கடன் அட்டைகளை பற்றி நீங்க தெரிந்து கொள்ள வேண்டியவை – பாகம் 1

கடன் அட்டைகள் (Credit Cards) இன்றைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான இடத்தை பெற்றுள்ளன (முக்கியமாக அமெரிக்க வாழ்க்கையில்). அதை கையாள்வது ஒரு தனி கலை. பெரும்பாலான கடன் அட்டை நிறுவனங்கள் இந்தியர்களை கண்டாலே மிரண்டு ஓடுகின்றனர். ஏன்னா நம்ம ஆளுங்க அதை நன்றாக கையாண்டு ஒரு பைசா கூட வட்டி கட்டாமல் அழகாக உபயோகிக்கின்றனர். கடன் அட்டைகளை கண்டாலே நடுங்கி அதை உபயோகம் செய்யாமல் இருப்பது முட்டாள்தனம் என்றே சொல்லலாம். அதை திட்டமிட்டு உபயோகித்தால பல பயன்பாடுகள் உண்டு நிறைய பலன்களை பெறலாம். கடன் அட்டைகளை பற்றி எனக்கு தெரிந்த வற்றை இங்கே விளக்க முற்படுகிறேன். முதலில் Credit History மற்றும் Credit Scoreஜ பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Credit History என்பது ஒரு நபரின் ஒரு குறிப்பிட்ட காலத்தின் செலவழிக்கும் திறன் அல்லது செலவழித்த முறையின் வரலாறு என்று கூறலாம். இந்த வரலாற்றை Credit Bureauக்கள் எனப்படும் கம்பெனிகள் பதிவு செய்கின்றன. Bad Credit History உருவாவதற்கான காரணங்கள் Bankrupsy, கடனை சரியான சமயத்தில் திருப்பி செலுத்தாமல் இருப்பது போன்றவை.

Credit Score உங்களுடைய செலவழிக்கும் திறனை பொருத்து அமையும். Credit Score 300 முதல் 900 பாயிண்டுகள் வரை இருக்கலாம். இது ஒரு complex maths என்றே சொல்லலாம். உங்களுடைய credit score பல்வேறு காரணிகளால் தீர்மானம் செய்யப்படுகிறது.

Credit History மற்றும் Credit Scoreகளை பற்றி மேலும் விவரம் அறிய இங்கே சொடுக்கவும்.கடன் அட்டைகளில் பல்வேறு வகைகள் உண்டு (நான் அட்டைகளின் Benefitsஜ பொருத்து வகைப்படுத்தி உள்ளேன் சரியா என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொன்னால் திருத்திக்கொள்கிறேன்.) அவற்றை பற்றி பார்க்கலாம். பெரும்பாலானவை 0% APR on Purchases and Balance Transfer, Cash Back, Sky Miles, Bonus Points போன்றவை

1. 0% APR வகை அட்டைகளை பார்ப்போம்.

0% APR(Annual Percentage Rate) என்றால் நீங்கள் இந்த அட்டையை உங்கள் தினசரி தேவைக்காக உபயோகப்படுத்தும் பணத்துக்கு ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு வட்டி கட்ட தேவையில்லை(குறைந்த பட்சம் 6 மாதம்), ஆனால் அவர்கள் குறிப்பிடும் Minimum Payment Dueவை கட்ட வேண்டும் (பெரும்பாலும் மிகச் சொற்பமான தொகையாக இருக்கும்).
இதில் இன்னொரு வகை 0% APR on Balance Transfers, இதில் விஷேசம் என்ன வென்றால் இன்னொரு கடன் அட்டையில் இருக்கும் Balanceஜ அதாவது நீங்க வேறு கடன் அட்டைகளில் செலுத்த வேண்டிய தொகையை இந்த அட்டைக்கு மாற்றிக்கொள்ளலாம், மேலும் அந்த தொகைக்கு அவர்கள் குறிப்பிடும் காலம் வரை வட்டி கட்ட தேவை இல்லை.
இன்னும் சில நிறுவனங்கள் அவர்கள் வழங்கும் காசோலைக்கும் இந்த மாதிரி வசதியை தருவார்கள்.
இந்த வசதியை பயன்படுத்தி நீங்கள் உங்களின் Savings,Fixed deposit கணக்குகளுக்கும் பணத்தை transfer செய்து கொள்ளலாம்.

2. Sky Miles

இந்த வகை அட்டைகள் நீங்க சேகரிக்கும் புள்ளிகளை பொறுத்து இலவச விமான பயணம், free upgrade போன்ற வற்றை பெற்று தரும். இந்த வகை அட்டைகள் பெரும்பாலும் இலவசமாக கிடைக்காது வருடாந்திர கட்டணம் இருக்கும். சில அட்டைகள் முதல் வருடம் மட்டும் இலவசமாக இருக்கும் அது போன்ற அட்டைகளை வாங்கி உபயோகித்து பின்னர்
முதல் வருடம் முடிந்த உடன் cancel செய்து விடலாம்.

3. Points

இந்த வகை அட்டையில் நீங்க உபயோகிக்கும் அல்லது செலவு செய்யும் பணத்துக்கும் ஒரு புள்ளி இரண்டு புள்ளி என்று அளிப்பார்கள் ஒரு குறிப்பிட்ட புள்ளிகளை நீங்க அடைந்த பின்னர் அவர்கள் குறிப்பிடும் இலவச பொருட்களை நீங்க உங்களின் புள்ளிகளை உபயோகித்து பெற்றுக்கொள்ளலாம்.

4. Cash Back

இந்த மாதிரியான அட்டைகளின் மூலம் நீங்க செலவு செய்யும் பணத்தின் ஒரு பகுதியை (5% – 10%) என்று திருப்பி கொடுப்பார்கள். இவ்வகை அட்டைகளை நீங்க பெரிய பெரிய பொருட்கள் வாங்க உபயோகித்தால் எ.கா. Camera, Plasma TV போன்றவற்றை வாங்க உபயோகித்தால் பெரும் சேமிப்பாக இருக்கும்.

5. Secure Credit Card

இது ஒரு வகையான debit card என்றே கூறலாம். முதல் முதலில் Credit History இல்லாதவர்கள் இங்க வரும் பொழுது Credit Historyஜ வளர்க்க இது போன்ற அட்டைகள் உபயோகித்து வளர்த்து கொள்ளலாம். இந்த வகை அட்டைகளில் முதலில் நீங்க ஒரு தொகையை முன்பணமாக கொடுக்க வேண்டும், பின்னர் அவர்கள் நீங்க முன்பணமாக கொடுத்த தொகைக்கு ஈடான Limit உள்ள ஒரு அட்டையை கொடுப்பார்கள் நீங்க அதை கடன் அட்டை போல உபயோகித்துக்கொள்ளலாம்.

இதை தவிர பலவகையான அட்டைகள் உண்டு உங்களின் credit history ஏதாவது ஒரு காரணத்தினால் மோசமான இருந்தால் அதை சரி செய்யும் வகையான அட்டைகள், credit scoreஜ மேம்படுத்த, மாணவர்களுக்கு என்றே பிரத்யோகமான அட்டைகள், அப்புறம் தொழில் செய்பவர்களுக்கு என்று பலதரப்பட்ட அட்டைகள் உண்டு.

நான் உபயோகித்த வரையில் American Express நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மிக நன்றாக உள்ளது. அது போல சேவையும் நன்றாக உள்ளது ஆனால் இவ்வகை அட்டைகளை அனைத்து இடங்களிலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதோ போல் Bank of America போன்ற ஒரு மோசமான வாடிக்கையாளர் சேவையை அமெரிக்காவில் பார்க்க முடியாது.
தொலைபேசி மூலம் வாடிக்கையாளர் சேவையை பெற மணிக்கணக்கில் காத்து இருக்க வேண்டும். நண்பனின் கடன் அட்டை தொலைந்து விட்டதை அவர்களுக்கு தெரிய படுத்தி அந்த அட்டையை deactive செய்ய நாங்க சுமார் 1 1/2 மணி நேரம் போனில் காத்து இருக்க வேண்டியாதாயிற்று. அதே போல் இவர்கள் aliens அதாவது அமெரிக்க பிரஜைகளை தவிர ஏனையோருக்கு கடன் அட்டைகள் தருவதை விரும்புவதில்லை(என்னுடைய credit score அருமையாக இருந்த பொழுதே இவர்கள் இருமுறை reject செய்து விட்டார்கள்.) .

என்னுடைய சாய்ஸ் எப்பொழுதுமே Cash Back offer உள்ள கடன் அட்டைகள் தான், அதற்கு பிறகு Sky Miles வகையான அட்டைகள், அதற்கு பிறகு தான் மற்ற வகை. இதன் அடுத்த பகுதியில் கடன் அட்டைகளை கையாளும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவற்றை பற்றி சொல்கிறேன்.

9 Comments »

 1. நல்ல ஆரம்பம். இன்னும் விபரமா சொல்லுங்க.

 2. ம்ம்ம்…உபயோக படுத்தலாமுன்னு சொல்றிங்க…;)

 3. 3
  Credit Card User Says:

  Its good start.

  1. One more type of credit card is for college saving (upromise affiliation). Citibank offers it.

  2. I think the credit score range is from 300 – 850. 900 I have not heard.

 4. சூப்பர் !!! சூப்பர் !!! சூப்பர் !!!

  தமிழ் ல type பண்ணும் போது தான் எவ்வளோ கஷ்டம் னு தெரியும் .. Blog தமிழ் ல maintain பண்றது ரொம்ப கஷ்டம் pa.. அதும் useful aa …

  சூப்பர் அப்பு !!!

 5. நமக்கு அனுபவமே இல்லாத பீல்ட் ஆச்சே இது. ரைட் அடுத்த பகுதியில் இன்னும் தெரிஞ்சுக்குறேன்

 6. நல்ல சொல்லிருக்கீங்க சந்தோஷ்!

  இதே போல நம்ம ஊருல இருக்கிற கடன் அட்டையைப் பத்திய விவரத்தையும் சொல்லுங்க! கடன் அட்டை பயன்படுத்தி ATMல பணம் எடுத்தோம்…அவ்வளவுதான்..APR ரொ..ம்..ப..வே அதிகம்…

  இப்பலாம் கடன் அட்டை (எண்) திருட்டு சர்வசாதரணம்.. அதுவும் அமெரிக்காவில் ரொம்பவே அதிகம். அதானால IdentityMonitor service எடுத்துக்கிறது நல்லது. நம்ம கணக்கில் எந்தவொரு transaction நடந்தாலும் உடனே நமக்கு தெரியப் படுத்துவார்கள்.

  Bank Of Americaபத்தி உங்க மூலமாதான் இப்படி கேள்விபட்றேன்.

 7. […] தெரிந்து கொள்ள வேண்டியவை- பாகம் II இந்த பதிவில் நான் கடன் அட்டைகள் பற்றி […]

 8. 8
  Jaikanth Says:

  பயனுள்ள தொகுப்பு…..

  ICICI கிரெடிட் கார்டை பற்றி தகவல்களை எதிர்பார்கிறேன்….

 9. 9
  Kaleel Says:

  Try to avoid getting credit cards.


RSS Feed for this entry

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: