ஆபீஸர் இந்த எட்டுக்கு லைசென்ஸ் குடுப்பிங்களா?

நம்மளையும் எட்டு போட வெக்கணும் அப்படின்னு அன்பா நம்ம RTOங்க கப்பியரு, சர்வேசரு, குசும்பரு, குட்டிபிசாசரு (எல்லாரும் RTOவாச்சே வாங்க ஆபீஸர் போங்க ஆபீஸர் அப்படின்னு கூப்பிடாட்டி கோச்சிகிட்டு லைசன்ஸ் கொடுக்காம போயிட்டா என்ன பண்றது) எல்லாம் கூப்பிட்டு இருக்காக.

இந்த விளையாட்டுல நம்மளை பத்தி எட்டு தகவல் குடுக்கணுமாமே? நம்ம என்ன அப்துல்கலாமா? இல்ல அப்ரகாம் லிங்கனா? நம்மளை பத்தி மக்கள் தெரிஞ்சிகிட்டு அதை பின்பற்றுவதற்கு. சரி நம்ம பதிவுலகுல இருக்கும் அண்ணன்களிடம்(பெண்களுக்கு இட ஒதுக்கீட தரலைன்னு யாரும் சண்டைக்கு வராதிங்க ஒரு ரைமிங்குக்காக இப்படி சொல்லி இருக்கேன்.) நமக்கு இருக்கும் எட்டு கேள்விகளை கேட்டு பதிலை தெரிஞ்சிகலாமுன்னு எட்டு கேள்விங்களை கேட்டு இருக்கேன் யாராவது பதிலை சொல்லுங்களேன்?

1. எல்லாரும் பெப்சிக்கு mixingகாக பிராந்தி, விஸ்கி, ரம்மு, ஜிம்முன்னு எதையோ ஊத்தி குடிக்கிறாங்க. நான் அவனுங்களுக்கு ஒரு படி மேல போயி பெப்சியை rawவாக குடிப்பேன். அப்படி இருந்தும் நான் குடிகாரன்னு என்னைய சொன்னா ஏண்ணே என்னைய கட்டி வெச்சி வெளுக்குறாங்க? mixing இல்லாம பெப்சிஜ rawவாக குடிக்கிறது தப்பாண்ணே?

2. இப்படித்தான் பாருங்க போன வாரம் நம்மாளு ஒருத்தன் “மச்சான் நம்ம ஊட்ல potlock(கூட்டாஞ்சோறு) இருக்கு உன்னால முடிஞ்சத எடுத்துட்டுவா” அப்படின்னு சொன்னான். நானும் அவங்க வீட்டுக்கு போனேன் ஒருத்தன் என்னடான்னா veg pulav அப்படிங்கிறான் இன்னொருத்தன் என்னடான்னா இட்லி சாம்பார் அப்படின்னான், நீ என்ன கொண்டு வந்தே அப்படின்னு கேட்டாங்க, அதுக்கு நான் “சாப்பிட வாயும் அதுக்கு உதவியா இருக்கட்டுமேன்னு கையையும் கொண்டு வந்தேன்” அப்படின்னு சொன்னதுக்கு அடுத்த வார கச்சேரியில வெளுத்துடாங்க? கூட்டாஞ்சோறுக்கு இதை எல்லாம் கொண்டு போக கூடாதாண்ணே?

3. டிவியில ஏதோ footballஆம், அதுல ஒரு பந்து பின்னாடி 20 பேர் முந்திஅடிச்சிகிட்டு ஓடிகிட்டு இருந்தாங்க, நான் கூட ஏண்டா கோடி கோடியா சம்பாதிக்கறீங்க சொந்தமா ஆளுக்கு ஒரு பந்து வாங்கி வெச்சி வெளையாட கூடாதான்னு சொன்னேன், அதுக்கு ஏண்ணே எல்லாரும் என்னைய ஒரு மாதிரி பாக்குறாங்க? உருப்படியான யோசனை சொல்றது தப்பாண்ணே?

4. கொஞ்ச நாளைக்கு முன்னாடி இங்க NASAவுக்கு போயி இருந்தேன், அங்கன ஒரு ஆளு ராக்கெட்டை காட்டி எல்லாத்தையும் விளக்கிட்டு “any questions” அப்படின்னு கேட்டாங்க. நான் சாமி சாமி இம்முட்டு செலவு செஞ்சி ராக்கெட் எல்லாம் செஞ்சி இருக்கீங்க, ஏன் சாமி காத்தாட ஒக்காரலாமுன்னு பாத்தா ஒரு சன்னல் கூட இல்லை ஏன் ஒரு சன்னல் வெக்க கூடாதா சாமி? அப்படின்னு கேட்டதுக்கு கழுத்தை புடிச்சி வெளியே தூக்கி கொண்டுவந்து போட்டுட்டாங்க. ஏண்ணே அறிவாளியா இருக்குறது தப்பாண்ணே?

5. இப்படித்தான் பாருங்க நான் நாலாவது படிக்கும் பொழுது ஏப்ரல் ஒண்ணாம் தேதி வந்தது எல்லாரும் மத்தவங்க சட்டையில ink penஜ உபயோகித்து ink தெளிச்சிகிட்டு இருந்தாங்க, நானும் இன்னொருவனும் மட்டும் கொஞ்சம் innovativeவாக யோசிச்சி ball point penனின் refillயின் முனையை எடுத்து பின்னாடி வழியா வாய் வெச்சி ஊதி அதை எடுத்து அடுத்தவன் சட்டையில தடவினோம்(சட்டை அத்தோட சரி தூக்கி போட வேண்டியது தான்). இதுக்கு போயி யாராவது நிக்க வெச்சி முதுகு தோலை உரிப்பாங்களா? ஏண்ணே Innovativeவாக இருப்பது தப்பாண்ணே?

6. காலேஜ் படிக்கும் பொழுது attendance sheetல வராதவங்க roll numberஜ எழுதுவாங்க. வாத்தியார் போயிட்ட பின்னாடி நாங்க அதுல நமக்கு கமிஷன் வெட்டுனவங்க நம்பரை எல்லாம் அடிச்சிட்டு வாத்தியார் மாதிரியே கையெழுத்து போடுவேன், அதுக்கு போயி இந்த சின்ன புள்ளை மேல விசாரணை கமிஷன் வெச்சிடாங்க. படிக்கு பொழுது மட்டும் வாத்தியார் மாதிரியே பெரிய ஆளா வரணும் அப்படின்னு சொல்றாங்க, அதுக்கு முதல் படியா அவரை மாதிரி (சமயத்துல அவரை விட கொஞ்ச நல்லாவே) கையெழுத்துப்போட்டா தப்பாண்ணே? வாத்தியார் மாதிரி பெரிய ஆளா வருவது தப்பாண்ணே?

7. ஒரு இரண்டு மாசத்துக்கு முன்னாடி 60 மைல் speed limit உள்ள ரோட்டில் 90 மைல் வேகத்துல போயிட்டு இருந்தேன் இது தப்பு அப்படின்னு போலீஸ் புடிச்சி fine போட்டுடாங்க. வாழ்கையில வேகமா முன்னேறுவது தப்பாண்ணே?

8. படத்தை ஓடவிட்டு அதுக்கு முன்னாடி கால் மேல கால் போட்டு ஒக்காந்துகிட்டு இது சரியில்லை அது சரியில்லை அப்படின்னு டிவி பொட்டில சொல்லும் பொழுது என்னமா பிரிச்சி மேயிறாங்க அப்படின்னு பாராட்டுறவங்க, நான் அதையே தியேட்டருல செய்யும் பொழுது ஏண்ணே என்னைய போட்டு அடிக்கிறாங்க? தியேட்டருக்குள்ள படம் ஓடும் போது அதை விமர்சனம் செய்றது தப்பாண்ணே?

எட்டு பேரை கூப்பிடவேண்டும் என்று சொல்லி இருக்காங்க. ஏதோ நம்ம புண்ணியத்துல இந்த 8 பேரும் எந்த சோதனையும் இல்லாம லைசென்ஸ் வாங்கட்டும்.

1. நம்ம சாத்தான்குளத்து அண்ணாச்சி ஆசிப்

2. இந்த வார நட்சத்திர மங்கை நந்தினி

3. பூனையாக இல்லாமல் போனதுக்கு பீல் பண்ணிட்டு இருக்கும் மோகன் தாஸ்

4. பக்தி மார்கத்துல முக்திக்கி வழி சொல்லிட்டு இருக்கும் KRS

5. நம்ம மருதநாயகம் அண்ணாச்சி

6. ஈழத்து இளம் புயல் கானா பிரபா

7. முன்னாடி பக்கத்தை காட்டாம மறுபக்கத்தை மட்டும் காட்டிகிட்டு இருக்கும் நம்ம மணியண்ணன்

8. நம்ம தாசண்ணே

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.

33 Comments »

 1. 1
  குட்டிபிசாசு Says:

  எட்டும் சூப்பர்!! வாழ்த்துக்கள்!!

 2. 2
  குட்டிபிசாசு Says:

  லைசன்ஸ் கொடுத்தாச்சு!! பொழைச்சு போங்க!! :)))

 3. 3
  சந்தோஷ் Says:

  //எட்டும் சூப்பர்!! வாழ்த்துக்கள்!!//
  நன்றிங்க ஆபீஸர்

  //குட்டிபிசாசு said…

  லைசன்ஸ் கொடுத்தாச்சு!! பொழைச்சு போங்க!! :))) //
  ஹைய்யா லைசென்ஸ் வாங்கியாச்சி… இதுக்கு மேல அப்ப ஓவர் speedல போவலாம்.

 4. 4
  கப்பி பய Says:

  கலக்கலோ கலக்கல்!! :)))

  சூப்பர் தல!!!

 5. 5
  குட்டிபிசாசு Says:

  எதுவுமே தப்பில்லீங்க!! நாயக்கரே சொல்லி இருக்காரு “நாலு பேருக்கு நல்லதுன்னா தப்பில்ல”!! :))

 6. 6
  மணிகண்டன் Says:

  //
  7. முன்னாடி பக்கத்தை காட்டாம மறுபக்கத்தை மட்டும் காட்டிகிட்டு இருக்கும் நம்ம மணியண்ணன்
  //

  தூங்கிட்டு இருந்த சிங்கத்தை தட்டி எழுப்பிட்டிங்க..:) சீக்கிரமா எழுதிடறேன்.

 7. 7
  இராம் Says:

  அடபாவி,

  என்னாமா ஃபாஸ்ட் ஃபார்வேர்ட்’லே இருந்துருக்கே??? ஆனா ஒன்னை புரிஞ்சுக்காதே ஒலகமா இருக்கே???

  ;-)))

  என்னா கொடுமை சந்தோஷ்..;)

 8. 8
  மின்னுது மின்னல் Says:

  பொறாமை புடிச்சவனுவோ…:)

 9. 9
  சந்தோஷ் Says:

  //கப்பி பய said…

  கலக்கலோ கலக்கல்!! :)))

  சூப்பர் தல!!!//

  நன்றி ஆபீஸர்….

  //குட்டிபிசாசு said…

  எதுவுமே தப்பில்லீங்க!! நாயக்கரே சொல்லி இருக்காரு “நாலு பேருக்கு நல்லதுன்னா தப்பில்ல”!! :))//

  :)) ஹஹஹ.. உனக்கு தெரியுது ஊருக்கு தெரிய மாட்டேங்குதே :((

 10. 10
  காட்டாறு Says:

  அண்ணே…. கேள்வியா கேட்டிப்பிட்டீக…. பதிலு ஆரு சொல்லுவாக…

  ஒரு வேள சொல்லத் தெரியாமத்தேன் குட்டிப் பிசாசண்ணே லைசன்ஸுக் குடுத்துப்பிட்டாகளோ????

  ரொம்ப பீடா போகாதீக… கேள்வி கேக்க நீங்க இருக்கனுமில்ல….

 11. 11
  சந்தோஷ் Says:

  // காட்டாறு said…

  அண்ணே…. கேள்வியா கேட்டிப்பிட்டீக…. பதிலு ஆரு சொல்லுவாக…//
  என்ன தங்கச்சி உன்னைய மாதிரி அறிவாளிங்க யாராவது வந்து சொல்லுவாங்கண்ணு தான் இங்கன போட்டு இருக்கேன்..

  // ஒரு வேள சொல்லத் தெரியாமத்தேன் குட்டிப் பிசாசண்ணே லைசன்ஸுக் குடுத்துப்பிட்டாகளோ????//

  தெரியலையேம்மா :))

  // ரொம்ப பீடா போகாதீக… கேள்வி கேக்க நீங்க இருக்கனுமில்ல…. //
  அதுவும் நியாயம் தான். குறைக்கணும்..:))

 12. 12
  நாகை சிவா Says:

  பெப்சிய ராவ்வா அடிக்குற ஆளா நீ.. உடம்புக்கு நல்லது இல்ல பங்கு… பாத்து நடந்துக்கோ…

  வெறும் வாய் கொண்டு போன கூட பரவாயில்லை, நாம் கூடவே நக்கலையும், கிண்டலையும் எடுத்துட்டு போறோமா, அதான் துரத்தி துரத்தி அடிக்குறாங்க..

 13. 13
  நாகை சிவா Says:

  3, 4 ம் நல்ல வெலிட் பாயிண்ட் தான். ஆனா எனக்கு பதில் தெரியல….

  5, இது எல்லாம் ரொம்ப சிம்பிள் மேட்டர் பங்கு, இதுக்கா அடிச்சானுங்க… படுபாவி பயல்க… இது போக உருளைக்கிழங்குல A.F. என்ற வார்த்தையை கீறிட்டு அதுல நீ சொன்ன பால்பாயிண்ட் இங்கு, கொஞ்சம் பெயிண்ட், வாழைச்சாறு, அது இதுனு பலதை கலந்து எடுத்துட்டு போயி அடுத்தவன் சட்டையில வைச்சோம் வை… அம்சமா இருக்கும்… ஏரியல், சர்ப் என்ன வேற எந்த கருமத்தை கொண்டு வந்தாலும் போகவே போகது….

  6, உனக்கு திறமை பத்தல, இல்ல உன் மேல வாத்தியார்களுக்கு பயம் இல்லை என்று அர்த்தம்.

  8, கருத்து சொல்லாட்டி நமக்கு எல்லாம் தூக்கம் வருமா பங்கு..

 14. 14
  ILA(a)இளா Says:

  உங்களையெல்லாம் 8 போட கூப்பிட்டவங்களை சொல்லனும்.

 15. 15
  kannabiran, RAVI SHANKAR (KRS) Says:

  //ஏன் சாமி காத்தாட ஒக்காரலாமுன்னு பாத்தா ஒரு சன்னல் கூட இல்லை//

  கேப்பீங்க ஐயா..
  மொதல்ல சன்னல் கேப்பீங்க. அதுக்கப்புறம் சன்னல் வழியா டீ, காபி, போண்டா-ன்னு விக்கறவங்க யாரும் வரமாட்டாங்களான்னு கேப்பீங்க!
  யாருமே வரலைன்னா அவங்களுக்கும் space suit மாட்டி வுட்டு கூடவே அனுப்பி வைங்கன்னு கேப்பீங்க போல இருக்கே!

  //பக்தி மார்கத்துல முக்திக்கி வழி சொல்லிட்டு இருக்கும் KRS//

  ஆகா…இது ஒங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலீங்களா ஆபிசர்?
  முக்திக்கு வழியா? ஏன்பா…இங்கண பக்கத்து ட்வுன் ஜெர்சி சிட்டிக்கு வழி தெரியாம கோட்டை விட்டு, சிவாஜி படத்துக்கு லேட்டா போனதுக்கு, “மொத்தி”கிட்டு இருக்காங்க! இதுல “முத்தி”க்கு வழியா? 🙂

 16. 16
  கானா பிரபா Says:

  தல

  உங்க எட்டு ஒரு மார்க்கமாத்தான் இருக்கு 😉

  என்னையும் மாட்டி வுட்டுட்டீங்களே, சரி, என்ன எழுதலாம்னு முயற்சி பண்றேன்

 17. 17
  .:: மை ஃபிரண்ட் ::. Says:

  எட்டு போட சொன்னா, எட்டு எட்டா பிரிச்சு மேய்ஞ்சிருக்கீங்களே! 😉

 18. 18
  வெங்கட்ராமன் Says:

  ஆகா ஆழ்ந்த கருத்துக்கள்
  அருமையான உட்கருத்துக்கள்.
  இந்த மாதிரி பதிவுகளை 7 1/2 (ஏழரை) பதிவுகள்ன்னு தான் சொல்லனும்.

  ஆனாலும் .:: மை ஃபிரண்ட் ::. தான் முதல் 7 1/2 (ஏழரை) பதிவு போட்டவர்.

 19. 19
  கவிதா|Kavitha Says:

  எந்த கேள்விக்கும் சரியான பதில் சொல்லாம, (எஸ்கேப் ஆகி) லைசன்ஸ் கொடுத்த குட்டிபிசாசை நான் கண்டிச்சிக்கிறேன்.

  //நியூட்டனையும், கோப்பர்நிகஸையும் பழிச்ச உலகம் இது.. பின்னாடி ரொம்ப பீல் பண்ணுவாங்க.//

  ஆமா கண்டிப்பா… ஏன் உயிரோட விட்டொம்னு பீல் பண்ணுவாங்க..

  // சமயம் கிடைக்கும் பொழுது நம்ம அறிவாளிங்கிறதை உலகத்துக்கு காட்டிகிட்டே இருப்போமுல்ல.. //

  ஆமா நீங்களும் சொல்லிகாட்டிக்கிட்டே தான் இருக்கீங்க..ஆனா யாரும் நம்பத்தான் மாட்டேங்கறாங்க…

  //இது போக உருளைக்கிழங்குல A.F. என்ற வார்த்தையை கீறிட்டு அதுல நீ சொன்ன பால்பாயிண்ட் இங்கு, கொஞ்சம் பெயிண்ட், வாழைச்சாறு, அது இதுனு பலதை கலந்து எடுத்துட்டு போயி அடுத்தவன் சட்டையில வைச்சோம் வை… அம்சமா இருக்கும்… ஏரியல், சர்ப் என்ன வேற எந்த கருமத்தை கொண்டு வந்தாலும் போகவே போகது….//

  அட பாவிகளா…???

  நாங்க எல்லாம் வெண்டைக்காயை கட் பண்ணி அதுல இங்க் போட்டு குட்டி குட்டி பொட்டு வைப்போம்.. ம்ம்.. உங்க அளவு தீவரவாதி இல்லைப்பா…..

 20. 20
  மருதநாயகம் Says:

  //
  கொஞ்ச நாளைக்கு முன்னாடி இங்க NASAவுக்கு போயி இருந்தேன், அங்கன ஒரு ஆளு ராக்கெட்டை காட்டி எல்லாத்தையும் விளக்கிட்டு “any questions” அப்படின்னு கேட்டாங்க
  //

  அண்ணே ராக்கெட் லைசன்ஸ் வாங்கனும்ணா கூட 8 போடனுமா அப்படின்னு கொஞ்சம் கேட்டு சொல்றீங்களா

  நான் இப்ப தான் சிலேட்டு குச்சியில 8 போட்டு பழகிட்டு இருக்கேன். அதுக்கு அப்புறமா வந்து கண்டிப்பா வலைப்பதிவுல 8 போட்டுர்றேன்

 21. 21
  மோகன்தாஸ் Says:

  http://imohandoss.blogspot.com/2007/06/blog-post_26.html

  போட்டாச்சு போட்டாச்சு

 22. 22
  Vellai Says:

  //இது தப்பு அப்படின்னு போலீஸ் புடிச்சி fine போட்டுடாங்க. வாழ்கையில வேகமா முன்னேறுவது தப்பாண்ணே///

  அதானே…இவ்வ்வ்ளோஓஓஓ வெகுளியாப்பா நீ…

 23. 23
  குசும்பன் Says:

  நன்றி எட்டு போட்டதுக்கு…

  அப்பா டீச்சர்ன்னு கேள்வி பட்டேன்……………………………………………………………………… கரெக்டா தான் இருக்கு.

  இவ்வளோ நல்லவானாயா நீ!!!!

 24. 24
  SurveySan Says:

  chu chu chu, romba appaaviye irukkiyeppaa 🙂

 25. 25
  இலவசக்கொத்தனார் Says:

  1. தப்புதான்
  2. கூடாது (அப்புறம் அது potluck)
  3. தப்புதான்
  4. தப்புதான்
  5. தப்புதான்
  6. தப்புதான்
  7. தப்புதான்
  8. தப்புதான்

 26. 26
  ILA(a)இளா Says:

  //இலவசக்கொத்தனார் said…
  1. தப்புதான்
  2. கூடாது (அப்புறம் அது potluck)
  3. தப்புதான்
  4. தப்புதான்
  5. தப்புதான்
  6. தப்புதான்
  7. தப்புதான்
  8. தப்புதான்//

  ஏதாவது ஒன்னு சரியா செஞ்சது உண்டுங்களா சந்தோஷ்

 27. 27
  சந்தோஷ் Says:

  //இலவசக்கொத்தனார் said…

  1. தப்புதான்
  2. கூடாது (அப்புறம் அது potluck)
  3. தப்புதான்
  4. தப்புதான்
  5. தப்புதான்
  6. தப்புதான்
  7. தப்புதான்
  8. தப்புதான்
  //
  ஆபீஸர் ரொம்ப strict போல. இவர் கிட்ட போனா லைசென்ஸ் வாங்க இல்ல இல்ல பாக்க கூட விட மாட்டாரு போல.

 28. 28
  சந்தோஷ் Says:

  // ILA(a)இளா said…

  //இலவசக்கொத்தனார் said…
  1. தப்புதான்
  2. கூடாது (அப்புறம் அது potluck)
  3. தப்புதான்
  4. தப்புதான்
  5. தப்புதான்
  6. தப்புதான்
  7. தப்புதான்
  8. தப்புதான்//

  ஏதாவது ஒன்னு சரியா செஞ்சது உண்டுங்களா சந்தோஷ் //

  நாலு போருக்கு நல்லதுன்னா தப்பு பண்ணலாம் தப்பு இல்ல.

 29. 29
  மங்கை Says:

  //நாலு போருக்கு நல்லதுன்னா தப்பு பண்ணலாம் தப்பு இல்ல.///

  இதுவல்லவோ பொதுச்சேவை…
  அழைப்புக்கு நன்றி

 30. 30
  வெங்கட்ராமன் Says:

  /////////////////////////////////
  வெங்கட்ராமன் said…
  ஆகா ஆழ்ந்த கருத்துக்கள்
  அருமையான உட்கருத்துக்கள்.
  இந்த மாதிரி பதிவுகளை 7 1/2 (ஏழரை) பதிவுகள்ன்னு தான் சொல்லனும்.

  ஆனாலும் .:: மை ஃபிரண்ட் ::. தான் முதல் 7 1/2 (ஏழரை) பதிவு போட்டவர்.
  /////////////////////////////////

  சந்தோஷ் சும்மா விளையாட்டுக்கு தான் அப்படி சொன்னேன்
  கோபம் இல்லையே. . . .

 31. 31
  சந்தோஷ் Says:

  //
  சந்தோஷ் சும்மா விளையாட்டுக்கு தான் அப்படி சொன்னேன்
  கோபம் இல்லையே. . . //
  சே சே வெங்கட் என்ன இப்படி சொல்லிடிங்க.. நீங்க அப்படி தப்பா எல்லாம் எதுவுமே சொல்லலையே கோவ பட :)) கோவம் எல்லாம் எதுவும் இல்லிங்க :))..

 32. 32
  மங்கை Says:

  http://manggai.blogspot.com/2007/07/blog-post_03.html

  போட்டாச்சு சந்தோஷ்..நன்றி

 33. 33

  அது ஒண்ணுமில்ல கழுதை மேய்க்கிற பையனுக்கு இவ்வளவு அறிவான்னு பொறாமை.


RSS Feed for this entry

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: