விஜய் : ஒய்யால குடுத்த காசுக்கு மேல கூவுறானே ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்…………..
Archive for the 'Uncategorized' Category
குடுத்த காசுக்கு மேல கூவுறானே
அக்டோபர் 11, 2007157. Appleலின் ஜபோனுனுனுனு(iPhone)…
ஜனவரி 10, 2007Apple நிறுவனம் பத்தி சொல்லவே வேண்டியது இல்ல புதுசு புதுசா மார்கெட்ல வெளியிட்டு நம்ம காசை காலி பண்றதுல கில்லாடிங்க. இப்ப புதுசா IPhone அப்படின்னு வெளியிட்டு இருக்காங்க. நீங்களே இங்க பாருங்க போன் சும்மா கும்முன்னு இருக்கு விலையை ரொம்ப அதிகம் இல்லிங்க ஜென்டில்மேன் 4 g.b கொள்ளவு உள்ளது 499$, 8GB உள்ளது $599 டாலர் தான். இந்த விலை Cingular Connection இரண்டு வருட Contract உடன் வாங்குபவர்களுக்கு தான். இதுவே இம்முட்டு [...]
156. பாக்குறவங்க கேணையா இருந்தால் …..
ஜனவரி 8, 2007அரசி = சித்தி + அண்ணாமலை + செல்வி
என்னடா இது புது கணக்கா இருக்கேன்னு கேக்காதிங்க இது நம்ம கணக்கு இல்லிங்கோ புகம்பம் புகழ், ஆதிமுக புகழ், திமுகாவின் பாசப்புளை சித்தி கணக்குங்கோ இது. அடுத்ததா என்னவோ அரசின்னு ஒரு தொடரு ஆரம்பிக்கிறாங்கலாமா அத்தோட கதை(இந்த மேட்டரு இதுக்கு முன்னாடி எந்த தொடரில் இருந்து இருக்கு இதுல மட்டும் இருக்குறதுக்கு.). இதுக்கு முன்னாடி எடுத்த தொடர்களின் கதையின் சாராம்சமா இருக்குமாம், இந்த தொடரில் அடிக்கடி முன்னாடி தொடர்களில் [...]
155. பில் கிளின்டனின் மாப்ளே
ஜனவரி 2, 2007இந்திய ஜனாதிபதி என லந்து செய்த மணப்பாறை நாகராஜனை ஜூ.வி. வாசகர்கள் சுலபத்தில் மறக்க மாட்டார்கள். அவரைப் போலவே இன் னொருவர் கிளம்பியிருக்கிறார் மதுரையில் இருந்து!
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளின்ட்டனின் மாப்பிள்ளை என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் இந்த மதுரைக்காரர் பெயர் ராஜ் பில்கிளின்ட்டன்! நாக ராஜன் இந்திய ஜனாதிபதியாக மாறி ரவுசு செய்தார் என்றால், இந்த ராஜ் பில் கிளின்ட்டன், ஜெர்மன் நாட்டின் அதிபராகப் போகிறாராம்!
மடங்காத தலைமுடி, எப்போதும் பேன்ட்டில் இன் செய்யப்பட்டிருக்கும் முழுக்கைச் [...]
154. உங்க நம்பிக்கையை நாய் கடிக்க
December 31, 2006சதாம் உசேனை ஏகாதசி அன்று தூக்கில் போட்டதால் ஹிந்து சாஸ்திரத்தின் படி அவர் செத்த பின்னாடி சொர்கத்துக்கு போவாராம். அப்படின்னு நான் சொல்லலை சாமியோவ் இங்க இந்த பத்திரிக்கையில சொல்லி இருக்காங்கோ. அட அவரு முஸ்லிமுங்கோ (ஆனா இதுக்கு ஜாதி மதம் கிடையாதாமாம் யார் செத்தாலும் சொர்க்கம் தானாம். இதுக்கு மட்டும் தான் ஜாதி கிடையாதா? கோவிலுக்குல்ல போறதுக்கு மட்டும் ஜாதி மதம் இருக்கோ? என்னங்கடா நியாயம் உங்களோடது?) அவரு இந்த கேட்டகரியில் வர மாட்டாருங்கோன்னு சொன்னா, [...]
153. 2006 – சிறந்த முட்டாள்தனத்துக்கான டார்வின் விருதுகள்.
December 29, 2006டார்வின் விருது வாங்க தகுதியானவர்கள் யாருன்னு பாத்தா, டார்வினின் தத்துவமான மனிதனுக்கு ஆறு அறிவு அப்படிங்கிறத அசால்டா பொய்யாக்க முயற்சி செய்தவங்க. இந்த வருசம் அந்த விருதுக்கான போட்டியாளர்களையும் அவங்க செய்த சாதனைகளையும் பார்க்கலாமா?
ஏதோ நமக்கு புரிஞ்ச வரைக்கும் தமிழில் மொழி பெயர்த்து இருக்கேன் தப்பு இருந்தா சொல்லிடுங்கண்ணா. இந்த பதிவின் ஆங்கில வெர்ஷன் இங்க இருக்கு ஷேக்பியர் பெரு மக்கள் அங்கன போயி படிச்சிகலாம் (சும்மா தமாசுக்கு அடிச்சிடாதிங்க அப்பறம் நான் அழுதுடுவேன்.).
1. Detroitஜ சேர்ந்த [...]
152. ஆட்டம் காலி படுதாவும் காலி
December 28, 2006மேற்கு வங்கத்தில் TATA மோட்டார்ஸ் நிறுவனத்திற்காக அரசு விவசாயிகளிடம் இருந்து நிலத்தை கையகப்படுத்துவதை எதிர்த்து நம்ம மம்தா மேடம் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க ஆரம்பிச்சாங்க. தினமும் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது, குழாய் மூலம் சுவாசம் செய்கிறார்கள் அப்படி இப்படின்னு தலைப்பு செய்தியில் இடம் பிடிச்சி ஓசி விளம்பரம் தேடிக்கிட்டாங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரை பலர் விட்ட கோரிக்கையை எல்லாம் உதறித்தள்ளி தன்னோட கோரிக்கையை ஏற்கும் வரை உண்ணாவிரதம் அப்படின்னு சொல்லிட்டு இருந்தாங்க. ஆனா இன்னிக்கு [...]
151. ம.தி.மு.கா வில் ஷேன் வார்னே
December 26, 2006துல்லியமான, நடுநிலைமையான உண்மை செய்திகளை உடனுக்குடன் வழங்குவது உங்க தினமலர் மட்டுமே.
150. இந்திய பிரதமருக்கு ஒரு கண்ணீர் கடிதம்
December 25, 2006“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்ம்ற் றெல்லாம்தொழுதுண்டு பின்செல் பவர்”
என்று வள்ளுவரால் தனி அதிகாரம் அமைக்கப்பட்டு, பெரிதும் புகழப்பட்டு, உலகத்துக்கே சோறுடைத்துக்கொண்டு இருக்கும் இந்திய உழவுத்தொழிலின் இன்றைய நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது.
கிரிக்கெட்டில் ஒரு மேட்சில் தோற்றால் அவை நடவடிக்கைகளை தள்ளி வைத்து அதை பற்றி விவாதம் செய்யத்துடிக்கும் நம்ம எம்.பிகள், மந்திரிகள் ஆயிறக்கணக்கான விவசாயிகள் மடிவதை பற்றி மூச்சு கூட விடவில்லை. அதிலும் நம்ம மானம் கெட்ட விவசாய மந்திரி சரத்பவார் சிறிது கூட ஈவு இரக்கம் இன்றி [...]
149. நீதிமன்றங்களில் தமிழ் – சபாஷ் கலைஞரே
December 13, 2006நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் தமிழிலும் இருக்கலாம் என்ற கலைஞரின் யோசனையை ஏற்று அதை செயல்படுத்த முன் வந்து இருக்கிறார் உயர்நீதி மன்ற நீதிபதி. உடனே அனைத்து நடவடிக்கைகளும் தமிழில் மாறி விடாது என்றாலும் இது ஒரு நல்ல துவக்கமே.தன்னுடைய வழக்கறிஞர் என்ன வாதிடுகிறார் என்றே தெரியாமல் விழித்து கொண்டு இருக்கும் மக்களுக்கு இது ஒரு மிகப்பெரிய நன்மையே. தமிழை வளர்க்கிறேன் பேர்விழி என்று செருப்பு, துடைப்பத்துடன் கோயில், சினிமா Studio, சபாக்கல் என்று அலையும் கோஷ்டிகளுக்கிடையே கலைஞரின் இந்த [...]