

நம்மளையும் எட்டு போட வெக்கணும் அப்படின்னு அன்பா நம்ம RTOங்க கப்பியரு, சர்வேசரு, குசும்பரு, குட்டிபிசாசரு (எல்லாரும் RTOவாச்சே வாங்க ஆபீஸர் போங்க ஆபீஸர் அப்படின்னு கூப்பிடாட்டி கோச்சிகிட்டு லைசன்ஸ் கொடுக்காம போயிட்டா என்ன பண்றது) எல்லாம் கூப்பிட்டு இருக்காக.
இந்த விளையாட்டுல நம்மளை பத்தி எட்டு தகவல் குடுக்கணுமாமே? நம்ம என்ன அப்துல்கலாமா? இல்ல அப்ரகாம் லிங்கனா? நம்மளை பத்தி மக்கள் தெரிஞ்சிகிட்டு அதை பின்பற்றுவதற்கு. சரி நம்ம பதிவுலகுல இருக்கும் அண்ணன்களிடம்(பெண்களுக்கு இட ஒதுக்கீட தரலைன்னு [...]

173. வித்தியாசமான நான்

மார்ச் 25, 2007

எனக்குள் இருக்கும் வித்தியாசமானவை(weird) அல்லது நான் செய்யும் வித்தியாசமானவற்றை சொல்லுமாறு நம்ம மணி,புலி, சர்வேசரும் கேட்டுகிட்டாங்க. என்னங்க பண்றது தமிழுக்கு வந்த கொடுமை தான் கொஞ்சம் சகிச்சிகோங்க.
வேகம் பைக்கில் தனியா போகும் பொழுது அம்முட்டு வேகம். போன முறை இந்தியா போகும் பொழுது இரவு ஆபீசுக்கு போக வேண்டியாதப்போச்சி, யாருமே இருக்க மாட்டாங்க ரோட்டில் ஒரே அழுத்து தான் பாக்குறேன் 90 கிமில (அதுவும் என்னோட ரூம் மேட் புது பைக். பைக்கை பூ போல வச்சிகிட்டு [...]

158. கஞ்சி ஊத்தி இருக்காங்க

பெப்ரவரி 9, 2007

பர்கரும் பீஸாவுமாவே சாப்பிட்டு வளர்ந்த எனக்கு(சரி அடங்கு.. அரசியல் வாழ்க்கையில இது எல்லாம் சகஜமப்பா.. அய்யோ இது அந்த அரசியல் வாழ்க்கை இல்லிங்கோ) நம்ம கவிதா மேடமும் நண்பர்களும் நம்மளையும் ஒரு ஆளுன்னு மதிச்சி இங்கன கஞ்சி ஊத்தி இருக்காங்க. சிந்தாம சிதராம குடிச்சி இருக்கேனானு ஒரு எட்டு பாத்துட்டு வந்துடுங்களேன்?