Archive for the ‘அரசியல்’ Category

நல்லாஇருங்கடா

ஜனவரி 7, 2008

ஹர்பஜன்சிங்கை மூன்று டெஸ்டு போட்டிகளில் இருந்து தடை செய்ததை எதிர்த்து போராட்டம் — செய்தி

நந்திகிரமுல நூத்துக்கணக்கான பேர் செத்துப்போனாங்க, ஒரு பொம்பளை புள்ளையை ஒட்டு துணி இல்லாம தெருவுல ஓட விட்டாங்க(அந்த புள்ளைக்கு துணி குடுக்குறதை விட்டுட்டு அதையும் சுத்தி சுத்தி படம் புடிச்சி TRB ரேட்டிங்கை ஏத்திகிட்டாங்க நம்ம மானங்கெட்ட பத்திரிக்கைகாரனுங்க).

இது வரைக்கும் நூத்துக்கணக்கான விவசாயிங்க சோத்துக்கு வழியில்லாம செத்து போயி இருக்காங்க.

நாட்டை எப்படிடா அமெரிக்காகாரனுக்கு அடகு வெக்கலாமுன்னு அதிகாரத்துல இருக்குற ஒரு கூட்டம் ரூம் போட்டு யோசிச்சிகிட்டு இருக்குது.

 இதை எல்லாம் தாண்டி நாட்டுல தினமும் நூத்துக்கணக்கான பிரச்சனை நடந்துகிட்டு இருக்குது.இதுக்கெல்லாம் கொதிக்காத இந்த கூட்டம் ஹர்பஜன்சிங்கை தடை செஞ்சதை கேட்டு கொதிச்சி போயி ரோட்டுல இறங்கி இருக்கு.

 பிரச்சனை இப்படி இருக்க CNN IBNல என்னடான்னா அவங்க அம்மாவை பேட்டி எடுக்குறாங்க, அவங்க பாட்டியை பேட்டி எடுக்குறாங்க,  பஞ்சாப்புல தலப்பா கட்டிட்டு ரோட்டுல யார் போனாலும், அவங்களுக்கு கிரிக்கெட் தெரியுதோ இல்லையோ அவங்களை எல்லாம் சுத்தி சுத்தி பேட்டி எடுக்குறாங்க.

களத்துல என்ன நடந்ததுன்னு யாருக்கு தெரியாது அதுக்குள்ள என் புள்ள தப்பே பண்ணலை, இதை எல்லாம் பாக்கும் பொழுது எனக்கு கோவம் கோவமா வருதுன்னு அவங்கம்மா(அந்தம்மாக்கு ஒரு 60-70 வயசாகும் அந்தம்மாவால சரியா பாக்க முடியுமான்னே தெரியலை) ஒரே சீன். ஏம்மா ஏன் ஏன் இந்த விளம்பரம் உங்களுக்கு?

 இது காலை நிலவரம் மதியதுக்கு மேல வேலை வெட்டி இல்லாம வூட்ல சும்மா இருக்குற கிரிகெட்டருங்க எல்லாம் மைக்கை எடுத்துட்டு ஆஸிக்களின் நிறவெறி, ICCயின் நிறவெறின்னு களத்துல ஆடுனாங்களோ இல்லையோ வாயால வடை சுட்டுட்டு கிளம்பிடுவாங்க.

 எங்க அடுத்த டெஸ்டு ஆடுனா சுலுகெடுதுடுவானுங்களோன்னு, நம்மாளுங்களும் இந்த பிரச்சனை முடியிற வரைக்கும் அடுத்த ஆட்டங்களை ஆட மாட்டோமுன்னு நம்மாளுங்க ஜகா வாங்கிடாங்க.

ஆஸ்திரேலியாகாரனுங்க வாய் கொழுப்பெடுத்தவனுங்க, அவனுங்ககிட்ட வாயும் இருக்கு ஆட்டமும் இருக்கு நமக்கு அப்படியா? பத்து பேர் சேர்ந்து 50 ஓவர் ஆட துப்பு இல்லாத நமக்கு எதுக்கு இந்த் வாய். முதல்ல ஆடுங்க அப்புறம் பேசுங்க.

ரோட்டுல இறங்கி போராடிகிட்டு இருக்கிற அண்ணனுங்களா அவரு ஆடுனாலும் காசு ஆடாட்டியும் காசு நமக்கு அப்படியா? நம்ம வாங்குற அஞ்சி பத்துக்கு இது தேவையா? போங்க போயி உருப்படுற வழியை பாருங்க.

புலிக்கு பொறந்தது பூனையாகுமா?

ஒக்ரோபர் 23, 2007

கொஞ்ச நாளைக்கு முன்னாடி சி.என்.என் ஜபிஎனின் டெவில்ஸ் அட்வகேட் நிகழ்ச்சியில் கனிமொழியை பேட்டி கண்டார்கள். கனிமொழி கரணின் கேள்விகளுக்கு நன்றாகவே பதில் சொன்னார்கள். நான் பார்த்த வரையில் அந்த நிகழ்ச்சியில் கேள்விகள் மிக சாதாரணமாக இருந்தன. பல இடங்களில் கனிமொழியை  அட்டாக் செய்ய வாய்ப்பு கிடைத்த பொழுதும் கரண் அதை அப்படியே விட்டு விட்ட மாதிரி தான் எனக்கு தெரிகிறது. சரி அதை விடுங்க அதுல ஒரு முக்கியமான கேள்வி,

பந்த் அன்று உச்ச நீதி மன்றம் கண்டனம் எழுப்பியவுடன் உங்க தந்தையும் மற்ற அமைச்சர்களும் உண்ணாவிரத பந்தலை விட்டு ஏன் வெளியேறி அலுவலகம் சென்றனர்? காலையில் இருந்து ஓடாத பஸ் உடனடியாக ஓடத்துவங்கியது ஏன்? மூடிய கடைகள் திடீரென திறந்த மாயம் என்ன?

அதுக்கு உட்டாங்க பாருங்க ஒரு பதில் பொதுமக்கள்(யாருங்க அந்த பொது சனம் இங்க வாங்க சாமி கொஞ்சம்?) மற்றும் அரசியல் தலிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர் பந்தலுக்கு திரும்ப வரவில்லையாம். மேலும் தலிவரு உண்ணாவிரதம் இருக்க போகிறேன்னு எப்ப சொன்னாரு? அவரு அதை துவக்கி வைக்கத்தான் வந்தார், நீயூஸ் மீடியா தான் அதை திரித்து வெளியிட்டு விட்டதுன்னு ஒரு அந்தர் பல்டி அடிச்சாரு பாருங்க. இப்ப சொல்லுங்க புலிக்கு பொறந்தது பூனையாகுமான்னு?

இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் தலிவரோட வாரிசுங்க, பேரப்புள்ளைங்களும் கலந்துகிட்டு இங்லீபீசிலையும் ஹிந்திபீசிலையும் பொளந்து கட்டும் பொழுது ஹிந்தி ஒழிப்பு போராட்டம் நியாபகத்துக்கு வந்து தொலைக்குது.

206. இது தாங்க உண்மை

ஒக்ரோபர் 1, 2007

சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று உண்மையான அக்கரை உள்ளது போல தி.மு.காவும் அதன் கூட்டணி கட்சிகளும் நாடகமாடுகின்றன அவர்களுக்கு ஈடுஈணையாக எதிர்கட்சிகளும் நாடகம் ஆடுகின்றன. உண்மையான அக்கரை இருந்தால், இந்த திட்டம் விரைவாக முடிக்கபடாவிட்டால் நாங்கள் எங்களின் ஆதரவை வாபஸ் வாங்கிக்கொள்வோம் என்று சொல்ல வேண்டியது தானே? பேரனுக்கு அமைச்சர் பதவி பெற்றுத்தர டில்லிக்கு நடையா நடந்தவர், தமிழ்நாட்டின் வாழ்வாதார பிரச்சனையான இந்த பிரச்சனைக்கு ஒரு பந்த்/உண்ணாவிரத்த்தோட முடிச்சிக்கிட்டாரு.

அதையாவது ஒழுங்கா செய்தாரா? பதவி என்பது எனக்கு துண்டு போல, மானம் என்பது வேட்டி (எனக்கு சரியாக தெரியவில்லை இது போன்ற பொருள் தரக்கூடிய வாக்கியம் ஒன்றை சொல்லி இருந்தார்) போல அப்படின்னு சொன்னவரு. ஆனா இன்னிக்கு பாருங்க பந்த் நடத்தியது தவறு, தமிழகத்தில் ஏன் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த கூடாது அப்படின்னு கேட்ட உடனே, நம்ம தலைவரு துண்டை கையில புடிச்சிகிட்டு உண்ணாவிரத பந்தலில் இருந்து கிளம்பி போயி கோட்டையில உட்கார்ந்து கொண்டார். ஏன் சாமி எனக்கு பதிவி போனாலும் பரவாயில்லை சேது சமுத்திர கால்வாய் தான் முக்கியம் அப்படின்னு முழு நாளும் உக்கார வேண்டியது தானே? இவரு கதை தான் இப்படின்னா,

பிஜேபி ஆட்சியில் இந்த சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்த பொழுது இன்னொரு தலைவரு, வெற்றி வெற்றி தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனையை நிறைவேற்றி விட்டோம், அப்படின்னு அழுகாச்சியோட கூவிகினே தமிழ்நாடு முழுவது சுத்தினாரு, அப்ப தெரியலையா அவருக்கு ராமர் பாலத்தை இடிப்பாங்கன்னு, இப்ப கட்சி மாறின உடனே சகோதரி பாசத்துல அய்யோ பாலத்தை உடைக்கிறாங்களே எப்பேர்பட்ட பாலம் அப்படின்னு ஒரே சவுண்டு இவரு.

அம்மா என்னடான்னா சீன் ஓப்பனிங்கல சவுண்டே இல்லாம இருந்தாங்க, ராமரு சீன்ல வந்த உடனே, அய்யோ இடிக்கிறாங்களே இடிக்கிறாங்களே அப்படின்னு சவுண்டு, அடுத்து பந்த் நடத்தறாங்களேன்னு ஒரு சவுண்டு. அடுத்து ஆளுங்கட்சிகளே சும்மா இருக்கும் பொழுது இவங்க “பந்த் வெற்றி பந்த் வெற்றி அப்படின்னு” சவுண்டு விட்டு, ஆட்சியை கவிழ்க்க பாக்குறாங்க.

நல்ல வேளை இந்த விசயத்துல கூத்தாடிங்க அவ்வுளவா சவுண்டு விட்டு மாட்டிகலை, இல்லாட்டி அவனுங்க சாயமும் இதுல வெளுத்து போயி இருக்கும்.

இப்படி அரசியல கட்சிங்க தான் இருக்காங்கன்னா, நம்ம மக்களை பாருங்க அவங்க மாநிலத்தின் முதல்வரின் தலைக்கு ஒரு சாமியார் விலை வைக்கிறார் அதை எதிர்த்து ஒருத்தன் கூட சவுண்டு விடலை(ஒரு வாரம் கழிச்சி ஏதோ நாலு கல்லு வுட்டாங்க அம்முட்டு தான்). இதுவே மத்த மாநிலங்களில் நடத்து இருந்த என்ன நடத்து இருக்கு யோசித்து பாருங்க.

இந்த சேது சமுத்திர திட்டத்துல ரெண்டு மேட்டர் தெளிவா புரியுதுங்க, ஒண்ணு தமிழன் மானெங்கெட்டவன், கோழை, சுயநலவாதி, ஒற்றுமை இல்லாதவன், எவன் எக்கேடு கேட்டா நமக்கு என்ன அப்படின்னு இருப்பான். இன்னொன்னு தமிழநாட்டோட முன்னேற்றத்துக்கு எந்த கட்சியும் பாடுபடலை.

சேது சமுத்திர திட்டம் ஒரு உதவாக்கரை திட்டம் அப்படின்னு நரேன் இங்க அழகா சொல்லி இருக்காரு போயி படிச்சித்தான் பாருங்க.

203. பரதன் இந்த பொழப்புக்கு நல்லா வாயில வருது

ஜூலை 11, 2007

Devil’s advocate என்ற நிகழ்ச்சியில் கரண் தப்பார் CPI கட்சியின் இந்திய பொது செயலாளர் பரதனுடன் பேட்டி காண்கிறார். இந்த பேட்டி சாராம்சம் பிரதீபா பாட்டீல் போன்ற ஒரு ஊழவாதி, பிற்போக்கு சிந்தனை கொண்ட ஒரு பெண் இந்திய ஜனாதிபதியாக போட்டி இட தகுந்தவரா? நீங்களே இந்த வீடியோவை பாருங்க பரதன் அவரிடம் என்ன பாடு படுகிறார் என்று.

முதல் வீடியோ

இரண்டாம் வீடியோ

மூன்றாம் வீடியோ

இந்த பேட்டி முழுவதும் கரண் மூன்றே மூன்று குற்றச்சாட்டுகளை தான் வைக்கிறார்.

1. பிரதீபா தலைவராக இருந்த ஒரு மகளரிருக்கான முன்னேற்ற வங்கியில் அவரது குடும்பத்தினர் கோடிக்கணக்கில் கடன் வாங்கி வங்கி திவாலாக காரணமாக இருந்து இருக்கின்றனர். அவரது சகோதரன் சுமார் 20 லட்ச ரூபாய் அளவுக்கு தொலைபேசியை பயன்படுத்தி இருக்கிறார், SC/ST பிரிவினருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட வேலையை தன்னுடைய சொந்த பந்தங்களுக்கு பெற்று தந்து இருக்கிறார். அகமதாபாத் நீதிமன்றத்தில் இவர் மீது வழக்கு தொடரப்பட்டு அதில் இவர் 8வது குற்றவாளியாக இருக்கிறார். இப்படிப்பட்ட ஊழல் வாதியை, நிர்வாக திறமையற்றவரை எநத அடிப்படையில் வேட்பாளராக தேர்ந்து எடுத்தீர்கள்?

பதில் : I. பிஜேபி காரனுங்க ஊழல் செய்யவில்லையா? காங்கிரஸ்காரனுங்க ஊழல் செய்யலையா? இவை எல்லாம் எதிர்கட்சியின் அவதூறு.

II. அவங்க அண்ணன் தம்பிங்க செய்த தப்புக்கு இந்த அப்பாவி பொம்பளை என்ன செய்வாங்க?

III. வழக்கு தானே தொடர்ந்து இருக்காங்க இன்னும் தீர்ப்பு வரவில்லையே?

2. பரம்பரை வியாதி உள்ளவர்களுக்கு கட்டாயமாக தடுப்பூசி போடப்படும் என்று பிரதீபா கூறி இருக்கிறார். இந்த செயலை நீங்கள் அனுமதிப்பீர்களா? நாளையே இவர் ஜனாதிபதியாகி இதை நாடு முழுவதும் செயல்படுத்த மாட்டார் என்பது என்ன நிச்சயம்?

பதில் I. இல்லை நான் இதை ஒத்துக்கொள்ள மாட்டேன். வழக்கம் போல ஜல்லி பதில்கள்.

3. ஒரு ஜனாதிபதி வேட்பாளர் தனக்கு ஆவிகளின் மீது நம்பிக்கை இருக்கிறது என்றும், 1969 ஆம் ஆண்டு இறந்த ஒருவருடன் பேசி இருக்கிறேன் என்றும், வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு கூறுகிறார் இதைப்பற்றி உங்களின் கருத்து என்ன?

பதில் I. முதலில் சிரிக்கிறார் பிறகு, காங்கிரஸ் பி.ஜே.பி கட்சியில் கூட இது போல இருக்கின்றனர் என்று கூறுகிறார்.

பதில் II. ஜனாதிபதியான பின்னாடி இது மாதிரி செய்ய மாட்டார் என்று கூறுகிறார்.

இறுதியாக கரண் கேட்கிறார். ஒரு Potentially ஊழல்வாதி, ஆவிகளை நம்பும் ஒரு பிற்போக்கு சிந்தனைவாதி, forced sterilization சிந்தனை உடைய ஒரு பெண்மணியை நீங்கள் இன்னும் வேட்பாளராக பரிந்துரை செய்கிறீர்கள்?

அதற்கு பரதன் கூறுகிறார் “அவருக்கு 40 வருட அரசியல் அனுபவம் இருக்கிறது”.

பரதன் போன்ற மூத்த அரசியல்வாதியிடமிருந்து இது போன்ற ஒரு பேட்டியை எதிர்பார்க்கவில்லை. கேவலமான சமாளிப்புக்கள், மொத்தத்தில் கம்யூனிஸ்டுகளும் திரவிட கட்சிகளுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்து உள்ளனர்.

பிரதீபாவின் நிலைமை தான் இப்படி என்றால் பைரவ் சிங்க ஷகாவத்தின் நிலைமை இன்னும் மோசம். காவலராக வேலை செய்து கொண்டு இருந்த பொழுது லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக அவரை பணிநீக்கம் செய்து இருக்கிறார்கள். அவர் முதல்வராக இருந்த பொழுது தவறான நடத்தை உள்ள பெண்களுக்கு பல முக்கிய பதிவிகளை அளித்தாக குற்றச்சாட்டு. இதற்கு பி.ஜே.பி தலைவர் ராஜ் நாத் சிங்கின் ஒரே பதில் “அவரை எனக்கு பல வருடங்களாக தெரியும் அவர் நல்லவர் வல்லவர். இது எல்லாம் எதிர்கட்சிகளின் திட்டமிட்ட குற்றச்சாட்டு”

so இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி ஒரு ஊழல்வாதி, பொது சொத்துக்களை குடும்பத்துடன் கொள்ளையடிக்கும், ஆவிகளுடன் பேசும் பழமைவாதி பெண்மணியா? அல்லது லஞ்சம் வாங்கும், பலான பெண்கள்க்கு பதவியை வாரி வழங்குபவரா என்பதே மில்லியன் டாலர் கேள்வி.

185. இந்த வார காமெடி சென்டரல்

மே 17, 2007

இந்த வார காமெடி சென்டரில் எந்த எந்த அரசியல்வாதிங்க காமெடி பண்ணி இருக்காங்கண்ணு பாக்கலாமா?

“எனக்கும் தினகரனுக்கும் சம்பந்தம் இல்லை” – தயாநிதிமாறன்.

நல்ல வேளை கலாநிதி மாறன் யாரு? சன் டிவி எந்த நாட்டுல இருந்து ஒளிபரப்புறாங்கன்னு கேக்கலை.தாத்தாவுக்கு இம்முட்டு போட்டியா இருக்குற இவரை விட்டுட்டு ஸ்டாலினை யாருப்பா வாரிசுன்னு சொல்றது.

“இளமை காலம் முதல் இன்று வரையிலும் பெரியாரின் கொள்கைகளை நானும் வீரமணியும் தொய்வின்றி கடைபிடிப்பதை எண்ணிக்கொண்டே இப்பொழுது வெளிவந்திருக்கின்ற “பெரியார்” படத்தை பார்க்கும் பொழுது …… “

— பெரியார் பற்றிய நினைவுகளை பற்றி கேட்ட பொழுது மஞ்சள் துண்டு கலைஞர் சொன்னவை இது.

தாத்தாவுக்கும் பேரனுக்கும் நடுவே கடுமையான போட்டி முடியலைடா சாமி. அட்லீஸ்டு அந்த மஞ்ச துண்டை எடுத்துவிட்டாவது சொல்லி இருக்கலாம்.

தண்ணியடித்தால் கட்சியை வீட்டு நீக்கம் – ராமதாஸ்

கட்சியில் மொள்ள மாறிங்க இருக்கலாம், அடியாளுங்க இருக்கலாம், பேட்டை ரவுடிங்க இருக்கலாம், தாதா இருக்கலாம், லஞ்சத்தில் ஊறி திளைச்சவங்க இருக்கலாம். ஒரு குடிகாரன் இருக்க கூடாதா? எங்க நம்ம ஆளை லஞ்சம் வாங்குபவர்கள் எல்லாம் கட்சியைவிட்டு நீக்கப்படுவார்கள் அப்படின்னு சொல்ல சொல்லுங்க பார்க்கலாம்.

நல்ல வேளை இதுவே அன்புமணியா இருந்தா குடிகாரங்க இருக்கலாம் ஆனா கட்சி மீட்டிங்குக்கு வரும் பொழுது “குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது” அப்படின்னு முதுகுலயும் முன்னாடியும் குத்திகிட்டு வரணும் அப்படின்னு சொல்லி இருப்பாரு.

184. ஒரே கல்லுல இரண்டு மாங்கா

மே 14, 2007

மாறனின் ராஜினாமா, கட்சியில் இருந்து விலக்கல் எல்லாமே ஒரு நாடகம் மாதிரி தோணுதுங்க. அமைதிப்படை படத்துல சத்தியராஜின் உள்ளாடை துவைப்பதில் ஏற்படும் சண்டை காட்சியை கொஞ்சம் நினைச்சி பாருங்க. ஏதாவது தோணுதா? ஏதாவது ஒரு பிரச்சனை வந்தா அதை மறக்க செய்ய ஏதாவது ஒரு சண்டையை உருவாக்கணும், இல்ல சாதி கலவரத்தை உண்டாக்கணும். சாதி கலவரம் உண்டாகி ஏதாவது இசகு பிசகாயி backfire ஆகிவிட்டால் மைனாரிட்டி ஆட்சி கவுந்துடும் அது மொத்த ஆப்பு ஆயிடும். மதுரையில் செத்த நாலு பேரு கலவரம், இதனால் கட்சிக்கு ஏற்பட்ட அவப்பெயரை துடைக்க ஏதாவது ஒரு stunt அடிக்கணும். அது ஏன் இதுவா இருக்க கூடாது? யோசிச்சி பாருங்க இதனால் உண்டாகும் பயன்

1. கட்சிக்கு உண்டான அவப்பெயரை சுலபமா துடைச்சிடலாம். எத்தனை பேர் செத்தான் அதை பத்தி எவனாவது கவலை பட்டானா? அய்யோ மாறன் பதவி போயிடிச்சி அப்படின்னு இல்ல ஆகிப்போச்சி இப்ப.

2. இப்ப கனிமொழியை சுலபமா மந்திரி ஆக்கிடலாம். அப்படியே இன்னொரு stunt அடிச்சி இருந்தால் மிச்ச மீதி இருக்குற பேரன் பேத்தி நிதிகளும் மந்திரிகள் ஆயிடலாம்.

3. எவன் எவன் குடும்பத்துக்கு எதிரா இருக்கிறான் அப்படின்னு இப்ப தெரிந்துவிடும். பொன்முடி எல்லாம் மேட்டர் தெரியாம சவுண்டு விட்டுடாரு, விஷயம்/கலைஞரை பத்தி தெரிந்த பெரிய தலைங்க எல்லாம் கொஞ்சம் அடக்கியே வாசித்து இருக்காங்க. சவுண்டு விட்ட பார்ட்டிங்களை எல்லாம் இதுக்கு மேல ஒரம் கட்டலாம்.

4. நாளைக்கே எவனாவது கேள்வி கேட்டா “பாரீர் உடன்பிறப்பே கட்சி என்று வந்து விட்டால் சொந்தமாவது பந்தமாவது எல்லாருக்கும் ஒரே சட்டம் அப்படின்னு ஜல்லி அடிச்சிகலாம். உடனே திமுக குஞ்சுகள் அனைத்தும் புல்லரிச்சி போயி கோஷம் போட வசதியாக இருக்கும்”

இது எல்லாம் எனக்கு தெரிஞ்சி விழும் மாங்காஸ். எனக்கே இம்முட்டு தெரியுதே அரசியல் குரு கலைஞரு இன்னும் எம்முட்டு இருக்கோ? கொஞ்ச நாள் கழிச்சி தாத்தா என்னய மன்னிச்சிடு தாத்தா அப்படின்னு தயாநிதி அழுதுகிட்டே மன்னிப்பு கேப்பாரு. உடனே தலைவரும் “உடன்பிறப்பே தவறு செய்வது மனித இயல்பு அதை மன்னிப்போம் அப்படின்னு இலக்கிய நயத்தோடு டயலாக் அடிச்சிட்டு” தயாநிதியை கட்சியில் சேத்துகிட்டு அவரை அமைச்சர் ஆயிடுவாரு. இப்ப விசிலடிச்ச மக்கள் அதுக்கும் விசில் அடிப்பாங்க. வாழ்க சனநாயகம்.