196. சோக்காளியின் கூகுள் சேட்டைகள்

நம்ம சோக்காளில் ஒருத்தன் பதிவர், பெரிய எழுத்தாளர்(அப்படின்னு நினனப்பு). எவனாவது தெரியாம Bloggerஜ பத்தி கேட்டுட்டா கூகுல் கம்பெனியின் Chief Marketing Officer கூட அம்முட்டு கதை சொல்ல மாட்டான் இவன் அந்த கதையை விடுவான். அதுவும் Google adsenseல இருந்து கொஞ்சம் டாலர் வேற வந்துடிச்சா அதுக்கு அப்புறம், எவனாவது ரோட்டுல போறவன் Googleஜ பத்தியோ இல்ல bloggerஜ பத்தியோ தப்பா பேசினா கூட அவனுக்கு கோவம் வந்துடும், ஆளு கொஞ்சம் ஏமாந்த மாதிரி இருந்தா அடிக்க கூட போயிடுவாரு (அம்முட்டு வீரரு அவரு).

அப்படி இருந்தவன் ஒரு நாள் என்கிட்ட வந்து மச்சி blogger எதுவும் சரியில்லடா சரியான் இத்து போன தளம் அப்படி இப்படின்னு சொல்லிட்டு, worldpressஜ பாரு, அத்தோட அழகை பாரு, இதை பாரு அதை பாரு அப்படின்னு சவுண்டு விட்டுகிட்டு இருந்தவன். திடீரென்று தன்னோட தளத்தை worldpressக்கு மாத்திட்டான், ஆனா அவனோட பழைய இடுக்கைகள் எதையும் காணோம். என்னடான்னு கேட்டா இல்ல மச்சி நொள்ள மச்சி அப்படின்னு சொல்லிட்டு இருந்தான். என்னடா இவன் பெரிய எழுத்தாளன் ஆச்சே இதுல என்னவோ மேட்டரு இருக்கு சனிக்கிழமை சபையை கூட்டிட வேண்டியது தான் அப்படின்னு முடிவு பண்ணோம்.

சனிக்கிழமை நைட்டு சபை வழக்கம் போல கூடிச்சி, Johnie Walkerயும், RC, Jackdanieal எல்லாம் அந்த வார சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாங்க. நேரம் போக போக சிறப்பு விருந்தினர்கள் தயவுல சபை களை கட்டியது. நம்ம சோக்காளி வாயை மெதுவா புடுங்க ஆரபிச்சோம். அவரு கிட்ட எப்படி மச்சி உன்னால மட்டும் இம்முட்டு அருமையா எழுத முடியுது அப்படி இப்படின்னு பொய்யா சொல்லி மெதுவா ஏத்தி விட்டோம், அவனும் போதை தலைக்கேறி நாங்க எல்லாம் பொறக்கும் போதே ஒரு கையில keyboardயும் இன்னொரு கையில e-கலப்பையோட பொறந்தவங்களாக்கும், நாங்க எல்லாம் அப்படி இப்படின்னு ஒரு 1/2 மணி நேரம் வாயிலேயே வடை சுட்டான். அதை கேட்ட எனக்கே ஸ்ஸ்ஸ்யப்பா கண்ணு காது வாய் மூக்கு எல்லாம் கட்டிபோச்சி. பாதி பேருக்கு ஏறின போதை இறங்கிப்போச்சி.

ஒரு வழியா அவனை அடக்கி Bloggerல சந்தேகம் கேக்குறமாதிரி கேட்டு, கடைசியில அந்த மேட்டருக்கு வந்தோம். அப்புறம் தான் தெரிஞ்சது இந்த நாதாறி Google Adsense display பண்ண advtஜ எல்லாம் அவனும் அவனோட சோக்காளிங்களும் சேந்துகிட்டு, வரும் பொழுது போகும் பொழுது அப்படி இப்படின்னு click பண்ணி முதல் மாசம் ஒரு 100$க்கு Revenue Generate செய்து அதை கூகுள்கிட்ட இருந்து வாங்கிட்டாங்க. இதே மாதிரி டகால்டி வேலையை ஒரு இரண்டு மூணு மாசம் பண்ணி இருக்காங்க கூகுள்காரனுங்களுக்கு சந்தேகம் வந்து click வந்த முகவரியை (IP) எல்லாம் சரி பார்த்ததில் இவனுங்களோட திருட்டு வேலையை கண்டுபுடிச்சிடாங்க. உடனே அவனோட Google கணக்கையே முடக்கியதோடு மட்டுமில்லாம மவனே இதுக்கு மேல இந்த பக்கம் வந்த இருக்குடி உனக்கு அப்படின்னு துரத்தி விட்டு இருக்காங்க. இதனால தான் நம்ம சோக்காளி wordpressக்கு ஓடிட்டாரு.

32 Comments »

 1. 1
  saravansivan Says:

  Wow..Supernga..Nalla rasikumpadiya ezhudhreenga..vaazhthukkal..keep going..

 2. 2
  ILA(a)இளா Says:

  உங்க கூட்டாளி அம்புட்டு நல்லவங்களா? அவுங்களுக்கு நெறைய தெறமை ஒளிச்சு வெச்சு இருக்காங்க தெரியுமா?

 3. 3
  சிங்கம்லே ACE !! Says:

  அடடா!! ஒருத்தர் நல்லா இருந்தா பொறுக்காதே உலகத்துக்கு.. 😀 😀

 4. 4
  சந்தோஷ் Says:

  //உங்க கூட்டாளி அம்புட்டு நல்லவங்களா? அவுங்களுக்கு நெறைய தெறமை ஒளிச்சு வெச்சு இருக்காங்க தெரியுமா?//
  இளா இந்த பதிவு வகையை பாத்தை இல்ல நகைச்சுவைன்னு போட்டு இருக்கு . இதுல உள்குத்து எல்லாம் எதுவும் இல்ல :))

 5. 5
  Anonymous Says:

  அந்த கூட்டாளிக்கு எதாவது சட்டை, பேண்ட் ன்னு ஃப்ரீயா குடுத்து இருப்பாங்க. உங்களுக்கு அது கிடைக்கவில்லைன்னு பொறாமை.

 6. 6
  ILA(a)இளா Says:

  //இளா இந்த பதிவு வகையை பாத்தை இல்ல நகைச்சுவைன்னு போட்டு இருக்கு . இதுல உள்குத்து எல்லாம் எதுவும் இல்ல :))//
  அடப் பாவி மக்கா.. பிலாகரை விட்டுத்தூக்குறது நகைச்சுவையா? என்னா வில்லத்தனம்?

 7. 7
  Anonymous Says:

  ஆபீசர் ஆபீசர் உங்க பதிவுல கும்மி அடிச்சிகலாமா?

 8. 8
  சந்தோஷ் Says:

  // Anonymous said…

  ஆபீசர் ஆபீசர் உங்க பதிவுல கும்மி அடிச்சிகலாமா? //
  சரிங்க ஆபீஸர், உங்க வசதிக்காக பின்னூட்ட மட்டுறுத்தலை எடுத்தாச்சி.

 9. 9
  .:: மை ஃபிரண்ட் ::. Says:

  கும்மிக்கு இங்கே அழைப்பு இருக்கா?

 10. 10
  .:: மை ஃபிரண்ட் ::. Says:

  அபீசர்,

  டேமேஜர் மாடரேஷன் தூக்கியாச்சு.. ஆடலாமா?

 11. 11
  சந்தோஷ் Says:

  // .:: மை ஃபிரண்ட் ::. said…

  கும்மிக்கு இங்கே அழைப்பு இருக்கா? //
  இது உங்க பதிவுங்க அழைப்பு எல்லாம் எதுக்குங்க நீங்க அடிச்சி ஆடுங்க.

 12. 12
  .:: மை ஃபிரண்ட் ::. Says:

  அடடா… நானே ஒத்த ஆளா ஆடுரேனே!!!!

 13. 13
  சந்தோஷ் Says:

  // .:: மை ஃபிரண்ட் ::. said…

  அடடா… நானே ஒத்த ஆளா ஆடுரேனே!!!! //
  அது தான் நான் இருக்கேன் இல்ல விவா சாயி வந்துகிட்டே இருக்காரு.

 14. 14
  .:: மை ஃபிரண்ட் ::. Says:

  //அது தான் நான் இருக்கேன் இல்ல விவா சாயி வந்துகிட்டே இருக்காரு. //

  விவா இன்னைக்கு உளுவ போகலையா?

 15. 15
  சந்தோஷ் Says:

  ////அது தான் நான் இருக்கேன் இல்ல விவா சாயி வந்துகிட்டே இருக்காரு. //

  விவா இன்னைக்கு உளுவ போகலையா?//
  இன்னிக்கு ஒரே மழை (நிஜ மழை ஜொள்ளு மழை இல்ல) அதனால காட்டுக்கு லீவு.

 16. 16
  சந்தோஷ் Says:

  // ILA(a)இளா said…

  //இளா இந்த பதிவு வகையை பாத்தை இல்ல நகைச்சுவைன்னு போட்டு இருக்கு . இதுல உள்குத்து எல்லாம் எதுவும் இல்ல :))//
  அடப் பாவி மக்கா.. பிலாகரை விட்டுத்தூக்குறது நகைச்சுவையா? என்னா வில்லத்தனம்? //

  ஹிஹி.. குழந்தாய் வள்ளுவர் என்ன சொல்லி இருக்காரு, துக்கமா இருக்குற நேரத்துல சிரிக்க சொல்லி இருக்காரு. அது தான் நகைச்ச்வை.

 17. 17
  Anonymous Says:

  யாரோ புலாகரை விட்டுட்டு போய்ட்டாங்கன்னு துயரமாய் இருக்கிறப்போ இவுங்களுக்கு நகைச்சுவையாம்.

 18. 18
  ILA(a)இளா Says:

  //எனிபாடி ஹோம்? டொக் டொக்!! //
  Yes, Come in.

 19. 19
  குட்டிபிசாசு Says:

  உங்க நண்பரு தானே, வேற எப்படி இருப்பாரு!!

  ஒரு அறிவாளிய போய் நீங்க இப்படி ஏளனமாக பேசக்கூடாது.

 20. 20
  Anonymous Says:

  gummy gummy gummy……….

 21. 21
  Anonymous Says:

  evamle avan, moderation illennu sonnathu? Poi sollathingade……

 22. 22
  கவிதா|Kavitha Says:

  //இளா இந்த பதிவு வகையை பாத்தை இல்ல நகைச்சுவைன்னு போட்டு இருக்கு . இதுல உள்குத்து எல்லாம் எதுவும் இல்ல :)) //

  இப்படி சொல்லிட்டா நாங்க எல்லாம் நம்பிடுவோமா? ..எங்களுக்கு தெரியும் நீங்க யாரைப்பத்தி சொல்லியிருக்கீங்கன்னு.. ஆனா.. டோண்ட் ஒரி, சீக்ரேட் மெயின்பன்னிடறோம்..

  அது சரி.. எனக்கு மட்டும் சொல்லுங்க அது யாருன்னு… அணிலை வேணா அனுப்பவா..? சொல்றீங்களா?..

  //அடப் பாவி மக்கா.. பிலாகரை விட்டுத்தூக்குறது நகைச்சுவையா? என்னா வில்லத்தனம்? //

  அதானே.. என்ன வில்லத்தனம்..????

  //ஹிஹி.. குழந்தாய் வள்ளுவர் என்ன சொல்லி இருக்காரு, துக்கமா இருக்குற நேரத்துல சிரிக்க சொல்லி இருக்காரு. அது தான் நகைச்ச்வை.//

  யாரோட துக்கத்தை இப்படி பதிவு போட்டு கொண்டாடறீங்க நீங்க? நல்லா இல்ல… சொல்லிட்டேன்.. யாருன்னு சொல்லிட்டு அப்புறம் கொண்டாடுங்க…

  //உங்க நண்பரு தானே, வேற எப்படி இருப்பாரு! ஒரு அறிவாளிய போய் நீங்க இப்படி ஏளனமாக பேசக்கூடாது.//

  அருண், நடுவுல வந்து..காமெடி பண்ணாதீங்க.. சந்தோஷை போய் அறிவாளி அப்படி இப்படின்னு சொல்லிக்கிட்டு… ஆனாலும் நீங்க ரொம்ப தமாஷு போங்க…!!

 23. 23
  சந்தோஷ் Says:

  // குட்டிபிசாசு said…

  உங்க நண்பரு தானே, வேற எப்படி இருப்பாரு!!

  ஒரு அறிவாளிய போய் நீங்க இப்படி ஏளனமாக பேசக்கூடாது.//

  ஏப்பா அருண் இம்முட்டு பாசக்கார பயலா இருக்கியே என்னைய அறிவாளின்னு சொல்லிட்டியேப்ப்ப்ப்ப்ப்பா…….ஒரே அழுகாச்சி அழுகாச்சியா வருதுப்பா…

  //Anonymous said…

  gummy gummy gummy……….//

  யாருப்பா இது இங்க வந்து bubble gum மென்னுட்டு இருக்கீங்க….

 24. 24
  அணில்குட்டி Says:

  //அணிலு நம்மாளு உங்களுக்கு அது எம்முட்டே பரவாயில்லை.//

  தல எம்மேல இம்முட்டு பாசமா ஒங்களுக்கு….அவ்வ்வ்வ்வ்வ்…..அழுவாச்சி அழுவாச்சியா வந்துடுத்து… ரெம்ப டாக்ஸ்..

  சரி..அப்படீன்னா எனக்கு நேரடியா உங்க பாசத்தை கொஞ்சம் காட்டுங்க….. உங்களுக்கு ஈசியா இருக்கட்டுமேன்னு.. நானே கேள்வி கேட்கிறேன்.. நீங்க சும்மா எஸ், னோ-ன்னு சொன்னா போதும் நானே அது யாருன்னு கண்டு பிடிச்சுடுவேன்.. ..ஓகே வா?..

  உங்க சோக்காளி-

  1. சிவப்பா, கருப்பா?
  2. நல்லா பாட்டு பாடுவாறா?
  3. குண்டா, ஒல்லியா?
  4. குட்டையா நட்டையா?
  5. எதாவது சங்கத்தோட எனஞ்சு சேவை செய்யறாரா?
  6. உங்க பதிவுல கும்மி அடிச்சி இருக்காறா?
  7. இந்த நாடா.. வெளி நாடா?
  8. உங்க கூட இருக்கிற 7 1/2 யா?
  9. அவர் உங்களை மாதிரி பெரிய்ய்யயயய அறிவாளியா?
  10. கவிதாக்கிட்ட சண்டை போட்டவரா? (இதுக்கு மட்டும் ஆமா’ன்னு சொன்னீங்க.. என்னோட கத கந்தல்.. ஏன்னா..அம்ம்ணி சண்டை போடாத ஆளே இல்லயே..:(
  )

 25. 25
  ILA(a)இளா Says:

  1. சிவப்பா, கருப்பா?2
  2. நல்லா பாட்டு பாடுவாறா?1
  3. குண்டா, ஒல்லியா?2
  4. குட்டையா நட்டையா?x
  5. எதாவது சங்கத்தோட எனஞ்சு சேவை செய்யறாரா? 0
  6. உங்க பதிவுல கும்மி அடிச்சி இருக்காறா?1
  7. இந்த நாடா.. வெளி நாடா?1
  8. உங்க கூட இருக்கிற 7 1/2 யா?0
  9. அவர் உங்களை மாதிரி பெரிய்ய்யயயய அறிவாளியா?0
  10. கவிதாக்கிட்ட சண்டை போட்டவரா? 0

 26. 26
  சந்தோஷ் Says:

  //அணில்குட்டி said…

  //அணிலு நம்மாளு உங்களுக்கு அது எம்முட்டே பரவாயில்லை.//

  தல எம்மேல இம்முட்டு பாசமா ஒங்களுக்கு….அவ்வ்வ்வ்வ்வ்…..அழுவாச்சி அழுவாச்சியா வந்துடுத்து… ரெம்ப டாக்ஸ்..

  சரி..அப்படீன்னா எனக்கு நேரடியா உங்க பாசத்தை கொஞ்சம் காட்டுங்க….. உங்களுக்கு ஈசியா இருக்கட்டுமேன்னு.. நானே கேள்வி கேட்கிறேன்.. நீங்க சும்மா எஸ், னோ-ன்னு சொன்னா போதும் நானே அது யாருன்னு கண்டு பிடிச்சுடுவேன்.. ..ஓகே வா?..

  உங்க சோக்காளி-

  1. சிவப்பா, கருப்பா?
  2. நல்லா பாட்டு பாடுவாறா?
  3. குண்டா, ஒல்லியா?
  4. குட்டையா நட்டையா?
  5. எதாவது சங்கத்தோட எனஞ்சு சேவை செய்யறாரா?
  6. உங்க பதிவுல கும்மி அடிச்சி இருக்காறா?
  7. இந்த நாடா.. வெளி நாடா?
  8. உங்க கூட இருக்கிற 7 1/2 யா?
  9. அவர் உங்களை மாதிரி பெரிய்ய்யயயய அறிவாளியா?
  10. கவிதாக்கிட்ட சண்டை போட்டவரா? (இதுக்கு மட்டும் ஆமா’ன்னு சொன்னீங்க.. என்னோட கத கந்தல்.. ஏன்னா..அம்ம்ணி சண்டை போடாத ஆளே இல்லயே..:(
  )//

  என்னா அணிலு… உங்க ஒனர் கூட சேந்து நீ ரொம்ப கெட்டுப்போயிட்டே… இம்முட்டு கேள்வி கேட்டதுக்கு அளு யாருன்னு நேரா கேட்டு இருக்கலாம்…

 27. 27
  சந்தோஷ் Says:

  //ILA(a)இளா said…

  1. சிவப்பா, கருப்பா?2
  2. நல்லா பாட்டு பாடுவாறா?1
  3. குண்டா, ஒல்லியா?2
  4. குட்டையா நட்டையா?x
  5. எதாவது சங்கத்தோட எனஞ்சு சேவை செய்யறாரா? 0
  6. உங்க பதிவுல கும்மி அடிச்சி இருக்காறா?1
  7. இந்த நாடா.. வெளி நாடா?1
  8. உங்க கூட இருக்கிற 7 1/2 யா?0
  9. அவர் உங்களை மாதிரி பெரிய்ய்யயயய அறிவாளியா?0
  10. கவிதாக்கிட்ட சண்டை போட்டவரா? 0//

  கிளம்பிட்டாருய்யா கிளம்பிட்டாரு.. ஏன் ஏன் சாமி உங்களுக்கு இந்த கொலை வெறி..

 28. 28
  அணில்குட்டி Says:

  //என்னா அணிலு… உங்க ஒனர் கூட சேந்து நீ ரொம்ப கெட்டுப்போயிட்டே… இம்முட்டு கேள்வி கேட்டதுக்கு அளு யாருன்னு நேரா கேட்டு இருக்கலாம்… //

  சரி நேரா கேக்கறேன்.. ஆளு யாரு?? இப்ப சொல்றீங்களா?

 29. 29
  அணில்குட்டி Says:

  இளா அண்ணே… நீங்க என்னவோ ரொம்ப தெளிவாத்தான் பதில் சொல்லிருக்கீங்க ஆனா இந்த சின்ன அனிமல் அறிவுக்கு எட்டல…:(((
  சரி நீங்க சொன்ன # வச்சி பதிலை முயற்சி பண்றேன்…

  1. சிவப்பா, கருப்பா?2

  அப்ப கருப்பு….

  2. நல்லா பாட்டு பாடுவாறா?1

  சூப்பரா பாடுவார்…#1 பாடகர்..

  3. குண்டா, ஒல்லியா?2

  ஒல்லி…

  4. குட்டையா நட்டையா?x

  என்னங்க இது x போட்டு வச்சி இருக்கீங்க அப்படீன்னா…?? குண்டாவும் இல்லாம நட்டையாவும் இல்லாம நடுத்தரம்..

  5. எதாவது சங்கத்தோட எனஞ்சு சேவை செய்யறாரா? 0

  இல்லையா……அப்ப கண்டுபிடிக்க ரொம்ப கஷ்டம்…

  6. உங்க பதிவுல கும்மி அடிச்சி இருக்காறா?1

  அட கும்மி அடிச்சி இருக்காரு, (தல இன்னைக்கு ஆபிஸ் வேல எதுவும் பாக்காம உங்க பதிவுல் கும்மி அடிச்சவங்க லிஸ்ட் ஒன்னு எடுத்து எனக்கு அனுப்புங்க நான் அனலைஸ் செய்யணும்… )

  7. இந்த நாடா.. வெளி நாடா?1

  அட, இந்த நாடுத்தானா?… இந்த நாட்டுல எந்த ஊரு, எந்த ஏரியா?

  8. உங்க கூட இருக்கிற 7 1/2 யா?0

  … ம்ம்…7 1/2 யும் இல்லையா?

  9. அவர் உங்களை மாதிரி பெரிய்ய்யயயய அறிவாளியா?0

  ஓஓஓஒ இதுவும் இல்லையா? (தலையோட பிரண்டன்னவுடனே தெரிஞ்சி போச்சி இருந்தாலும் தப்பி தவறி அறிவாளியா இருந்துட்டா?.. .)

  10. கவிதாக்கிட்ட சண்டை போட்டவரா? 0

  அட இல்லையா… அப்ப சீக்கிரமே கண்டு பிடிச்சிடலாம்…….

 30. 30
  அணில்குட்டி Says:

  இளா அண்ணே.. இவ்வளவு தெளிவா நீங்க இருக்கறத பாத்தா உங்களுக்கும் சோக்காளிக்கும் ஏதோ நெருக்கும் இருக்கும் போல.. நீங்களே அவர் யாருன்னு சொல்லிடறீங்களா?

 31. 31
  ILA(a)இளா Says:

  //2. நல்லா பாட்டு பாடுவாறா?1

  சூப்பரா பாடுவார்…#1 பாடகர்..

  3. குண்டா, ஒல்லியா?2

  ஒல்லி…

  4. குட்டையா நட்டையா?x

  என்னங்க இது x போட்டு வச்சி இருக்கீங்க அப்படீன்னா…?? குண்டாவும் இல்லாம நட்டையாவும் இல்லாம நடுத்தரம்..

  //

  சில நேரத்துல இப்படிதான் தப்பா சொல்லி குழ்ப்பி விடுவோம்ல.

  //இளா அண்ணே.. இவ்வளவு தெளிவா நீங்க இருக்கறத பாத்தா உங்களுக்கும் சோக்காளிக்கும் ஏதோ நெருக்கும் இருக்கும் போல.. நீங்களே அவர் யாருன்னு சொல்லிடறீங்களா? //
  ஆம்மாமா ரொம்ப நெருக்க்க்க்கம். நம்ம சந்தோசுக்கு ரொம்ப நெருக்கம்.நமக்கு சந்தோசு நெருக்கம். அப்போ நமக்கும் நெருக்கம்தானே?

 32. 32
  அணில்குட்டி Says:

  //சில நேரத்துல இப்படிதான் தப்பா சொல்லி குழ்ப்பி விடுவோம்ல.//

  அப்ப நீங்க சொன்னது எல்லாம் கொழப்பி விடவா………. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்……… இதுக்கா நானு இவ்ளோ கஷ்டபட்டு, பதில் கண்டு பிடிச்சி போட்டேன்…… அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்…..:((((((

  //ஆம்மாமா ரொம்ப நெருக்க்க்க்கம். நம்ம சந்தோசுக்கு ரொம்ப நெருக்கம்.நமக்கு சந்தோசு நெருக்கம். அப்போ நமக்கும் நெருக்கம்தானே? //

  அட… அப்ப 2 பேருக்கும் நெருக்கமா… நெருக்கமானவங்க எல்லாம் வந்து பிரசண்ட் குடுங்கப்பா… நானு லிஸ்ட் எடுக்கனும்..


RSS Feed for this entry

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: