Archive for the 'நட்சத்திர வாரம்' Category

ஏழு நாட்களில் முடிந்த 7 1/2

நவம்பர் 20, 2007

இவ்வுளவு தூரம் சொல்லியும், கேக்காம போன வாரம் முழுசும் நம்ம இம்சைக்கு நீங்க எல்லாம் பின்னூட்டம் போட்டு ஊக்கம் குடுத்தீங்க அதுக்கு ரொம்ப நன்றி. நேத்தே இந்த பதிவு போட வேண்டியது ஆனா சில தவிர்க்க முடியாத காரணத்தால போட முடியலை. உங்க ஆதரவுக்கும், ஊக்கத்துக்கும் ரொம்ப நன்றி.
எல்லா பின்னூட்டங்களுக்கும் என்னால பதில்/நன்றி சொல்ல முடியலை. அதுக்கு ஒரு தபா நீங்க மன்னிச்சிகோங்க.
நீங்க எல்லாம் இன்னொரு தபா என்னை மன்னிக்கனும், நான் எல்லாருடைய பதிவுகளையும் படிக்க முடியுது [...]

கடன் அட்டைகளை பற்றி நீங்க தெரிந்து கொள்ள வேண்டியவை – பாகம் 1

நவம்பர் 17, 2007

கடன் அட்டைகள் (Credit Cards) இன்றைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான இடத்தை பெற்றுள்ளன (முக்கியமாக அமெரிக்க வாழ்க்கையில்). அதை கையாள்வது ஒரு தனி கலை. பெரும்பாலான கடன் அட்டை நிறுவனங்கள் இந்தியர்களை கண்டாலே மிரண்டு ஓடுகின்றனர். ஏன்னா நம்ம ஆளுங்க அதை நன்றாக கையாண்டு ஒரு பைசா கூட வட்டி கட்டாமல் அழகாக உபயோகிக்கின்றனர். கடன் அட்டைகளை கண்டாலே நடுங்கி அதை உபயோகம் செய்யாமல் இருப்பது முட்டாள்தனம் என்றே சொல்லலாம். அதை திட்டமிட்டு உபயோகித்தால பல பயன்பாடுகள் [...]

லிப்டோ லிப்டு

நவம்பர் 16, 2007

லிப்டுல போறது சகஜமா நடக்குற ஒண்ணும், ஆனா பாருங்க தினமும் ஒரே மாதிரி போயி வந்துட்டு இருந்தா ரொம்ப போர் அடிக்கும். அதனால் அந்த பயணத்தை இனிமையாக்க என்ன செய்யலாமுன்னு யோசிச்ச பொழுது தோன்றியவை சில

1. ஏறின உடனே ஓடிப்போயி சுவற்றை பாத்து, சுவத்தை புடிச்சி நின்னுகோங்க. அடிக்கடி பின்னாடி திரும்பி நீங்க இறங்க வேண்டிய இடம் வந்துடிச்சான்னு பாக்குற மாதிரி பாத்து, எதையோ கண்டு பேய் அறைந்ததை போல சுவத்து திரும்பிகோங்க.

2. அடிக்கடி [...]

Its Not about the Bike — புத்தக விமர்சனம்

நவம்பர் 13, 2007

Lance Armstrong அப்படிங்கிற Cyclistஇன் சுயசரிதம் (Autobiography). உலகத்திலேயே மிகவும் கடினமான Tour De France , சைக்கிள் பந்தயத்தை ஒரு முறை அல்ல இரண்டு முறை அல்ல ஏழு முறை வென்று இருக்காரு.  அதுவும் உலகத்தில் மிகவும் கொடிய நோயான புற்று நோய்க்கு ஆளாகி மருத்துவர்களால் பிழைப்பதற்கு மிகக்குறைவான (10%-20%) வாய்ப்பே உள்ள நிலையில், அதில் இருந்து போராடி மீண்டு  இந்த சாதனையை  செய்து உள்ளார். இந்த புத்தகம் அவர் நேயிக்கான அறிகுறி தென்படுவதில் இருந்து ஆரம்பித்து அவர் [...]

எவன்டா இங்க சந்தோசு?

நவம்பர் 13, 2007

நான் அமெரிக்காவுல இருக்கும் பொழுது ராஜ் அப்படின்னு ஒருத்தன் நமக்கு தோஸ்து ஆனான்.  நம்ம ரும்மேட் ஒருத்தர் சோம பானம் அடிச்ச அழகை (அவன் அவன் குவாட்டருக்கே சாய்ந்துகிட்டு இருக்கும் பொழுது. அந்த குடிகாரன் ஒரு முழு fullஜ மிக்ஸிங் பண்ணாம அடிச்சிட்டு எதுவுமே நடக்காத மாதிரி  ஒக்காந்து இருப்பான்.) பாத்து ரொம்ப Impress ஆகி தானும் அவரை போல வளரணும் (அடடா என்ன ஒரு லட்சியம்?) அப்படின்னு எங்க கூட சேர்ந்து சுத்த ஆரம்பிச்சான். என்ன பண்றது [...]

“இந்தியன் வங்கியில்” ஒரு நாள்

நவம்பர் 12, 2007

கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு காசோலையை என்னுடைய வங்கி கணக்கில் போட எங்க ஊரில் உள்ள இந்தியன் வங்கிக்கு (Indian Bank) சென்றேன்.  நான் கணக்கை ஆரம்பிக்கும் பொழுது அந்த வங்கி கணினி மயம் ஆகவில்லை ஆனால் இப்பொழுது அது கணினி மயமாகி விட்டது. அதனால் என்னுடைய கணக்கு எண் மாறிவிட்டது.  பழைய எண்ணை காட்டி புது எண் என்ன என்று ஒரு அதிகாரியிடம் கேட்டேன், அவர் அடுத்த இருக்கையில் அமர்ந்து இருந்தவரை காட்டி அங்கே போயி கேட்கச்சொன்னார். [...]

இந்த வாரம் ரணகளம்தான்டி

நவம்பர் 12, 2007

கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை ஆடிகிட்டு இருந்திச்சாம், அது மாதிரி ஏதோ சமீபகாலமா நல்லா இருக்குற தமிழுக்கும், தமிழ்மணத்துக்கும் வேட்டு வெக்கிற மாதிரி வந்துச்சி பாருங்க ஒரு கடுதாசி. நவம்பர் 12 முதல் 17 வரை நீங்க நட்சத்திரம் இருக்கணுமுன்னு.ஆகா மாட்டினாங்கடா தமிழ் மக்கள் இதை விட்டா கைப்புள்ளைங்களையும், செ.செ.சூ வெச்சிகிட்ட தமிழ்மணத்தையும் போட்டுத்தாக்க நல்ல வாய்ப்பு கிடைக்காது புடிச்சிகோடா சந்தோசுன்னு உள் மனசு சொல்ல, போட்டேன் பாருங்க ஒரு பதிலு அய்யா [...]