Avengers – அவிஞ்சி போன மண்டையன்ஸ்

மே 2, 2012
பக்கத்து உலகத்துல, தமிழ்நாடு மாதிரி ஒரு நாட்ல ஒரு பெருசுக்கு ரெண்டு புள்ளிங்கோ..அதுல ஒண்ணு கையில சுத்தியோட சுத்துற கன் பீஸு இன்னொன்னு டம்மி பீஸு..அந்த டம்மி பீஸுக்கு டில்லியை சாரி சாரி உலகத்தை எப்படியாச்சும் புடிச்சிடணுமுன்னு ஆசை. அதுக்கு அந்த கன் பீஸும், பெருசும் தம்பி நீ உள்ளுருல புடுங்குன ஆணியே தேவையில்லாதது..உலகமெல்லாம் தேவையான்னு கேக்குறாங்க..ஆனாலும் அந்த டம்மி பீசு டில்லிக்கு சாரி உலகத்துக்கு வந்து எப்படி சிக்கி சின்னாபின்னபட்டு சீரழியுதுங்கிறது தான் மெயின்கதை. நெக்ஸ்டு மிச்சம் மீதி இருக்குற கிளை கதைகளை பாக்கலாம்.
 
உலகத்துல சோனி கொம்பெனிக்கு சொந்தமான எல்லா  சூப்பர் ஹீரோஸை ஒண்ணு சேத்து அவிஞ்சி போன மண்டையன்ஸுன்னு சாரி சாரி Avengersன்னு ஐவர் குழுவை உருவாக்கி கணக்கு பாக்கணுமுன்னு சாரி  உலகத்தை காபாத்தணுமுன்னு இன்னொரு பெருசுக்கு ஆசை. அந்த அவிஞ்சி போன மண்டையனுங்க யார் யாருன்னா..
 
மொதல்ல கேப்டன் அமெரிக்கா, நம்ம கேப்டன் மாதிரி கையில குவாட்டரும் வாயில புள்ளி விவரமுமா இல்லைண்ணாலும் அமெரிக்கா ரேஞ்சுக்கு கையில இருக்குற வடை சட்டியை வெச்சி அணுகுண்டு முதல் கொண்டு எதை போட்டாலும் தடுத்துடுறாரு.
 
அடுத்ததா ஒரு அம்மா, அந்தம்மாவுக்கு என்ன தெரியுமும், எப்ப என்ன செய்யுமுன்னு யாருக்குமே தெரியாது ஆனா அதிரடியா ஏதாவது செய்துட்டே இருக்கும். கடைசியில எல்லா பொண்ணுங்க மாதிரி ஆப்பை சரியா வெச்சி பேரு வாங்கிட்டு போவுது. தோழி செண்டிமெண்டு, பிரிஞ்சி சேருவது, கடுதாசி சீன்னெல்லாம் எதிர்ப்பாத்து மொட்டையடிச்சிட்டு போயி ஏமாந்தா கம்பெனி பொறுப்பாகது.
 
அப்புறம் இம்சை அரசன் புலிகேசி மாதிரி கவச குண்டலத்தை போட்டுட்டு பறந்துட்டும் சுட்டுட்டும் திரியுற Iron Man.இறுதிக்காட்சியில கிழக்கு பக்கமா பாய்ந்து வர ஏவுகணைக்கு தன்னோட முதுகை முட்டுக்குடுத்து திசைதிருப்பி, தெற்கால வானத்துல இருக்குற ஓட்டை வழியா  அனுப்பி வில்லனோட விண்கலங்களை அழிக்கிறதை பாக்க பலகோடி கண்கள் வேணுமப்பா (ஒரு கண் அவிஞ்சா இன்னொணை வெச்சி பாக்க).. ஏவுகணையை முதுக்குல சுமந்துகிட்டு அவரோ பிகருக்கு போன் பண்ற கடமை உணர்ச்சியை பாத்து புல்லரிக்காத ஆளே இல்லை போங்க.
 
அடுத்த ஆளூ, அவன் அவன் கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்து தயாரிச்ச ஆயுதங்களை எல்லாம் ஒண்றையனா வில் அம்பை வெச்சி அசால்டா முறியடிக்கிற நவீன அர்சுனரு. இவரு வில் அம்போட எவ்ளோ தூரம் ஒன்றிப்போயிருக்காருன்னா பொம்பளை புள்ளையோட குழாய் சண்டை போடும் பொழுது கூட வில் அம்பை தான் யூஸ் பண்றாரு. 
 
நீதிடா நேர்மைடான்னு நியாம்டா பொதுவான டயலாக்கா பேசி இந்தாளு எந்தபக்கம்டான்னு பாக்குறவங்களை குழப்புற மாதிரி குழப்பி, கடைசியில ஜெயிக்கற பக்கம் ஜாயிண்டு அடிக்கிற (நீங்கெல்லாம் நெனைப்பிங்க நான் மருத்துவருன்னு சொல்லுவேன்னு அதான் இல்ல), பல்க்கான ஹல்க்கு. படத்துல இவர் மட்டும் கொஞ்சம் சிரிக்க வெக்கிறாரு.
 
பழங்காலத்துல நம்ம தாத்தன் பூட்டன் எல்லாம் சேவிங் செய்யறப்ப யூஸ் பண்ணுவாங்கில்ல படிகார கல்லு, அது மாதிரி பெரிய சைஸ் கல்லு ஒண்ணை  கண்டுபுடிச்சி அதை உபயோகித்து ஆயுதங்களை தயாரிக்க ஒத்தக்கண்ணனும் அவங்க கம்பெனியும் திட்டம் போடுறாங்க.
 
அந்த சேவிங் கல்லுல இருக்குற சக்தியை வெச்சி உலகத்தையே ஆளலாமுன்னு கண்டுபுடிக்கிற டம்மிபீஸு அவங்க உலகத்துல இருந்து இங்க வந்து அந்த கல்லை ஆட்டையை போட பாக்குது. அதை அவிஞ்சி போன மண்டையணுங்க பேசி பேசி எப்படி தடுத்து நிறுத்துறாங்கங்கிறதை படுபயங்கறமாவும்(பாக்குறவங்களுக்கு)  படுமொக்கையா சொல்லியிருக்காங்க. இந்த கருமத்தை பாக்குறதுக்கு வில்லு படத்தை நூறு முறை ரீவைண்ட் பண்ணி பாக்கலாம்.

இதெல்லாம் நல்லதுக்கு தானா?

மார்ச் 28, 2012

வழக்கமா நாலு உதை விட்டாலும் ஸ்டார்ட் ஆவாத பைக்(பெரும்பாலும் சாவி போட்டு இருக்க மாட்டேன் இல்லாட்டி சாவியை ஆன் பண்ணி இருக்க மாட்டேன் நோ நோ.. இதுக்கெல்லாம் பிளக்ஸ் பேனர் ரோம்ப ஓவர்) இன்னிக்கு ஒரே உதையில ஸ்டார்ட் ஆயிடிச்சி.

ஹோட்டல்ல போயி சட்னி கேட்டா சட்னி இல்ல கிட்னி வேணுமான்னு கேப்பானுங்க.. இன்னிக்குன்னு பாத்து சார் தேங்கா சட்னி,தக்காளி சட்னி, புதினா சட்னி எது வேணுமான்னு கேக்குறாங்க.

பசி உயிரை போவுற அன்னிக்கு நமக்கு முன்னாடி கியூவுல பத்தாயிரம் பேரு நிப்பான் அதுவும் நமக்கு முன்னாடி இருக்குறவனுக்கு கவுண்டர் கிட்ட வந்த அப்புறம் தான் எதை திங்கலாமுன்னு ஆராய்ச்சி செய்யுற ஆசையோ இல்ல இதை எப்படி செய்து இருப்பாங்க அதை எப்படி செய்து இருப்பாங்கன்னு டவுட் வந்து கவுண்டருல இருக்குறவன் கிட்ட கேள்வியா கேட்டு கொலையா கொல்லுவான்.. அதுவும் இல்லாட்டி அவனுக்கு தெரிந்த ஒரு பத்து பேரு வந்து எனக்கு சேத்து வாங்குடான்னு அவன் கிட்ட இருக்குற ஆயிரம் பக்க லிஸ்ட் பத்தாதுன்னு இவனுங்க ஒரு ஆயிர ஆயிட்டம் சொல்லுவானுங்க ஆனா இன்னிக்குன்னு பாத்து எல்லா கவுண்டரும் காலியா இருக்கு வசந்த் & கோ மாதிரி வாங்க வாங்கன்னு வரவேற்ப்பு வேற

வழக்கமா வங்கியில போயி விண்ணப்பம் இல்லைன்னு சொன்னா யோவ் அங்க தான் இருக்கும் போயி ஒழுங்கா பாருயான்னு அன்பா சொல்லுவாரு, ஆனா இன்னிக்கு பாருங்க ஒரு ஆபீசர் பணிவா வந்து பாத்து எடுத்து குடுக்குறாரு. கையெழுத்து போடுற இடத்துல இருந்த மல்லு ஆன்டி என்ன கோர்ஸ் படிக்கிறீங்க, நல்ல கோர்ஸா இருக்கேன்னு ஒரு ரெண்டு மூணு நிமிஷம் கடலை போட்டு கஸ்டமர் சேடிஸ்பேக்‌ஷனை வேற இம்ப்ரூவ் பண்ணுது.

நமக்கு தேவைன்னு வரும் பொழுது.. cartridge காலி ஆவுறது, பேப்பர் தீர்ந்து போவுறது, நடுவுல வேலை செய்யாம போவுறதுன்னு கெத்த காட்டும் பிரிண்டரு இன்னிக்கு பிரிண்ட் பட்டனை தட்டின உடனே சும்மா பள பளன்னு பிரிண்ட் அவுட்டு எடுத்து குடுக்குது.

இதெல்லாம் நல்லதுக்கா இல்ல பெரிய ஆப்போட சின்ன ஆரம்பமான்னு நெனைச்சிட்டே இருந்தா பின்னாடி ஒரு குரல் டேய் எருமை பத்து மணி ஆச்சி ஆபீசுக்கு போவாம அப்படி என்ன தூக்கமுன்னு, ஸ்யப்பா நல்ல வேளை கனவா போச்சி..இந்த மாதிரி பிரச்சனை இல்லாத உலகத்துல பிரச்சனையை fancy banianனா போட்டு பொங்கிட்டு இருக்குற நம்மால உயிர வாழ முடியுமா என்ன?

விகடனில் என் பதிவு

மார்ச் 1, 2012

பொதுவா பத்திரிக்கையில ஒரு ஓரத்துல துளியூண்டு பேரு வந்தாலே பெருமையா இருக்கும். ஒரு முழு பக்கமும் நம்மளை பத்தி வந்தா எப்படி இருக்கும்..

ஒரு 5 – 6 வருடங்களுக்கு முன்னாடி என் பதிவை பத்தி தினமலர்ல வந்தது அப்புறம் ஜுவில ஒரு கட்டுரை எழுதி தரச்சொன்னாங்க, அதெல்லாம் குட்டியா சிறு பத்தியில வந்தது. ஆனா இந்த தடவை ஒரு முழு பக்கம்.அதுவும் விகடன் மாதிரியான ஒரு பாரம்பரிய பத்திரிக்கையில ஒரு பக்கம் முழுவதும் வந்தா எப்படி இருக்கும்.

ஊர்ல ஒரு பய மதிக்காது இன்னிக்கு காலையில இருந்து ஒரு 5 – 6 பேரு போன் பண்ணி சொல்லி இருக்காங்களாம்.திரும்பவும் எழுதலாமுன்னு யோசிக்கிறேன்.. ஓடுங்க ஓடுங்க இந்த மிருகம் உங்களை நோக்கி தான் வந்துகிட்டே இருக்கு.. 🙂

 

Image

 

Image

பெண்ணியவியாதிகளும் மாற்று சிந்தனையாளர்களும் கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க

மார்ச் 7, 2010

நித்தியானந்தர் மேட்டர் வெளி வந்ததும் யாரு கொதிச்சாங்களோ இல்லையோ பெண்ணியவியாதிகள், சட்ட நிபுணர்கள், மாற்றுப்பார்வையாளர்கள், நடுநிலையாளர்கள் கொதிச்ச கொதியில் அரபிக்கடல் அரை மணிநேரம்
சூடாயிப்போச்சி, இவங்க அடிக்கிற ஜல்லியைதான் கொஞ்சம் பார்ப்போம்.

பாவம் அந்தப்பொண்ணு அது என்ன தப்பு பண்ணிச்சி நாளைக்கு ரோட்டுல எப்படி தல நிமிர்ந்து நடக்கும்?

அடிங்க அந்த பொண்ணு அங்க என்ன ஒலக சமாதானத்தை பத்தியா பேச போயி இருந்தது? சின்ன பாப்பா பாருங்க என்ன பண்றேன்னு தெரியாம பண்றதுக்கு. அது தல நிமிர்ந்து நடந்தா என்ன நடக்காட்டி என்ன? நாட்ல பசியாலும் பாலியல்
கொடுமையாளும் எவ்வுளவு பொண்ணுங்க செத்துட்டு இருக்காங்க அங்க போயி காட்டுங்கடா உங்க பரிதாபத்தை,கிளம்பிட்டானுங்க பெண்களைப்பார்த்து பரிதாபப்பட.

அடுத்து நம்ம சட்ட நிபுணர்கள், இவர்களின் கருத்துப்படி 18 வயது நிரம்பிய ஒரு ஆணும் 18 வயது நிரம்பிய ஒரு பெண்ணும் மனசு ஒத்து உறவு கொளவது சட்டப்படி தப்பில்லையாமா?

இதே சட்ட நியாயங்களை உங்க வீட்ல இருக்குற ஒருத்தர் இது மாதிரி செய்யும் பொழுது சொல்வீங்களா? உங்களுக்கெல்லாம் ethics, moral கிடையவே கிடையாதா? கோடிக்கணக்கான பேருக்கு உபதேசம் செய்துவிட்டு ப்ராடுதனம் பண்ணிகிட்டு இருக்கார் அவருக்கு வக்காலத்து வாங்க வந்துட்டாங்க (உடனே ஆரம்பிப்பாங்க ஜல்லியை ஏமாறுவதற்கு ஆட்கள் இருக்குற வரை
ஏமாற்றுவதற்கு ஆட்கள் இருப்பாங்கன்னு.ஏன்னா இவங்க ரெண்டு பேரும் இருந்தா தான் இவங்க பொழப்பு ஓடும்).

உங்களைபோன்ற சட்ட மேதாவிகளின் உதவியால் தான் ரத்தோர் போன்ற நல்லவங்க ரூச்சிகா போன்றவர்களின் வாழ்க்கையை சீரழிச்சிட்டு 6 மாச
கடுங்காவல் தண்டனைகளோட தப்பிக்கிறாங்க.நல்லா நிலைநாட்டுறாங்க சட்டத்தை.

அடுத்து நம்ம ஒசை செல்லா அண்ணனை போன்ற மாற்றுச்சிந்தனையாளர்கள் – இவங்க மேல சொன்ன சட்ட நுணுக்களோட, நாளைக்கே இது உங்களுக்கும் நடக்கலாம், privacy, papa racy போன்ற பூச்சாண்டிகளோடும், ராமகிருஷ்ண
பரமஹம்சரே செய்து இருக்காரு இந்து தர்மப்படி இது தப்பே இல்ல இது பார்பணியம் ஆர்மோனியமுன்னு வழக்கமான ஜல்லி.

இவிங்களை கண்டிச்சாலும் கண்டிக்காட்டியும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக எவன் படுக்கையறையையும் எவன் வேணா பாக்கலாமுங்கிற நிலைமை வந்துடிச்சி.நீங்க தப்பு செய்யாட்டி உங்க பெட்ரூமை அடுத்தவன் பார்ப்பானோங்கிற பயம் உங்களுக்கு எதுக்கு? இந்த மாதிரி detective journalism வளர்ந்தால் தான் பொதுவாழ்க்கையில இருக்குறவங்களுக்கு கொஞ்சமாவது பயம் வரும்.

ராமகிருஷண பரமஹம்சர் என்னா இவரை மாதிரி சினிமாக்காரியோடவா கூத்தடிச்சிட்டு இருந்தாரு இல்ல யோகம் போகமுன்னு கோடியில
வாழ்ந்துகிட்டு இருந்தாரா? இந்த கோஷ்டி காலையில காபியில ஈ இருந்தா கூட அதுக்கு காரணம் பார்பணீயம் தான்னு சத்தியம் பண்ணுவாங்க.

அடுத்த கோஷ்டி உண்மைத்தமிழன் போன்ற நடுநிலைவாதிகள். இவிங்க பிரச்சனையே எவன் எந்த பிரச்சனையை பத்தி பேசினாலும் நீ யோக்கியமான்னு ஒரு கேள்வியை எழுப்ப வேண்டியது. ஷகிலா படத்தை போட்டதாலும்,தினகரன் சம்பவத்துல பின்வாங்கியதாலும், தவறான வியாபாரக்கொள்கை வெச்சி இருப்பதாலும் சன் டிவிக்கு அந்த தகுதி இல்லையாமா.

ஏன் ஒரு அயோக்கியன் இன்னொரு அயோக்கியனை காட்டிக்குடுக்குறது தப்பா? இதே சன் டிவி இதை வெளிக்கொண்டுவராட்டி யோச்சிபாருங்க இந்தாளு அடுத்த ஜந்து ஆண்டுகளின் எப்பேர்பட்ட வளர்ச்சியை அடைந்து இருப்பாரு? எத்துணை பேரின் வாழ்க்கை பறிபோயி இருக்கும்.எவன் கொண்டுவரான்னு பாக்காதிங்க சாமி என்ன கொண்டுவரான்னு பாருங்க.அப்படி பாத்தா பக்கம் பக்கமா பதிவெழுதி எல்லா டவுசரையும் உருவரமே நாம எல்லாம் ரொம்ப யோக்கியமா?

ஒரு புது கண்டுபிடிப்பை வேற இவரு வெளியிட்டு இருக்காரு. அவரு மனுசனாம அதனால அவரோட மனுச குணத்தால இந்த தப்பு நடந்து போச்சாமா.கொலை செய்றவன், கொள்ளையடிக்கிறவன் கூட தான் மனுசன் வுட்டுடலாமான்னு கேட்டா, அதெப்படி அவங்களுக்கெல்லாம் மாத்து கருத்து இல்லை இவருக்கு இருக்கு அப்படிங்கிறாரு.கொஞ்சம் விட்ட ஜெ, கலைஞர் வகையராக்கள் கொள்ளையே அடிக்கலைன்னு சொல்லுவார் போல.

அடுத்து இணைய பெண்ணியவியாதிங்க(ஆண்கள், பெண்கள் தனி கேட்டகிரி).இவர்களில் நிறைய பேர் இங்க எழுதுறதே பொண்ணுங்க கிட்ட ஜொள்ளுவிடத்தான். இவங்களை முக்கிய வேலையே பெண் பதிவர்களின் பதிவுகளில் பின்னூட்டங்கிற பெயரில் ஈளிச்சிட்டு நிக்குறது தான். பொதுவா கதை கவிதன்னு சுத்திட்டு இருப்பாங்க.

இது மாதிரிஏதாவது சாக்கு கிடைக்கும் பொழுது ஆம்புளைங்களே இப்படி தான்னு (ஏதோ இவங்க எல்லாம் ஆம்பளைங்களே இல்லங்கிற மாதிரி) கிளம்பி, அய்யோ பாவம் அந்த பொண்ணு அத்தோட வாழ்க்கை இப்படி வீணாப்போச்சே, இதுக்கு மேல அந்த பொண்ணு தல நிமிர்ந்து எப்படி நடக்கும்? வாயால எப்படி சாப்புடும்? எப்படி வெளிய வருமுன்னு?தற்கொலை பண்ணிகிட்டா என்ன பண்றதுன்னு ஒரே ஒப்பாரி. இந்த மாதிரி பொண்ணுங்க இருந்தா என்ன இல்லாட்டி தான் என்ன?

அடுத்த கேட்டகிரி பெண் பதிவர்கள். முதலில் கண்மணிங்கிறவங்க கேட்டாங்க பாருங்க ஒரு கேள்வி ரஞ்சிதாங்கிறதால தானே வெளியிட்டிங்க இதுவே
அரசியல்வாதியோட பெண்ணாவோ இல்ல அதிகாரி வீட்டு பெண்ணாவோ இருந்தா இதை வெளியிட்டு இருப்பிங்களான்னு. ஏங்க ப்ரேமானந்தா என்ன நடிகையோடவா மாட்டினாரு? இவங்க சொல்றாங்க இந்த நடிகைகள் எல்லாம் நல்லவங்களாம் (புவனேஸ்வரியையும் சேர்த்து) ஆனா சாமியாருங்க மட்டும் கெட்டவங்களாமா. ஏன்னா இந்த நடிகைகள் எல்லாம் ஒண்ணும் தெரியாத பாப்பாகள் அவங்களை இந்த சாமியாருஙக சூனியம் வெச்சி கெடுத்துட்டாங்களாம்.

சின்ன அம்மணிக்கு ஒரு கவலை ஷோபாவை தற்கொலை செய்ய வைத்துவிட்டு, மவுனீகாவை வைத்துக்கொண்டு, அர்ச்சனாவுக்கு ரூட்டு விடும் பாலுமகேந்திரா போன்றவர்களைப்பற்றி யாரும் கவலைப்படுறது இல்லைன்னு.
எல்லார் கவலையும் ரஞ்சிதா, நயனதாரா மேல்தான்.என்ன கொடுமை இது.

அடுத்த சந்தனமுல்லை இவங்க புனித ஆத்துமா ரஞ்சிதாவை கண்ணகி,டயானா,அகலிகைன்னு யார் யாரோடவே ஒப்பிட்டு புனிதப்படுத்தி
இருக்காங்க. ஏங்க தெரசா,சீதா,மேரி இவங்களை எல்லாம் விட்டுடிங்க ஒரு வேளை இவங்க ரஞ்சிதா மேடம் ரேஞ்சுக்கு இறங்கி பொது சேவை செய்யலையோ?

அத்தோட நிறுத்தி இருக்கலாம் எதை நிலை நாட்டவோ எல்லா ஆம்புளைங்களும் எல்லா பெண்களிடமும் அளவு தேடுறவனுங்கன்னு சந்தடிசாக்குல அடிச்சி விட்டு இருக்காங்க..இதுக்கு ஒரு ஜம்பது பேர் சூப்பருங்க பின்னி பெடல் எடுத்துடிங்கன்னு பின்னூட்டம்..அதுல பாதி பேர் ஆம்பளைங்க மீதி பேர் பொண்கள், ஆனா அவங்களுக்கும் ஆண்களுக்கும் சம்மந்தமே இல்ல
ஏன்னா அவங்களுக்கு புருஷன்,புள்ளை,அண்ணன் தம்பின்னு யாரும் ஆண் இல்ல அப்படி இருந்தாலும் இருக்குறவன் எல்லாமே எல்லா பெண்களிடமும் அளவு தேடுறவங்க.நல்லா இருங்கடே.

இது எதுலையுமே சேராத இன்னொரு கோஷ்டி நம்ம தெ.கா.,ரஞ்சிதா அவரை காதலிக்குதாமா பாருங்கய்யா என்னா அழகா பக்தியோட அந்த புள்ள பணிவிடை செய்யுது அது இதுன்னு இவரு புளிகாகிதம் அடையிறாரு…இதைப்படிச்ச நித்யானந்த கம்பெனி டீலர் ஒருத்தர் அட இது நமக்கு தோணாமா போச்சேன்னு ரொம்ப பீல் பண்ணாரு.ஸ்யப்பா தெ.கா உங்க நிலைமையே ஏன் இப்படின்னு ஆகிப்போச்சே.

டிஸ்கி:என்னோட ஆதங்கமே ஏன் எல்லாரும் தனிமனித உரிமை, privacy, பெண்ணுரிமை அப்படிங்கிற காரணத்தினால் அவங்களை support செய்றீங்க? பல தனிமனித உரிமைகள் மீரப்பட்டாளும் இவங்க செய்தது தப்பு தான். இதை சன் டிவி வெளிக்கொணர்ந்ததில் தப்பே இல்லை.தனிமனித உரிமைகளும் மற்ற வெங்காயங்களும் மீறப்பட்டாலும் சமுதாயத்துக்கு ஒரு நன்மை விளைந்து இருக்கு, அது தான் நமக்கு தேவை.

மற்றபடி என்னை கேட்டா சாமியார்கள் தேவையே இல்லை சாமி டூ மனுஷன் மனுஷன் டூ சாமி ஒன் டூ ஒன் கனெஷன் இது தான் என்னோட நிலைப்பாடு.

இந்த ஆக்கத்தை சீர்ப்படுத்தி தந்த நண்பர்களுக்கு ரொம்ப நன்றி.

ஒரு வேளை நம்மளைத்தான் சொல்லுறாங்களோ?

ஜனவரி 2, 2010

எங் ஊரு பக்கமெல்லாம் சொல்லுவாங்க வாய்ல வடை சுடுறவன்னு. இந்த போட்டோவை பாத்த உடனே பதிவுலகத்திலையும் ஆன்லைன் அரட்டை அரங்களிலும் சவுண்டு விடும் நம்ம ஆளுங்க தான் ஞாபகத்துக்கு வராங்க. யோசிச்சி பாத்தா அது கூட உண்மையாத்தான் இருக்கு எவ்வுளவோ பிரச்சனைகளுக்கு சும்மா உய் உய்ன்னு சவுண்டு விட்ட நாம் இது வரைக்கும் எதுக்காவது தெருவுல இறங்கி போராடி இருக்கோமா?
null

தமிழ்நாட்டின் அடுத்த பெண் முதல்வரின் பேட்டி

திசெம்பர் 12, 2009

சின்ன திரை புகழ் சே சே..பல விபச்சார வழக்குகள் புகழ் சே சே.. மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில செயலர் புவனேஸ்வரி தேர்தலில் போட்டியிட்டு வென்று  சமூதாயத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எதிர்த்து போராடுவாராமா.தமிழ்நாட்டு பெண்களே உங்களுக்கு ஒரு விடிவு காலம் பிறந்து விட்டது, உங்க குறைகளை தீர்க்க ஒரு ஜான்சி ராணி கிடைத்துவிட்டாரு. அடுத்த தேர்தலில் எப்படியாச்சும் வெற்றி பெற வெச்சிடிங்கன்னா உங்க குறைகள் தீர்ந்துவிடும்.முழுவீடியோவையும் இங்க பாத்து பிறந்ததன் பலனை அடைவிங்களாமா.

அப்பாவி அய்யாசாமி : ஏண்ணே சமூக சேவை செய்றவங்களுக்கு தானே கட்சி பதிவி எல்லாம் தருவாங்க?

கருத்து கந்தசாமி : ஏண்டா கூறு கெட்ட குக்கரு இவங்க ஆண் சமூதாயத்துக்கு செய்யாத சேவையாடா?

டிஸ்கி: கருத்து கந்தசாமியோட கருத்து சும்மா நகைச்சுவைக்காகவே சொல்லியிருக்கேன் யாரோட மனசையும் புண்படுத்த அல்ல.

பாய்லரே இல்லாத கடையில 70 பேர் டீ குடிச்சாங்களாமா

திசெம்பர் 8, 2009

நம்ம பதிவை கூகுள் முடக்கிடிச்சே இதுக்கு மேல ரைஸ் சேவை சே தமிழ்சேவை செய்ய முடியாதேன்னு புல் பீலிங்கஸ்ல இருந்தா இன்னைக்கு StatCounter ரிப்போர்ட்டு அனுப்பி இருக்கு. என்னாலயே பாக்க முடியாத என்னோட பதிவை போன வாரம் 70 பேர் பாத்தாங்களாம.. சரியான கூறு கெட்ட குக்கருங்களா இருக்கானுங்க. இவனுங்களை நம்பி நான் வேற அட எதுவும் எழுதாம இம்முட்டு பேர் படிக்கிறாங்களே எதையாச்சும் எழுதுனா இட்லிவடை, லக்கி வகையராக்களை மிஞ்சிடலாமுன்னு ரெண்டு முணு ராத்திரி மல்லாக்க படுத்து கண்ட கனவெல்லாம் வேஸ்டாப்போச்சே..

கூகுளுக்கு ஒண்ணு சொல்லிக்கிறேன் சினம் கொண்ட இந்த தமிழ்சிங்கத்தை இப்படி முடக்கலாமுன்னு மனப்பால் குடிக்காதிங்க அது உங்க கொம்பனியையே சிதைச்சிடும்.. ஒடம்பெல்லாம் பரவி இருக்கும் மாஸ்டர் பிரைனோடும்,ஒரு தொலைநோக்கு பார்வையோடு தான் சிங்கம் வேர்டு பிரஸ்ஸுலையும் குகையை பார்ம் பண்ணி வெச்சி இருக்கு.. இதுக்கு மேல நீங்களா வந்து கூப்புட வரைக்கும் (ரொம்ப சவுண்டு விடுறேனோ? அய்யா ராசா கூப்பிடுவிங்கில்ல) சிங்கம் இங்க தான் இருக்கும். அப்ப வரட்டா நெக்ஸ்டு வேட்டையில மீட் பண்ணலாம்…

சந்தோஷங்களுடன்
சந்தோஷ்…

நல்லாஇருங்கடா

ஜனவரி 7, 2008

ஹர்பஜன்சிங்கை மூன்று டெஸ்டு போட்டிகளில் இருந்து தடை செய்ததை எதிர்த்து போராட்டம் — செய்தி

நந்திகிரமுல நூத்துக்கணக்கான பேர் செத்துப்போனாங்க, ஒரு பொம்பளை புள்ளையை ஒட்டு துணி இல்லாம தெருவுல ஓட விட்டாங்க(அந்த புள்ளைக்கு துணி குடுக்குறதை விட்டுட்டு அதையும் சுத்தி சுத்தி படம் புடிச்சி TRB ரேட்டிங்கை ஏத்திகிட்டாங்க நம்ம மானங்கெட்ட பத்திரிக்கைகாரனுங்க).

இது வரைக்கும் நூத்துக்கணக்கான விவசாயிங்க சோத்துக்கு வழியில்லாம செத்து போயி இருக்காங்க.

நாட்டை எப்படிடா அமெரிக்காகாரனுக்கு அடகு வெக்கலாமுன்னு அதிகாரத்துல இருக்குற ஒரு கூட்டம் ரூம் போட்டு யோசிச்சிகிட்டு இருக்குது.

 இதை எல்லாம் தாண்டி நாட்டுல தினமும் நூத்துக்கணக்கான பிரச்சனை நடந்துகிட்டு இருக்குது.இதுக்கெல்லாம் கொதிக்காத இந்த கூட்டம் ஹர்பஜன்சிங்கை தடை செஞ்சதை கேட்டு கொதிச்சி போயி ரோட்டுல இறங்கி இருக்கு.

 பிரச்சனை இப்படி இருக்க CNN IBNல என்னடான்னா அவங்க அம்மாவை பேட்டி எடுக்குறாங்க, அவங்க பாட்டியை பேட்டி எடுக்குறாங்க,  பஞ்சாப்புல தலப்பா கட்டிட்டு ரோட்டுல யார் போனாலும், அவங்களுக்கு கிரிக்கெட் தெரியுதோ இல்லையோ அவங்களை எல்லாம் சுத்தி சுத்தி பேட்டி எடுக்குறாங்க.

களத்துல என்ன நடந்ததுன்னு யாருக்கு தெரியாது அதுக்குள்ள என் புள்ள தப்பே பண்ணலை, இதை எல்லாம் பாக்கும் பொழுது எனக்கு கோவம் கோவமா வருதுன்னு அவங்கம்மா(அந்தம்மாக்கு ஒரு 60-70 வயசாகும் அந்தம்மாவால சரியா பாக்க முடியுமான்னே தெரியலை) ஒரே சீன். ஏம்மா ஏன் ஏன் இந்த விளம்பரம் உங்களுக்கு?

 இது காலை நிலவரம் மதியதுக்கு மேல வேலை வெட்டி இல்லாம வூட்ல சும்மா இருக்குற கிரிகெட்டருங்க எல்லாம் மைக்கை எடுத்துட்டு ஆஸிக்களின் நிறவெறி, ICCயின் நிறவெறின்னு களத்துல ஆடுனாங்களோ இல்லையோ வாயால வடை சுட்டுட்டு கிளம்பிடுவாங்க.

 எங்க அடுத்த டெஸ்டு ஆடுனா சுலுகெடுதுடுவானுங்களோன்னு, நம்மாளுங்களும் இந்த பிரச்சனை முடியிற வரைக்கும் அடுத்த ஆட்டங்களை ஆட மாட்டோமுன்னு நம்மாளுங்க ஜகா வாங்கிடாங்க.

ஆஸ்திரேலியாகாரனுங்க வாய் கொழுப்பெடுத்தவனுங்க, அவனுங்ககிட்ட வாயும் இருக்கு ஆட்டமும் இருக்கு நமக்கு அப்படியா? பத்து பேர் சேர்ந்து 50 ஓவர் ஆட துப்பு இல்லாத நமக்கு எதுக்கு இந்த் வாய். முதல்ல ஆடுங்க அப்புறம் பேசுங்க.

ரோட்டுல இறங்கி போராடிகிட்டு இருக்கிற அண்ணனுங்களா அவரு ஆடுனாலும் காசு ஆடாட்டியும் காசு நமக்கு அப்படியா? நம்ம வாங்குற அஞ்சி பத்துக்கு இது தேவையா? போங்க போயி உருப்படுற வழியை பாருங்க.

சபாஷ் சரியான தீர்ப்பு

நவம்பர் 27, 2007

நாட்ல இந்த குறைந்த விலை விமான நிறுவனங்களின் தொல்லைக்கு ஒரு அளவே இல்லை. குறைந்த விலைக்கு விமான சேவையை அளிக்கிறேன் அப்படின்னு இவங்க அடிக்கிற லூட்டி இருக்கே யப்பா தாங்காது. விமானத்தில் போதிய பயணிகள் இல்லாட்டி, பயணிகளை பல மணி நேரம் காத்திருக்க செய்து அப்புறம் விமானத்தை கேன்ஸல் செய்வது, காலை விமானத்தில் கூட்டம் இல்லாட்டி அந்த விமானத்தில் உள்ள பயணிகளை அடுத்த விமானத்துக்கு மாற்றம் செய்வது, சில சமயம் விமானத்தை கேன்ஸல் செய்து அதுக்கு பதிலா ஆம்னி பஸ் டிக்கெட்டுகளை அளிப்பது, இது மாதிரி ஒரே ஆட்டம் தான். விமானம் கேன்ஸல் செய்யப்பட்டதற்கான காரணம் கேட்டால் தொழில்நுட்ப கோளாறு என்ற ஒரே பதில்.

இது மாதிரியான விமான கம்பெனிகளுக்கு ஆப்பு அடிக்கும் விதமாக இந்த தீர்ப்பு வந்துள்ளது. கோஏர் என்னும் குறைந்த கட்டண விமான நிறுவனம், தொழில்நுட்ப கோளாறு என்று கூறி கேன்ஸல் செய்த ஒரு விமானதில் பயணம் செய்த பயணிகள் அனைவருக்கு 15000 நஷ்டஈடு அளிக்குமாறு தில்லி உயர்நீதி மன்றம் உத்திரவிட்டுள்ளது. இது போன்ற வியாபார நன்னடத்தை (Business ethics) இல்லாத கம்பெனிகள் இதற்கு பிறகாவது திருந்தினால் சரி.

கடன் அட்டைகளை பற்றி நீங்க தெரிந்து கொள்ள வேண்டியவை- பாகம் II

நவம்பர் 24, 2007

இந்த பதிவில் நான் கடன் அட்டைகள் பற்றி முன்னுறையாக சில விஷயங்களை பற்றி சொல்லி இருந்தேன். இந்த பதிவில் கடன் அட்டைகளை வாங்குவதற்கு/உபயோகிப்பதற்கு முன்னர் கவனிக்க வேண்டிய முக்கியமான சில விஷயங்களை பற்றி சொல்லி இருக்கிறேன் (இதில் கூறப்பட்டுள்ள விஷயங்களில் பெரும்பாலானவை அமெரிக்காவில் உள்ளவர்களுக்கே பொருந்தும், இந்தியாவில் உள்ளவர்களுக்கும் சில விஷயங்கள் உபயோகமாக இருக்கலாம்): 1. கடன் அட்டைக்கு விண்ணப்பிக்கும் பொழுது நீங்க கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் “universal default” clause அப்படிங்கற விஷயத்தை. நீங்க ஒரு அட்டையை வாங்கறீங்க ஏதோ ஒரு காரணத்தினால் சரியான தேதியில் உங்களால Minimum Balanceஜ கட்ட முடியவில்லை. அதை காரணம் காட்டி credit card கம்பெனிகள் உங்களின் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பு உள்ளது.

இதுவே நீங்க வைத்து இருக்கும் கடன் அட்டையில் இந்த “universal default clause” இருந்து, நீங்க Minimum Balance கட்ட தவறும் பட்சத்தில் (உங்களின் வட்டி விகிதம் உயர இதை தவிர பல்வேறு காரணிகள் உண்டு) இவர்களினால் இவர்கள் அளித்த அட்டையின் வட்டி விகிதம் மட்டுமல்லாது மற்ற கம்பெனிகள் அளித்த அட்டையின் வட்டி விகிதத்தையும் உயர்த்த முடியும். இவ்வகையான அட்டைகளில் இருந்து தள்ளி இருப்பது நலம்.

2. பொதுவாக கடன் அட்டைகளை உபயோகித்து பணம் எடுப்பதை(Cash Advance) தவிர்க்க வேண்டும். அப்படி எடுத்தால் நீங்கள் மொத்த தொகையையும் கட்ட வேண்டியதாக இருக்கும் ஏனெனில் 0% APR நீங்கள் கடைகளில் அட்டையை உபயோகிக்கும் பொழுது தான். அதை உபயோகித்து பணம் எடுத்தால் அதற்கு அவர்கள் குறிப்பிட்டு உள்ள வட்டியை கட்ட வேண்டும். பெரும்பாலான அட்டைகளில் நீங்க கட்டும் பணம் Lower APRக்கு தான் கட்டியதாக தான் எடுத்துக்கொள்வார்கள்.

உதாரணமாக நீங்க எடுக்கும் பணத்துக்கு 25% APR என்று வைத்துக்கொள்வோம். நீங்க அடுத்த தவணைக்கு கட்டும் பணம் 0% APRக்கு உள்ள Purchasesக்கு தான் கட்டியதாக எடுத்துக்கொள்ளப்படும். நீங்க 0% APRக்கு முழுபணமும் கட்டி முடித்த பின்னரே 25% APRக்கு எடுத்த பணத்துக்கு கட்ட முடியும். எனவே முழு நிலுவைத் தொகையை கட்டினால் தான் நீங்க cash advanceக்கு எடுத்த தொகையை கழிக்க முடியும். சிறு சிறு தொகை வேண்டும் என்றால் சில சூப்பர் மார்கெட்டில் cash back அளிப்பார்கள் அதை உபயோகித்துக்கொள்ளலாம்.அதே போல தான் இந்த நிறுவனங்கள் மாதா மாதம் சில காசோலைகளை தருவார்கள்(cheque leaves) அவை பெரும்பாலும் 0% APR இல் வராது எனவே அதை உபயோகிக்கும் பொழுதும் கவனம் தேவை.0% Balance transferஅட்டைகளில் கவனிக்க வேண்டியது Balance transfer fee என்று கட்டணம் நிர்ணயம் செய்வார்கள், அது இருக்கிறதா என்று பார்த்துவிட்டு. அந்த கட்டணத்தில் உங்களுக்கு உடன்பாடு இருக்கும் பட்சத்தில் நீங்க Balance transfer செய்து கொள்ளலாம்.

3. ஒவ்வொரு மாதமும் அவர்கள் குறிப்பிடும் நாளில் Minimum Balanceஜ தவறாமல் செலுத்திவிட வேண்டும் இல்லாவிட்டால் உங்களின் credit history spoil ஆகிவிடும் மேலும் credit score குறைந்து வாய்ப்புக்கள் அதிகம். முக்கியமாக American Express அட்டைகளின் மீது தனி கவனம் செலுத்த வேண்டும், அவர்கள் நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு ரொம்ப கெட்டவன் மாதிரியான ஆட்கள். ஒழுங்காக பணத்தை கட்டிக்கொண்டு வந்தால் நிறைய credit points அளித்து உங்களின் credit score நல்ல படியாக இருக்க உதவுவார்கள் இல்லாவிட்டால் oppsite தான்.

4. 0% APR அட்டைகளை உபயோகிக்கும் பொழுது சரியாக திட்டமிட்டு அது முடிவடையும் பொழுது கட்டும் அளவு பணம் வைத்து இருக்க வேண்டும். இல்லாவிட்டல் அதிகப்படியான வட்டி செலுத்தி கஷ்டப்பட வேண்டி இருக்கும். இது போன்ற அட்டைகளுக்கு கட்ட வேண்டிய தொகையை எங்காவது முதலீடு செய்துவிட்டால்(நஷடம் வராத இடத்தில்) அதில் இருந்து வரும் அதிகப்படியான பணம் நமக்கு லாபம் தான். பிறகு 0% APR முடியும் தருவாயில் முதலீட்டில் இருந்து எடுத்து கட்டி விடலாம்.

5. இலவசமாக அட்டைகள் கொடுக்கிறார்கள் என்று எல்லாவற்றையும் வாங்கி விட வேண்டாம். கவனமாக ஆராய்ந்து அவர்கள் அளிக்கும் offerகளை ஆராய்ந்து வாங்க வேண்டும்.

6. அதே போல முடிந்த வரையில் அனைத்து கம்பெனிகளின் அட்டைகளிலும் ஒன்று வைத்து இருப்பது நலம். அதாவது Visa, Master, Discover மற்றும் American Express அட்டைகளில் வகைக்கு ஒன்று என்று வைத்து இருப்பது credit scoreஜ வேகமாக வளர்க்க உதவும் என்று சொல்கிறார்கள்.

7. முடிந்த வரையில் அட்டைகளை cancel செய்வதை தவிர்க்கவும் ஏனெனில் நீங்க ஒவ்வொரு அட்டையை cancel செய்யும் பொழுதும் உங்க credit points களில் ஒரு குறிப்பிட்ட புள்ளிகளை இழக்கிறீர்கள் எனவே முடிந்த வரையில் ஒரு அட்டையை 5 வருடமாவது வைத்து இருப்பது மிக நலம்.

8. எந்த காரணத்தை தொடர்ந்து கடன் அட்டைகளுக்கு விண்ணப்பித்துக்கொண்டே இருக்க வேண்டாம், ஒரு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் சிறிது காலம் பொறுத்து இருந்து பின்னர் விண்ணப்பியுங்கள். நீங்க ஒவ்வொரு முறை விண்ணப்பிக்கும் பொழுதும் அந்த கம்பெனிகள் உங்க credit historyஜ சரி பார்பார்கள். Too many credit checks இருப்பது நல்லதல்ல.

9. எந்த காரணத்தை கொண்டும் எந்த அட்டையிலும் over limit போக அனுமதிக்காதீர்கள். அதுவும் நல்லது இல்லை. ஏகப்பட்ட பைன் போட்டு தீட்டிவிடுவார்கள். அதே மாதிரி அட்டைகளை உபயோகிக்கும் பொழுது ஒரே அட்டையில் மட்டும் கடனை ஏற்றாமல் எல்லா அட்டைகளிலும் சீராக உபயோகித்தால் நல்லது என்று சொல்கிறார்கள்.

10. அமெரிக்காவில் short termமாக இருப்பவர்கள் இதைப்பற்றி அதிகம் கவலை கொள்ள தேவையில்லை. நீண்ட நாட்கள் இருக்க முடிவு செய்து இருப்பவர்கள் கடன் அட்டைகளை வாங்கும் பொழுது சரியாக திட்டமிட வேண்டும் ஏனெனில் credit score and credit history இவை இரண்டுமே நீங்க வாங்கும் வீட்டுக்கடன், கார் கடன் மற்றும் அனைத்து வகையான கடன்களின் வட்டியை நிர்ணயிக்கும். கடன் அட்டைகள்களை சரியாக கையாளாவிட்டால் உங்களின் வட்டி விகிதம் தாறுமாறாக ஏறவும் வாய்ப்பு உண்டு.

11. அதே போல் ஏதாவது ஒரு காரணத்தால் உங்களால் Minimum Balance கட்ட முடியாவிட்டால் உங்களுடைய கடன் அட்டை கம்பெனியை அணுகி பேசி ஒரு தீர்வை காணுங்கள், அது எந்த வகையிலும் உங்களுடைய credit score/history ஜ பாதிக்காத வாரு பார்த்துக்கொள்ளுங்க. Good Credits will go off in 3 years Bad credits will take 7 years to get out of your history என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

நான் முன்னாடியே கூறியுள்ளபடி கடன் அட்டைகள் என்றாலே பயந்து நடுங்க வேண்டாம், அதை சரியான படி திட்டமிட்டு உபயோகம் செய்தால் அதனால் நமக்கு ஏகப்பட்ட இலாபம். மேலே கூறியவை எல்லாம் கடன் அட்டைகள் பற்றி எனக்கு தெரிந்த மிகச் சொற்பமான விஷயமே. இது பற்றி உங்களுக்கு வேறு ஏதேனும் தகவல் தெரிந்தால் சொல்லுங்களேன்.

இந்த பதிவில் தென்றல் சார் இந்தியாவில் உள்ள கடன் அட்டைகளை பற்றியும் சொல்லுமாறு கேட்டு இருந்தார். இந்தியாவில் கடன் அட்டைகள் வழங்கும் முறை unorganised ஆகவே இருக்கிறது. பெரும்பாலும் வங்கிகள் மாதம் சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டும் தான் வழங்குகின்றன என்று நினைக்கிறேன். அதை பற்றி எனக்கு தற்பொழுது சிறிது ஞானமே உள்ளது. முடிந்தால் அதைப்பற்றியும் ஒரு தனி பதிவு இடுகிறேன்.