Archive for the 'Opinion' Category

நல்லாஇருங்கடா

ஜனவரி 7, 2008

ஹர்பஜன்சிங்கை மூன்று டெஸ்டு போட்டிகளில் இருந்து தடை செய்ததை எதிர்த்து போராட்டம் — செய்தி
நந்திகிரமுல நூத்துக்கணக்கான பேர் செத்துப்போனாங்க, ஒரு பொம்பளை புள்ளையை ஒட்டு துணி இல்லாம தெருவுல ஓட விட்டாங்க(அந்த புள்ளைக்கு துணி குடுக்குறதை விட்டுட்டு அதையும் சுத்தி சுத்தி படம் புடிச்சி TRB ரேட்டிங்கை ஏத்திகிட்டாங்க நம்ம மானங்கெட்ட பத்திரிக்கைகாரனுங்க).
இது வரைக்கும் நூத்துக்கணக்கான விவசாயிங்க சோத்துக்கு வழியில்லாம செத்து போயி இருக்காங்க.
நாட்டை எப்படிடா அமெரிக்காகாரனுக்கு அடகு வெக்கலாமுன்னு அதிகாரத்துல இருக்குற ஒரு கூட்டம் ரூம் [...]

சபாஷ் சரியான தீர்ப்பு

நவம்பர் 27, 2007

நாட்ல இந்த குறைந்த விலை விமான நிறுவனங்களின் தொல்லைக்கு ஒரு அளவே இல்லை. குறைந்த விலைக்கு விமான சேவையை அளிக்கிறேன் அப்படின்னு இவங்க அடிக்கிற லூட்டி இருக்கே யப்பா தாங்காது. விமானத்தில் போதிய பயணிகள் இல்லாட்டி, பயணிகளை பல மணி நேரம் காத்திருக்க செய்து அப்புறம் விமானத்தை கேன்ஸல் செய்வது, காலை விமானத்தில் கூட்டம் இல்லாட்டி அந்த விமானத்தில் உள்ள பயணிகளை அடுத்த விமானத்துக்கு மாற்றம் செய்வது, சில சமயம் விமானத்தை கேன்ஸல் செய்து அதுக்கு பதிலா [...]

206. இது தாங்க உண்மை

அக்டோபர் 1, 2007

சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று உண்மையான அக்கரை உள்ளது போல தி.மு.காவும் அதன் கூட்டணி கட்சிகளும் நாடகமாடுகின்றன அவர்களுக்கு ஈடுஈணையாக எதிர்கட்சிகளும் நாடகம் ஆடுகின்றன. உண்மையான அக்கரை இருந்தால், இந்த திட்டம் விரைவாக முடிக்கபடாவிட்டால் நாங்கள் எங்களின் ஆதரவை வாபஸ் வாங்கிக்கொள்வோம் என்று சொல்ல வேண்டியது தானே? பேரனுக்கு அமைச்சர் பதவி பெற்றுத்தர டில்லிக்கு நடையா நடந்தவர், தமிழ்நாட்டின் வாழ்வாதார பிரச்சனையான இந்த பிரச்சனைக்கு ஒரு பந்த்/உண்ணாவிரத்த்தோட முடிச்சிக்கிட்டாரு.
அதையாவது ஒழுங்கா செய்தாரா? பதவி [...]

205. சர்தார்கள் பிச்சை எடுப்பதில்லை

ஜூலை 20, 2007

இன்று காலை வழக்கமாக வரும் forward மின்னஞ்சலில் சர்தார்கள் உழைத்து தான் சாப்பிடுவார்கள் என்றும், பிச்சைக்கார சர்தார்களை எங்கேயும் பார்க்க முடியாது என்று கூறி உள்ளனர். அதே மாதிரி வயதான, மன நலம் குன்றிய சர்தார்கள் மற்றும் ஏதோ ஒரு காரணத்தினால் சம்பாதிக்க முடியாத சர்தார்களை அவர்களின் குருத்துவாரா(அவர்களின் கோவில்) தத்து எடுத்துக்கொள்ளுமாம். அட ஆமாம்! நான் கூட சர்தார்கள் பிச்சை எடுத்து பார்த்தது இல்லை.எந்த அளவுக்கு இந்த செய்தி உண்மை என்று தெரியவில்லை, நீங்க யாராவது [...]

203. பரதன் இந்த பொழப்புக்கு நல்லா வாயில வருது

ஜூலை 11, 2007

Devil’s advocate என்ற நிகழ்ச்சியில் கரண் தப்பார் CPI கட்சியின் இந்திய பொது செயலாளர் பரதனுடன் பேட்டி காண்கிறார். இந்த பேட்டி சாராம்சம் பிரதீபா பாட்டீல் போன்ற ஒரு ஊழவாதி, பிற்போக்கு சிந்தனை கொண்ட ஒரு பெண் இந்திய ஜனாதிபதியாக போட்டி இட தகுந்தவரா? நீங்களே இந்த வீடியோவை பாருங்க பரதன் அவரிடம் என்ன பாடு படுகிறார் என்று.
முதல் வீடியோ
இரண்டாம் வீடியோ
மூன்றாம் வீடியோ
இந்த பேட்டி முழுவதும் கரண் மூன்றே மூன்று குற்றச்சாட்டுகளை தான் வைக்கிறார்.
1. பிரதீபா தலைவராக [...]

202. புதிய உலக அதிசயங்களும் ஏமாளி இந்தியர்களும்

ஜூலை 8, 2007

புதிய உலக அதிசயங்களை தேர்ந்து எடுக்குறேன் அப்படின்னு சுவிட்சர்லாந்தை ஒரு தனியார் நிறுவனம் new7wonders கிளம்பி இருக்கு. அவங்க யாரு அப்படிங்கறத்துக்கு சரியான விளக்கம் இல்ல (ஆனால் அவர்கள் தாங்கள் ஒரு profitable organisation என்பதை தெளிவாக கூறி இருக்கின்றனர்.). எந்த நாட்டின் அரசாவது இவர்களை அங்கீகரித்து இருக்காங்களா? அப்படி எதுவும் தெரியலை. ஜ.நாவும் இவங்களை அங்கீகரிச்ச மாதிரி தெரியலை. ஆனாலும் உலக அதிசியங்களை தேர்ந்து எடுக்குறேன் அப்படின்னு ஒரு ஏகப்பட்ட சுற்று தேர்தலை [...]

200. கலக்குது இளசு

ஜூலை 5, 2007

ஒரு நல்ல விஷயம் அல்லது ஒரு பொருளை எப்படி கெடுத்து குட்டி சுவர் ஆக்க முடியும் அப்படிங்கிறதுக்கு ஆர்குட் ஒரு அருமையான உதாரணம். ஒரு காலத்தில் படித்த நண்பர்களை எல்லாம் சில பேர் கண்டுபிடித்து சந்தோசப்பட்டுக்கொண்டு இருக்கும் வேளையில். அதையே நாடுகளுக்கும், சமுதாயங்களுக்கும் எதிரான கருத்துக்களை பரப்பி அதை தடை செய்யும அளவுக்கு அழித்து குட்டிச்சுவர் ஆக்கிக்கொண்டு இருக்கிறது ஒரு கூட்டம். அதையே நல்ல விஷயத்துக்கும் உபயோகப்படுத்த முடியும் என்று ஒரு இளைஞர் கூட்டம் நிரூபித்து உள்ளது.
உங்களுக்கு [...]

192. இவர்களுக்கு எப்படி வந்தது இந்த தைரியம்?

ஜூன் 8, 2007

ஒரு இன்ஸ்பெக்டரை நடுரோட்டில் தீ வைத்து கொளுத்துகிறது ஒரு வன்முறை கும்பல். அவருக்கோ தன்னை காப்பாற்றிக்கொள்ளவே சக போலீசார் உதவ வேண்டிய நிலை (“ஒரு நடுநிலைமை நாழிதல்” இதை ஒரு விபத்தாக கதை கட்டுகிறது. என்னே உங்க மனித நேயம் மற்றும் பத்திரிக்கை தர்மம்).
ஒரு ரவுடிக்கும்பல் ஒரு பத்திரிக்கை அலுவலகத்துக்குள் புகுந்து அடித்து நொறுக்கிவிட்டு இரண்டு மூன்று பேரை கொன்றுவிட்டு வெற்றிகரமாகா வெளியே வருகிறது.
கரூரில் இரு கட்சியினர் தாக்கிக்கொள்வதால் பஸ் நிறுத்தம் பள்ளிகள் மூடல்.
லேட்டஸ்டா [...]

187. சேதி தெரியுமா உங்களுக்கு

மே 21, 2007

“ரஜினியும் ஸ்ரேயாவும் பாடல் காட்சியில் நெருங்கி நடிக்கும் போது, ஸ்ரேயாவின் தொப்புளை ரஜினி விரலால் வருடுவது போல காட்சி எடுக்கப்பட்டிருந்ததாம். இந்த காட்சியை வெட்டிவிட வேண்டும் என்று சென்சார் அதிகாரிகள் சொல்ல, “இதில் ஏதும் ஆபாசமில்லை. கலை நயத்துடன் தான் இந்த காட்சி படமாக்கப்பட்டுள்ளது’ என்று இயக்குனரின் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. “இதற்கு பதில் வேறு காட்சியை சேர்த்துக் கொள்ளுங்கள். இக்காட்சியை நீக்கினால் தான், “யு’ சர்ட்டிபிகேட் கொடுப்போம். இல்லாவிட்டால், “ஏ’ சர்ட்டிபிகேட் தான்’ என்று சென்சார் தரப்பில் [...]

184. ஒரே கல்லுல இரண்டு மாங்கா

மே 14, 2007

மாறனின் ராஜினாமா, கட்சியில் இருந்து விலக்கல் எல்லாமே ஒரு நாடகம் மாதிரி தோணுதுங்க. அமைதிப்படை படத்துல சத்தியராஜின் உள்ளாடை துவைப்பதில் ஏற்படும் சண்டை காட்சியை கொஞ்சம் நினைச்சி பாருங்க. ஏதாவது தோணுதா? ஏதாவது ஒரு பிரச்சனை வந்தா அதை மறக்க செய்ய ஏதாவது ஒரு சண்டையை உருவாக்கணும், இல்ல சாதி கலவரத்தை உண்டாக்கணும். சாதி கலவரம் உண்டாகி ஏதாவது இசகு பிசகாயி backfire ஆகிவிட்டால் மைனாரிட்டி ஆட்சி கவுந்துடும் அது மொத்த ஆப்பு ஆயிடும். மதுரையில் [...]