Archive for the ‘ஊழல்’ Category

202. புதிய உலக அதிசயங்களும் ஏமாளி இந்தியர்களும்

ஜூலை 8, 2007

புதிய உலக அதிசயங்களை தேர்ந்து எடுக்குறேன் அப்படின்னு சுவிட்சர்லாந்தை ஒரு தனியார் நிறுவனம் new7wonders கிளம்பி இருக்கு. அவங்க யாரு அப்படிங்கறத்துக்கு சரியான விளக்கம் இல்ல (ஆனால் அவர்கள் தாங்கள் ஒரு profitable organisation என்பதை தெளிவாக கூறி இருக்கின்றனர்.). எந்த நாட்டின் அரசாவது இவர்களை அங்கீகரித்து இருக்காங்களா? அப்படி எதுவும் தெரியலை. ஜ.நாவும் இவங்களை அங்கீகரிச்ச மாதிரி தெரியலை. ஆனாலும் உலக அதிசியங்களை தேர்ந்து எடுக்குறேன் அப்படின்னு ஒரு ஏகப்பட்ட சுற்று தேர்தலை நடத்தி பொதுமக்களிடம் இருந்து ஒரு கணிசமான தொகையை கறந்துவிட்டாங்க. 1999 ஆம் வருசம் ஆரம்பித்த இந்த சுரண்டல் நேற்று முடிந்தது.

இவர்களின் தேர்தலை முறையை பாருங்களேன். யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் உலக அதிசயங்களாக பரிந்துரை செய்யலாம். அப்புறம் ஓட்டெடுப்பின் வாயிலாக உலக அதிசயங்களை தேர்ந்து எடுப்பதாக சொல்லி இருக்கின்றனர். ஆனால் ஒட்டெடுப்பு முறையில் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஒட்டளிக்க எவ்விதமான தடையும் இல்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட ஒட்டுக்களை அளிக்க வேண்டுமானால் தொலைபேசி அல்லது குறுஞ்செய்தி வசதிகளை உபயோகப்படுத்துங்கள் என்று அவர்களின் தளத்திலேயே பரிந்துரை செய்துள்ளனர். ஏனெனில் நீங்கள் தொலைபேசி அல்லது குறுஞ்செய்தி வழியாக ஒவ்வொரு முறையும் ஓட்டளிக்கும் பொழுதும் இவர்களுக்கு ஒரு கணிசமான தொகை செல்கிறது இதன் மூலம் இந்நிறுவனம் பல கோடி வருவாயை ஈட்டி உள்ளது.

இந்த போட்டியின் முடிவுகளை இவர்கள் நேற்று அவர்களின் இணைய தளத்தில் அறிவித்து இருக்கின்றனர், மொத்தம் கிடைத்த ஓட்டுக்கள் எத்தனை அது போன்ற எந்த ஒரு விபரமும் இல்லை. அதே போல வெற்றி பெற்ற இடங்களை பாருங்கள் பெரும்பாலும் தென் அமெரிக்க நாடுகளில் உள்ள இடங்களே (மொத்தம் 7 அதிசயங்களில் 3 தென் அமெரிக்க நாட்டில் உள்ளவை). ஏனெனில் அந்த நாடுகளில் உள்ளவர்கள் தான் அதிகபடியாக ஒட்டளித்து உள்ளனர்.

இந்த நிறுவனத்துக்கு ஜக்கிய நாடுகளின் (பொதுவாக இந்த உலகத்தின் பழமையான இடங்களை அங்கீகாரம் செய்வது ஜக்கிய நாடுகளின் ஒரு உபநிறுவனமான UNESCO – United Nations Education, Scienticfic and Cultural Organisation ஆகும்.) அங்கீகாரமோ இல்லை உலக நாடுகளின் அங்கீகாரமோ இல்லை அப்படி இருந்த பொழுதும் எப்படி இந்த ஊடகங்கள் அவங்க போட்ட ஜந்து,பத்து பிச்சைக்கு ஆசைப்பட்டு இதை இப்படி தாங்கிப்பிடிக்கின்றன என்று தெரியவில்லை? உள்ளூர் ஊடகம் தினமலர் முதல் கொண்டு சர்வதேச உடகங்கள் வரை இடத்துக்கு தகுந்த மாதிரி உங்க ஊருக்கு ஓட்டு போடுங்க அப்படின்னு மக்களை உணர்வுப்பூர்வமாக ஏமாற்றி புண்ணியம் தேடிக்கொண்டது. சில பொட்டி தட்டும் கலைஞர்களும் உணர்ச்சி பெருமும் இமெயில் மூலமாக இதை பலருக்கு கொண்டு சென்று புண்ணியம் தேடிக்கொண்டனர்.

இதுல ஒரு காமெடி என்னானா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் முதல் 200 இடங்களில் வந்ததும். அதுக்கு தமிழக அரசே கோவிலுக்குள் ஓட்டளிக்க வசதி செய்து கொடுத்தது தான். மீனாட்சி அம்மன் கோவில் எந்த வகையில் architectural acheivement என்று தெரியவில்லை. அப்படி பார்த்தால் தஞ்சை பெரிய கோவில், இராமேஸ்வரம் கோவில் போன்றவை ஏன் தேர்ந்தெடுக்க வில்லை? மதுரை மீனாட்சி கோவிலில் கூட்டம் அதிகமாக வருகிறது நல்லா கல்லா கட்டலாம் என்பதாலா?

இதுல செம காமெடி எகிப்திய பிரமீடுகள் 7 உலக அதிசயங்களுல் இல்லையாம். வாக்கெடுப்பு முடிந்த உடன் கிரேக்க பிரமீடுகள் முதல் 7 இடங்களில் இடம்பெறாதது கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானது. அதைப்பற்றி கேட்ட பொழுது அந்த நிறுவனத்தின் செய்தியாளர் சொல்கிறார் “We absolutely had no problem with this,” Viering told the AP. As of Saturday, there will be eight world wonders including the Pyramids of Giza, she added. அடடா இது தெரிஞ்சி இருந்தா நாலு லாரியில் ஆளுங்களை கூட்டிட்டு போயி அவனுங்களை மிரட்டி எங்க தாத்தாவோட பழைய வீட்டையும் இதுல சேர்த்து இருப்பேனே.

அடுத்தா இவனுங்க உலகத்தின் இயற்கையால் ஏற்படுத்தப்பட்ட இடங்களுக்கான தேர்தலை துவக்கி இருக்கிறார்கள். எவனாவது ஒரு புண்ணியவான் கூவம் நதியையும் அதன் நதிக்கரையையும் அதுல சேர்த்துவிட உள்ளூர் ஊடகங்களும் அதை ஊதிவிடும், வெட்டியா இருக்கும் பொட்டி தட்டும் கோஷ்டி அதுக்கும் நெஞ்சை நக்குற மாதிரி ஒரு இமெயிலை ரெடி பண்ணி fwd பண்ணும். தேர்தலுக்கே ஓட்டு போடாத உண்மை இந்தியர்கள் அதையும் உண்மையென நம்பி அதுக்கு கைகாசு போட்டு ஓட்டுப்போடுவான் நல்லா இருங்கடா.

182. சாப்டுவேர் கம்பெனிகளின் Foundationகள்

மே 4, 2007

பொதுவா எல்லா கணிப்பொறி நிறுவனங்களுமே foundations என்கிற பெயரில் ஒரு சமுதாய நற்பணிகள் செய்வதற்காக ஒரு துணை நிறுவனங்கள் அமைத்துக்கொள்கின்றன. அப்படி அமைத்துக்கொண்டு அவர்கள் அடிக்கும் கூத்துக்கு ஒரு அளவே கிடையாது. எனக்கு தெரிந்த நிறுவனத்தில் பெண்களுக்கு என்றே ஒரு அமைப்பு உண்டு அதுல சமூக சேவை செய்து நான் கேள்விப்பட்டது இல்லை. அப்படியே இருந்தாலும் கம்பெனிக்கு பயன்படாத ஓட்டை கம்யூட்டர்கள் 50ஜ இவங்களுக்கு அளித்தோம் அவங்களுக்கு அளித்தோம் அப்படின்னு பெரிய பெரிய விளம்பரத்துடன் இவர்கள் அளிக்கும் charity மாதிரியானவை.

ஆனா மாசம் தவறாம கோலப்போட்டி, மாறுவேடப்போட்டி இந்தப்போட்டி அந்தப்போட்டி என்று நடத்துவார்கள். தீபாவளி பொங்களுக்கு பக்கத்துல இருக்குற அனாதை இல்லங்களுக்கு பட்டாசு குடுப்பாங்க. இந்த அமைப்பு கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி அட்லாண்டாவில் ஒரு கூட்டம் ஏற்பாடு. அதில் கலந்து கொள்ள இந்தியாவில் இருந்து அந்த அமைப்பின் தலைவி வந்து இருந்தாங்க. கொடுமையை பாருங்க இங்க வந்து அந்த அம்மா செய்தது என்ன தெரியுமா குழந்தைகளுக்காக நடந்த மாறு வேடப்போட்டியில் ஜெயித்தவர்களுக்கு பரிசு அளித்தது. இதுக்காக அந்த அம்மா இந்தியாவுல இருந்து வந்து இருந்தாங்க.

வந்தது பெரிய இடம் ஆச்சே (பொதுவா இது போன்ற அமைப்புக்களுக்கு அந்த கம்பெனியின் CEO பொண்டாடி புள்ளைங்க மற்றும் Board Memberகளின் சொந்த பந்தங்கள் தான் நிர்வாக பொறுப்பில் இருப்பார்கள்) உங்களுக்கே தெரியும் விமானத்துல முதல் வகுப்பு, மினிமம் 5 நட்சத்திர ஹோட்டல், வந்தவங்க சும்மா இருப்பாங்களா அவங்க சுற்றமும் நட்பும் இங்கன பல மாநிலங்களில் இருப்பாங்க அவங்களை எல்லாம் நேரில் பார்த்து குசாலம் விசாரிப்பு, அப்படியே இங்கன எங்க எல்லாம் சுத்தி பார்க்க முடியுமோ அத்தைனையும் பார்த்துட்டு போனாங்க. எல்லாம் யாரு அப்பன் ஊட்டு காசு என்னையும் உங்களையும் மாதிரியான ஆட்கள் ராத்திரி பகலா உழைச்சி கொட்டினதை, இவனுங்க foundation அப்படிங்கிற பெயரில் இப்படி கூத்து அடிக்கிறானுங்க.

இவங்க இப்படி வாழ்றாங்க. அதுவே ஒரு சாதாரண employee என்ன கேட்டாரு தெரியுமா, கைக் குழந்தை இருக்குங்க இங்க இருந்து நேரடியா சென்னை போகிற விமானத்தில் ஒரு டிக்கெட் எடுத்து குடுங்க அப்படின்னு அதுக்கு “No No Company Policy doesnt allows that” அம்முட்டு தான் ஒரு வரி பதில் 50 stop overகளுடன் நடந்து போயி இருந்தாலும் நிம்மதியா போயி இருக்கலாம் அப்படின்னு தோணும் அளவுக்கு சலிப்பையும் வலியையும் ஏற்படுத்தக்கூடிய ஒரு விமான பயணம்.

கேட்க ஆள் இல்லை அப்படி கேட்டாலும் companyயின் Internet Policyக்கு எதிராக நீ போக கூடாத தளத்துக்கு போனாய் ஒழுங்க resignation letter குடுத்துட்டு ஓடிப்போயிடு இல்லாட்டி நாங்க வேலையை விட்டு தூக்கிடுவோம் அப்படின்னு அன்பா வேலையை விட்டு தூக்கும் பண்பாளர்கள். இல்லாட்டி இருக்கவே இருக்கு யாருக்குமே புரியாத, தொழிலாளியை வேலையை விட்டு தூக்க மட்டுமே பயன்படுத்தப்படும் company ethics. ஆடுங்கடா ஆடுங்க இன்னும் எம்முட்டு நாள் தான்.

இதை எல்லாம் ஏன் சொன்னேன் என்றால் Infosys நாராயண மூர்த்தி பற்றி எனக்கு நல்ல அபிப்ராயம் இருந்தது, அவரை அடுத்த ஜனாதிபதியா தேர்ந்து எடுக்கலாம் அப்படின்னு சொன்ன தளத்துக்கு எல்லாம் போயி ஓட்டு போட்டேன், இமெயிலை மெயிலே அனுப்பாதவனுக்கு எல்லாம் forward செய்தேன். அவரோட சந்தியை இங்க (இந்த பக்கத்தில் கொஞ்ச கீழே போனால் “Charity Narayan Murthy Style”, “Cornell loves Narayana Murthy” போன்ற சுட்டிகளை படிச்சி பாருங்க, முடிந்தால் மொத்த கதையையும் படிச்சி பாருங்க.)எப்படி சிரிக்க வெச்சி இருக்காங்க பாருங்க.

கோடிக்கணக்கான வருமானம் 150% வரை லாபம் கணக்கு கேட்க ஆள் இல்லை, லஞ்சமும் ஊழலும் கணிப்பொறி நிறுவனங்களில் தலை தூக்க ஆரம்பித்து விட்டது. படித்தவர்கள் வந்தால் லஞ்சமும் ஊழலும் குறைந்துவிடும் அப்படிங்கிறது எல்லாம் சும்மாங்க மனுசன் இருக்குற வரைக்கும் அதை எல்லாம் ஒண்ணுமே செய்ய முடியாதுங்க.