Archive for the ‘காவிரி நதி’ Category

167. காவிரி மன்ற தீர்ப்பை வெளியிட தாமதம்

மார்ச் 6, 2007

காவிரி மன்ற தீர்ப்பை அரசு இதழில் வெளியிட ஒரு வருடம் ஆகும் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறி உள்ளார். இந்த தாமதற்கு காரணமாக அவர் கூறியுள்ளது, இந்த ஒரு வருடத்தில் இரு மாநில அரசும் இந்த தீர்ப்பு சம்மந்தமாக ஏதாவது சந்தேகம் இருந்தால் நடுவர் மன்றத்திடம் கேட்டுத்தெரிந்து கொள்ளலாமாம். விசாரணை என்ற பெயரில் இவர்கள் இந்த தீர்ப்பை வெளியிடவே ஒரு ஆறு ஏழு வருடம் ஆகிவிட்டது. இந்த ஆறுவருடத்தில் ஏற்படாத சந்தேகம் இந்த ஒரு வருடத்தில் என்ன வந்து விட போகிறது. மேலும் சந்தேகத்தை தீர்க்கிறேன் பேர்விழி அதற்கு எத்துணை வருடம் இழுத்து அடிப்பார்கள் என்று தெரியவில்லை. இந்த நிலையில் அந்த தீர்ப்பை அரசு இதழில் வெளியிட்டால் தான் அது அமலுக்கு வரும், அதற்கே ஒரு வருடம் என்றால் என்னவென்று சொல்வது.

அந்த தீர்ப்பு வெளிவந்தும் அதை எந்த வழியில் எல்லாம் தாமதப்படுத்த முடியுமோ அதை கர்நாடக அரசியல் கட்சிகள் smartஆக செய்துவிட்டன. நம்ம ஆட்கள் கட்சிவாரியாக வைத்து இருக்கும் எம்.பிக்களை காட்டி மிரட்டி பேரன், பேத்தி, மகன், மருமகன் என்று குடும்பத்தில் உள்ள மொத்த பேருக்கும் பதவி வாங்குவதில் காட்டும் அக்கறையை சிறிது இதில் காட்டினாலும் காவிரி நீர் விரைவாக வரும்.

குடும்ப சொந்த பந்தங்களுக்கு பதவி கிடைக்க சாம பேத தண்டம் என்று அனைத்து வழிகளையும் பயன்படுத்தி டெல்லி பக்கம் ஒற்றை காலில் நின்று பதிவையை வாங்கும் தமிழினத்தலைவரும், அதையே வேறு முறையில் செய்யும் மருத்துவரும், மூன்றாவது கட்சிகளின் கூட்டணி புகழ் அம்மாவும், திருமண மண்டப புகழ் கேப்டனும் என்ன செய்கிறார்கள் பார்க்கலாம்.