Archive for the 'பொதுவானவை' Category

சபாஷ் சரியான தீர்ப்பு

நவம்பர் 27, 2007

நாட்ல இந்த குறைந்த விலை விமான நிறுவனங்களின் தொல்லைக்கு ஒரு அளவே இல்லை. குறைந்த விலைக்கு விமான சேவையை அளிக்கிறேன் அப்படின்னு இவங்க அடிக்கிற லூட்டி இருக்கே யப்பா தாங்காது. விமானத்தில் போதிய பயணிகள் இல்லாட்டி, பயணிகளை பல மணி நேரம் காத்திருக்க செய்து அப்புறம் விமானத்தை கேன்ஸல் செய்வது, காலை விமானத்தில் கூட்டம் இல்லாட்டி அந்த விமானத்தில் உள்ள பயணிகளை அடுத்த விமானத்துக்கு மாற்றம் செய்வது, சில சமயம் விமானத்தை கேன்ஸல் செய்து அதுக்கு பதிலா [...]

கடன் அட்டைகளை பற்றி நீங்க தெரிந்து கொள்ள வேண்டியவை- பாகம் II

நவம்பர் 24, 2007

இந்த பதிவில் நான் கடன் அட்டைகள் பற்றி முன்னுறையாக சில விஷயங்களை பற்றி சொல்லி இருந்தேன். இந்த பதிவில் கடன் அட்டைகளை வாங்குவதற்கு/உபயோகிப்பதற்கு முன்னர் கவனிக்க வேண்டிய முக்கியமான சில விஷயங்களை பற்றி சொல்லி இருக்கிறேன் (இதில் கூறப்பட்டுள்ள விஷயங்களில் பெரும்பாலானவை அமெரிக்காவில் உள்ளவர்களுக்கே பொருந்தும், இந்தியாவில் உள்ளவர்களுக்கும் சில விஷயங்கள் உபயோகமாக இருக்கலாம்): 1. கடன் அட்டைக்கு விண்ணப்பிக்கும் பொழுது நீங்க கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் “universal default” clause அப்படிங்கற [...]

Its Not about the Bike — புத்தக விமர்சனம்

நவம்பர் 13, 2007

Lance Armstrong அப்படிங்கிற Cyclistஇன் சுயசரிதம் (Autobiography). உலகத்திலேயே மிகவும் கடினமான Tour De France , சைக்கிள் பந்தயத்தை ஒரு முறை அல்ல இரண்டு முறை அல்ல ஏழு முறை வென்று இருக்காரு.  அதுவும் உலகத்தில் மிகவும் கொடிய நோயான புற்று நோய்க்கு ஆளாகி மருத்துவர்களால் பிழைப்பதற்கு மிகக்குறைவான (10%-20%) வாய்ப்பே உள்ள நிலையில், அதில் இருந்து போராடி மீண்டு  இந்த சாதனையை  செய்து உள்ளார். இந்த புத்தகம் அவர் நேயிக்கான அறிகுறி தென்படுவதில் இருந்து ஆரம்பித்து அவர் [...]

“இந்தியன் வங்கியில்” ஒரு நாள்

நவம்பர் 12, 2007

கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு காசோலையை என்னுடைய வங்கி கணக்கில் போட எங்க ஊரில் உள்ள இந்தியன் வங்கிக்கு (Indian Bank) சென்றேன்.  நான் கணக்கை ஆரம்பிக்கும் பொழுது அந்த வங்கி கணினி மயம் ஆகவில்லை ஆனால் இப்பொழுது அது கணினி மயமாகி விட்டது. அதனால் என்னுடைய கணக்கு எண் மாறிவிட்டது.  பழைய எண்ணை காட்டி புது எண் என்ன என்று ஒரு அதிகாரியிடம் கேட்டேன், அவர் அடுத்த இருக்கையில் அமர்ந்து இருந்தவரை காட்டி அங்கே போயி கேட்கச்சொன்னார். [...]

203. பரதன் இந்த பொழப்புக்கு நல்லா வாயில வருது

ஜூலை 11, 2007

Devil’s advocate என்ற நிகழ்ச்சியில் கரண் தப்பார் CPI கட்சியின் இந்திய பொது செயலாளர் பரதனுடன் பேட்டி காண்கிறார். இந்த பேட்டி சாராம்சம் பிரதீபா பாட்டீல் போன்ற ஒரு ஊழவாதி, பிற்போக்கு சிந்தனை கொண்ட ஒரு பெண் இந்திய ஜனாதிபதியாக போட்டி இட தகுந்தவரா? நீங்களே இந்த வீடியோவை பாருங்க பரதன் அவரிடம் என்ன பாடு படுகிறார் என்று.
முதல் வீடியோ
இரண்டாம் வீடியோ
மூன்றாம் வீடியோ
இந்த பேட்டி முழுவதும் கரண் மூன்றே மூன்று குற்றச்சாட்டுகளை தான் வைக்கிறார்.
1. பிரதீபா தலைவராக [...]

200. கலக்குது இளசு

ஜூலை 5, 2007

ஒரு நல்ல விஷயம் அல்லது ஒரு பொருளை எப்படி கெடுத்து குட்டி சுவர் ஆக்க முடியும் அப்படிங்கிறதுக்கு ஆர்குட் ஒரு அருமையான உதாரணம். ஒரு காலத்தில் படித்த நண்பர்களை எல்லாம் சில பேர் கண்டுபிடித்து சந்தோசப்பட்டுக்கொண்டு இருக்கும் வேளையில். அதையே நாடுகளுக்கும், சமுதாயங்களுக்கும் எதிரான கருத்துக்களை பரப்பி அதை தடை செய்யும அளவுக்கு அழித்து குட்டிச்சுவர் ஆக்கிக்கொண்டு இருக்கிறது ஒரு கூட்டம். அதையே நல்ல விஷயத்துக்கும் உபயோகப்படுத்த முடியும் என்று ஒரு இளைஞர் கூட்டம் நிரூபித்து உள்ளது.
உங்களுக்கு [...]

199 – தி பாஸ்கர்

ஜூன் 28, 2007

‘தளபதி’ வந்த டைம்லதான் ‘தலைவா’ன்னு தறிகெட்ட ரஜினி ஃபேனாகி சுத்த ஆரம்பிச்சான் பாஸ்கர். அப்ப அவனோட எதிரி நாட்டு மன்னன் கமல், ‘குணா’வோடு களத்துக்கு வந்திருந்தாப்ல. அங்கிட்டு, ‘அப்பன் குடுத்த மூஞ்சி… அப்பன் குடுத்த மூஞ்சி’னு கமல் ஃபீலிங் பிர்காவைப் போட, இங்கிட்டு ரஜினி சட்டையை ஏத்திக்கட்டி, ‘ராக்கம்மா கையத் தட்டு’ன்னு குத்துல ஆட… ஏரியாவுக்கு ஈரக்கொல நடுங்க ஆரம்பிச்ச நேரம்… எக்ஸ்ட்ரா கட்டிங்கை உள்ள விட்ட பாஸ்கரு, ‘எவன்டாவன் என் தலைவனைப் பத்தித் தப்பா பேசினது..? [...]

192. இவர்களுக்கு எப்படி வந்தது இந்த தைரியம்?

ஜூன் 8, 2007

ஒரு இன்ஸ்பெக்டரை நடுரோட்டில் தீ வைத்து கொளுத்துகிறது ஒரு வன்முறை கும்பல். அவருக்கோ தன்னை காப்பாற்றிக்கொள்ளவே சக போலீசார் உதவ வேண்டிய நிலை (“ஒரு நடுநிலைமை நாழிதல்” இதை ஒரு விபத்தாக கதை கட்டுகிறது. என்னே உங்க மனித நேயம் மற்றும் பத்திரிக்கை தர்மம்).
ஒரு ரவுடிக்கும்பல் ஒரு பத்திரிக்கை அலுவலகத்துக்குள் புகுந்து அடித்து நொறுக்கிவிட்டு இரண்டு மூன்று பேரை கொன்றுவிட்டு வெற்றிகரமாகா வெளியே வருகிறது.
கரூரில் இரு கட்சியினர் தாக்கிக்கொள்வதால் பஸ் நிறுத்தம் பள்ளிகள் மூடல்.
லேட்டஸ்டா [...]

190. ஒரு வேண்டுகோள்

ஜூன் 3, 2007

American Express நிறுவனம் ஒரு புதிய திட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் AMEX Credit Card வைத்து இருக்கும் அனைவரும் ஒரு திட்டத்தை அவர்களிடம் அளிக்கலாம் எ.கா “அனாதை குழந்தைகளுக்கு உதவ ஒரு நிதி ஏற்படுத்துவோம்” இது மாதிரி உங்களுக்கு தோன்றும் ஒரு திட்டத்தை அவர்களிடம் அளிக்கலாம், பின்னர் அதன் மீது ஓட்டெடுப்பு நடைபெறும், உங்களின் திட்டம் தேர்ந்து எடுக்கப்ப்ட்டால் நிதி உதவி செய்யப்படும். நான் இந்தியா என்று தேடியதில், இந்தியாவுக்கு நன்மை அளிக்கும் வகையில் சில [...]

182. சாப்டுவேர் கம்பெனிகளின் Foundationகள்

மே 4, 2007

பொதுவா எல்லா கணிப்பொறி நிறுவனங்களுமே foundations என்கிற பெயரில் ஒரு சமுதாய நற்பணிகள் செய்வதற்காக ஒரு துணை நிறுவனங்கள் அமைத்துக்கொள்கின்றன. அப்படி அமைத்துக்கொண்டு அவர்கள் அடிக்கும் கூத்துக்கு ஒரு அளவே கிடையாது. எனக்கு தெரிந்த நிறுவனத்தில் பெண்களுக்கு என்றே ஒரு அமைப்பு உண்டு அதுல சமூக சேவை செய்து நான் கேள்விப்பட்டது இல்லை. அப்படியே இருந்தாலும் கம்பெனிக்கு பயன்படாத ஓட்டை கம்யூட்டர்கள் 50ஜ இவங்களுக்கு அளித்தோம் அவங்களுக்கு அளித்தோம் அப்படின்னு பெரிய பெரிய விளம்பரத்துடன் இவர்கள் [...]