இந்த வாரம் ரணகளம்தான்டி

கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை ஆடிகிட்டு இருந்திச்சாம், அது மாதிரி ஏதோ சமீபகாலமா நல்லா இருக்குற தமிழுக்கும், தமிழ்மணத்துக்கும் வேட்டு வெக்கிற மாதிரி வந்துச்சி பாருங்க ஒரு கடுதாசி. நவம்பர் 12 முதல் 17 வரை நீங்க நட்சத்திரம் இருக்கணுமுன்னு.ஆகா மாட்டினாங்கடா தமிழ் மக்கள் இதை விட்டா கைப்புள்ளைங்களையும், செ.செ.சூ வெச்சிகிட்ட தமிழ்மணத்தையும் போட்டுத்தாக்க நல்ல வாய்ப்பு கிடைக்காது புடிச்சிகோடா சந்தோசுன்னு உள் மனசு சொல்ல, போட்டேன் பாருங்க ஒரு பதிலு அய்யா சாமி தமிழ்மண தர்மகத்தாவே, நீங்க ஆள் தெரியாம எனக்கு அனுப்பி இருந்தாலும் பரவாயில்லை இந்த வாய்ப்பை நான் விட மாட்டேன், நான் தான் அந்த வாரத்துல நட்சத்திரமா இருப்பேன்னு அவங்க யோசிக்கிறதுக்கு கூட டைம் குடுக்காம கெட்டியா புடிச்சிகிட்டேன். 

அந்த கடுதாசி வந்ததுல இருந்து எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை(அது எப்பவும் ஓடாதுங்கிறது வேற விஷயம்).பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் நட்சத்திரமா இருந்து என்ன என்னத்தை எல்லாம் எழுதி பெருமை சேர்த்து இருக்காங்க. எனக்கு என்னத்தை தெரியும் சொல்லுங்க, நான் என்னாத்தனு எழுத முடியும்? இருந்தாலும் விடுவோமா?

அப்புறம் இன்னொன்னும் சொல்லிடறேன், இளகிய மனசு உள்ளவங்க, மொக்கையை தாங்க முடியாதவங்க, தமிழ் பற்று உள்ளவங்க, தமிழுக்கு கொடுமை நேர்வதை கண்டு பொங்குறவங்க எல்லாம் தமிழ்மணம் பக்கம் ஒரு வாரம் வந்துடாதிங்க, ஏன்னா இந்த வாரம் முழுவதும் தமிழுக்கு சோதனைக்காலம் தமிழ் கொலை பண்ணி பண்ணி தமிழ்மணம் முழுவதும் ரத்த ஆறா ஓடப்போவுது. பேச்சை குறைடான்னு நீங்க சொல்றது எனக்கு கேக்குது ரைட்டு விடுங்க, இம்முட்டு சொல்லியும் என் பேச்சை கேக்காட்டி என்ன பண்றது, சோலிய முடிச்சிட வேண்டியது தான், இதுக்கு மேல உங்க தமிழுக்கு என்னால உத்திரவாதம் குடுக்க முடியாது, நம்மளோட அடுத்த மீட்டிங்கு டைரக்டா ரத்த பூமியில தான் வரட்டா.

45 Comments »

 1. 1

  அப்புறம் இன்னொன்னும் சொல்லிடறேன், இளகிய மனசு உள்ளவங்க, மொக்கையை தாங்க முடியாதவங்க, தமிழ் பற்று உள்ளவங்க, தமிழுக்கு கொடுமை நேர்வதை கண்டு பொங்குறவங்க எல்லாம் தமிழ்மணம் பக்கம் ஒரு வாரம் வந்துடாதிங்க, ஏன்னா இந்த வாரம் முழுவதும் தமிழுக்கு சோதனைக்காலம் தமிழ் கொலை பண்ணி பண்ணி தமிழ்மணம் முழுவதும் ரத்த ஆறா ஓடப்போவுது.

  இங்க பாருப்பா ஆப்பு வாங்கரதுக்கு அடுத்த கைப்பு ரெடி…மக்கா ஸ்டார்ட்

 2. //அந்த கடுதாசி வந்ததுல இருந்து எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை(அது எப்பவும் ஓடாதுங்கிறது வேற விஷயம்).//

  அப்போ மத்த நேரங்களில் கை நல்லா ஓடுமா? மொக்கை வாரத்திற்கு மொக்கைப் பின்னூட்டம் போட்டு வரவேற்கிறேன்.

  வந்து ஆடுங்க!

 3. வாங்க பவன் குழந்தையாரே, முதல் முறையா ஏரியா பக்கம் வந்து இருக்கீங்க,
  //இங்க பாருப்பா ஆப்பு வாங்கரதுக்கு அடுத்த கைப்பு ரெடி…மக்கா ஸ்டார்ட் //
  இதப்பாருப்பா குழந்தை நாங்க எல்லாம் இது மாதிரி பல ஆப்புக்களை பார்த்து இருக்கோம், இதுக்கு எல்லாம் அசராதுலே..

 4. கொத்ஸ்,
  நீங்க எல்லாம் இருக்கிங்க அந்த தைரியத்துல தான் ஆரம்பிச்சி இருக்கேன். நமக்குத்தான் ஆரம்பத்துல எல்லாம் நல்லாத்தான் போயிட்டு இருக்குமே.. பினிஷிங் டச்சு தானே பிராப்புளமு.

 5. அட! நீங்களா இந்த வார ஷ்டாரு?

  ஓக்கே…… ஸ்டார்ட் ம்யூஜிக்.

  //பேச்சை குறைடான்னு நீங்க சொல்றது எனக்கு கேக்குது //

  நாங்க எங்கெ சொன்னோம்? நம்ம ரத்னேஷ்தான் ஆம்புளைங்க ரொம்பப் பேசறாங்கன்னு சொல்லிக்கிட்டு இருக்கார்:-))))
  எதாவது சொன்னா, அந்தக் கணிப்பு மாறிடப்போகுதுன்னு அங்கே நான் ‘வாயைத் தொறக்கவே இல்லையாக்கும்:-))))

 6. வாங்க வாங்க..

  தமிழுக்கு கொடுமை தனியாளா நீங்க செஞ்சுட முடியுமா? நாங்கல்லாம் எவ்வளவோ பண்ணியே ஒண்ணும் ஆவலை!

 7. வணக்கம் டீச்சரம்மா, ரொம்ப நாளா ஆளைக்காணோம்.
  //எதாவது சொன்னா, அந்தக் கணிப்பு மாறிடப்போகுதுன்னு அங்கே நான் ‘வாயைத் தொறக்கவே இல்லையாக்கும்:-))))//
  ஒரு மூத்த பதிவர் நீங்களே இப்படி சொன்னா எப்படி. உங்க கருத்துக்கள் எல்லாம் ரொம்ப முக்கியமுல்ல.

 8. //தமிழுக்கு கொடுமை தனியாளா நீங்க செஞ்சுட முடியுமா? நாங்கல்லாம் எவ்வளவோ பண்ணியே ஒண்ணும் ஆவலை!//
  ஹிஹி.. எங்க வந்தாலும் பெனாத்தலாரு டச்சை வெச்சிடறீங்க. எப்படிங்க முடியுது?

 9. 9

  வாழ்த்துக்கள் சந்தோஷ் மாமா.அந்த அம்மா சிரிச்ச மாதிரி எங்களையும் சிரிக்க வையுங்க. இந்த மாதிரி மொக்கை யாருமே போட்டிருக்க கூடாதுன்ர மாதிரி மொக்கை போடனும்

 10. 10

  சந்தோஷ்,

  நட்சத்திர வாழ்த்துக்கள்….. 🙂

  கொஞ்சம் லேட் தான், ஆனாலும் லேட்டஸ்டா கலக்க வாழ்த்துகள்… 🙂

 11. வாம்மா நிலாக்குட்டி முதல் முதலா ஏரியா பக்கம் வந்து இருக்கே, ரொம்ப சந்தோசம்,
  //வாழ்த்துக்கள் சந்தோஷ் மாமா.//

  இங்க இங்க தான் ரொம்ப தப்பு பண்ணுறே, மாமா இல்லடா கண்ணு சந்தோஷ் அண்ணா, எங்க வாய் நிறைய சொல்லு பாக்கலாம்..சந்தோஷ அண்ணா… அது நல்ல புள்ளைக்கு அழகு.. நான் எல்லாம் உனக்கு முந்தின செட்டு.. இதுவே சிபி மாமாவை மாமான்னு கூப்புடுலாம், இல்ல குசும்பன் மாமாவை மாமான்னு கூப்பிடலாம்.. சரியா அண்ணனை அண்ணன்னு கூப்பிடனும்.

  //அந்த அம்மா சிரிச்ச மாதிரி எங்களையும் சிரிக்க வையுங்க. இந்த மாதிரி மொக்கை யாருமே போட்டிருக்க கூடாதுன்ர மாதிரி மொக்கை போடனும்//

  சொல்லிட்டே இல்ல ரைட்டு விடு போட்டுடலாம்.

 12. 12
  Kavitha Says:

  Ellarum star eppadi aagaraangannu ennakku romba naala santhegam irnthunchi…… eppathaan thelivaa aagi erukku…

  Siva va eppadi star aaneengannu kettu kettu..nonthu poi irunthean….. eppa neenga star aagi thelivaa aakiteenga !!

  Any way, nice funny intro… expecting more funny also serious post from you in this week….

  Best Wishes !! :)))))))

  (sorry for…english…)

 13. 13

  மாம்ஸ் என்ன எங்கள பாத்து பயந்துட்டீங்களா, தமிழ்மணம் முகப்பு, Star Page எங்கயும் பதிவு தெரியமாட்டேங்குது….

 14. //சந்தோஷ்,

  நட்சத்திர வாழ்த்துக்கள்….. //

  வாங்க ராமண்ணா, வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி.

  //கொஞ்சம் லேட் தான், ஆனாலும் லேட்டஸ்டா கலக்க வாழ்த்துகள்… //
  ஹிஹி.. இங்க பாருடா உலகம் இன்னுமா எங்களை நம்பிட்டு இருக்கு..

  வாங்க கவிதா மேடம்,
  வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி..

  //(sorry for…english…)//

  சே சே.. இதுக்கெல்லாம் பீல் பண்ணாதிங்க.. நீங்க வந்து வாழ்த்தியதே பெரிய விஷயம்.

 15. //பவன்
  மாம்ஸ் என்ன எங்கள பாத்து பயந்துட்டீங்களா,//
  யார் கிட்ட.. யார் கிட்ட பயத்தை பத்தி பேசுறே.. நாங்க எல்லாம் பயத்துக்கே பயம் குடுக்குற பார்ட்டிங்க..

  //தமிழ்மணம் முகப்பு, ஸ்டர் Pஅகெ எங்கயும் பதிவு தெரியமாட்டேங்குது….//
  அந்த சோக கதையை ஏன் கேக்குற.. என்னுடைய பழைய பதிவுக்கு தமிழ்மணம் சுட்டி குடுத்து இருக்காங்க. ரெண்டு கடுதாசி போட்டு இருக்கேன் இரு பாக்கலாம்.. என்ன செய்றாங்கன்னு. ஆபீசுல வேற எல்லா மெசஞ்சரையும் தடை செய்து விட்டார்கள்..யாராவது கொஞ்சம் தமிழ்மண நிர்வாகிகளுக்கு சொல்லுங்கப்பா.

 16. 16
  குசும்பன் Says:

  மாப்பி எங்க இதுக்கு முன்பு நான் போட்ட கமெண்ட்?
  கலக்கு மாப்பி நான் எதிர்பார்க்கும் “பதிவு” வரவில்லை என்றால் போட்டோ போட்டு கலாய்பேன் ஜாக்கிரதை.!!!

  என்னய்யா அங்க பதிவை படி, இங்க கமெண்ட போடு அது இதுன்னு குழப்புற.

 17. குசும்பா,
  நீ வேற ஏன்யா வயித்தெரிச்சலை கிளப்புற. தமிழ்மணத்துல என்னுடைய பழைய பதிவுக்கு சுட்டியை குடுத்துட்டாங்க. எங்க ஆபீசில் பிளாக்கரை தடை செய்துவிட்டார்கள். வீட்டுக்கு போயி தான் அந்த கமெண்டுக்களை அனுமதிக்க வேண்டும் கொஞ்ச நேரம் இருய்யா ராசா. போட்டோவை கீட்டோவை போட்டுடாத. நிறைய பச்ச புள்ளைங்க எழுதுங்க பாத்து பயந்துடப்போவுதுங்க.
  ஆமாம் என்ன பதிவு விளக்கமா சொல்லு ராசா.. ஒண்ணுமே விளங்கலை

 18. நட்சத்திர வாழ்த்துக்கள்!!
  🙂

 19. 19
  perusu Says:

  நட்சத்திர வாழ்த்துக்கள் , ¿இந்த வாரம் ரணகளம்தான்டி????

 20. நட்சத்திர வாழ்த்துக்கள், சந்தோஷ்!

 21. சந்தோஷ்

  இந்த வாரம் தான்யா எங்களுக்கெல்லாம் தீபாவளி.சும்மா கலக்கு மாப்ளை

 22. அண்ணே வாழ்த்துக்கள் ;))

  கலக்குங்க…;))

  \\சொந்த வாழ்வில் ஆசைன்னு பாத்தா சொந்தமா ஒரு கணிப்பொறி நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும். \\

  கூடிய விரைவில் உங்கள் ஆசைகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள் ;))

 23. //என்னுடைய ஒரு இடுக்கையை படிச்சிட்டு ஒரு அம்மா, அவங்களுடைய கணவரை இழந்த துக்கத்தை மறந்து சில நிமிடங்கள் சந்தோஷமாக சிரித்தேன் என்று நண்பர் ஒருவரிடம் சொல்லி இருந்தார்//

  எனக்குத் தெரியும் அது எந்தப் பதிவுன்னு!

 24. //இதுவே சிபி மாமாவை மாமான்னு கூப்புடுலாம்,//

  சந்தோஷ்! கூப்பிட்டீங்களா? தோ வந்துட்டேன்!

 25. //இங்க பாருப்பா ஆப்பு வாங்கரதுக்கு அடுத்த கைப்பு ரெடி…மக்கா ஸ்டார்ட்//

  அப்படிப் போடு!

  பவன் நீ ஸ்டார்ட் பண்ணு ராசா! நாங்க ஜோரா மீசிக் போடுறோம்!

 26. நட்சத்திர வாழ்த்துக்கள், சந்தோஷ்!

  உங்களை எப்படி ? 😉

  Are you in US or chennai currently ?

 27. 28
  jamalan Says:

  //வாங்க வாங்க..

  தமிழுக்கு கொடுமை தனியாளா நீங்க செஞ்சுட முடியுமா? நாங்கல்லாம் எவ்வளவோ பண்ணியே ஒண்ணும் ஆவலை!//

  ரிப்பீட்…

  நட்சத்திர வாழ்த்துக்கள்.

 28. 29
  Devnath Says:

  அசத்து மாப்பூ 🙂

 29. //ஜெகதீசன் Says:
  நட்சத்திர வாழ்த்துக்கள்!!//

  ரொம்ப நன்றி ஜெகதீசன் சார்.

  //perusu Says:
  நட்சத்திர வாழ்த்துக்கள் , ¿இந்த வாரம் ரணகளம்தான்டி????//

  வாங்க பெருசு,
  ரொம்ப நாளாக ஆளை காணோம், ஊருக்கு எல்லாம் போயிட்டு வந்தாச்சா? பதிவுகளையும் எழுதுவது இல்ல போல?
  //இந்த வாரம் ரணகளம்தான்டி????//
  இது எல்லாம் சும்மா ஒரு பில்டப்பு.. கணக்குல சேத்துகப்படாது. வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி.

 30. //தென்றல் Says:
  நட்சத்திர வாழ்த்துக்கள், சந்தோஷ்!//

  வாங்க தென்றல்,
  வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி.

  //செல்வன் Says:
  சந்தோஷ்

  இந்த வாரம் தான்யா எங்களுக்கெல்லாம் தீபாவளி.சும்மா கலக்கு மாப்ளை//

  ரொம்ப ரொம்ப நன்றி மாப்பி. எங்க கொஞ்ச நாளாக சூடான பதிவுகள் எதையும் காணோம், ஆணி அதிகமோ?
  //இந்த வாரம் தான்யா எங்களுக்கெல்லாம் தீபாவளி//
  ஆகா அப்ப நரகாசுரன் நான் தானா? ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்… சரி ரைட்டு விடு நீ சொன்னா சரியாத்தான் இருக்கும்.

 31. //கோபிநாத் Says:
  அண்ணே வாழ்த்துக்கள் ;))

  கலக்குங்க…;))//

  தம்பி கோபி எங்கப்பா ஆளைக்காணோம்.. இதெல்லாம் சரியில்லை.. ஆபீசுல ரொம்ப ஆணியோ?

  //கூடிய விரைவில் உங்கள் ஆசைகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள் ;))//

  வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றிப்பா.

  //நாமக்கல் சிபி Says:
  //என்னுடைய ஒரு இடுக்கையை படிச்சிட்டு ஒரு அம்மா, அவங்களுடைய கணவரை இழந்த துக்கத்தை மறந்து சில நிமிடங்கள் சந்தோஷமாக சிரித்தேன் என்று நண்பர் ஒருவரிடம் சொல்லி இருந்தார்//

  //எனக்குத் தெரியும் அது எந்தப் பதிவுன்னு!//

  நீங்க நினைக்கிற அந்த பேன் பதிவு இல்ல (உங்களுக்கு எல்லாம் எடுத்து குடுக்காமலேயே கலாய்ப்பிங்க.. நான் எதுவும் சொ.செ.சூ வெச்சுக்ளையே?)..

 32. //நாமக்கல் சிபி Says:
  சந்தோஷ்! கூப்பிட்டீங்களா? தோ வந்துட்டேன்!//

  வாங்க சிபி அங்கிள் வாங்க, நீங்க முன்ன மாதிரி இல்ல, முன்னாடி எல்லம் கூப்பிட குரலுக்கு ஓடோடி வருவிங்க, இப்ப எல்லாம் கூப்பிட்டு வர வாரகணக்கு ஆவுது. சரி விடுங்க உங்கள மாதிரி மூத்த பதிவருங்க என்னைய மாதிரி குட்டிப்பசங்க பதிவுகளுக்கு வந்து பின்னுட்டம் போடுறது எவ்வுளவு பெரிய விஷயம், நாங்க எல்லாம் ரொம்ப பாக்கியம் செய்து இருக்கணும்..

  //kappi Says:
  vaazhthukkal thala //
  வா கப்பிராசா வா, ஆன்சைட் போயிட்டியமே? எங்க போயி இருக்கே, செட்டில் ஆயிட்டியா? புது புது படங்களா பாத்து விமர்சனத்தை போடு ராசா…

 33. //enRenRum anbudan BALA Says:
  நட்சத்திர வாழ்த்துக்கள், சந்தோஷ்!//

  வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி பாலா,
  //உங்களை எப்படி ? //
  விடுங்க.. தப்பு செய்றது மனுசங்களுக்கு சகஜம் தானே? அவங்களையும் அறியாம தமிழ்மணத்துல தப்பு நடந்து இருக்கும் இல்லாட்டி ஏதாவது கன்பூயூஷன் நடந்து இருக்கும்..
  //Are you in US or chennai currently ?//
  இப்ப சென்னையில தான் இருக்கேன் பாலா, கொஞ்ச நாளைக்கு இங்க தான் ஜாகை.

 34. //jamalan Says:

  ரிப்பீட்…

  நட்சத்திர வாழ்த்துக்கள்.//

  ஜமாலன்,
  உங்களைப்போன்ற பெரிய தலைங்க எல்லாம் வந்து இருந்துட்டு போன சீட், இப்ப என்ன பாடு படுதுங்க பாத்தீங்களா? நீங்க நட்சத்திரமா இருக்கும் பொழுது உங்க பதிவுகளை படிச்சேன், ஆனா ஆபீசுல பிளாக்கர் தளத்தை தடை செய்த காரணத்தினால் பின்னூட்டம் இட முடியவில்லை.. கோச்சிகாதிங்க…வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி.

  //Devnath Says:
  அசத்து மாப்பூ //
  வாடா பர்த்டே பாய் தேவு,
  ஆபீசுல தான் டிரீட் குடுக்காம அல்வா குடுத்துட்டே. எங்களுக்கு எப்ப டீரீட்.. சங்கத்துல நாங்க எல்லாம் இந்த விஷயத்துல ரொம்ப ஸ்டிரிக்ட்

 35. சந்தோஷ் சும்மா பூந்து
  ஊடுகட்டி அடிங்கப்பூ
  வாழ்த்துக்கள் !!!!!

 36. வாழ்த்துக்கள் சந்தோஷ்!

 37. சந்தோஷ் புகுந்து அடிச்சு விளையாடுங்க… 😀
  வாழ்த்துக்கள் நண்பா

 38. 40
  டெல்பின் விக்டோரியா Says:

  நிறைய, கொஞ்சம் வித்தியாசமாக எழுதுங்க..

 39. அண்ணா, கொஞ்சம் லேட்டாக வந்து வாழ்த்து சொன்னாலும் வாழ்த்து வாழ்த்துதான்.. 🙂 வாழ்த்துக்கள்.. உங்க நட்சத்திர பதிசுகளை இந்த வார இறுதியில் படிக்கிறேன். (அப்போதான் மெதுவா பொறூமையா படிச்சு பின்னூட்டம் போட முடியும்) 😉

 40. ஆகா நீங்க தான் இஸ்டாரா? வாழ்த்துக்கள்!!

 41. நல்ல பதிவுகளை போடுங்க

 42. //6Suresh – penathal Says:
  வாங்க வாங்க..

  தமிழுக்கு கொடுமை தனியாளா நீங்க செஞ்சுட முடியுமா? நாங்கல்லாம் எவ்வளவோ பண்ணியே ஒண்ணும் ஆவலை!//

  இது மேட்டரு :)))

 43. […] நாட்களில் முடிந்த 7 1/2 இவ்வுளவு தூரம் சொல்லியும், கேக்காம போன வாரம் முழுசும் நம்ம […]


RSS Feed for this entry

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: