Archive for the ‘கருத்து கந்தசாமி’ Category

தமிழ்நாட்டின் அடுத்த பெண் முதல்வரின் பேட்டி

திசெம்பர் 12, 2009

சின்ன திரை புகழ் சே சே..பல விபச்சார வழக்குகள் புகழ் சே சே.. மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில செயலர் புவனேஸ்வரி தேர்தலில் போட்டியிட்டு வென்று  சமூதாயத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எதிர்த்து போராடுவாராமா.தமிழ்நாட்டு பெண்களே உங்களுக்கு ஒரு விடிவு காலம் பிறந்து விட்டது, உங்க குறைகளை தீர்க்க ஒரு ஜான்சி ராணி கிடைத்துவிட்டாரு. அடுத்த தேர்தலில் எப்படியாச்சும் வெற்றி பெற வெச்சிடிங்கன்னா உங்க குறைகள் தீர்ந்துவிடும்.முழுவீடியோவையும் இங்க பாத்து பிறந்ததன் பலனை அடைவிங்களாமா.

அப்பாவி அய்யாசாமி : ஏண்ணே சமூக சேவை செய்றவங்களுக்கு தானே கட்சி பதிவி எல்லாம் தருவாங்க?

கருத்து கந்தசாமி : ஏண்டா கூறு கெட்ட குக்கரு இவங்க ஆண் சமூதாயத்துக்கு செய்யாத சேவையாடா?

டிஸ்கி: கருத்து கந்தசாமியோட கருத்து சும்மா நகைச்சுவைக்காகவே சொல்லியிருக்கேன் யாரோட மனசையும் புண்படுத்த அல்ல.

நல்லாஇருங்கடா

ஜனவரி 7, 2008

ஹர்பஜன்சிங்கை மூன்று டெஸ்டு போட்டிகளில் இருந்து தடை செய்ததை எதிர்த்து போராட்டம் — செய்தி

நந்திகிரமுல நூத்துக்கணக்கான பேர் செத்துப்போனாங்க, ஒரு பொம்பளை புள்ளையை ஒட்டு துணி இல்லாம தெருவுல ஓட விட்டாங்க(அந்த புள்ளைக்கு துணி குடுக்குறதை விட்டுட்டு அதையும் சுத்தி சுத்தி படம் புடிச்சி TRB ரேட்டிங்கை ஏத்திகிட்டாங்க நம்ம மானங்கெட்ட பத்திரிக்கைகாரனுங்க).

இது வரைக்கும் நூத்துக்கணக்கான விவசாயிங்க சோத்துக்கு வழியில்லாம செத்து போயி இருக்காங்க.

நாட்டை எப்படிடா அமெரிக்காகாரனுக்கு அடகு வெக்கலாமுன்னு அதிகாரத்துல இருக்குற ஒரு கூட்டம் ரூம் போட்டு யோசிச்சிகிட்டு இருக்குது.

 இதை எல்லாம் தாண்டி நாட்டுல தினமும் நூத்துக்கணக்கான பிரச்சனை நடந்துகிட்டு இருக்குது.இதுக்கெல்லாம் கொதிக்காத இந்த கூட்டம் ஹர்பஜன்சிங்கை தடை செஞ்சதை கேட்டு கொதிச்சி போயி ரோட்டுல இறங்கி இருக்கு.

 பிரச்சனை இப்படி இருக்க CNN IBNல என்னடான்னா அவங்க அம்மாவை பேட்டி எடுக்குறாங்க, அவங்க பாட்டியை பேட்டி எடுக்குறாங்க,  பஞ்சாப்புல தலப்பா கட்டிட்டு ரோட்டுல யார் போனாலும், அவங்களுக்கு கிரிக்கெட் தெரியுதோ இல்லையோ அவங்களை எல்லாம் சுத்தி சுத்தி பேட்டி எடுக்குறாங்க.

களத்துல என்ன நடந்ததுன்னு யாருக்கு தெரியாது அதுக்குள்ள என் புள்ள தப்பே பண்ணலை, இதை எல்லாம் பாக்கும் பொழுது எனக்கு கோவம் கோவமா வருதுன்னு அவங்கம்மா(அந்தம்மாக்கு ஒரு 60-70 வயசாகும் அந்தம்மாவால சரியா பாக்க முடியுமான்னே தெரியலை) ஒரே சீன். ஏம்மா ஏன் ஏன் இந்த விளம்பரம் உங்களுக்கு?

 இது காலை நிலவரம் மதியதுக்கு மேல வேலை வெட்டி இல்லாம வூட்ல சும்மா இருக்குற கிரிகெட்டருங்க எல்லாம் மைக்கை எடுத்துட்டு ஆஸிக்களின் நிறவெறி, ICCயின் நிறவெறின்னு களத்துல ஆடுனாங்களோ இல்லையோ வாயால வடை சுட்டுட்டு கிளம்பிடுவாங்க.

 எங்க அடுத்த டெஸ்டு ஆடுனா சுலுகெடுதுடுவானுங்களோன்னு, நம்மாளுங்களும் இந்த பிரச்சனை முடியிற வரைக்கும் அடுத்த ஆட்டங்களை ஆட மாட்டோமுன்னு நம்மாளுங்க ஜகா வாங்கிடாங்க.

ஆஸ்திரேலியாகாரனுங்க வாய் கொழுப்பெடுத்தவனுங்க, அவனுங்ககிட்ட வாயும் இருக்கு ஆட்டமும் இருக்கு நமக்கு அப்படியா? பத்து பேர் சேர்ந்து 50 ஓவர் ஆட துப்பு இல்லாத நமக்கு எதுக்கு இந்த் வாய். முதல்ல ஆடுங்க அப்புறம் பேசுங்க.

ரோட்டுல இறங்கி போராடிகிட்டு இருக்கிற அண்ணனுங்களா அவரு ஆடுனாலும் காசு ஆடாட்டியும் காசு நமக்கு அப்படியா? நம்ம வாங்குற அஞ்சி பத்துக்கு இது தேவையா? போங்க போயி உருப்படுற வழியை பாருங்க.

சபாஷ் சரியான தீர்ப்பு

நவம்பர் 27, 2007

நாட்ல இந்த குறைந்த விலை விமான நிறுவனங்களின் தொல்லைக்கு ஒரு அளவே இல்லை. குறைந்த விலைக்கு விமான சேவையை அளிக்கிறேன் அப்படின்னு இவங்க அடிக்கிற லூட்டி இருக்கே யப்பா தாங்காது. விமானத்தில் போதிய பயணிகள் இல்லாட்டி, பயணிகளை பல மணி நேரம் காத்திருக்க செய்து அப்புறம் விமானத்தை கேன்ஸல் செய்வது, காலை விமானத்தில் கூட்டம் இல்லாட்டி அந்த விமானத்தில் உள்ள பயணிகளை அடுத்த விமானத்துக்கு மாற்றம் செய்வது, சில சமயம் விமானத்தை கேன்ஸல் செய்து அதுக்கு பதிலா ஆம்னி பஸ் டிக்கெட்டுகளை அளிப்பது, இது மாதிரி ஒரே ஆட்டம் தான். விமானம் கேன்ஸல் செய்யப்பட்டதற்கான காரணம் கேட்டால் தொழில்நுட்ப கோளாறு என்ற ஒரே பதில்.

இது மாதிரியான விமான கம்பெனிகளுக்கு ஆப்பு அடிக்கும் விதமாக இந்த தீர்ப்பு வந்துள்ளது. கோஏர் என்னும் குறைந்த கட்டண விமான நிறுவனம், தொழில்நுட்ப கோளாறு என்று கூறி கேன்ஸல் செய்த ஒரு விமானதில் பயணம் செய்த பயணிகள் அனைவருக்கு 15000 நஷ்டஈடு அளிக்குமாறு தில்லி உயர்நீதி மன்றம் உத்திரவிட்டுள்ளது. இது போன்ற வியாபார நன்னடத்தை (Business ethics) இல்லாத கம்பெனிகள் இதற்கு பிறகாவது திருந்தினால் சரி.

சாப்டுவேர் என்ஜினியர்களும் சமூக சீரழிவும்

நவம்பர் 14, 2007

இப்பொழுது தலை தூக்கி வரும் பிரச்சனைகளில் மிக முக்கியமானது சாப்டுவேர் கம்பெனியில் வேலை செய்பவர்களால் உண்டாகும் செயற்கை விலை உயர்வு. இதை பத்தி கொஞ்சம் பார்ப்போம்

1. தி.நகரில் ஒரு சாப்பாடு(Meals) 30+ ரூபாய், அதுவே OMR சாலையில் ஏதாவது ஒரு சாப்டுவேர் கம்பெனிக்கு அருகில் இருக்கும் ஓட்டலில் சாப்பாடு குறைந்த பட்சம் 60. என்னுடைய அலுவலகத்திற்கு பக்கத்தில் உள்ள ஆந்திர  உணவகத்தில் அது 99 + VAT (ஏறக்குறைய 120 ரூபாய் வரும் டிப்ஸை சேர்த்தால். 10 ரூபாக்கு குறைந்து டிப்ஸ்   இருந்தால் அடுத்த தடவை நீங்க போகும் பொழுது விக்கி செத்தாலும் தண்ணி கிடைக்காது.)

2. அடையாரில் உள்ள ஒரு Forex நிறுவனத்தில், சாப்டுவேர் இன்ஜினியர் அதுவும் குறிப்பாக விப்ரோ, டிசிஎஸ், இன்பொசிஸ் கம்பெனிகளில் இருந்து சென்றால் மற்றவர்களுக்கு கொடுக்கப்படும் எக்ஸ்சேஞ் ரேட்டை விட ஒரு ரூபாய் குறைவு. கேட்டால் அது அப்படி தான் சார் வேண்டுமானல் குடுங்கள் இல்லாவிட்டால் போங்க.

3. வேளச்சேரியில் 800-1000 சதுர அடி வீட்டின் வாடகை 6000+ அதே, கோடம்பாக்கம், வடபழனி போன்ற இடங்களில் அதிகபட்சம் 4000.

4. 1200 சதுர அடி வீட்டின் விலை வேளச்சேரியில் சுமார் 50 – 60 லட்சம் வரை.

5. Ascendasஇல் (இது Tidel Parkஜ போன்றது)  ஒரு Milk Shakeஇன் விலை 170.

6. ஒரு சாப்டுவேர் கம்பெனிக்கு பக்கத்தில் இருக்கும் ஆட்டோ ஸ்டாண்டில் குறைந்த பட்சம் 20 – 30 ரூபாயாவது அதிகமாக இருக்கும்.

7. இரண்டு வருடத்துக்கு முன்னர் 50ரூபாயாக இருந்த சினிமா டிக்கெட் இன்று குறைந்த பட்சம் 120, 10 ரூபாயாக இருந்த பாப்கான் இன்று 50.

8. தீபாவளிக்கு முதல் நாள் சென்னையில் இருந்து சேலத்துக்கு செல்ல தனியார் பேருந்துகளில் ஒரு டிக்கெட்டின் விலை ரூபாய் 1100. சாதாரணமாக அது ரூபாய் 300.

இது போல் சொல்லிக்கொண்டே போகலாம். இதில் எல்லாரும் சொல்லும் பொதுவான விஷயம் சாப்டுவேர் கம்பெனியில் இருக்குறவன் எவன் சார் விலையை கேக்குறான் இல்ல சாப்டுவேர் கம்பெனிகளில் இருக்குறவனுக்கு என்ன சார், ஆயிர ஆயிரமா சம்பாதிக்கிறான் குடுத்துட்டு போறான். நம்மைப்போன்றவர்களுக்கு பணம் ஒரு பிரச்சனையே இல்லை ஆனா யோசித்து பாருங்க, இப்படி துவங்கும் விலை உயர்வு, படிப்படியாக அப்படியே கொஞ்ச நாள் கழித்து சாதாரண பொது மக்களை போயி அடையும். அவங்க என்ன செய்வாங்க யோசிங்க?

யோசித்து பாருங்க. என்னிக்காவது ஒரு நாள் நாம கேட்டு இருக்கோமா? ஏன் அதிக விலை என்று? இல்ல அவன் இவ்வுளவு விலை விற்கிறானே அவனிடம் வாங்க வேண்டாம் என்று  யோசித்து இருக்கோமா? அப்ப என்ன அர்த்தம் காசு கொழுப்பு தானே? வாங்குறவன் இருக்குற வரையில் விற்பவன் விற்கத்தானே செய்வான்? இதற்கு சிறந்த உதாரணம் கடந்த சில மாதங்களாக சென்னை, பெங்களூரில் கட்டிடங்களின் விலையில் 10 – 20% குறைந்துள்ளதே? என்ன காரணம் நகரங்கள் வளர்ந்து விட்டனவா? இல்லையே வாங்க ஆள் இல்லை அதனால் தான் இந்த விலை குறைப்பு.

ரூபாயின் மதிப்பு ஏறுமுகமாக இருக்கும் இந்த காலத்தில், நம்முடைய சம்பளங்களும் வருங்காலங்களில் இது போன்று இருக்கும் என்று சொல்ல முடியாது. முன்று வருடத்துக்கு முன்னர் இருந்த விலையை வைத்து பார்க்கும் பொழ்து இந்த விலை எல்லாம் இரண்டு அல்லது முன்று மடங்கு உயர்ந்து உள்ளது ஆனால் நம்முடைய சம்பள உயர்வு அவ்வுளவு இருக்கிறதா என்ன? பொருட்களை வாங்குங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் அதற்கு உண்டான சரியான விலையை குடுத்து வாங்குங்கள்.

சமீபகாலமாக வெயிட் காலர் குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளது. கைதாகும் பெரும்பாலோனோர் சொல்லும் காரணம், கடன் அட்டைகள், கடன் வாங்கி ஆடம்பரமாக செலவு செய்துவிட்டேன், இப்பொழுது கடன்காரர்கள் தொல்லையில் இருந்து தப்பிக்க இது போன்று செய்தேன் என்று.நமக்கும் இது போன்ற நிலை வர வேண்டுமா? இது எல்லாம் மாற நாம பெருசா ஒண்ணுமே பண்ண வேண்டியது இல்ல, இது மாதிரி ஏமாத்துறவங்களை புறக்கணிச்சாலே போதும், தன்னால அவங்க மாறுவாங்க.

புலிக்கு பொறந்தது பூனையாகுமா?

ஒக்ரோபர் 23, 2007

கொஞ்ச நாளைக்கு முன்னாடி சி.என்.என் ஜபிஎனின் டெவில்ஸ் அட்வகேட் நிகழ்ச்சியில் கனிமொழியை பேட்டி கண்டார்கள். கனிமொழி கரணின் கேள்விகளுக்கு நன்றாகவே பதில் சொன்னார்கள். நான் பார்த்த வரையில் அந்த நிகழ்ச்சியில் கேள்விகள் மிக சாதாரணமாக இருந்தன. பல இடங்களில் கனிமொழியை  அட்டாக் செய்ய வாய்ப்பு கிடைத்த பொழுதும் கரண் அதை அப்படியே விட்டு விட்ட மாதிரி தான் எனக்கு தெரிகிறது. சரி அதை விடுங்க அதுல ஒரு முக்கியமான கேள்வி,

பந்த் அன்று உச்ச நீதி மன்றம் கண்டனம் எழுப்பியவுடன் உங்க தந்தையும் மற்ற அமைச்சர்களும் உண்ணாவிரத பந்தலை விட்டு ஏன் வெளியேறி அலுவலகம் சென்றனர்? காலையில் இருந்து ஓடாத பஸ் உடனடியாக ஓடத்துவங்கியது ஏன்? மூடிய கடைகள் திடீரென திறந்த மாயம் என்ன?

அதுக்கு உட்டாங்க பாருங்க ஒரு பதில் பொதுமக்கள்(யாருங்க அந்த பொது சனம் இங்க வாங்க சாமி கொஞ்சம்?) மற்றும் அரசியல் தலிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர் பந்தலுக்கு திரும்ப வரவில்லையாம். மேலும் தலிவரு உண்ணாவிரதம் இருக்க போகிறேன்னு எப்ப சொன்னாரு? அவரு அதை துவக்கி வைக்கத்தான் வந்தார், நீயூஸ் மீடியா தான் அதை திரித்து வெளியிட்டு விட்டதுன்னு ஒரு அந்தர் பல்டி அடிச்சாரு பாருங்க. இப்ப சொல்லுங்க புலிக்கு பொறந்தது பூனையாகுமான்னு?

இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் தலிவரோட வாரிசுங்க, பேரப்புள்ளைங்களும் கலந்துகிட்டு இங்லீபீசிலையும் ஹிந்திபீசிலையும் பொளந்து கட்டும் பொழுது ஹிந்தி ஒழிப்பு போராட்டம் நியாபகத்துக்கு வந்து தொலைக்குது.

206. இது தாங்க உண்மை

ஒக்ரோபர் 1, 2007

சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று உண்மையான அக்கரை உள்ளது போல தி.மு.காவும் அதன் கூட்டணி கட்சிகளும் நாடகமாடுகின்றன அவர்களுக்கு ஈடுஈணையாக எதிர்கட்சிகளும் நாடகம் ஆடுகின்றன. உண்மையான அக்கரை இருந்தால், இந்த திட்டம் விரைவாக முடிக்கபடாவிட்டால் நாங்கள் எங்களின் ஆதரவை வாபஸ் வாங்கிக்கொள்வோம் என்று சொல்ல வேண்டியது தானே? பேரனுக்கு அமைச்சர் பதவி பெற்றுத்தர டில்லிக்கு நடையா நடந்தவர், தமிழ்நாட்டின் வாழ்வாதார பிரச்சனையான இந்த பிரச்சனைக்கு ஒரு பந்த்/உண்ணாவிரத்த்தோட முடிச்சிக்கிட்டாரு.

அதையாவது ஒழுங்கா செய்தாரா? பதவி என்பது எனக்கு துண்டு போல, மானம் என்பது வேட்டி (எனக்கு சரியாக தெரியவில்லை இது போன்ற பொருள் தரக்கூடிய வாக்கியம் ஒன்றை சொல்லி இருந்தார்) போல அப்படின்னு சொன்னவரு. ஆனா இன்னிக்கு பாருங்க பந்த் நடத்தியது தவறு, தமிழகத்தில் ஏன் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த கூடாது அப்படின்னு கேட்ட உடனே, நம்ம தலைவரு துண்டை கையில புடிச்சிகிட்டு உண்ணாவிரத பந்தலில் இருந்து கிளம்பி போயி கோட்டையில உட்கார்ந்து கொண்டார். ஏன் சாமி எனக்கு பதிவி போனாலும் பரவாயில்லை சேது சமுத்திர கால்வாய் தான் முக்கியம் அப்படின்னு முழு நாளும் உக்கார வேண்டியது தானே? இவரு கதை தான் இப்படின்னா,

பிஜேபி ஆட்சியில் இந்த சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்த பொழுது இன்னொரு தலைவரு, வெற்றி வெற்றி தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனையை நிறைவேற்றி விட்டோம், அப்படின்னு அழுகாச்சியோட கூவிகினே தமிழ்நாடு முழுவது சுத்தினாரு, அப்ப தெரியலையா அவருக்கு ராமர் பாலத்தை இடிப்பாங்கன்னு, இப்ப கட்சி மாறின உடனே சகோதரி பாசத்துல அய்யோ பாலத்தை உடைக்கிறாங்களே எப்பேர்பட்ட பாலம் அப்படின்னு ஒரே சவுண்டு இவரு.

அம்மா என்னடான்னா சீன் ஓப்பனிங்கல சவுண்டே இல்லாம இருந்தாங்க, ராமரு சீன்ல வந்த உடனே, அய்யோ இடிக்கிறாங்களே இடிக்கிறாங்களே அப்படின்னு சவுண்டு, அடுத்து பந்த் நடத்தறாங்களேன்னு ஒரு சவுண்டு. அடுத்து ஆளுங்கட்சிகளே சும்மா இருக்கும் பொழுது இவங்க “பந்த் வெற்றி பந்த் வெற்றி அப்படின்னு” சவுண்டு விட்டு, ஆட்சியை கவிழ்க்க பாக்குறாங்க.

நல்ல வேளை இந்த விசயத்துல கூத்தாடிங்க அவ்வுளவா சவுண்டு விட்டு மாட்டிகலை, இல்லாட்டி அவனுங்க சாயமும் இதுல வெளுத்து போயி இருக்கும்.

இப்படி அரசியல கட்சிங்க தான் இருக்காங்கன்னா, நம்ம மக்களை பாருங்க அவங்க மாநிலத்தின் முதல்வரின் தலைக்கு ஒரு சாமியார் விலை வைக்கிறார் அதை எதிர்த்து ஒருத்தன் கூட சவுண்டு விடலை(ஒரு வாரம் கழிச்சி ஏதோ நாலு கல்லு வுட்டாங்க அம்முட்டு தான்). இதுவே மத்த மாநிலங்களில் நடத்து இருந்த என்ன நடத்து இருக்கு யோசித்து பாருங்க.

இந்த சேது சமுத்திர திட்டத்துல ரெண்டு மேட்டர் தெளிவா புரியுதுங்க, ஒண்ணு தமிழன் மானெங்கெட்டவன், கோழை, சுயநலவாதி, ஒற்றுமை இல்லாதவன், எவன் எக்கேடு கேட்டா நமக்கு என்ன அப்படின்னு இருப்பான். இன்னொன்னு தமிழநாட்டோட முன்னேற்றத்துக்கு எந்த கட்சியும் பாடுபடலை.

சேது சமுத்திர திட்டம் ஒரு உதவாக்கரை திட்டம் அப்படின்னு நரேன் இங்க அழகா சொல்லி இருக்காரு போயி படிச்சித்தான் பாருங்க.

205. சர்தார்கள் பிச்சை எடுப்பதில்லை

ஜூலை 20, 2007

இன்று காலை வழக்கமாக வரும் forward மின்னஞ்சலில் சர்தார்கள் உழைத்து தான் சாப்பிடுவார்கள் என்றும், பிச்சைக்கார சர்தார்களை எங்கேயும் பார்க்க முடியாது என்று கூறி உள்ளனர். அதே மாதிரி வயதான, மன நலம் குன்றிய சர்தார்கள் மற்றும் ஏதோ ஒரு காரணத்தினால் சம்பாதிக்க முடியாத சர்தார்களை அவர்களின் குருத்துவாரா(அவர்களின் கோவில்) தத்து எடுத்துக்கொள்ளுமாம். அட ஆமாம்! நான் கூட சர்தார்கள் பிச்சை எடுத்து பார்த்தது இல்லை.எந்த அளவுக்கு இந்த செய்தி உண்மை என்று தெரியவில்லை, நீங்க யாராவது சர்தார்கள் பிச்சை எடுத்து பார்த்து இருக்கீங்களா? அவங்களை மடப்பசங்க மடப்பசங்க அப்படின்னு ஜோக்கடிச்சி இதை எல்லாம் கேக்கும் பொழுது யாரு மடப்பசங்க?..

202. புதிய உலக அதிசயங்களும் ஏமாளி இந்தியர்களும்

ஜூலை 8, 2007

புதிய உலக அதிசயங்களை தேர்ந்து எடுக்குறேன் அப்படின்னு சுவிட்சர்லாந்தை ஒரு தனியார் நிறுவனம் new7wonders கிளம்பி இருக்கு. அவங்க யாரு அப்படிங்கறத்துக்கு சரியான விளக்கம் இல்ல (ஆனால் அவர்கள் தாங்கள் ஒரு profitable organisation என்பதை தெளிவாக கூறி இருக்கின்றனர்.). எந்த நாட்டின் அரசாவது இவர்களை அங்கீகரித்து இருக்காங்களா? அப்படி எதுவும் தெரியலை. ஜ.நாவும் இவங்களை அங்கீகரிச்ச மாதிரி தெரியலை. ஆனாலும் உலக அதிசியங்களை தேர்ந்து எடுக்குறேன் அப்படின்னு ஒரு ஏகப்பட்ட சுற்று தேர்தலை நடத்தி பொதுமக்களிடம் இருந்து ஒரு கணிசமான தொகையை கறந்துவிட்டாங்க. 1999 ஆம் வருசம் ஆரம்பித்த இந்த சுரண்டல் நேற்று முடிந்தது.

இவர்களின் தேர்தலை முறையை பாருங்களேன். யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் உலக அதிசயங்களாக பரிந்துரை செய்யலாம். அப்புறம் ஓட்டெடுப்பின் வாயிலாக உலக அதிசயங்களை தேர்ந்து எடுப்பதாக சொல்லி இருக்கின்றனர். ஆனால் ஒட்டெடுப்பு முறையில் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஒட்டளிக்க எவ்விதமான தடையும் இல்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட ஒட்டுக்களை அளிக்க வேண்டுமானால் தொலைபேசி அல்லது குறுஞ்செய்தி வசதிகளை உபயோகப்படுத்துங்கள் என்று அவர்களின் தளத்திலேயே பரிந்துரை செய்துள்ளனர். ஏனெனில் நீங்கள் தொலைபேசி அல்லது குறுஞ்செய்தி வழியாக ஒவ்வொரு முறையும் ஓட்டளிக்கும் பொழுதும் இவர்களுக்கு ஒரு கணிசமான தொகை செல்கிறது இதன் மூலம் இந்நிறுவனம் பல கோடி வருவாயை ஈட்டி உள்ளது.

இந்த போட்டியின் முடிவுகளை இவர்கள் நேற்று அவர்களின் இணைய தளத்தில் அறிவித்து இருக்கின்றனர், மொத்தம் கிடைத்த ஓட்டுக்கள் எத்தனை அது போன்ற எந்த ஒரு விபரமும் இல்லை. அதே போல வெற்றி பெற்ற இடங்களை பாருங்கள் பெரும்பாலும் தென் அமெரிக்க நாடுகளில் உள்ள இடங்களே (மொத்தம் 7 அதிசயங்களில் 3 தென் அமெரிக்க நாட்டில் உள்ளவை). ஏனெனில் அந்த நாடுகளில் உள்ளவர்கள் தான் அதிகபடியாக ஒட்டளித்து உள்ளனர்.

இந்த நிறுவனத்துக்கு ஜக்கிய நாடுகளின் (பொதுவாக இந்த உலகத்தின் பழமையான இடங்களை அங்கீகாரம் செய்வது ஜக்கிய நாடுகளின் ஒரு உபநிறுவனமான UNESCO – United Nations Education, Scienticfic and Cultural Organisation ஆகும்.) அங்கீகாரமோ இல்லை உலக நாடுகளின் அங்கீகாரமோ இல்லை அப்படி இருந்த பொழுதும் எப்படி இந்த ஊடகங்கள் அவங்க போட்ட ஜந்து,பத்து பிச்சைக்கு ஆசைப்பட்டு இதை இப்படி தாங்கிப்பிடிக்கின்றன என்று தெரியவில்லை? உள்ளூர் ஊடகம் தினமலர் முதல் கொண்டு சர்வதேச உடகங்கள் வரை இடத்துக்கு தகுந்த மாதிரி உங்க ஊருக்கு ஓட்டு போடுங்க அப்படின்னு மக்களை உணர்வுப்பூர்வமாக ஏமாற்றி புண்ணியம் தேடிக்கொண்டது. சில பொட்டி தட்டும் கலைஞர்களும் உணர்ச்சி பெருமும் இமெயில் மூலமாக இதை பலருக்கு கொண்டு சென்று புண்ணியம் தேடிக்கொண்டனர்.

இதுல ஒரு காமெடி என்னானா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் முதல் 200 இடங்களில் வந்ததும். அதுக்கு தமிழக அரசே கோவிலுக்குள் ஓட்டளிக்க வசதி செய்து கொடுத்தது தான். மீனாட்சி அம்மன் கோவில் எந்த வகையில் architectural acheivement என்று தெரியவில்லை. அப்படி பார்த்தால் தஞ்சை பெரிய கோவில், இராமேஸ்வரம் கோவில் போன்றவை ஏன் தேர்ந்தெடுக்க வில்லை? மதுரை மீனாட்சி கோவிலில் கூட்டம் அதிகமாக வருகிறது நல்லா கல்லா கட்டலாம் என்பதாலா?

இதுல செம காமெடி எகிப்திய பிரமீடுகள் 7 உலக அதிசயங்களுல் இல்லையாம். வாக்கெடுப்பு முடிந்த உடன் கிரேக்க பிரமீடுகள் முதல் 7 இடங்களில் இடம்பெறாதது கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானது. அதைப்பற்றி கேட்ட பொழுது அந்த நிறுவனத்தின் செய்தியாளர் சொல்கிறார் “We absolutely had no problem with this,” Viering told the AP. As of Saturday, there will be eight world wonders including the Pyramids of Giza, she added. அடடா இது தெரிஞ்சி இருந்தா நாலு லாரியில் ஆளுங்களை கூட்டிட்டு போயி அவனுங்களை மிரட்டி எங்க தாத்தாவோட பழைய வீட்டையும் இதுல சேர்த்து இருப்பேனே.

அடுத்தா இவனுங்க உலகத்தின் இயற்கையால் ஏற்படுத்தப்பட்ட இடங்களுக்கான தேர்தலை துவக்கி இருக்கிறார்கள். எவனாவது ஒரு புண்ணியவான் கூவம் நதியையும் அதன் நதிக்கரையையும் அதுல சேர்த்துவிட உள்ளூர் ஊடகங்களும் அதை ஊதிவிடும், வெட்டியா இருக்கும் பொட்டி தட்டும் கோஷ்டி அதுக்கும் நெஞ்சை நக்குற மாதிரி ஒரு இமெயிலை ரெடி பண்ணி fwd பண்ணும். தேர்தலுக்கே ஓட்டு போடாத உண்மை இந்தியர்கள் அதையும் உண்மையென நம்பி அதுக்கு கைகாசு போட்டு ஓட்டுப்போடுவான் நல்லா இருங்கடா.

200. கலக்குது இளசு

ஜூலை 5, 2007

ஒரு நல்ல விஷயம் அல்லது ஒரு பொருளை எப்படி கெடுத்து குட்டி சுவர் ஆக்க முடியும் அப்படிங்கிறதுக்கு ஆர்குட் ஒரு அருமையான உதாரணம். ஒரு காலத்தில் படித்த நண்பர்களை எல்லாம் சில பேர் கண்டுபிடித்து சந்தோசப்பட்டுக்கொண்டு இருக்கும் வேளையில். அதையே நாடுகளுக்கும், சமுதாயங்களுக்கும் எதிரான கருத்துக்களை பரப்பி அதை தடை செய்யும அளவுக்கு அழித்து குட்டிச்சுவர் ஆக்கிக்கொண்டு இருக்கிறது ஒரு கூட்டம். அதையே நல்ல விஷயத்துக்கும் உபயோகப்படுத்த முடியும் என்று ஒரு இளைஞர் கூட்டம் நிரூபித்து உள்ளது.

உங்களுக்கு எல்லாம் தெரிந்து இருக்கும் ஆர்குட்டில் குழுக்களை உருவாக்க முடியும் என்று. அப்படி ஒரு குழு தான் “upliftment of the orphans” என்ற குழு. இதில் உள்ள இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் மாதம் ஒரு முறை ஒரு அனாதை இல்லத்தை தேர்ந்து எடுத்து அதில் உள்ள குழந்தைகளுக்கு நேரில் சென்று தன்னாலான உதவிகளை செய்கின்றனர். இதை செய்யும் அனைவரும் 25 அல்லது 26 வயதுக்குள்ளான இளைஞர்கள். எனக்கு தெரிந்த வரையில் அனைவரும் தன்னுடைய சொந்த காசையே இதற்கு செலவு செய்கின்றனர். சென்னையில் துவங்கிய இவர்களது பணி ஹைத்திரபாத்திலும் துவங்கியுள்ளது.

இவர்களைப்பற்றி மேலும் விவரம் அறிய இவர்களின் ஆர்குட் குழுமத்தை இங்கே கிளிக்கி பாருங்க (இதை பார்க்க உங்களுக்கு ஆர்குட் account அல்லது கூகுள் account தேவை). இவர்கள் மாதம் ஒரு முறை, பெரும்பாலும் பிரபலமில்லாத ஒரு அனாதை இல்லத்தை தேர்ந்து எடுத்து அவர்களை தொடர்பு கொண்டு அவர்களின் தேவையறிந்து தங்களால் என்ன முடியுமோ அதை செய்கின்றனர். இவர்கள் அடுத்து எந்த இல்லத்தை சென்று பார்க்க போகிறார்கள் போன்ற விவரங்களை பற்றி மேலும் விவரம் அறிய அவர்களின் குழுமத்தில் உள்ள “topic” பகுதியினை பாருங்க.

நான் இந்த வயதில் இதை பற்றி எல்லாம் யோசித்து கூட பார்த்தது இல்லை. ஏதோ யாராவது வந்து கேட்டால் என்னால் முடிந்ததை குடுப்பதோடு சரி. இன்றைக்கு பொழுது போக்கவும், பணத்தை செலவு செய்யவும் பல இடங்களும் வழிகளும் இருந்தும் கூட அதையும் தாண்டி இது போன்ற நல்ல காரியங்களை செய்யும் நீங்கள் உண்மையிலேயே பாராட்டுக்கு உரியவர்கள். Hatsoff guys you are doing a very wonderful job.

199 – தி பாஸ்கர்

ஜூன் 28, 2007

‘தளபதி’ வந்த டைம்லதான் ‘தலைவா’ன்னு தறிகெட்ட ரஜினி ஃபேனாகி சுத்த ஆரம்பிச்சான் பாஸ்கர். அப்ப அவனோட எதிரி நாட்டு மன்னன் கமல், ‘குணா’வோடு களத்துக்கு வந்திருந்தாப்ல. அங்கிட்டு, ‘அப்பன் குடுத்த மூஞ்சி… அப்பன் குடுத்த மூஞ்சி’னு கமல் ஃபீலிங் பிர்காவைப் போட, இங்கிட்டு ரஜினி சட்டையை ஏத்திக்கட்டி, ‘ராக்கம்மா கையத் தட்டு’ன்னு குத்துல ஆட… ஏரியாவுக்கு ஈரக்கொல நடுங்க ஆரம்பிச்ச நேரம்… எக்ஸ்ட்ரா கட்டிங்கை உள்ள விட்ட பாஸ்கரு, ‘எவன்டாவன் என் தலைவனைப் பத்தித் தப்பா பேசினது..? உங்காளு படம் மட்டும் ஓடிருச்சுன்னா ஒத்த பக்க மீசையை எடுத்துருவான்டா இந்தத் தளபதி பாஸ்கரு!’ என மசமச மப்பில் எகிறியபோது, குபீர் கூட்டணி போட்டு ஓடி வந்த எதிர்க் கும்பல், பழ வாசனை-யோடு பாஸ்கரைப் பகுதிவாரியாகப் பஞ்சராக்கி டிரெய்னே-ஜில் உருட்டியது. அஞ்சாறு நாள் தர்மாஸ்பத்திரியில் தலை- தொங்கிக் கிடந்த பயலை, ஏரியா ரஜினி மன்றத் தலைவர் சாத்துக்குடி சந்திப்பு நடத்தினார். ‘தலை-வனுக்காக உசுரைக்கூடத் தருவேன். இது இன்னா ஜுஜுபி…’ என வீர சபதம் எடுத்ததில், தெர்மா மீட்டர் தெறிக்கிற அளவுக்கு எகிறியது பாஸ்கரின் ரஜினி ஃபீவர்.

அப்புறம், நம்மாளோட ரசிக அலப்-பறை ஏரியா -பூரா பாப்புலராச்சு! பகுதி -வாழ் கோயில் திருவிழா, காதணி, பூப்புநீராட்டு உள்ளிட்ட விசேஷங்கள், சபரிமலை இருமுடி கட்டு விழா, கிரிக்கெட் டோர்னமென்ட்டுகள் என எது வந்தா-லும் மன்றத்தின் சார்பாக போஸ்டர் அடிக்கிற மகத்தான பணி-களுக்கு ஆல் இன் ஆல் அல்லக்கை நம்ம பாஸ§தான்! நைந்து போன நாப்பது பக்க நோட்டுடன் கலெக்ஷன் மேளாவில் காய்ந்து திரிவான். அபூர்வ- ராகங்களிலிருந்து நரை தாடி ரஜினி வரை டிஸைன் களைப் போட்டு, ‘நிஜத்தின் நிகழ்-காலமே! இந்தியாவின் எதிர்-காலமே!’ன்-னெல்லாம் வார்த்தை-களைப் பிடிச்சு, போஸ்டர் அடிச்சு, கண்ணுமுழிச்சு ஒட்டுவதில்தான் பயபுள்ளைக்கு பிறவிப்பயன். ஒரு தடவை ஓவர் ஆர்வக்கோளாறு உச்சந்தலைக்கு ஏறி, புத்தர், இயேசு பரமசிவன் படத்தில் எல்லாம் ரஜினி முகத்தை கிராஃபிக்ஸ் பண்ணி, ‘நேற்றுவரை நீ மனிதனப்பா, இன்று முதல் நீ புனிதனப்பா’ன்னு எழுதின போஸ்டரை ஒட்டிப்புட்-டான் பாஸ§. ‘எவன்டா ஒட்டுனது…’ன்னு ஏரியா கட்சி ஆளுங்க சுளுக்கு சூனியம் வைக்கத் தேட, ஒரு வாரம் பாஸ§ பாண்டிச்சேரில அக்கா வீட்டில் பதுங்கியிருந்தது தரித்திர சரித்திரம்.

நிரந்தர வேலைன்னு நம்மாளுக்கு ஒண்ணும் கிடையாது. சுண்ணாம்பு அடிக்கிறதுல ஆரம்பிச்சு, டைல்ஸ் போட்றது வரைக்கும் சிக்குற வேலைல வண்டி ஓட்ற வாழ்க்கதேன். ஆனா, தலைவனுக்காக ஒண்ணு பண்ண-ணும்னா கந்து வட்டி வரைக்கும் பந்தடிச்சுப் பொரட்டிருவான். ரஜினி படம் முதல் நாள் முதல் ஷோ பார்க்கலைன்னா, பொறந்ததுக்கு அர்த்தமே இல்லைங்-கிறது பாஸ்கரோட கொலைவெறி பாலிஸி. ஒன்பது மணிக்கு ஷோன்னா கார்த்தால அஞ்சு மணிக்கெல்லாம் கண்ணு சிவக்கக் கவுன்ட்டராண்ட கன்ட்ரோல் பணிகளுக்கு நிப்பான். அப்புறம் ஓடி ஓடி மாலைகள், பூக்கள், கற்பூரம், பூசணி, லாட்டரி சீட்டுகள்னு வெப்பன்ஸ்-களை இறக்கிட்டே இருப்பான். ஷோ முடியறதுக்குள்ள சட்டை கிழிஞ்சு, அந்து அவலாகி ஸ்பைடர்மேனுக்கு சிக்குன்குன்யா வந்தது மாதிரி கிரிப்பை விடாம நின்னுட்டிருப்பான்.

நடை, உடை, மேனரிஸம்னு எல்லாத்துலயும் ரஜினியை அப்பிடியே ஜெராக்ஸடிப்பான் பாஸ்கரு. தலைவன் என்ன கெட்டப் போட்டாலும் அதை உடனே ஒர்க் அவுட் பண்ணி, ஏரியாவை கலங்கடிக்கிறது அவனோட கலவர ஹாபி! ‘அண்ணாமலை’ வந்தப்ப பால்காரன் கெட்டப்ல விபூதியை அள்ளிப் பூசிட்டு சைக்கிள்ள பால்-கேனை மாட்டிதான் முதல் ஷோவுக்கு வந்தான். பாட்ஷா டைம்ல தாடியோட திரிஞ்சான். படையப்பா சீஸன்ல தாடியில சுண்ணாம்பு அடிச்சு சுத்தி-னான். பாபாவுக்குத் தலைப்பாகைன்னு இந்த மாறுவேஷ ரகளைக்குன்னே மார்வாடி கடையில ஃபேன்ல ஆரம்பிச்சு பித்தளைச் சொம்பு வரைக்-கும் பல அயிட்டங்களை அடகு வெச்சிருக்கான்.

பாஸ்கர் அப்பா பேரு திரவியம். அதனால, சிவாஜி படம் வந்ததுமே புல்லரிச்சுப் போயிட்டான். என்னா விஷயம்னா… சிவாஜிக்கு ‘தி பாஸ்’னு கேப்ஷன் போடுறாங்கள்ல, உடன டியா சிவாஜி & ‘தி பாஸ்’கர்னு தன் பேரை போஸ்டர்கள்ல போட்டுப் பொளக்க ஆரம்பிச்சுட்டான். அங்கிட்டு இங்கிட்டு காசைப் புரட்டி மொட்-டையப் போட்டு, கோடு தாடி இழுத்து, பாண்டி பஜார் போயி கூலிங் கிளாஸ், கோட்டு செட்டப்னு பிளிறலா எழுந்-துட்டான். ஷ¨ வாங்க மட்டும் துட்டு இல்ல; பழைய இத்துப்போன ஷ¨வைத் துவைச்சுப் போட்டு, மொத ஷோவுல தலைவன் கட்டவுட்டுக்கு பாஸ§ பாலாபிஷேகம் பண்ணின போஸ§ சி.என்.என். வரைக்கும் வந்து போச்சு!

‘‘தலைவன் அரசியலுக்கு வந்தா, அம்புட்டுப் பயலுவளும் காலி! அதெல்லாம் அவருக்குத் தெரியும். அதான், பொறுமையா இருக்காரு… வந்து அடிப்பாரு பாரு ஆப்பு!’’னு அடிக்கடி டீக்கடைகள்ல பாஸ்கரு வைக்கிற மைக்கு கோட்டை வரைக்கும் கேட்கும்.

பாஸ்கர் வீட்லதேன் ஒரே அனத்து, ‘பாவிப் பய… இப்பிடி வெளங்காமத் திரியுறானே…’னு! ‘வீட்டுக்குன்னு ஒரு பைசா தந்திருக்கியாடா நீ?’னு அம்மா அடிக்கடி கேட்கும். அதுக்கும், ‘ஏய்… ஏய்… ஏய்… ஆண்டவன் நல்லவங்களைத் தான் சோதிப்பான். ஆனா, கைவிட மாட்டான்’னு தலைவன் பாணி-யிலேயே பதில் சொல்லிட் டிருக்கான் பக்கிப்பய! — நன்றி விகடன்

இதை படிச்சி முடிச்ச உடனே எனக்கு என்னோட நண்பன் ஜெய் சங்கர் தான் நியாபகத்துக்கு வந்தான். பாஸ்கருக்கும் அவனுக்கும் கொஞ்சம் கூட வித்தியாசம் கிடையாது. என்ன பாஸ்கருக்கு கதையின் இறுதிவரை புத்தி வரவே இல்லை ஆனா ஜெய்க்கு கொஞ்ச நாள் கழிச்சி புத்தி வந்து இப்போ ஆட்டோ ஓட்டிகிட்டு இருக்கான். ஆனா சிவாஜி படத்துக்கு கண்டிப்பா அவனோட ஒரு வாரமோ இல்ல ஒரு மாச வருமானமோ போயி இருக்கும். இந்த கதையை காமெடியில போட்டு இருக்குறாங்க படிச்சி முடிக்கும் பொழுது சிரிப்பு வரலைங்க. சோகமா இருக்கு இது மாதிரி இன்னும் எத்தணை பாஸ்கர்களும் ஜெய்சங்கர்களும் உதவாத பாஸா தமிழ்நாட்டுல சுத்திகிட்டு இருக்காங்கலோ :(.