நல்லாஇருங்கடா

ஹர்பஜன்சிங்கை மூன்று டெஸ்டு போட்டிகளில் இருந்து தடை செய்ததை எதிர்த்து போராட்டம் — செய்தி

நந்திகிரமுல நூத்துக்கணக்கான பேர் செத்துப்போனாங்க, ஒரு பொம்பளை புள்ளையை ஒட்டு துணி இல்லாம தெருவுல ஓட விட்டாங்க(அந்த புள்ளைக்கு துணி குடுக்குறதை விட்டுட்டு அதையும் சுத்தி சுத்தி படம் புடிச்சி TRB ரேட்டிங்கை ஏத்திகிட்டாங்க நம்ம மானங்கெட்ட பத்திரிக்கைகாரனுங்க).

இது வரைக்கும் நூத்துக்கணக்கான விவசாயிங்க சோத்துக்கு வழியில்லாம செத்து போயி இருக்காங்க.

நாட்டை எப்படிடா அமெரிக்காகாரனுக்கு அடகு வெக்கலாமுன்னு அதிகாரத்துல இருக்குற ஒரு கூட்டம் ரூம் போட்டு யோசிச்சிகிட்டு இருக்குது.

 இதை எல்லாம் தாண்டி நாட்டுல தினமும் நூத்துக்கணக்கான பிரச்சனை நடந்துகிட்டு இருக்குது.இதுக்கெல்லாம் கொதிக்காத இந்த கூட்டம் ஹர்பஜன்சிங்கை தடை செஞ்சதை கேட்டு கொதிச்சி போயி ரோட்டுல இறங்கி இருக்கு.

 பிரச்சனை இப்படி இருக்க CNN IBNல என்னடான்னா அவங்க அம்மாவை பேட்டி எடுக்குறாங்க, அவங்க பாட்டியை பேட்டி எடுக்குறாங்க,  பஞ்சாப்புல தலப்பா கட்டிட்டு ரோட்டுல யார் போனாலும், அவங்களுக்கு கிரிக்கெட் தெரியுதோ இல்லையோ அவங்களை எல்லாம் சுத்தி சுத்தி பேட்டி எடுக்குறாங்க.

களத்துல என்ன நடந்ததுன்னு யாருக்கு தெரியாது அதுக்குள்ள என் புள்ள தப்பே பண்ணலை, இதை எல்லாம் பாக்கும் பொழுது எனக்கு கோவம் கோவமா வருதுன்னு அவங்கம்மா(அந்தம்மாக்கு ஒரு 60-70 வயசாகும் அந்தம்மாவால சரியா பாக்க முடியுமான்னே தெரியலை) ஒரே சீன். ஏம்மா ஏன் ஏன் இந்த விளம்பரம் உங்களுக்கு?

 இது காலை நிலவரம் மதியதுக்கு மேல வேலை வெட்டி இல்லாம வூட்ல சும்மா இருக்குற கிரிகெட்டருங்க எல்லாம் மைக்கை எடுத்துட்டு ஆஸிக்களின் நிறவெறி, ICCயின் நிறவெறின்னு களத்துல ஆடுனாங்களோ இல்லையோ வாயால வடை சுட்டுட்டு கிளம்பிடுவாங்க.

 எங்க அடுத்த டெஸ்டு ஆடுனா சுலுகெடுதுடுவானுங்களோன்னு, நம்மாளுங்களும் இந்த பிரச்சனை முடியிற வரைக்கும் அடுத்த ஆட்டங்களை ஆட மாட்டோமுன்னு நம்மாளுங்க ஜகா வாங்கிடாங்க.

ஆஸ்திரேலியாகாரனுங்க வாய் கொழுப்பெடுத்தவனுங்க, அவனுங்ககிட்ட வாயும் இருக்கு ஆட்டமும் இருக்கு நமக்கு அப்படியா? பத்து பேர் சேர்ந்து 50 ஓவர் ஆட துப்பு இல்லாத நமக்கு எதுக்கு இந்த் வாய். முதல்ல ஆடுங்க அப்புறம் பேசுங்க.

ரோட்டுல இறங்கி போராடிகிட்டு இருக்கிற அண்ணனுங்களா அவரு ஆடுனாலும் காசு ஆடாட்டியும் காசு நமக்கு அப்படியா? நம்ம வாங்குற அஞ்சி பத்துக்கு இது தேவையா? போங்க போயி உருப்படுற வழியை பாருங்க.

8 Comments »

 1. அண்ணே…ஒன்னும் சொல்ல முடியாதுண்ணே…நாமளாச்சும் இவுங்களை போல மாறமால் இருப்போம்..!

  \\ஆஸ்திரேலியாகாரனுங்க வாய் கொழுப்பெடுத்தவனுங்க, அவனுங்ககிட்ட வாயும் இருக்கு ஆட்டமும் இருக்கு நமக்கு அப்படியா? பத்து பேர் சேர்ந்து 50 ஓவர் ஆட துப்பு இல்லாத நமக்கு எதுக்கு இந்த் வாய். முதல்ல ஆடுங்க அப்புறம் பேசுங்க.\\

  இது மேட்டர்..அவுங்களுக்கு கையிலும் திறமை இருக்கு..வாயிலும் திறமை இருக்கு.

  \\ரோட்டுல இறங்கி போராடிகிட்டு இருக்கிற அண்ணனுங்களா அவரு ஆடுனாலும் காசு ஆடாட்டியும் காசு நமக்கு அப்படியா?\\

  ஒரு விளம்பரத்துக்கு எம்புட்டு வாங்குறானுங்ன்னு எத்தனை முறை சொன்னாலும் நம்ம மக்கள் அதையும் படிச்சிட்டு இப்படி தான் செய்வாங்க…;)

 2. சந்தோஷ்,
  உங்களது வித்தியாசமான கண்ணோட்டம் தான், கூட்டத்துல நாம தனியா தெரிய வேணாமா என்ன ? 😉

  கிரிக்கெட் ரத்தத்துலே ஊறிட்டதனால், அது தொடர்பான மேட்டர்ல, கொஞ்சம் சீக்கிரம் டென்ஷன் ஆயிடுவேன், இருந்தாலும், இந்த விஷயத்தில் ‘நிற வெறியர்’ என்ற tag-ஐ எதிர்க்காமல் இருக்கவே கூடாது, அதுவும் அந்த குற்றச்சாட்டு ஆஸ்திரேலிய ராஸ்கல்களிடமிருந்து வரும்போது 😦

  எ.அ.பாலா

 3. வாப்பா தம்பி கோபி,
  அவங்க விளம்பரத்துக்கு வாங்குற சம்பளத்தை அரசல் புரசலா கேள்விப்பட்டாளே நமக்கு ஜுரம் வந்துவிடும். இதுல உண்மையான சம்பளத்தை அவங்க சொல்லிட்டா அம்முட்டுதான்.

 4. //உங்களது வித்தியாசமான கண்ணோட்டம் தான், கூட்டத்துல நாம தனியா தெரிய வேணாமா என்ன ?//
  :))
  //இந்த விஷயத்தில் ‘நிற வெறியர்’ என்ற tag-ஐ எதிர்க்காமல் இருக்கவே கூடாது,//
  தப்பு பண்ணி இருந்தா யாராக இருந்தாலும் அது தப்பு தானே தல. ஹர்பஜன் அவரை குரங்குன்னு கூப்பிட்டு இருந்தா அது தப்பு தானே? அஸிக்கள் நிறவெறியர்கள் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. ஆனா நம்மளும் அவங்க லெவலுக்கு இறங்கிபோகணுமா? இப்ப உலகமே பாண்டிங்குக்கு ஆப்பு அடிச்சிட்டு இருக்கு, நாளைக்கு நம்மளுக்கு இது மாதிரி ஒரு நிலைமை தேவையா?

 5. 5
  raams Says:

  cricket thadai seiya mudiyalaye.
  ban pannanum
  oru team sprit illatha game,

  Raams

 6. 6
  aswin Says:

  Thalaivarey………….
  pattaya kelappittinga ponga

 7. 7
  aswin Says:

  ur comment is very good.furthur comments are welcomed.this blog is very humourous as well as useful
  bye……….

 8. அப்படியே நம்ம பக்கமும் வந்துட்டு போங்க

  கட்டபொம்மன் kattapomman.blogspot.com


RSS Feed for this entry

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: