Archive for the ‘தீவிரவாதம்’ Category

166. அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை

மார்ச் 5, 2007

இது கொஞ்சம் பழைய செய்தி. ஜ.நா பாதுகாப்பு கவுன்சிலின் ஒப்பந்தத்தை மீறி இராக்கை தவிர வேற ஈரான் உட்பட எந்த நாட்டையும் அமெரிக்கா தாக்க கூடாது என்று ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் இங்கே கூறி உள்ளார். சமீபகாலமாக ஈரான் தான் ஈராக்கில் உள்ள “so called” தீவிரவாத அமைப்புக்களுக்கு உதவி செய்வதாக அமெரிக்கா ஜல்லி அடித்து வருகிறது, மேலும் அமெரிக்கா ஈரானை தாக்குவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என்ற நிலையில், இது நாள் வரை உலக விஷயங்களில் அதிகம் அக்கரை காட்டாத ரஷ்யாவின் இந்த அறிக்கை வியப்பு அளிக்கிறது. ராணுவ பலம் முதல் கொண்டு பொருளாதாரம் வரை அமெரிக்காவின் பலத்தில் சிறிதளவே ரஷ்யா இருந்தாலும் இந்த அறிக்கையின் மூலம் அமெரிக்காவுக்கு எதிராக குரல் குடுக்க யாரும் இல்லை என்ற குறை நீங்க ரஷ்யா ஆரம்பித்து வைத்து இருக்கிறது. அமெரிக்காவின் இந்த போர் வெறி நிலைப்பாடு தொடருமானால் மற்ற உலக நாடுகளும் அதற்கு எதிராக திரும்பும் என்பதில் சந்தேகமே இல்லை. ரஷ்யாவின் இந்த நிலை சிறிது முக்கியத்துவம் வாய்ந்ததே ஏனெனில் ஜ.நாவில் விடோ சக்தி உடைய நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று, இதற்கு மேல் அது அமெரிக்காவின் அனைத்து தீவிரவாதி ஜல்லிக்கும் தலையாட்டாது என்று நம்பலாம். ஒரு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது மற்ற நாடுகள் எப்பொழுது கொதித்து எழப்போகின்றன என்று பார்க்கலாம்.

165. முஸ்லிம் என்றால் தீவிரவாதியா?

மார்ச் 4, 2007

சமீபகாலமாக அமெரிக்க ஊடகங்களில் அதுவும் ஜார்ஜ் புஷ் கட்சியை துதி பாடும் ஊடகங்கள். கொஞ்சம் கொஞ்சமாக முஸ்லிம் என்றாலே தீவிரவாதி மாதிரியான தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அதற்கு ஏற்றார் போல் இந்த ஊடகங்களில் நான் கவனித்த இரண்டு நிகழ்ச்சிகளை சொல்கிறேன்.

வானொலியில் ஒரு நிகழ்ச்சி யாரோ ஒருத்தன் Shuan Thapley(last name சரியாக நினைவுக்கு வரவில்லை) அப்படின்னு ஒருத்தன் அதுக்கு முந்தின நாள் நடந்த ஒரு கலந்துரையாடல் பற்றி ஏதோ சொல்லிட்டு இருந்தான். அவர் விளக்கிக்கொண்டு இருந்த நிகழ்ச்சி ஒரு முஸ்லிம் இமாம் உடனான தொலைபேசியில் கலந்துரையாடல் போலும். அதில் ஒரு கட்டத்தில் வாக்குவாதம் பலமாகி அந்த இமாம் ஏதோ கத்தி தொலைபேசியை வைத்து விட்டாராம் அந்த நிகழ்ச்சியை அவர் விவரித்த சொற்களை பாருங்க. “Oh Man I have never ever in my life heared or seen such a rude and rash conversation. That guy that Moslim emam is evil, he is terror, he is the face of Islam. Oh God that guy he is really really terror oh Man he is the real evil, face of the Islam” போன்ற வார்த்தகளை திரும்ப திரும்ப உபயோகம் செய்து கொண்டே இருந்தார். இந்த இமாம் சமீபத்தில் குடியரசு கட்சியின் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டார் போலும் உடனே அதையும் இணைத்து குடியரசு கட்சி தீவிரவாதத்துக்கு துணை போவதாக பிதற்றினார்.

இந்த செய்தியை படிச்சி பாருங்களேன். இதில் அவர்கள் அமெரிக்காவில் உள்ள பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனங்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை அலசுகிறேன் பேர்வழி என்று அழகாக முஸ்லிம்கள் எல்லாரும் தீவிரவாதிகள் என்று கூறுகிறார்கள். சாதாரண ஒரு கதைக்காக புனையப்படும் பாத்திரங்கள் கூட எவ்வுளவு அழகாக ஒரு முஸ்லிம் இமாம், ஒரு பாகிஸ்தான் பிரஜை அப்படி என்று முஸ்லிம் மதத்தின் இரு கோடிகளில் மனிதர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கின்றனர்.

அமெரிக்க ஊடகங்கள் வார்த்தை பிரயோகத்தில் மிகவும் கைதேர்ந்தவர்கள். அதுவும் ஒவ்வொரு செய்தி ஊடகத்திலும், சரியான வார்த்தைகளை சேர்த்து செய்திகளாக உருவாக்குவதற்கு என்றே ஒரு துறை உண்டு. இஸ்ரேலின் PRO க்களின் ஆதிக்கம் இந்த துறையில் அதிகம். அவர்களின் வேலையே முஸ்லிம்களுக்கு எதிராக வரும் செய்திகளை மிகைப்படுத்துவது. இதை பற்றி தமிழ்சசி அவர்களின் இங்கே ஒரு நல்ல பதிவை எழுதி இருக்கிறார்.

மேலே குறிப்பிட்டவை எல்லாம் நான் எதேச்சையாக கவனித்த நிகழ்ச்சிகளே. இது மட்டும் அல்ல இன்னும் பல்வேறு வகையில் முஸ்லிம்களுக்கு எதிராக இங்கே கட்டவிழ்த்து விடப்படும் வன்முறை நிறைய உண்டு. சமீபத்தில் கூட US Airwaysஇல் முஸ்லிம் இமாம்கள் சிலரை தீவிரவாதிகள் என்று கூறி அவர்களை அந்நிறுவனம் விமானத்தில் ஏற அனுமதி மறுத்தது. பாதுகாப்பு அதிகாரிகள் அவர்கள் தீவிரவாதிகள் இல்லை என்று சொன்ன பிறகும் அவர்களை பயணம் செய்ய அனுமதிக்காத அந்த விமான நிறுவனத்தின் கொழுப்பை என்னவென்று சொல்வது. இப்படி பல்வேறு வகையில் அவர்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. பார்க்கலாம் எவ்வுளவு நாள் தான் இங்கே இருக்கும் முஸ்லிம்கள் இதை பொறுத்துக்கொள்கின்றனர் என்று.