எவன்டா இங்க சந்தோசு?

நான் அமெரிக்காவுல இருக்கும் பொழுது ராஜ் அப்படின்னு ஒருத்தன் நமக்கு தோஸ்து ஆனான்.  நம்ம ரும்மேட் ஒருத்தர் சோம பானம் அடிச்ச அழகை (அவன் அவன் குவாட்டருக்கே சாய்ந்துகிட்டு இருக்கும் பொழுது. அந்த குடிகாரன் ஒரு முழு fullஜ மிக்ஸிங் பண்ணாம அடிச்சிட்டு எதுவுமே நடக்காத மாதிரி  ஒக்காந்து இருப்பான்.) பாத்து ரொம்ப Impress ஆகி தானும் அவரை போல வளரணும் (அடடா என்ன ஒரு லட்சியம்?) அப்படின்னு எங்க கூட சேர்ந்து சுத்த ஆரம்பிச்சான். என்ன பண்றது பொதுவா எல்லாருக்கு சனி புடிக்கும் இவன் சனியை புடிச்சிகிட்டான்.

ஒரு நாள் இவன் தண்ணியடிச்சிட்டு இருக்கும் பொழுது என்ன பாத்து “உனக்கு டென்னிஸ் விளையாட தெரியுமான்னு கேட்டாங்க?”. அதுக்கு நான் “எது! அந்த வடை சுடுற கரண்டியை ஆளுக்கு ஒண்ணு எடுத்துகிட்டு ஒரு கிழிஞ்சிபோன மீன் வலைக்கு இந்த பக்கமும் அந்த பக்கமுமா நின்னுகிட்டு, பந்தை தட்டிகிட்டு இருப்பாங்களே அதுவா? சே சே அது எல்லாம் ஒரு விளையாட்டா” அப்படின்னு கேட்டேங்க. அதுக்கு அவன் டேய் என்னோட 25 வருச பொது வாழ்க்கையிலையும் சரி பத்து மாச தனிபட்ட வாழ்க்கையிலும்  டென்னீசுக்கு இந்த மாதிரி ஒரு விளக்கம் சொல்லி கேட்டது இல்ல அப்படின்னு ரொம்ப பீலிங்க்ஸ் ஆயிட்டான்.

இந்த விளக்கதை கேட்ட பிறகாவது அடங்குவான் அப்படின்னு பாத்தா அவன் விடவில்லை. மச்சி “அமெரிக்கா வந்து நயாக்ரா பாக்காம போனா எம்முட்டு அசிங்கமோ அதே மாதிரி டென்னீஸ் விளையாடம போனா அசிங்கம்” அப்படின்னு சொன்னதோட, நான் Atlantaவுல ஒரு seeded player உன்னை Roger federar (அய்யோ பாவம் இது யார் பெத்த புள்ளையோ, விஷயம் தெரிஞ்சா அவரோட பெயரை மாத்தி வெச்சிகுவார்) ஆக்கி காட்டிட்டு தான் மறுவேலை அப்படின்னு சொன்னான். சரி குடிகாரன் பேச்சு விடிஞ்சாப்போச்சி அப்படின்னு பாத்தா.

அடுத்த நாள், ரெண்டு வடை கரண்டியோட வந்து நிக்கிறான். நானும் என்னடா கரண்டியோட நிக்கிற, ஏதாவது கல்யாண வீட்ல வேலை பாக்க போறீயா?  அப்படின்னு கேட்டேன். அவன் டென்ஷனாகி டேய் இதுக்கு பெயர் “Racquet” அப்படின்னு ஆரம்பிச்சி ஒரு பத்து நிமிசம் மொக்கையை போட்டான். வழக்கம் போல நமக்கு ஒண்ணும் புரியலை ஆனாலும் அவன் மொக்கைக்கு பயந்து சரி சரின்னு புரிஞ்ச மாதிரி மண்டையை ஆட்டிடேன்.

சரி வா கோர்டுக்கு போகலாமுன்னு சொன்னான், டேய் இப்ப என்ன ஆகிப்போச்சின்னு கோர்டுக்கு கூப்புடுறே, எங்கப்பா நான் கோர்டுக்கு போனது தெரிஞ்சா அவ்வுளவு தான் கொன்னே போட்டுவாரு. எதுனாலும் பேசி தீத்துகலாம் கோர்டு எல்லாம் வேணாமுன்னு சொன்னேன். அடசே அறிவுகெட்ட முண்டம்(உனக்கும் அது தெரிஞ்சி போச்சா?) டென்னீஸ் கோர்டுக்கு போவலாம் வான்னு கூட்டிகிட்டு போனான்.

அப்புறம் ஆரம்பித்தது பாருங்க அவனுக்கு சனி, தனி ஆளாக 8 set ஆடுற ஆளு என் கூட ஒரு 30 நிமிசம் விளையாடினதுல களைச்சிப்போயிட்டான். அதுவும் அந்த 30 நிமிசத்துல நான் அடிச்ச ஒரு பந்தை கூட அவனால தொட முடியால, எப்படி நம்ம திறமை(ஹிஹி.. பந்து கோர்டுக்குள்ள இருந்தா தானே தொட முடியும்.). இப்படியே ரெண்டு நாள் போச்சி தாங்காதுடா சாமி அப்படின்னு மூணாவது நாளில் பந்து எடுத்து போட ஒருத்தனை கூட்டிகிட்டு வந்தான், அதுக்கு அடுத்த வாரத்துல பாத்தா இன்னும் ரெண்டு பேர் அடடா என்னை சமாளிக்க நாலு பேரா அப்படின்னு புல்லரிச்சி போயிட்டேனுங்க.அப்புறம் என்னோட திறமையான ஆட்டத்தை பார்த்து வழக்கம் போல என்னைய பந்து எடுத்து போடவும், கை தட்டவும் (கிரிக்கெட் நியாபகத்துல பந்து வெளியே போகும் போது விசில் அடிச்சி திட்டு வாங்குனது வேற விசயம்) யூஸ் பண்ணிகிட்டாங்க.

கொஞ்ச நாள் கழிச்சி ஒரு வெள்ளைக்காரன் கோர்டுக்கு வந்து “எவன்டா இங்க சந்தோசு” (டைட்டிலை சொல்றதுக்குள்ள ஸ்ப்ப்ப்ப்பாஆஆ முடியலை…) அப்படின்னு சவுண்டு விட்டான். சரி நம்ம திறமையை பாத்து நம்மளை அடுத்த U.S Open பைனலுக்கு டைரக்டா விளையாட கூப்புடறாங்களோன்னு நினைச்சி நான் தான்னு சொல்ல வாய் எடுத்தேன். அதுக்குள்ள பின்னாடி இருந்து ஒரு சவுண்டு “எவன் அடிச்சா பந்து நெட்டையும் தாண்டாம கோர்டுக்குள்ளாரையும் இல்லாம இருக்கோ அவன் தான் சந்தோசுன்னு” அப்படின்னு, யாருடா அது நம்ம திறமையை இப்படி வெட்ட வெளிச்சம் ஆக்குறதுன்னு பாத்தா நம்ம ராஜ்.

அப்புறம் தான் தெரிஞ்சது அட்லாண்டாவுல முதல் பத்து இடத்துல இருந்த அவன் எனக்கு சொல்லி தர ஆரம்பிச்சதுக்கு அப்புறம் வேகமா வளர்ந்து 50வது இடத்துக்கு போயிட்டானாம். அந்த வெள்ளைக்காரன் வேற யாருமில்ல அவனோட கோச் தான், ஒரே மாசத்துல அவன் வாழ்க்கையில இம்முட்டு பெரிய மாற்றத்தை செய்ததை யாருன்னு தெரிஞ்சிக்க ஒரு கொலை வெறியோட வந்து இருக்காரு. நம்ம திறமைக்கு இதெல்லாம் சாதாரணமப்பா என்ன சொல்றீங்க?

16 Comments »

 1. 1
  குசும்பன் Says:

  மாம்பி செம கலக்கல், அப்படியே பக்கத்து வூட்டு பிகரோட…………….விளையாண்டதையும் போடு மாப்பி.

  யார் என்ன வேண்டும் என்றாலும் fill செய்துக்கலாம்:)))

  எனக்கு மாப்பிய பத்தி தெரியும் அதனால் சில்லுகோடு என்று பில் செஞ்சுக்கிறேன்:)

 2. //மாம்பி செம கலக்கல்,//
  ரொம்ப டேங்கஸ் குசும்பா, பதிவு ரொம்ப நீளமா போயிடிச்சோ?

  //அப்படியே பக்கத்து வூட்டு பிகரோட…………….விளையாண்டதையும் போடு மாப்பி.//
  அடப்பாவி குசும்பா இது மாதிரி ஏதாவது கிளப்பி விட்டு போயிறாத.. ஒரு கோஷ்டியே கொல வெறி யோட காத்துகிட்டு இருக்கு..

  //யார் என்ன வேண்டும் என்றாலும் fill செய்துக்கலாம்:)))//
  து வேறையா?

  //எனக்கு மாப்பிய பத்தி தெரியும் அதனால் சில்லுகோடு என்று பில் செஞ்சுக்கிறேன்:)//
  அது என்ன அது சில்லுகோடு, பக்கத்து வீட்டுல பிகரே இல்ல இதுல இது வெறயா , வைத்தெரிச்சலை கிளப்பாதே

 3. 3
  Devnath Says:

  தீராத விளையாட்டுப் பிள்ளையாச்சே மாப்பி நீயு 🙂

 4. பங்கு.. சூப்பர்…

  ப்ளாக்கரில் போட்ட இரண்டு பதிவிலும் உன் இந்த ப்ளாக் லிங்கை தப்பா கொடுத்து இருக்க.. பார்த்து சரி பண்ணு ராசா…

 5. 5

  நல்லா எழுதியிருக்கிங்க!இளமை துள்ளுகிறது எழுத்துக்களில். keep it uப்!வாழ்த்துக்கள்.

 6. அமெரிக்கா சென்று தமிழனின் புகழை நிலைநாட்டிய தங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம்!! இதுபோல தாங்கள் மேலும் புகழ்பெற வாழ்த்துக்கள்!!

 7. \ “எவன் அடிச்சா பந்து நெட்டையும் தாண்டாம கோர்டுக்குள்ளாரையும் இல்லாம இருக்கோ அவன் தான் சந்தோசுன்னு” \\

  அண்ணே உங்க பெயருக்கு பின்னாடி இம்புட்டு பெரிய விஷயம் இருக்கா!!!…நோட் பண்ணிக்கிட்டேன் அண்ணே;))

 8. நம்ம நேஷனல் கேம் கிரிக்கெட்டை (?) விட்டு போட்டு அமெரிக்க நேஷனல் கேம் டென்னிஸை (?) விளையாடுனா இப்படித்தான் ஆகும்.

  அப்பாலிக்கா நட்சத்திர வாழ்த்துக்கள் தலிவா.

 9. சந்தோஷ்,
  கலக்கல், நகைச்சுவை உங்களுக்கு இயல்பாக வருகிறது, ரசித்து வாசித்தேன், பாராட்டுக்கள்!

  கடைசியில், டென்னிஸ் கொஞ்சமாவது ஆட வந்ததா என்பதை சொல்லவில்லையே 🙂

  எ.அ.பாலா

 10. நண்பரே!
  நட்சத்திர வாழ்த்துக்கள்!!

  நல்ல காமெடி…. பாவம் அவரு…

 11. சந்தோஷா மக்கா, சாரி கொக்கா…

  உன் திறமைக்கு இந்த வடை சுடுற கரண்டியெல்லாம் பத்தாது மாமு, பெருசா ஜிலேபி எடுக்கற கரண்டிய தூக்கிட்டு வா.. நான் வெயிட் பண்றேன்

 12. 14
  jamalan Says:

  அமேரிக்காவில் நமது புகழை நிலைநாட்டியதால் உங்களை சானியா மிர்சாவிற்கு கோச்சாக நியூமித்து ராங்க் பட்டியலில் 40-க்கும் 60-க்கும் இடையில் டென்னிஸ் விளையாண்டு கொண்டிருக்கும் அவரை ஒரேயடியாக 100-க்க மேல் தூக்கிவிட்டால் கொஞ்சம் தொல்லையில்லாமல் இருக்கும். இந்தியாவின் தேசப்பற்றை காட்ட மற்றுமொரு ஐகோனாகிவரும் அவரை விட்டுவிட்டு கிரிக்கட்டைக் கட்டிக் கொண்டு மாறடிப்பதே நல்லது அல்லவா?

 13. 15
  thiyaagu Says:

  அருமையான்ன நையாண்டி நடை

  பேஸ் பேஸ் கலக்குங்க சந்தோஸ்

 14. 16
  harisma1489 Says:

  பாமர மக்களின் வழ்கைமுறை பற்றிநன்குஅறித்தவர்பேலும்,விமர்சனம்மிகவும் நனறாகஉள்ளது.நன்றி அண்ணா,,,,,,,,,,


RSS Feed for this entry

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: