கடன் அட்டைகளை பற்றி நீங்க தெரிந்து கொள்ள வேண்டியவை- பாகம் II

இந்த பதிவில் நான் கடன் அட்டைகள் பற்றி முன்னுறையாக சில விஷயங்களை பற்றி சொல்லி இருந்தேன். இந்த பதிவில் கடன் அட்டைகளை வாங்குவதற்கு/உபயோகிப்பதற்கு முன்னர் கவனிக்க வேண்டிய முக்கியமான சில விஷயங்களை பற்றி சொல்லி இருக்கிறேன் (இதில் கூறப்பட்டுள்ள விஷயங்களில் பெரும்பாலானவை அமெரிக்காவில் உள்ளவர்களுக்கே பொருந்தும், இந்தியாவில் உள்ளவர்களுக்கும் சில விஷயங்கள் உபயோகமாக இருக்கலாம்): 1. கடன் அட்டைக்கு விண்ணப்பிக்கும் பொழுது நீங்க கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் “universal default” clause அப்படிங்கற விஷயத்தை. நீங்க ஒரு அட்டையை வாங்கறீங்க ஏதோ ஒரு காரணத்தினால் சரியான தேதியில் உங்களால Minimum Balanceஜ கட்ட முடியவில்லை. அதை காரணம் காட்டி credit card கம்பெனிகள் உங்களின் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பு உள்ளது.

இதுவே நீங்க வைத்து இருக்கும் கடன் அட்டையில் இந்த “universal default clause” இருந்து, நீங்க Minimum Balance கட்ட தவறும் பட்சத்தில் (உங்களின் வட்டி விகிதம் உயர இதை தவிர பல்வேறு காரணிகள் உண்டு) இவர்களினால் இவர்கள் அளித்த அட்டையின் வட்டி விகிதம் மட்டுமல்லாது மற்ற கம்பெனிகள் அளித்த அட்டையின் வட்டி விகிதத்தையும் உயர்த்த முடியும். இவ்வகையான அட்டைகளில் இருந்து தள்ளி இருப்பது நலம்.

2. பொதுவாக கடன் அட்டைகளை உபயோகித்து பணம் எடுப்பதை(Cash Advance) தவிர்க்க வேண்டும். அப்படி எடுத்தால் நீங்கள் மொத்த தொகையையும் கட்ட வேண்டியதாக இருக்கும் ஏனெனில் 0% APR நீங்கள் கடைகளில் அட்டையை உபயோகிக்கும் பொழுது தான். அதை உபயோகித்து பணம் எடுத்தால் அதற்கு அவர்கள் குறிப்பிட்டு உள்ள வட்டியை கட்ட வேண்டும். பெரும்பாலான அட்டைகளில் நீங்க கட்டும் பணம் Lower APRக்கு தான் கட்டியதாக தான் எடுத்துக்கொள்வார்கள்.

உதாரணமாக நீங்க எடுக்கும் பணத்துக்கு 25% APR என்று வைத்துக்கொள்வோம். நீங்க அடுத்த தவணைக்கு கட்டும் பணம் 0% APRக்கு உள்ள Purchasesக்கு தான் கட்டியதாக எடுத்துக்கொள்ளப்படும். நீங்க 0% APRக்கு முழுபணமும் கட்டி முடித்த பின்னரே 25% APRக்கு எடுத்த பணத்துக்கு கட்ட முடியும். எனவே முழு நிலுவைத் தொகையை கட்டினால் தான் நீங்க cash advanceக்கு எடுத்த தொகையை கழிக்க முடியும். சிறு சிறு தொகை வேண்டும் என்றால் சில சூப்பர் மார்கெட்டில் cash back அளிப்பார்கள் அதை உபயோகித்துக்கொள்ளலாம்.அதே போல தான் இந்த நிறுவனங்கள் மாதா மாதம் சில காசோலைகளை தருவார்கள்(cheque leaves) அவை பெரும்பாலும் 0% APR இல் வராது எனவே அதை உபயோகிக்கும் பொழுதும் கவனம் தேவை.0% Balance transferஅட்டைகளில் கவனிக்க வேண்டியது Balance transfer fee என்று கட்டணம் நிர்ணயம் செய்வார்கள், அது இருக்கிறதா என்று பார்த்துவிட்டு. அந்த கட்டணத்தில் உங்களுக்கு உடன்பாடு இருக்கும் பட்சத்தில் நீங்க Balance transfer செய்து கொள்ளலாம்.

3. ஒவ்வொரு மாதமும் அவர்கள் குறிப்பிடும் நாளில் Minimum Balanceஜ தவறாமல் செலுத்திவிட வேண்டும் இல்லாவிட்டால் உங்களின் credit history spoil ஆகிவிடும் மேலும் credit score குறைந்து வாய்ப்புக்கள் அதிகம். முக்கியமாக American Express அட்டைகளின் மீது தனி கவனம் செலுத்த வேண்டும், அவர்கள் நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு ரொம்ப கெட்டவன் மாதிரியான ஆட்கள். ஒழுங்காக பணத்தை கட்டிக்கொண்டு வந்தால் நிறைய credit points அளித்து உங்களின் credit score நல்ல படியாக இருக்க உதவுவார்கள் இல்லாவிட்டால் oppsite தான்.

4. 0% APR அட்டைகளை உபயோகிக்கும் பொழுது சரியாக திட்டமிட்டு அது முடிவடையும் பொழுது கட்டும் அளவு பணம் வைத்து இருக்க வேண்டும். இல்லாவிட்டல் அதிகப்படியான வட்டி செலுத்தி கஷ்டப்பட வேண்டி இருக்கும். இது போன்ற அட்டைகளுக்கு கட்ட வேண்டிய தொகையை எங்காவது முதலீடு செய்துவிட்டால்(நஷடம் வராத இடத்தில்) அதில் இருந்து வரும் அதிகப்படியான பணம் நமக்கு லாபம் தான். பிறகு 0% APR முடியும் தருவாயில் முதலீட்டில் இருந்து எடுத்து கட்டி விடலாம்.

5. இலவசமாக அட்டைகள் கொடுக்கிறார்கள் என்று எல்லாவற்றையும் வாங்கி விட வேண்டாம். கவனமாக ஆராய்ந்து அவர்கள் அளிக்கும் offerகளை ஆராய்ந்து வாங்க வேண்டும்.

6. அதே போல முடிந்த வரையில் அனைத்து கம்பெனிகளின் அட்டைகளிலும் ஒன்று வைத்து இருப்பது நலம். அதாவது Visa, Master, Discover மற்றும் American Express அட்டைகளில் வகைக்கு ஒன்று என்று வைத்து இருப்பது credit scoreஜ வேகமாக வளர்க்க உதவும் என்று சொல்கிறார்கள்.

7. முடிந்த வரையில் அட்டைகளை cancel செய்வதை தவிர்க்கவும் ஏனெனில் நீங்க ஒவ்வொரு அட்டையை cancel செய்யும் பொழுதும் உங்க credit points களில் ஒரு குறிப்பிட்ட புள்ளிகளை இழக்கிறீர்கள் எனவே முடிந்த வரையில் ஒரு அட்டையை 5 வருடமாவது வைத்து இருப்பது மிக நலம்.

8. எந்த காரணத்தை தொடர்ந்து கடன் அட்டைகளுக்கு விண்ணப்பித்துக்கொண்டே இருக்க வேண்டாம், ஒரு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் சிறிது காலம் பொறுத்து இருந்து பின்னர் விண்ணப்பியுங்கள். நீங்க ஒவ்வொரு முறை விண்ணப்பிக்கும் பொழுதும் அந்த கம்பெனிகள் உங்க credit historyஜ சரி பார்பார்கள். Too many credit checks இருப்பது நல்லதல்ல.

9. எந்த காரணத்தை கொண்டும் எந்த அட்டையிலும் over limit போக அனுமதிக்காதீர்கள். அதுவும் நல்லது இல்லை. ஏகப்பட்ட பைன் போட்டு தீட்டிவிடுவார்கள். அதே மாதிரி அட்டைகளை உபயோகிக்கும் பொழுது ஒரே அட்டையில் மட்டும் கடனை ஏற்றாமல் எல்லா அட்டைகளிலும் சீராக உபயோகித்தால் நல்லது என்று சொல்கிறார்கள்.

10. அமெரிக்காவில் short termமாக இருப்பவர்கள் இதைப்பற்றி அதிகம் கவலை கொள்ள தேவையில்லை. நீண்ட நாட்கள் இருக்க முடிவு செய்து இருப்பவர்கள் கடன் அட்டைகளை வாங்கும் பொழுது சரியாக திட்டமிட வேண்டும் ஏனெனில் credit score and credit history இவை இரண்டுமே நீங்க வாங்கும் வீட்டுக்கடன், கார் கடன் மற்றும் அனைத்து வகையான கடன்களின் வட்டியை நிர்ணயிக்கும். கடன் அட்டைகள்களை சரியாக கையாளாவிட்டால் உங்களின் வட்டி விகிதம் தாறுமாறாக ஏறவும் வாய்ப்பு உண்டு.

11. அதே போல் ஏதாவது ஒரு காரணத்தால் உங்களால் Minimum Balance கட்ட முடியாவிட்டால் உங்களுடைய கடன் அட்டை கம்பெனியை அணுகி பேசி ஒரு தீர்வை காணுங்கள், அது எந்த வகையிலும் உங்களுடைய credit score/history ஜ பாதிக்காத வாரு பார்த்துக்கொள்ளுங்க. Good Credits will go off in 3 years Bad credits will take 7 years to get out of your history என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

நான் முன்னாடியே கூறியுள்ளபடி கடன் அட்டைகள் என்றாலே பயந்து நடுங்க வேண்டாம், அதை சரியான படி திட்டமிட்டு உபயோகம் செய்தால் அதனால் நமக்கு ஏகப்பட்ட இலாபம். மேலே கூறியவை எல்லாம் கடன் அட்டைகள் பற்றி எனக்கு தெரிந்த மிகச் சொற்பமான விஷயமே. இது பற்றி உங்களுக்கு வேறு ஏதேனும் தகவல் தெரிந்தால் சொல்லுங்களேன்.

இந்த பதிவில் தென்றல் சார் இந்தியாவில் உள்ள கடன் அட்டைகளை பற்றியும் சொல்லுமாறு கேட்டு இருந்தார். இந்தியாவில் கடன் அட்டைகள் வழங்கும் முறை unorganised ஆகவே இருக்கிறது. பெரும்பாலும் வங்கிகள் மாதம் சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டும் தான் வழங்குகின்றன என்று நினைக்கிறேன். அதை பற்றி எனக்கு தற்பொழுது சிறிது ஞானமே உள்ளது. முடிந்தால் அதைப்பற்றியும் ஒரு தனி பதிவு இடுகிறேன்.

5 Comments »

 1. 1

  சந்தோஷ், இம்பூட்டு விவரத்தை வைச்சிக்கிட்டு என்கிட்ட சொல்லிக்கவே இல்லையே ;-)… சொல்லியிருந்தா இன்னமும் ஒரு ரெண்டு, மூணு கடன்காரன் அட்டைகளை வாங்கி சுமந்துருப்போம்ல.

  நல்ல விபரங்கள், இதுகளை பத்தி புதிதாக அறிந்து கொள்பவர்களுக்கு.

 2. வணக்கம்
  உங்கள் கட்டுரைகளும் ஆக்கங்களும் என்னை உங்கள் பக்கம் ஈர்த்துள்ளது.
  வாழ்த்துக்கள்

  முதலில் என்னை பற்றிய ஒர் சிறிய அறிமுகம்.

  எனது பெயர் இரமணன் நான் ஒரு இணைய தள வடிவமைப்பாளராக பணி புரிகிறேன். உயிர் வாழ்வதற்க்காக சொந்த மண்ணை விட்டு அந்நிய மண்ணிலே செத்துக் கொண்டிருக்கும் இலட்சக் கணக்கான கோழைகளில் நானும் ஒருவன்.

  நான் தற்பொழுது ஓர் சிறிய முயற்ச்சியில் இறங்கியுள்ளேன். அதை உங்களிடம் பகிர்து கொள்ள விரும்ப்புகிறேன்.

  இன்று இணையதில் நிறைய தமிழ் சார்ந்த விடயங்கள் இருக்கின்றன இது தமிழ் வளர்ச்சியில் மிகவும் வரவேற்க்க தக்கது ஆனால் இதில் வருந்த தக்க விடயம் என்ன வென்றால் இந்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் போய் சேராதது தான். இதற்க்காகவே நான் ஓர் இணைய தளத்தை ஆரம்பித்து உள்ளேன். இதில் சிதறிக்கிடக்கும் அனைத்து தமிழ் சார்ந்த தகவல்களையும் திரட்டி ஓர் இடத்தில் பதித்து வருகிறேன். இதில் உங்கள் கட்டுரைகளையும் ஆக்கங்களையும் சேர்த்துக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் அதற்க்கான அனுமதியை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் தகவல்கள் அனைதும் உங்கள் பெயரிலேயே பதியப்படும்.

  தமிழ் அமுதினைத் திரட்டிவரும் இந்த தேனிக்கு தங்கள் உதவியை வழங்குங்கள். நாளைய எமது தமிழ் சமுதாயம் இணையத்தில் நடை போட இது வழி சமைக்கும் என்று நம்புகிறேன்

  நன்றி
  இரமணன்
  http://www.thurikai.com

 3. 3
  Jaikanth Says:

  மிக அருமையான தொகுப்பு…
  மிக்க நன்றி…..

 4. Hi,

  We have just added your blog link to Tamil Blogs Directory – http://www.valaipookkal.com.

  Please check your blog post link here

  Please register yourself on the Tamil Blog Directory to update your new blog posts and bring before your work to the large

  base of Tamil readers worldwide.

  Thanks

  Valaipookkal Team


RSS Feed for this entry

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: