நாட்ல இந்த குறைந்த விலை விமான நிறுவனங்களின் தொல்லைக்கு ஒரு அளவே இல்லை. குறைந்த விலைக்கு விமான சேவையை அளிக்கிறேன் அப்படின்னு இவங்க அடிக்கிற லூட்டி இருக்கே யப்பா தாங்காது. விமானத்தில் போதிய பயணிகள் இல்லாட்டி, பயணிகளை பல மணி நேரம் காத்திருக்க செய்து அப்புறம் விமானத்தை கேன்ஸல் செய்வது, காலை விமானத்தில் கூட்டம் இல்லாட்டி அந்த விமானத்தில் உள்ள பயணிகளை அடுத்த விமானத்துக்கு மாற்றம் செய்வது, சில சமயம் விமானத்தை கேன்ஸல் செய்து அதுக்கு பதிலா ஆம்னி பஸ் டிக்கெட்டுகளை அளிப்பது, இது மாதிரி ஒரே ஆட்டம் தான். விமானம் கேன்ஸல் செய்யப்பட்டதற்கான காரணம் கேட்டால் தொழில்நுட்ப கோளாறு என்ற ஒரே பதில்.
இது மாதிரியான விமான கம்பெனிகளுக்கு ஆப்பு அடிக்கும் விதமாக இந்த தீர்ப்பு வந்துள்ளது. கோஏர் என்னும் குறைந்த கட்டண விமான நிறுவனம், தொழில்நுட்ப கோளாறு என்று கூறி கேன்ஸல் செய்த ஒரு விமானதில் பயணம் செய்த பயணிகள் அனைவருக்கு 15000 நஷ்டஈடு அளிக்குமாறு தில்லி உயர்நீதி மன்றம் உத்திரவிட்டுள்ளது. இது போன்ற வியாபார நன்னடத்தை (Business ethics) இல்லாத கம்பெனிகள் இதற்கு பிறகாவது திருந்தினால் சரி.
சூப்பர் தீர்ப்பு! எங்க திருந்தப் போறாங்க?
15 ஆயிரத்த 1 லட்சம்னு தீர்ப்பு சொன்னா ஒரு வேளை..??
சூப்பர் தீர்ப்பு…ஆனா இந்த பணம் அந்த பயணிகளுக்கு கிடைக்கிறதுக்கு முன்னாடி வேற தீர்ப்பு வாரமால் இருந்தால் சரி ;))
//ராஜா Says:
சூப்பர் தீர்ப்பு! எங்க திருந்தப் போறாங்க?
15 ஆயிரத்த 1 லட்சம்னு தீர்ப்பு சொன்னா ஒரு வேளை..??
//
சரியா சொன்னிங்க. இவனுங்க எல்லாம் திருந்த கடுமையான தண்டனைகள் கொடுக்க வேண்டும்.
//கோபிநாத் Says:
சூப்பர் தீர்ப்பு…ஆனா இந்த பணம் அந்த பயணிகளுக்கு கிடைக்கிறதுக்கு முன்னாடி வேற தீர்ப்பு வாரமால் இருந்தால் சரி ;))//
வாப்பா தம்பி,
:)) ஹிஹி.. நீதித்துறை போகும் போக்கில் சொல்ல முடியாது மேல் கோர்டில் பயணிகளை குடுக்க சொன்னாலும் சொல்லுவாங்க.
ப்ளாக் ஸ்பாட்டிலிருந்து இந்த வலைக்கு
Hi, I came here a long back.
very nice. The link from blogspot(old blog) to this blog is showing error. Please correct it
-Vibin
tOO GOOD , iT SHOULD BE APPLICABLE FOR ALL PASSENGERS OF ALL FLIGHTS