Archive for the ‘செய்திவிமர்சனம்’ Category

தமிழ்நாட்டின் அடுத்த பெண் முதல்வரின் பேட்டி

திசெம்பர் 12, 2009

சின்ன திரை புகழ் சே சே..பல விபச்சார வழக்குகள் புகழ் சே சே.. மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில செயலர் புவனேஸ்வரி தேர்தலில் போட்டியிட்டு வென்று  சமூதாயத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எதிர்த்து போராடுவாராமா.தமிழ்நாட்டு பெண்களே உங்களுக்கு ஒரு விடிவு காலம் பிறந்து விட்டது, உங்க குறைகளை தீர்க்க ஒரு ஜான்சி ராணி கிடைத்துவிட்டாரு. அடுத்த தேர்தலில் எப்படியாச்சும் வெற்றி பெற வெச்சிடிங்கன்னா உங்க குறைகள் தீர்ந்துவிடும்.முழுவீடியோவையும் இங்க பாத்து பிறந்ததன் பலனை அடைவிங்களாமா.

அப்பாவி அய்யாசாமி : ஏண்ணே சமூக சேவை செய்றவங்களுக்கு தானே கட்சி பதிவி எல்லாம் தருவாங்க?

கருத்து கந்தசாமி : ஏண்டா கூறு கெட்ட குக்கரு இவங்க ஆண் சமூதாயத்துக்கு செய்யாத சேவையாடா?

டிஸ்கி: கருத்து கந்தசாமியோட கருத்து சும்மா நகைச்சுவைக்காகவே சொல்லியிருக்கேன் யாரோட மனசையும் புண்படுத்த அல்ல.

விவசாயிகளின் தேவதை

நவம்பர் 16, 2007

இங்கிலாந்தை சேர்ந்த Reutuers நிறுவனமும், மகாராஷ்டிராவை சேர்ந்த MCX நிறுவனமும் இணைந்து மகாராஷ்டிராவில் உள்ள விவசாயிகளின் நலனுக்காக Market Light என்ற சேவையை துவக்கி உள்ளது. இதன் நோக்கம் விவசாயிகளுக்கு விவசாய பொருட்களின் தற்போதைய சந்தை விலை, அதாவது பல்வேறு மண்டிகளில் ஒரு குறிப்பிட்ட பொருளுக்கான விலை எவ்வுளவு என்று தெரியப்படுத்துவதே. இத்திட்டதில் சேரும் விவசாயிகளுக்கு  அவர்கள் விரும்பும் பொருளுக்கான வாங்கும் விலை அதாவது எந்த எந்த மண்டிகளில் எவ்வுளவு விலை தருவார்கள் என்று  தகுந்த இடைவெளியில் அல்லது அவர்கள் விரும்பும் பொழுது, குறுஞ்செய்தி(SMS) மூலம் தெரிவிப்பார்கள். தற்பொழுது இந்த திட்டம் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டதில் சேர்த்தின் மூலம் விவசாயிகளுக்கு அவர்களின் பொருட்களுக்கு அதிகபட்ச விலை கொடுக்கும் மண்டியை பற்றி தெரியவரும். இந்த திட்டத்தில் சேர்ந்ததன் மூலம் சுமார் 30% வரை அதிக விலை கிடைத்ததாக பல்வேறு விவசாயிகள் கூறி இருக்கின்றனர். இலவச சேவையாக செயல்பட்டு வரும் இந்த சேவைக்கு மாதம் 60 ரூபாய் வரை செலுத்த விவசாயிகள் தயாராக உள்ளனர். இந்த சேவையில் விலை பொருட்களுக்கான விலை மட்டுமில்லாமல், விவசாயம் பற்றிய செய்திகள்,வானிலை அறிவுப்புகள் முதலானவையும் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படுகிறதாம்.

தற்பொழுது இத்திட்டத்தின் மூலம் மகாராஷ்டிராவில் உள்ள  25 மண்டிகளின் விலை நிலவரம் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படுகிறதாம், சுமார் 4000 விவசாயிகள் வரை இந்த சேவையை பயன்படுத்துகிறார்களாம்.எனக்கு இந்த திட்டம் மிகவும் அருமையான திட்டமாக தெரிகிறது. தமிழகத்திலும் இது போன்ற திட்டம் அமல்படுத்தப்பட்டால் அது விவசாயிகளுக்கு மிகப்பெரிய நன்மையாக இருக்கும். ஏர்டெல். வோடாபோன் போன்ற நிறுவனங்கள் இதை செயல்படுத்த முயற்சிக்கலாம், அது இருவருக்கும் பெரிய லாபமாக இருக்கும்.

சில்லரை வணிகத்தில் பெருவியாபாரிகள்

நவம்பர் 15, 2007

இந்த பதிவில்  நான் சில்லரை வணிகத்தில் பெருவியாபாரிகளின் வருகை வாடிக்கையாளர்களுக்கோ அல்லது விவசாயிகளுக்கோ எவ்வித நன்மையும் தராது என்று கூறி இருந்தேன், அதை செல்வனும் சிலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனால் சமீபத்தில் சிக்காகோவில் உள்ள ஒரு பல்கலைகழகம் (இந்த ஆய்வின் முடிவுகளை பற்றி சில மாதங்களுக்கு முன்பு Business World ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தது, சுட்டி கிடைக்க வில்லை கிடைத்தால் தருகிறேன்.) செய்த ஆய்வில் இது உண்மை என்று நிரூபணம் ஆகி உள்ளது. அவர்களின் ஆய்வின் முடிவுகள் இதோ :1. பெரும் வியாபாரிகள் மற்றவர்களை விட 10% குறைவான விலையையே விவசாயிகளுக்கு அளிக்கின்றனர்.2. அவர்களின் விற்பனை விலையும் சற்று அதிகமாகவே உள்ளது.

3. பெரும் வியாபாரிகள் விரும்பும் பொருட்களை விவசாயிகள் விளைவிக்க சில இடங்களில் நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

4. விதைகள், உரங்களின் உபயோகம் வரை அவர்களின் ஆதிக்கம் விவசாயிகளின் மீது உள்ளது.

இதற்கு வியாபாரிகளின் பதிலை கேட்டால் வாயால் சிரிக்க மாட்டீர்கள்:

1. நாங்க விவசாயம் படித்தவர்களை வேலைக்கு வைத்துள்ளோம். — ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது கதையாக, இவர்களின் படிப்பு விவசாயிகளின் அறிவுக்கு கால் தூசுக்கு கூட ஈடாகாது. மேலும் மெத்த படித்த மேதாவிகளின் பேச்சை கேட்டு நாம் மண்ணையும், விளை பொருட்களையும் ஏற்கனவே நஞ்சாக்கிவிட்டோம். போதும் மெத்த படித்த மேதாவிகளின் அறிவுரைகள்.  இவர்கள் விவசாயம் படித்தவர்களை வேலைக்கு வைத்துள்ளதால் விவசாயிகளுக்கு என்ன லாபம்? எப்படியும் இவர்களின் அறிவுரைகள் கம்பெனிகளுக்கு சாதகமாகத்தான் இருக்கும்.

2. நாங்க தரமான electronic scales(எலக்ட்ரானிக் எடை மெஷின்கள்), உபயோகம் செய்து பொருட்களை அளக்கிறோம் – வியாபார பிண்னணி உள்ள குடும்பத்தில் இருந்து வந்த எனக்கு இது அடுத்த ஜல்லியாக தெரிகிறது. முன்னாடி எல்லாம் விவசாயிகளை சுலபமாக ஏமாற்றி வந்தனர் ஆனால் இப்பொழுது அவர்கள் கடைக்கு கொண்டு வருவதற்கு முன்னரே பொருட்களை எடை போட்டு எடுத்து வருகின்றனர், எடை ஏமாற்றுவது எல்லாம் இப்பொழுது முடியாத காரியம்.3. நாங்க பொருட்களை வாங்கியவுடன் பணத்தை கொடுத்து விடுகிறோம் – எனக்கு தெரிந்த வரையில் சிறு வியாபாரிகள் கூட இதையே தான் செய்கின்றனர். விவசாயிகளிடம் எல்லாம் கடன் சொல்லி பொருட்களை வாங்க முடியாது. பொருளை எடை போட்ட உடன் காசு குடுத்து ஆக வேண்டும்.4. விவசாயிகளின் இடங்களுக்கே சென்று பொருட்களை கொள்முதல் செய்கிறோம் – இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை, ஏனெனில் பெரிய விவசாயி என்றால் அவர்களின் இடத்துக்கு சென்று வாங்கலாம் சிறு விவசாயிகளிடமும் இவர்கள் இதை செய்கிறார்கள் என்று சொல்வது நம்பும்படியாக இல்லை. இந்த ஒரு காரணத்திற்காக 10% விலை குறைப்பு என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

நான் கூட இங்கே ரிலையன்ஸ், சுபிக்ஷா, Spencer போன்ற கடைகளில் பொருட்களை வாங்கியவன் என்ற முறையில் சொல்கிறேன், இவர்கள் சொல்வது போல காய்கறி எல்லாம் அவ்வுளவு freshஆக இல்லை, விலையும் சற்று கூடுதல் தான்.அதே போல மெதுவாக இவர்கள் டின்னில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை ஊக்குவிக்க ஆரம்பித்து விட்டார்கள். 

203. பரதன் இந்த பொழப்புக்கு நல்லா வாயில வருது

ஜூலை 11, 2007

Devil’s advocate என்ற நிகழ்ச்சியில் கரண் தப்பார் CPI கட்சியின் இந்திய பொது செயலாளர் பரதனுடன் பேட்டி காண்கிறார். இந்த பேட்டி சாராம்சம் பிரதீபா பாட்டீல் போன்ற ஒரு ஊழவாதி, பிற்போக்கு சிந்தனை கொண்ட ஒரு பெண் இந்திய ஜனாதிபதியாக போட்டி இட தகுந்தவரா? நீங்களே இந்த வீடியோவை பாருங்க பரதன் அவரிடம் என்ன பாடு படுகிறார் என்று.

முதல் வீடியோ

இரண்டாம் வீடியோ

மூன்றாம் வீடியோ

இந்த பேட்டி முழுவதும் கரண் மூன்றே மூன்று குற்றச்சாட்டுகளை தான் வைக்கிறார்.

1. பிரதீபா தலைவராக இருந்த ஒரு மகளரிருக்கான முன்னேற்ற வங்கியில் அவரது குடும்பத்தினர் கோடிக்கணக்கில் கடன் வாங்கி வங்கி திவாலாக காரணமாக இருந்து இருக்கின்றனர். அவரது சகோதரன் சுமார் 20 லட்ச ரூபாய் அளவுக்கு தொலைபேசியை பயன்படுத்தி இருக்கிறார், SC/ST பிரிவினருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட வேலையை தன்னுடைய சொந்த பந்தங்களுக்கு பெற்று தந்து இருக்கிறார். அகமதாபாத் நீதிமன்றத்தில் இவர் மீது வழக்கு தொடரப்பட்டு அதில் இவர் 8வது குற்றவாளியாக இருக்கிறார். இப்படிப்பட்ட ஊழல் வாதியை, நிர்வாக திறமையற்றவரை எநத அடிப்படையில் வேட்பாளராக தேர்ந்து எடுத்தீர்கள்?

பதில் : I. பிஜேபி காரனுங்க ஊழல் செய்யவில்லையா? காங்கிரஸ்காரனுங்க ஊழல் செய்யலையா? இவை எல்லாம் எதிர்கட்சியின் அவதூறு.

II. அவங்க அண்ணன் தம்பிங்க செய்த தப்புக்கு இந்த அப்பாவி பொம்பளை என்ன செய்வாங்க?

III. வழக்கு தானே தொடர்ந்து இருக்காங்க இன்னும் தீர்ப்பு வரவில்லையே?

2. பரம்பரை வியாதி உள்ளவர்களுக்கு கட்டாயமாக தடுப்பூசி போடப்படும் என்று பிரதீபா கூறி இருக்கிறார். இந்த செயலை நீங்கள் அனுமதிப்பீர்களா? நாளையே இவர் ஜனாதிபதியாகி இதை நாடு முழுவதும் செயல்படுத்த மாட்டார் என்பது என்ன நிச்சயம்?

பதில் I. இல்லை நான் இதை ஒத்துக்கொள்ள மாட்டேன். வழக்கம் போல ஜல்லி பதில்கள்.

3. ஒரு ஜனாதிபதி வேட்பாளர் தனக்கு ஆவிகளின் மீது நம்பிக்கை இருக்கிறது என்றும், 1969 ஆம் ஆண்டு இறந்த ஒருவருடன் பேசி இருக்கிறேன் என்றும், வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு கூறுகிறார் இதைப்பற்றி உங்களின் கருத்து என்ன?

பதில் I. முதலில் சிரிக்கிறார் பிறகு, காங்கிரஸ் பி.ஜே.பி கட்சியில் கூட இது போல இருக்கின்றனர் என்று கூறுகிறார்.

பதில் II. ஜனாதிபதியான பின்னாடி இது மாதிரி செய்ய மாட்டார் என்று கூறுகிறார்.

இறுதியாக கரண் கேட்கிறார். ஒரு Potentially ஊழல்வாதி, ஆவிகளை நம்பும் ஒரு பிற்போக்கு சிந்தனைவாதி, forced sterilization சிந்தனை உடைய ஒரு பெண்மணியை நீங்கள் இன்னும் வேட்பாளராக பரிந்துரை செய்கிறீர்கள்?

அதற்கு பரதன் கூறுகிறார் “அவருக்கு 40 வருட அரசியல் அனுபவம் இருக்கிறது”.

பரதன் போன்ற மூத்த அரசியல்வாதியிடமிருந்து இது போன்ற ஒரு பேட்டியை எதிர்பார்க்கவில்லை. கேவலமான சமாளிப்புக்கள், மொத்தத்தில் கம்யூனிஸ்டுகளும் திரவிட கட்சிகளுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்து உள்ளனர்.

பிரதீபாவின் நிலைமை தான் இப்படி என்றால் பைரவ் சிங்க ஷகாவத்தின் நிலைமை இன்னும் மோசம். காவலராக வேலை செய்து கொண்டு இருந்த பொழுது லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக அவரை பணிநீக்கம் செய்து இருக்கிறார்கள். அவர் முதல்வராக இருந்த பொழுது தவறான நடத்தை உள்ள பெண்களுக்கு பல முக்கிய பதிவிகளை அளித்தாக குற்றச்சாட்டு. இதற்கு பி.ஜே.பி தலைவர் ராஜ் நாத் சிங்கின் ஒரே பதில் “அவரை எனக்கு பல வருடங்களாக தெரியும் அவர் நல்லவர் வல்லவர். இது எல்லாம் எதிர்கட்சிகளின் திட்டமிட்ட குற்றச்சாட்டு”

so இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி ஒரு ஊழல்வாதி, பொது சொத்துக்களை குடும்பத்துடன் கொள்ளையடிக்கும், ஆவிகளுடன் பேசும் பழமைவாதி பெண்மணியா? அல்லது லஞ்சம் வாங்கும், பலான பெண்கள்க்கு பதவியை வாரி வழங்குபவரா என்பதே மில்லியன் டாலர் கேள்வி.

199 – தி பாஸ்கர்

ஜூன் 28, 2007

‘தளபதி’ வந்த டைம்லதான் ‘தலைவா’ன்னு தறிகெட்ட ரஜினி ஃபேனாகி சுத்த ஆரம்பிச்சான் பாஸ்கர். அப்ப அவனோட எதிரி நாட்டு மன்னன் கமல், ‘குணா’வோடு களத்துக்கு வந்திருந்தாப்ல. அங்கிட்டு, ‘அப்பன் குடுத்த மூஞ்சி… அப்பன் குடுத்த மூஞ்சி’னு கமல் ஃபீலிங் பிர்காவைப் போட, இங்கிட்டு ரஜினி சட்டையை ஏத்திக்கட்டி, ‘ராக்கம்மா கையத் தட்டு’ன்னு குத்துல ஆட… ஏரியாவுக்கு ஈரக்கொல நடுங்க ஆரம்பிச்ச நேரம்… எக்ஸ்ட்ரா கட்டிங்கை உள்ள விட்ட பாஸ்கரு, ‘எவன்டாவன் என் தலைவனைப் பத்தித் தப்பா பேசினது..? உங்காளு படம் மட்டும் ஓடிருச்சுன்னா ஒத்த பக்க மீசையை எடுத்துருவான்டா இந்தத் தளபதி பாஸ்கரு!’ என மசமச மப்பில் எகிறியபோது, குபீர் கூட்டணி போட்டு ஓடி வந்த எதிர்க் கும்பல், பழ வாசனை-யோடு பாஸ்கரைப் பகுதிவாரியாகப் பஞ்சராக்கி டிரெய்னே-ஜில் உருட்டியது. அஞ்சாறு நாள் தர்மாஸ்பத்திரியில் தலை- தொங்கிக் கிடந்த பயலை, ஏரியா ரஜினி மன்றத் தலைவர் சாத்துக்குடி சந்திப்பு நடத்தினார். ‘தலை-வனுக்காக உசுரைக்கூடத் தருவேன். இது இன்னா ஜுஜுபி…’ என வீர சபதம் எடுத்ததில், தெர்மா மீட்டர் தெறிக்கிற அளவுக்கு எகிறியது பாஸ்கரின் ரஜினி ஃபீவர்.

அப்புறம், நம்மாளோட ரசிக அலப்-பறை ஏரியா -பூரா பாப்புலராச்சு! பகுதி -வாழ் கோயில் திருவிழா, காதணி, பூப்புநீராட்டு உள்ளிட்ட விசேஷங்கள், சபரிமலை இருமுடி கட்டு விழா, கிரிக்கெட் டோர்னமென்ட்டுகள் என எது வந்தா-லும் மன்றத்தின் சார்பாக போஸ்டர் அடிக்கிற மகத்தான பணி-களுக்கு ஆல் இன் ஆல் அல்லக்கை நம்ம பாஸ§தான்! நைந்து போன நாப்பது பக்க நோட்டுடன் கலெக்ஷன் மேளாவில் காய்ந்து திரிவான். அபூர்வ- ராகங்களிலிருந்து நரை தாடி ரஜினி வரை டிஸைன் களைப் போட்டு, ‘நிஜத்தின் நிகழ்-காலமே! இந்தியாவின் எதிர்-காலமே!’ன்-னெல்லாம் வார்த்தை-களைப் பிடிச்சு, போஸ்டர் அடிச்சு, கண்ணுமுழிச்சு ஒட்டுவதில்தான் பயபுள்ளைக்கு பிறவிப்பயன். ஒரு தடவை ஓவர் ஆர்வக்கோளாறு உச்சந்தலைக்கு ஏறி, புத்தர், இயேசு பரமசிவன் படத்தில் எல்லாம் ரஜினி முகத்தை கிராஃபிக்ஸ் பண்ணி, ‘நேற்றுவரை நீ மனிதனப்பா, இன்று முதல் நீ புனிதனப்பா’ன்னு எழுதின போஸ்டரை ஒட்டிப்புட்-டான் பாஸ§. ‘எவன்டா ஒட்டுனது…’ன்னு ஏரியா கட்சி ஆளுங்க சுளுக்கு சூனியம் வைக்கத் தேட, ஒரு வாரம் பாஸ§ பாண்டிச்சேரில அக்கா வீட்டில் பதுங்கியிருந்தது தரித்திர சரித்திரம்.

நிரந்தர வேலைன்னு நம்மாளுக்கு ஒண்ணும் கிடையாது. சுண்ணாம்பு அடிக்கிறதுல ஆரம்பிச்சு, டைல்ஸ் போட்றது வரைக்கும் சிக்குற வேலைல வண்டி ஓட்ற வாழ்க்கதேன். ஆனா, தலைவனுக்காக ஒண்ணு பண்ண-ணும்னா கந்து வட்டி வரைக்கும் பந்தடிச்சுப் பொரட்டிருவான். ரஜினி படம் முதல் நாள் முதல் ஷோ பார்க்கலைன்னா, பொறந்ததுக்கு அர்த்தமே இல்லைங்-கிறது பாஸ்கரோட கொலைவெறி பாலிஸி. ஒன்பது மணிக்கு ஷோன்னா கார்த்தால அஞ்சு மணிக்கெல்லாம் கண்ணு சிவக்கக் கவுன்ட்டராண்ட கன்ட்ரோல் பணிகளுக்கு நிப்பான். அப்புறம் ஓடி ஓடி மாலைகள், பூக்கள், கற்பூரம், பூசணி, லாட்டரி சீட்டுகள்னு வெப்பன்ஸ்-களை இறக்கிட்டே இருப்பான். ஷோ முடியறதுக்குள்ள சட்டை கிழிஞ்சு, அந்து அவலாகி ஸ்பைடர்மேனுக்கு சிக்குன்குன்யா வந்தது மாதிரி கிரிப்பை விடாம நின்னுட்டிருப்பான்.

நடை, உடை, மேனரிஸம்னு எல்லாத்துலயும் ரஜினியை அப்பிடியே ஜெராக்ஸடிப்பான் பாஸ்கரு. தலைவன் என்ன கெட்டப் போட்டாலும் அதை உடனே ஒர்க் அவுட் பண்ணி, ஏரியாவை கலங்கடிக்கிறது அவனோட கலவர ஹாபி! ‘அண்ணாமலை’ வந்தப்ப பால்காரன் கெட்டப்ல விபூதியை அள்ளிப் பூசிட்டு சைக்கிள்ள பால்-கேனை மாட்டிதான் முதல் ஷோவுக்கு வந்தான். பாட்ஷா டைம்ல தாடியோட திரிஞ்சான். படையப்பா சீஸன்ல தாடியில சுண்ணாம்பு அடிச்சு சுத்தி-னான். பாபாவுக்குத் தலைப்பாகைன்னு இந்த மாறுவேஷ ரகளைக்குன்னே மார்வாடி கடையில ஃபேன்ல ஆரம்பிச்சு பித்தளைச் சொம்பு வரைக்-கும் பல அயிட்டங்களை அடகு வெச்சிருக்கான்.

பாஸ்கர் அப்பா பேரு திரவியம். அதனால, சிவாஜி படம் வந்ததுமே புல்லரிச்சுப் போயிட்டான். என்னா விஷயம்னா… சிவாஜிக்கு ‘தி பாஸ்’னு கேப்ஷன் போடுறாங்கள்ல, உடன டியா சிவாஜி & ‘தி பாஸ்’கர்னு தன் பேரை போஸ்டர்கள்ல போட்டுப் பொளக்க ஆரம்பிச்சுட்டான். அங்கிட்டு இங்கிட்டு காசைப் புரட்டி மொட்-டையப் போட்டு, கோடு தாடி இழுத்து, பாண்டி பஜார் போயி கூலிங் கிளாஸ், கோட்டு செட்டப்னு பிளிறலா எழுந்-துட்டான். ஷ¨ வாங்க மட்டும் துட்டு இல்ல; பழைய இத்துப்போன ஷ¨வைத் துவைச்சுப் போட்டு, மொத ஷோவுல தலைவன் கட்டவுட்டுக்கு பாஸ§ பாலாபிஷேகம் பண்ணின போஸ§ சி.என்.என். வரைக்கும் வந்து போச்சு!

‘‘தலைவன் அரசியலுக்கு வந்தா, அம்புட்டுப் பயலுவளும் காலி! அதெல்லாம் அவருக்குத் தெரியும். அதான், பொறுமையா இருக்காரு… வந்து அடிப்பாரு பாரு ஆப்பு!’’னு அடிக்கடி டீக்கடைகள்ல பாஸ்கரு வைக்கிற மைக்கு கோட்டை வரைக்கும் கேட்கும்.

பாஸ்கர் வீட்லதேன் ஒரே அனத்து, ‘பாவிப் பய… இப்பிடி வெளங்காமத் திரியுறானே…’னு! ‘வீட்டுக்குன்னு ஒரு பைசா தந்திருக்கியாடா நீ?’னு அம்மா அடிக்கடி கேட்கும். அதுக்கும், ‘ஏய்… ஏய்… ஏய்… ஆண்டவன் நல்லவங்களைத் தான் சோதிப்பான். ஆனா, கைவிட மாட்டான்’னு தலைவன் பாணி-யிலேயே பதில் சொல்லிட் டிருக்கான் பக்கிப்பய! — நன்றி விகடன்

இதை படிச்சி முடிச்ச உடனே எனக்கு என்னோட நண்பன் ஜெய் சங்கர் தான் நியாபகத்துக்கு வந்தான். பாஸ்கருக்கும் அவனுக்கும் கொஞ்சம் கூட வித்தியாசம் கிடையாது. என்ன பாஸ்கருக்கு கதையின் இறுதிவரை புத்தி வரவே இல்லை ஆனா ஜெய்க்கு கொஞ்ச நாள் கழிச்சி புத்தி வந்து இப்போ ஆட்டோ ஓட்டிகிட்டு இருக்கான். ஆனா சிவாஜி படத்துக்கு கண்டிப்பா அவனோட ஒரு வாரமோ இல்ல ஒரு மாச வருமானமோ போயி இருக்கும். இந்த கதையை காமெடியில போட்டு இருக்குறாங்க படிச்சி முடிக்கும் பொழுது சிரிப்பு வரலைங்க. சோகமா இருக்கு இது மாதிரி இன்னும் எத்தணை பாஸ்கர்களும் ஜெய்சங்கர்களும் உதவாத பாஸா தமிழ்நாட்டுல சுத்திகிட்டு இருக்காங்கலோ :(.

192. இவர்களுக்கு எப்படி வந்தது இந்த தைரியம்?

ஜூன் 8, 2007

ஒரு இன்ஸ்பெக்டரை நடுரோட்டில் தீ வைத்து கொளுத்துகிறது ஒரு வன்முறை கும்பல். அவருக்கோ தன்னை காப்பாற்றிக்கொள்ளவே சக போலீசார் உதவ வேண்டிய நிலை (“ஒரு நடுநிலைமை நாழிதல்” இதை ஒரு விபத்தாக கதை கட்டுகிறது. என்னே உங்க மனித நேயம் மற்றும் பத்திரிக்கை தர்மம்).

ஒரு ரவுடிக்கும்பல் ஒரு பத்திரிக்கை அலுவலகத்துக்குள் புகுந்து அடித்து நொறுக்கிவிட்டு இரண்டு மூன்று பேரை கொன்றுவிட்டு வெற்றிகரமாகா வெளியே வருகிறது.

கரூரில் இரு கட்சியினர் தாக்கிக்கொள்வதால் பஸ் நிறுத்தம் பள்ளிகள் மூடல்.

லேட்டஸ்டா தூத்துக்குடி ஆ.தி.மு.க அலுவலகம் முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு.

இவை மட்டும் அல்லாது தினமும் தலைப்பு செய்திகளாக வரும் ஆள் கடத்தல், கட்ட பஞ்சாயத்து என தமிழகம் முழுவதும் நீக்கமற நிறைந்து இருக்கும் குற்றங்கள். ரவுடிகளை கண்டு பொது மக்களும், தொழில்துறையினரும் நடுங்கும் நிலை.

பெரிய அளவிலான கலவரங்களை ஏற்படுத்த உபயோகப்படுத்தப்பட்ட பெட்ரோல் வெடிகுண்டுகள் எல்லாம் தற்பொழுது சாதாரண ஆயுதமாகிவிட்டது. எங்கே போகிறது தமிழகம்? ஜனநாயக தமிழகத்தில் தான் வாழ்கிறோமா? சட்டம் ஒழுங்கு காவல்துறையின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறதா? என்று அச்சம் கொள்ள வைக்கிறது.

ஸ்காட்லாண்டு யார்டுக்கு இணையாக சொல்லப்படும் தமிழக காவல் துறைக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது, இந்த சமூக விரோதிகளுக்கு எப்படி வந்தது இவ்வுளவு தைரியம் :

மக்கள் தான் உங்களின் உண்மையான எஜமானர்கள் என்று மறந்து, மாமூலுக்கும், “வழமையான” ஏரியா மாறுதலுக்கும் ஆசைப்பட்டு அரசியல்வாதிகளின் வீடுகளில் காவல்காரகளாக மாறியதாலா?

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களின் மீது தன்னுடைய விசுவாசத்தை காட்ட எதிர்கட்சியினர் மீது வேட்டைநாய்கள் மாதிரி பாய்வதும், ஆளுங்கட்சியினர் கண்டால் வாலை குழைத்து செல்வதாலா?

ஏரியாவாரியாக சமூகவிரோத செயல்கள் செய்பவர்களுடன் கூட்டணி அமைத்து, கமிஷன் முறையில் வேலை பார்ப்பதாலா?

மாமன் மச்சான் அவன் இவன் என்று தகுதிகள் எதுவும் இல்லாத தற்குறிகளுக்கும் யார் அதிகமாக லஞ்சம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு காவல்துறையில் வேலைவாய்ப்பும், பதவி உயர்வும் கொடுப்பதாலா?

இவை எல்லாம் செய்தது பத்தாது என்று செந்தமாகவே வழிப்பறி, கொள்ளை, கற்பழிப்பு என்று இறங்கியதாலா?

போதும் இந்த அரசியல் கட்சிகளை ஆதரிக்கும் போக்கு. போதும் ஒரு கட்சியை ஆதரித்தால் அடுத்த கட்சியின் ஆட்சியின் பொழுது பந்தாடப்பட்டதும், அடிப்பட்டதும். எங்கே போய் விட்டது உங்களின் பழைய மிடுக்கும், அஞ்சா நெஞ்சமும், மக்களுக்கு உதவும் போக்கும். இது எல்லாம் இல்லாமல் போலீஸ் உடை அணிந்து கண்ணாடியில் பார்க்கும் பொழுது உங்களுக்கே வெட்கமாக இல்லை?

இந்த நிகழ்வுகளுக்கு பின்னராவது மக்கள் தான் உங்களை நேசிக்கும் உண்மையான எஜமானர்கள் என்பதை புரிந்து கொண்டு, உங்களிடையே இருக்கும் கசடுகளை கழித்து, பழைய பொழிவுடன் உலகத்தில் உள்ள மற்ற காவல்துறைக்கு நீங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிருபிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் வாழும் தமிழகத்தின் ஒரு அப்பாவி தமிழன்.

191. Infosysஇன் சர்வாதிகார போக்கு

ஜூன் 6, 2007

இந்த செய்தியில் Infosys நிறுவனத்தில் வேலைக்கு சேருபவர்கள், பணிக்கு சேரும் பொழுதோ அல்லது ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் அளிக்கும் வருடாந்திர சம்பள உயர்வின் பொழுதோ, இவர்களிடம் இருந்து வேலையை விட்டு விலகிய அடுத்த 6 மாதங்களுக்கு இவர்கள் குறிப்பிடும் போட்டியாளர்களிடம் பணிக்கு சேர மாட்டேன் என்று எழுதிக்கொடுக்க வேண்டுமாம்.

நல்லா இருக்குதே கதை. சரி ஒரு பேச்சுக்கு அப்படி எழுதிக்கொடுப்போம் என்றே வைத்துக்கொள்வோம், கீழே சொல்லப்பட்டவைகளை அவர்கள் செய்ய தயாரா?

1. வருடத்திற்கு 100-200% வரை லாபம் என்று தம்மட்டம் அடிக்கிறீங்க, ஆனா சம்பள உயர்வு மட்டும் ஏன் 10-15% தாண்ட மறுக்கிறது. எங்களுக்கு லாபத்தில் ஒரு கணிசமான அளவு சம்பள உயர்வு கிடைக்குமா?

2. இந்த பாலிஸி பணியாளர்களுக்கு மட்டுமா இல்ல உங்களுக்குமா? அதாவது நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் கம்பெனிகளில் இருந்து வருபவர்களை பணிக்கு எடுக்க மறுப்பீர்களா?

3. இதை செய்தால் பணியாளர்களுக்கு சரியான பணி இடம் கிடைக்குமா அதாவது Better work place.

4. மாற்று கம்பெனியின் கொள்கைகளை நீங்களும் மதிப்பீர்களா?

இதை அனைத்து நிறுவனங்களும் பின்பற்ற ஆரம்பித்து விட்டால் தொழிலாளிகளின் நிலைமை கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் தற்பொழுது நிலவும் தொழிலாளிகள் பற்றாக்குறையில் இது எவ்வுளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை. இப்பொழுது எல்லாம் Bond Breakage தொகை ஏதேனும் இருந்தால் அதையும் செலுத்த தயாராக இருக்கும் நிறுவனங்களுக்கு மத்தியில் இது எவ்வுளவு தூரம் எடுபடும் என்று தெரியவில்லை.

மேலும் இவர்களிடம் அப்படி கையெழுத்து போட்டுவிட்டு அங்கு சென்றால் அவர்கள் எப்படி கண்டுபிடிப்பார்கள்? இது மாதிரி எந்த விதமான காரணமும் இல்லாமல் கையெழுத்து வாங்குவதற்கும் Bonded Labourக்கு என்ன பெரிய வித்தியாசம்?

இதற்கு முன்பாக பணியாளர்களை ஒரு பிடிக்குள் கொண்டுவர Resume database என்று NASCOMமுடன் இணைந்து சில கம்பெனிகள் செயல்படுத்த முயன்று அது பிசுபிசுத்து போனது. இதுவும் அது மாதிரி போவதற்கான சாத்தியம் அதிகம்.

இந்த நடவடிக்கைகளுக்கு காரணமாக சொல்லப்படுவது, தற்பொழுது Infosys இல் இருந்து நிறையபேர் விலகி மாற்று நிறுவனங்களில் சேருகிறார்கள். இது போன்ற கோமாளித்தனமான/சர்வாதிகரமான நடவடிக்கைகளை கைவிட்டு, அவர்கள் விலகுவதறகான உண்மையான காரணத்தை அறிந்து அதை போக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்தால் உருப்படியாக ஏதாவது நடக்கும், இல்லாவிட்டால் இதன் மூலம் மேன்மேலும் பல நல்ல பணியாளர்களை அவர்கள் இழக்க போவது உறுதி.

187. சேதி தெரியுமா உங்களுக்கு

மே 21, 2007

“ரஜினியும் ஸ்ரேயாவும் பாடல் காட்சியில் நெருங்கி நடிக்கும் போது, ஸ்ரேயாவின் தொப்புளை ரஜினி விரலால் வருடுவது போல காட்சி எடுக்கப்பட்டிருந்ததாம். இந்த காட்சியை வெட்டிவிட வேண்டும் என்று சென்சார் அதிகாரிகள் சொல்ல, “இதில் ஏதும் ஆபாசமில்லை. கலை நயத்துடன் தான் இந்த காட்சி படமாக்கப்பட்டுள்ளது’ என்று இயக்குனரின் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. “இதற்கு பதில் வேறு காட்சியை சேர்த்துக் கொள்ளுங்கள். இக்காட்சியை நீக்கினால் தான், “யு’ சர்ட்டிபிகேட் கொடுப்போம். இல்லாவிட்டால், “ஏ’ சர்ட்டிபிகேட் தான்’ என்று சென்சார் தரப்பில் உறுதியாக சொன்னார்களாம். அதன் பிறகு அந்த காட்சிக்கு பொருத்தமான வேறு காட்சி சேர்க்கப்பட்டுள்ளது” — நன்றி தினமலர்

அடடா என்ன ஒரு கலைக்கண்ணு இவங்களுக்கு, ஒரு 55 வயசு இளைஞர் (?$#&%) நெருக்கமான காட்சியில் தன் பேத்தி வயதுள்ள ஒரு பெண்ணின் தொப்புளை வருடுவது கலைநயமாமே? இது பத்தாது என நம்ம சின்ன கலைவாணர் இரட்டை அர்த்த வசனத்தில் பின்னி பெடல் எடுத்து இருக்காராம். சென்சார் போர்டு “U” certificate கொடுக்க முடியாதுன்னு சொன்ன பின்னாடி அந்த இடத்தில் பெரிய மனசு பண்ணி “mute” வேண்டுமானால் செய்துகொள்கிறோம் அப்படின்னு சொய்தார்களாம். ஆனா வாய் அசைவை வைத்து அது என்ன என்று பிறந்து பேச ஆரம்பிக்கும் குழந்தை கூட சொல்லிடுமாம்.

அட ராமா! (இந்த ராமர் “அந்த” ராமர் இல்லிங்கோ) நம்ம வீடுகளில் எல்லாம் ரஜினி படம் அப்படின்னா “அந்த” பயம் இல்லாம குடும்பத்தோட போகலாம் அப்படிங்கிற நம்பிக்கையில் இப்படி புல்டோசரை விட்டு ஏத்தி இருக்கிங்களே இது நியாயமா தலைவரே?

யப்பா தேவர் குலவிளக்கு சின்ன கலைவாணரே (பாவம் கலைவாணர் கேட்டு இருந்தா நாண்டுகிட்டு செத்து இருப்பாரு), High Pitchல உபதேசம் எல்லாம் ஊருக்கு தானா? நீங்க அப்படி இருங்க இப்படி இருங்க அப்படின்னு ஊருக்கு சொல்றது இருக்கட்டும் முன்னாடி நீ நடந்து காட்டு ராசா.

எந்த கருமத்தை எடுத்து இருந்தாலும் காசை அள்ள தான் போறீங்க இந்த லட்சணத்தில் எதுக்கு இன்னும் சதையையும் இரட்டை அர்த்த வசனங்களையும் நம்பணும். சமுதாய சிந்தனை எல்லாம் கொஞ்சம் கூட இல்லையா தலை? என்னவோ போங்க தலை காசை எப்படி வேணா சம்பாதிக்கலாம். நம்மளை வளர்த்த சமுதாயத்துக்கு நாம் என்ன திருப்பி செய்தோம் அப்படிங்கிறது தான் மேட்டரு.

எதிர்ப்பார்க்கப்படும் ஜல்லி பின்னூட்டங்கள் :

1. “மத்த படத்துல எதை எதையோ காட்டுறாங்க நாங்க தொப்புளை தானே காட்டுறோம்?” பதில் “அவங்க தின்னா நீயும் திம்பியா (அவங்க எதை திங்கிறாங்க அப்படின்னு தெரிந்து கொள்ள தனி மடல் போடுங்க.)?”

2. “இதுக்கு எங்க தலைவர் என்ன செய்வாரு டைரக்டரு சொன்னதை தான் செய்தாரு” அப்படின்னு அனானியா வந்து சொன்னா அசிங்க அசிங்கமா திட்டுவேன் அதையும் சொல்லிட்டேன்.

185. இந்த வார காமெடி சென்டரல்

மே 17, 2007

இந்த வார காமெடி சென்டரில் எந்த எந்த அரசியல்வாதிங்க காமெடி பண்ணி இருக்காங்கண்ணு பாக்கலாமா?

“எனக்கும் தினகரனுக்கும் சம்பந்தம் இல்லை” – தயாநிதிமாறன்.

நல்ல வேளை கலாநிதி மாறன் யாரு? சன் டிவி எந்த நாட்டுல இருந்து ஒளிபரப்புறாங்கன்னு கேக்கலை.தாத்தாவுக்கு இம்முட்டு போட்டியா இருக்குற இவரை விட்டுட்டு ஸ்டாலினை யாருப்பா வாரிசுன்னு சொல்றது.

“இளமை காலம் முதல் இன்று வரையிலும் பெரியாரின் கொள்கைகளை நானும் வீரமணியும் தொய்வின்றி கடைபிடிப்பதை எண்ணிக்கொண்டே இப்பொழுது வெளிவந்திருக்கின்ற “பெரியார்” படத்தை பார்க்கும் பொழுது …… “

— பெரியார் பற்றிய நினைவுகளை பற்றி கேட்ட பொழுது மஞ்சள் துண்டு கலைஞர் சொன்னவை இது.

தாத்தாவுக்கும் பேரனுக்கும் நடுவே கடுமையான போட்டி முடியலைடா சாமி. அட்லீஸ்டு அந்த மஞ்ச துண்டை எடுத்துவிட்டாவது சொல்லி இருக்கலாம்.

தண்ணியடித்தால் கட்சியை வீட்டு நீக்கம் – ராமதாஸ்

கட்சியில் மொள்ள மாறிங்க இருக்கலாம், அடியாளுங்க இருக்கலாம், பேட்டை ரவுடிங்க இருக்கலாம், தாதா இருக்கலாம், லஞ்சத்தில் ஊறி திளைச்சவங்க இருக்கலாம். ஒரு குடிகாரன் இருக்க கூடாதா? எங்க நம்ம ஆளை லஞ்சம் வாங்குபவர்கள் எல்லாம் கட்சியைவிட்டு நீக்கப்படுவார்கள் அப்படின்னு சொல்ல சொல்லுங்க பார்க்கலாம்.

நல்ல வேளை இதுவே அன்புமணியா இருந்தா குடிகாரங்க இருக்கலாம் ஆனா கட்சி மீட்டிங்குக்கு வரும் பொழுது “குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது” அப்படின்னு முதுகுலயும் முன்னாடியும் குத்திகிட்டு வரணும் அப்படின்னு சொல்லி இருப்பாரு.

183. வாழ்க சனநாயகம்

மே 13, 2007

கருணாநிதி குடும்ப முன்னேற்ற கழகம் சே திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்தும் மத்திய அமைச்சர் பதவியில் இருந்தும் தயாநிதி மாறன் நீக்கம். அடேங்கப்பா சிறந்த அமைச்சர் பட்டம் என்ன பேரனின் செய்ல்பாடுகள் குறித்து தாத்தா பூரித்தது என்ன, கட்சியில் இருந்த ஏனைய அல்ல கைகள் அனைத்தும் சிந்தனைவாதி ரேஞ்சுக்கு பில்டப்பு என்ன. ஒரு கருத்து கணிப்பின் முடிவு நிலைமையை எப்படி மாற்றி விட்டது பார்த்தீர்களா? பொதுவாக ஒரு ஆளை பிடிக்காவிட்டால் கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்குகிறார் என்றும் கட்சிக்கு எதிராக செய்லபடுகிறார் என்று கூறி நீக்குவது திராவிட கட்சிகளுக்கு ரொம்ப சாதாரணம். ஒரு சிறந்த அமைச்சர் என்று பிரதமரால் போற்றப்பட்டவரும், சில மாதங்களுக்கு முன்னர் கட்சித் தலைவரால் தலையில் வைத்து கொண்டாடப்பட்டவரும், ஒரு குடும்ப விரிசல் காரணமாக, ஒரே நாளில் பொதுக்குழு என்ற ஒரு அல்லகைகள் நிறைந்த கூட்டத்தில் தீர்மானம் செய்யப்பட்டு நீக்கப்படுகிறார். இதற்கு மேல் கருணாநிதி சுலபமாக ஜல்லி அடித்துக்கொள்ளலாம் கட்சி என்று வரும் பொழுது பேரன் (யாருப்பா அது மகனுக்கும் இதே விதிமுறையா என்று கேட்பது) என்றாலும் விதிமுறை என்றால் ஒன்று என்று. அவருடைய இடத்தை நிரப்ப போவது கனிமொழியாம் (வாங்கப்பா திமுக ஜல்லிகளே இதுக்கு என்ன சொல்ல போறீங்க. தலைவருக்கு இருக்கும் பேரன் பேத்திகளின் எண்ணிக்கையை கண்டு இப்பவே பாதி அமைச்சருங்களுக்கு அடிவயிறு கலக்குதாமுல்ல. இவங்க எல்லாம் நாளை போல கட்சிக்கு வந்தா அம்முட்டு அமைச்சர் பதவி இருக்குமா என்பது சந்தேகமே.). என்ன ஒரு சனநாயக கட்சி. கட்சிக்காக ஓடி ஓடி உழைத்து தெருவுக்கு தெரு போஸ்டர் ஒட்டி, தீக்குளித்து தன்னுடைய குடும்பத்தை நடுத்தெருவுக்கு கொண்டுவரும் தொண்டன் எல்லாம் அப்ப மாங்கா மடையனுங்க.