லிப்டோ லிப்டு

லிப்டுல போறது சகஜமா நடக்குற ஒண்ணும், ஆனா பாருங்க தினமும் ஒரே மாதிரி போயி வந்துட்டு இருந்தா ரொம்ப போர் அடிக்கும். அதனால் அந்த பயணத்தை இனிமையாக்க என்ன செய்யலாமுன்னு யோசிச்ச பொழுது தோன்றியவை சில

1. ஏறின உடனே ஓடிப்போயி சுவற்றை பாத்து, சுவத்தை புடிச்சி நின்னுகோங்க. அடிக்கடி பின்னாடி திரும்பி நீங்க இறங்க வேண்டிய இடம் வந்துடிச்சான்னு பாக்குற மாதிரி பாத்து, எதையோ கண்டு பேய் அறைந்ததை போல சுவத்து திரும்பிகோங்க.

2. அடிக்கடி சே காத்தே இல்லை அப்படின்னு சொல்லி, எங்க போச்சி காத்து அப்படின்னு நீங்க வெச்சிகிட்டு இருக்குற பர்ஸ், பை முதலியவற்றில் தேடுங்க. கூட்டம் கம்மியாவும், அடி வாங்க தெம்பு அதிகமாகவும் இருக்கும் பொழுது பக்கத்துல இருக்குறவங்க பையிலையும் காத்து இருக்கான்னு செக் பண்ணிக்கலாம்.

3. உள்ளே வருபவர்களை கைக்குலுக்கி, வரவேற்று நான் தான் இந்த லிப்டின் COO(Chief Operating Officer) என்று அறிமுகப்படுத்தி, உங்களின் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள் உங்களுக்கு ஏதேனும் தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ள 100ஜ டையல் செய்யவும், அப்படின்னு சொல்லுங்க.

4. லிப்ட் போயிட்டே இருக்கும் பொழுது பூனையை போல, நாயை போல சவுண்டு வுடுங்க.

5. புதுசா உள்ள வருபவரை ஒரு மாதிரியாக பார்த்து, என்ன ஒரு மாதிரியா கெட்ட வாசனை வருதுன்னு சொல்லி, நாங்க எல்லாம் சாக்ஸை துவச்சி போடுவோமாக்குமுன்னு சொல்லுங்க.

6. ஒவ்வொரு தளத்தை லிப்ட் அடையும் பொழுதும், “லிப்டை போல சவுண்டு விட்டு, நீங்கள் நான்காம் தளத்தை அடைந்து இருக்கீங்க” அப்படின்னு சொல்லி, அந்த தளத்தின் பெருமையை எல்லாம் விளக்கலாம். முடிந்தால் அங்க இறங்க முற்படுபவரை இழுத்து பிடித்து, ஒரு டூர் கைடு போல விளக்கினால் உங்களது அன்றைய பொழுது இனிமையாக கழியும்.

7. லிப்டுகுள்ள இருக்குற போனை எடுத்து ஹலோ பெப்சி உமாவான்னு ஆரம்பிச்சி உங்களுக்கு புடிச்ச பாட்டை கேளுங்க.ஆனா தயவு செய்து நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க மேடமுன்னு சொல்லிடாதிங்க, முடியலை அதை கேட்க கூட முடியலை.

8. என்னடா காத்தே வரலைன்னு சொல்லி அதுல இருக்குற “Stop” பட்டனை அழுத்துங்க.

9. நீங்க நிக்கிற ஏரியாவை சுத்தி ஒரு சின்ன வளையத்தை போட்டு, எங்க ஏரியா உள்ளே வராதேன்னு சொல்லுங்க.
10. உள்ளே யாருமே வராத பொழுது “டேய் அவன் தானே நீயி, உன்னைய வரவேணாமுன்னு சொன்னேனே ஏண்டா வந்த அப்படின்னு” சொல்லி அவரை உள்ள விடாதி மாதிரி ஸீன் போடுங்க.

11. லிப்டு ஒவ்வொரு தளத்துல நிக்கும் பொழுது அதை நிப்பாடி, லிப்டுல இருந்து ஓடிப்போயி தளத்துல இருக்குற ஏதையாவது ஒண்ணை தொட்டு மைபிரண்டு போல “மீ த பஸ்டுடூடூன்னு” சவுண்டு விட்டுகிட்டே லிப்டுக்குள்ள ஓடி வாங்க. இதை செய்யும் பொழுது ஒருவருக்கு மேல் இருப்பது நலம் அப்ப தான் ஒரு ரன்னிங்க ரேஸ் எபெக்டு வரும் (அப்படியே உங்க வேலை போனாலும் நீங்க மட்டும் தனியா வீட்டுக்கு போக மாட்டீங்க.).

உங்களுக்கும் இது மாதிரி நிறைய ஜடியாக்கள் தோன்றும் அதை எல்லாம் பின்னூட்டமா போடுங்க பாக்கலாம். சிறந்த பின்னூட்டத்துக்கு குசும்பன் பரிசு வேற குடுக்குறேன்னு சொல்லி இருக்காரு.

20 Comments »

 1. 1
  VM Says:

  Do this when the lift is crowded : press the close button and when the door is about to close, press the open button. when the door is open fully, press close button and again open.. close… repeat it 8 times..

  make sure to tell the co-passengers !! the follwing

  Hope you all dont have any emeregency work 🙂

  2. Though you are going to 8th floor from ground floor, make sure to press the buttons of all the floors and count 1 .2..3..4..5..6 ..7..8..9..10..

 2. ஆகா, எப்படி இப்படி எல்லாம்.
  சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது. . .

  ////////லிப்டு ஒவ்வொரு தளத்துல நிக்கும் பொழுது அதை நிப்பாடி, லிப்டுல இருந்து ஓடிப்போயி தளத்துல இருக்குற ஏதையாவது ஒண்ணை தொட்டு மைபிரண்டு போல “மீ த பஸ்டுடூடூன்னு” சவுண்டு விட்டுகிட்டே லிப்டுக்குள்ள ஓடி வாங்க.

  சூப்பர்

  அப்புறம் ஒரு விஷயம் மூனு மாடி நாலு மாடி ஏறவோ, இறங்கவோ வேண்டி இருந்தா படிக்கட்டுகளை உபயோகப் படுத்தவும். உட்கார்ந்தே வேலை பார்க்கும் ஐ.டி நண்பர்களுக்கு இது நல்லது.

 3. லிப்டுக்குள்ள எல்லோரும் ஏறுறவரைக்கும் பொறுமையா இருந்துட்டு மூடப்போற சமயத்துல வேகமா நடந்தோ, ஓடியோ லிப்டுக்கிட்ட வாங்க. நீங்க ஏறப்போறீங்கன்னு நினைச்சு லிப்டை ஸ்டாப் பண்ணி, கதவை மூடாம இருப்பாங்க. கிட்டக்க போயிட்டு ஏப்ரல் ஃபூல்ன்னு சொல்லிட்டு ஓடிப்போயிடுங்க.

  (சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் ஒரு பிகரின் முன் ஜம்பம் காட்ட நான் செய்த ஐடியா இது. சொல்லிட்டு வேற வேலைய பார்க்க போயிட்டேன். ஏப்ரல் ஃபூல் சொன்னப்ப அந்த பொண்ணோட முகத்த பார்க்கணுமே… அய்யோ!! :)))) அது ஒரு அழகிய லிப்ட் காலம்.)

  ஷார்ஜாவிலிருந்து சென்ஷி

 4. அப்பால….

  ஸ்டாரானதுக்கு வாழ்த்துக்கள் சந்தோஷ்…

  லேட்டா சொல்றேன்னு கோச்சுக்காதே :))

 5. 5
  இராம்/Raam Says:

  ஆஹா… சூப்பரு…. 🙂

 6. லிப்ட் கதவு திறந்த உடன் ஏற வருபவர்களிடம் லிப்ட் மேலே செல்வதாக இருந்தால், கீழே செல்வதாக மாற்றிச் சொல்லலாம்.

  நீங்கள் லிப்டில் ஏறி இல்லாத ஒரு தளத்தின் பட்டனை அமுக்க சொல்லி பட்டன்கள் அருகே இருப்பவரிடம் சொல்லலாம்.

  லிப்டில் ஏறி இது எக்மோர் போகுமா எனக் கேட்கலாம்.

  ரொம்ப கூட்டமாய் இருந்தால் ரொம்ப இருமத் தொடங்கினாலோ அல்லது வாந்தி வருவது போல் சப்தம் செய்தாலோ தாராளமாய் நிற்க இடம் கிடைக்கும்.

  இன்னும் வேணுமா?

 7. 7
  perusu Says:

  //லிப்டோ லிப்டு//

  “lip to lip” appadinnu thappa padichittu, ulla vanthu paatha

  ithu kooda paravaille.

  lift le poogumpoothu power cut aana enna seyyanumnu neega
  yosikkave illaya.

 8. naan kooda lip to lip’nu thappa padichutaen…..ada chee

 9. 9
  ILA Says:

  *உள்ளே வரவங்களை ஒன்னு ரெண்டு மூணுன்னு எண்ணிட்டே இருக்கலாம்.
  *யாருக்காவது போன் பண்ணி(நெட்வொர்க் இல்லாட்டாலும்)..”மாப்ளே,. இந்த லிப்ட்ல குண்டு வெடிக்க 1 நிமிஷம்தான் இருக்கு”ன்னு கிலி ஏற்படுத்தலாம்..

 10. இதெல்லாம் செஞ்சு பார்த்துட்டு அடி வாங்காம இருந்தீங்கன்னா சொல்லுங்க நாங்க அப்பால ஃபாலோ பண்றோம்.

 11. //ஷார்ஜாவிலிருந்து சென்ஷி//

  சென்ஷி உங்க அழகிய லிப்ட் கால அனுபவம் சூப்பர். நீங்க இதெல்லாம் செய்யறதால தான் உங்களை தில்லியிலிருந்து ஷார்ஜாவுக்கு மாத்திட்டாங்களா? 🙂

 12. //lift le poogumpoothu power cut aana enna seyyanumnu neega
  yosikkave illaya//

  இதைத் தான் மரோசரித்ரா படத்தில் நல்லா விளக்கிட்டாங்களே? என்ன சந்தோஷ்?

 13. 13
  Divya Says:

  செம காமெடியா எழுதியிருக்கிறீங்க சந்தோஷ், ரசித்தேன்!!

  ஸ்டார் மொக்கையிலும் சூப்பராகத்தான் ஜொலிக்கின்றது!!

 14. 14
  முத்துக்குமார் Says:

  ஐயா, எப்படீங்க ஐயா இதூஊஊ ? சிரிச்சி சிரிச்சி … ரொம்ப பேஜார் போங்க.

  சரி நம்ம பங்குக்கு :

  1. லிப்ட்ல நிறைய பேரு இருக்கும்போது நின்ன இடத்துலயே ஓட ஆரம்பிங்க. கேட்டா “ஜாக்கிங் கூட பண்ணமுடியாத அளவு இன்னிக்கு பிஸி”-னு ஃபில்ம் காட்டலாம்.
  2. நெறய மாடிகள் இருக்கிற இடம்னா கூட இருக்கவங்ககிட்ட “இப்படித்தான் என் ஃபிரண்ட் இதே லிப்ட்ல போயிருக்கான்; ரிப்பேராயி பாதி வழில லிப்ட் நின்னுபோயி ஃபையர் இஞ்சின் காரங்க வந்து எல்லாரையும் காப்பாத்திட்டு இருக்கும்போது திடீர்னு லிப்டடு கயிறு அறுந்து போயி …. என்னமோ போங்க, அவன் நல்லநேரம் கை ரெண்டும் போனதோட தப்பிச்சிட்டான்”-னு சொல்லலாம்.
  3. கூட இருப்பவர்கள் அவசரத்தில் இருக்கும்போது, செல்பேசியில் ‘மச்சி, என்னா பார்க்கிங் லாட் வந்துட்டியா ? என்ன இன்னும் அஞ்சு நிமிஷம் ஆகுமா … சரி … சரி .. வா’ என்றுவிட்டு லிப்டை நிறுத்தி வைத்து எல்லோரையும் பார்த்து ஜெண்டில்மேன் புன்னகையோடு ‘இதோ என் ஃப்ரண்டு வந்துட்டே இருக்கான்’, ‘இன்னும் அஞ்சே நிமிஷம்தான்’, ‘இந்நேரம் பார்க்கிங் லாட்ல இருந்து ஆஃபீஸ் பில்டிங் உள்ள வந்துருப்பான்’, ‘ஒடி வந்துட்டு இருப்பான்’, என்று ரன்னிங் கமெண்ட் கொடுத்துக்கொண்டே இருக்கலாம்.
  4. உள்ளே ஒவ்வொருவராக நுழையும்போது ‘அஜீரணக்கோளாறு உள்ளவர்கள் உள்ளே நுழையவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மீறுவோர், உயிரியல் ஆயுத பிரயோகத்திற்கான தண்டனைக்கு உள்ளாவார்கள்’ என்று அறிவிக்கலாம்.
  5. தங்கள் தளம் வரும்வரை மற்றவர்களை இழுத்து வைத்து “சாட் பூட் த்ரீ” விளையாடிக்கொண்டிருக்கலாம். (ரம்மி, மங்காத்தா என்று என்று இன்னும் விஸ்தரித்துக்கொண்டும் போகலாம், வரவேற்புக்குத்தக)

  அன்புடன்
  முத்துக்குமார்

 15. சந்தோஷ், நட்சத்திர வாழ்த்துக்கள்!

  என்ன மாதிரிப்பா யோசிக்கிறீங்க? மத்தவங்களுக்கு கொலவெறி ஏத்துறதுல அப்புடி என்ன ஒரு சந்தோசம்? நான்சென்ஸ்!

  சரி சரி..நம்ம பங்குக்கு ரெண்டு:

  1. யாராவது அவங்க fலோர் நம்பர் அமுக்க சொன்னா, அமுக்குறமாதிரி/தேடறமாதிரி பாசாங்கு செய்யலாம், அவங்க fலோர் கடந்து போற வரைக்கும். இது அதிவேக லிப்டுக்கு மட்டும்.

  2. வெளியே போறவங்களுக்கு வழி விட்ற மாதிரி பாசாங்கு பண்ணிகிட்டே, கபடி ஆடலாம். அவங்க புடிச்சு தள்ளிவிட்டு, மேலே ஏறி போறவரைக்கும்.

 16. 16
  jamalan Says:

  லிப்ட் பாதில நின்னா ஏற்படும் மரண பயம் பற்றீ சொல்லவே இல்ல. அதக்கும் ஏதாவது ஐடியா இருந்தா நல்லா இருக்கும் இல்லன்னா குஷ்பு வச்சி பாண்டியராஜன் மாதிரி சமையல் செய்யலாம். அதாவுது வச்சிக்கிட்டு..

 17. அண்ணே எல்லாத்தையும் நோட் பண்ணிக்கிட்டேன்…அப்படியே உங்க ஆபிஸ் முகவரி சொல்லுங்கண்ணே 😉

 18. 18

  //லிப்ட் பாதில நின்னா ஏற்படும் மரண பயம் பற்றீ சொல்லவே இல்ல. அதக்கும் ஏதாவது ஐடியா இருந்தா நல்லா இருக்கும் இல்லன்னா குஷ்பு வச்சி பாண்டியராஜன் மாதிரி சமையல் செய்யலாம். அதாவுது வச்சிக்கிட்டு..//

  ஆமா ஆமா குஷ்புவெ வைச்சிக்கிட்டு சமையல் செய்யலாம்.

 19. பங்கு, இதுல யாருமே நாம் 2 தளம் போகனும் என்றாலும் மேல் தளமும் முழுக்க ஒரு தடவை, மறுபடியும் அதே வேகத்தில் கீழ் தளம் ஒரு தடவை போயிட்டு, மறுபடியும் மேல போயிட்டு ஒவ்வொரு தளமா நிறுத்தி நிறுத்தி நம்ம வர வேண்டிய தளத்துக்கு வரலாமே…

  ரொம்பப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் வேலை இருந்தா இது தான் பெஸ்ட் வழி 🙂

 20. 20
  THIRUVEL Says:

  We can sell tea, coffee, vadai with chatni……….


RSS Feed for this entry

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: