Archive for the ‘நையாண்டி’ Category

இதெல்லாம் நல்லதுக்கு தானா?

மார்ச் 28, 2012

வழக்கமா நாலு உதை விட்டாலும் ஸ்டார்ட் ஆவாத பைக்(பெரும்பாலும் சாவி போட்டு இருக்க மாட்டேன் இல்லாட்டி சாவியை ஆன் பண்ணி இருக்க மாட்டேன் நோ நோ.. இதுக்கெல்லாம் பிளக்ஸ் பேனர் ரோம்ப ஓவர்) இன்னிக்கு ஒரே உதையில ஸ்டார்ட் ஆயிடிச்சி.

ஹோட்டல்ல போயி சட்னி கேட்டா சட்னி இல்ல கிட்னி வேணுமான்னு கேப்பானுங்க.. இன்னிக்குன்னு பாத்து சார் தேங்கா சட்னி,தக்காளி சட்னி, புதினா சட்னி எது வேணுமான்னு கேக்குறாங்க.

பசி உயிரை போவுற அன்னிக்கு நமக்கு முன்னாடி கியூவுல பத்தாயிரம் பேரு நிப்பான் அதுவும் நமக்கு முன்னாடி இருக்குறவனுக்கு கவுண்டர் கிட்ட வந்த அப்புறம் தான் எதை திங்கலாமுன்னு ஆராய்ச்சி செய்யுற ஆசையோ இல்ல இதை எப்படி செய்து இருப்பாங்க அதை எப்படி செய்து இருப்பாங்கன்னு டவுட் வந்து கவுண்டருல இருக்குறவன் கிட்ட கேள்வியா கேட்டு கொலையா கொல்லுவான்.. அதுவும் இல்லாட்டி அவனுக்கு தெரிந்த ஒரு பத்து பேரு வந்து எனக்கு சேத்து வாங்குடான்னு அவன் கிட்ட இருக்குற ஆயிரம் பக்க லிஸ்ட் பத்தாதுன்னு இவனுங்க ஒரு ஆயிர ஆயிட்டம் சொல்லுவானுங்க ஆனா இன்னிக்குன்னு பாத்து எல்லா கவுண்டரும் காலியா இருக்கு வசந்த் & கோ மாதிரி வாங்க வாங்கன்னு வரவேற்ப்பு வேற

வழக்கமா வங்கியில போயி விண்ணப்பம் இல்லைன்னு சொன்னா யோவ் அங்க தான் இருக்கும் போயி ஒழுங்கா பாருயான்னு அன்பா சொல்லுவாரு, ஆனா இன்னிக்கு பாருங்க ஒரு ஆபீசர் பணிவா வந்து பாத்து எடுத்து குடுக்குறாரு. கையெழுத்து போடுற இடத்துல இருந்த மல்லு ஆன்டி என்ன கோர்ஸ் படிக்கிறீங்க, நல்ல கோர்ஸா இருக்கேன்னு ஒரு ரெண்டு மூணு நிமிஷம் கடலை போட்டு கஸ்டமர் சேடிஸ்பேக்‌ஷனை வேற இம்ப்ரூவ் பண்ணுது.

நமக்கு தேவைன்னு வரும் பொழுது.. cartridge காலி ஆவுறது, பேப்பர் தீர்ந்து போவுறது, நடுவுல வேலை செய்யாம போவுறதுன்னு கெத்த காட்டும் பிரிண்டரு இன்னிக்கு பிரிண்ட் பட்டனை தட்டின உடனே சும்மா பள பளன்னு பிரிண்ட் அவுட்டு எடுத்து குடுக்குது.

இதெல்லாம் நல்லதுக்கா இல்ல பெரிய ஆப்போட சின்ன ஆரம்பமான்னு நெனைச்சிட்டே இருந்தா பின்னாடி ஒரு குரல் டேய் எருமை பத்து மணி ஆச்சி ஆபீசுக்கு போவாம அப்படி என்ன தூக்கமுன்னு, ஸ்யப்பா நல்ல வேளை கனவா போச்சி..இந்த மாதிரி பிரச்சனை இல்லாத உலகத்துல பிரச்சனையை fancy banianனா போட்டு பொங்கிட்டு இருக்குற நம்மால உயிர வாழ முடியுமா என்ன?

ஒரு வேளை நம்மளைத்தான் சொல்லுறாங்களோ?

ஜனவரி 2, 2010

எங் ஊரு பக்கமெல்லாம் சொல்லுவாங்க வாய்ல வடை சுடுறவன்னு. இந்த போட்டோவை பாத்த உடனே பதிவுலகத்திலையும் ஆன்லைன் அரட்டை அரங்களிலும் சவுண்டு விடும் நம்ம ஆளுங்க தான் ஞாபகத்துக்கு வராங்க. யோசிச்சி பாத்தா அது கூட உண்மையாத்தான் இருக்கு எவ்வுளவோ பிரச்சனைகளுக்கு சும்மா உய் உய்ன்னு சவுண்டு விட்ட நாம் இது வரைக்கும் எதுக்காவது தெருவுல இறங்கி போராடி இருக்கோமா?
null

பாய்லரே இல்லாத கடையில 70 பேர் டீ குடிச்சாங்களாமா

திசெம்பர் 8, 2009

நம்ம பதிவை கூகுள் முடக்கிடிச்சே இதுக்கு மேல ரைஸ் சேவை சே தமிழ்சேவை செய்ய முடியாதேன்னு புல் பீலிங்கஸ்ல இருந்தா இன்னைக்கு StatCounter ரிப்போர்ட்டு அனுப்பி இருக்கு. என்னாலயே பாக்க முடியாத என்னோட பதிவை போன வாரம் 70 பேர் பாத்தாங்களாம.. சரியான கூறு கெட்ட குக்கருங்களா இருக்கானுங்க. இவனுங்களை நம்பி நான் வேற அட எதுவும் எழுதாம இம்முட்டு பேர் படிக்கிறாங்களே எதையாச்சும் எழுதுனா இட்லிவடை, லக்கி வகையராக்களை மிஞ்சிடலாமுன்னு ரெண்டு முணு ராத்திரி மல்லாக்க படுத்து கண்ட கனவெல்லாம் வேஸ்டாப்போச்சே..

கூகுளுக்கு ஒண்ணு சொல்லிக்கிறேன் சினம் கொண்ட இந்த தமிழ்சிங்கத்தை இப்படி முடக்கலாமுன்னு மனப்பால் குடிக்காதிங்க அது உங்க கொம்பனியையே சிதைச்சிடும்.. ஒடம்பெல்லாம் பரவி இருக்கும் மாஸ்டர் பிரைனோடும்,ஒரு தொலைநோக்கு பார்வையோடு தான் சிங்கம் வேர்டு பிரஸ்ஸுலையும் குகையை பார்ம் பண்ணி வெச்சி இருக்கு.. இதுக்கு மேல நீங்களா வந்து கூப்புட வரைக்கும் (ரொம்ப சவுண்டு விடுறேனோ? அய்யா ராசா கூப்பிடுவிங்கில்ல) சிங்கம் இங்க தான் இருக்கும். அப்ப வரட்டா நெக்ஸ்டு வேட்டையில மீட் பண்ணலாம்…

சந்தோஷங்களுடன்
சந்தோஷ்…

லிப்டோ லிப்டு

நவம்பர் 16, 2007

லிப்டுல போறது சகஜமா நடக்குற ஒண்ணும், ஆனா பாருங்க தினமும் ஒரே மாதிரி போயி வந்துட்டு இருந்தா ரொம்ப போர் அடிக்கும். அதனால் அந்த பயணத்தை இனிமையாக்க என்ன செய்யலாமுன்னு யோசிச்ச பொழுது தோன்றியவை சில

1. ஏறின உடனே ஓடிப்போயி சுவற்றை பாத்து, சுவத்தை புடிச்சி நின்னுகோங்க. அடிக்கடி பின்னாடி திரும்பி நீங்க இறங்க வேண்டிய இடம் வந்துடிச்சான்னு பாக்குற மாதிரி பாத்து, எதையோ கண்டு பேய் அறைந்ததை போல சுவத்து திரும்பிகோங்க.

2. அடிக்கடி சே காத்தே இல்லை அப்படின்னு சொல்லி, எங்க போச்சி காத்து அப்படின்னு நீங்க வெச்சிகிட்டு இருக்குற பர்ஸ், பை முதலியவற்றில் தேடுங்க. கூட்டம் கம்மியாவும், அடி வாங்க தெம்பு அதிகமாகவும் இருக்கும் பொழுது பக்கத்துல இருக்குறவங்க பையிலையும் காத்து இருக்கான்னு செக் பண்ணிக்கலாம்.

3. உள்ளே வருபவர்களை கைக்குலுக்கி, வரவேற்று நான் தான் இந்த லிப்டின் COO(Chief Operating Officer) என்று அறிமுகப்படுத்தி, உங்களின் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள் உங்களுக்கு ஏதேனும் தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ள 100ஜ டையல் செய்யவும், அப்படின்னு சொல்லுங்க.

4. லிப்ட் போயிட்டே இருக்கும் பொழுது பூனையை போல, நாயை போல சவுண்டு வுடுங்க.

5. புதுசா உள்ள வருபவரை ஒரு மாதிரியாக பார்த்து, என்ன ஒரு மாதிரியா கெட்ட வாசனை வருதுன்னு சொல்லி, நாங்க எல்லாம் சாக்ஸை துவச்சி போடுவோமாக்குமுன்னு சொல்லுங்க.

6. ஒவ்வொரு தளத்தை லிப்ட் அடையும் பொழுதும், “லிப்டை போல சவுண்டு விட்டு, நீங்கள் நான்காம் தளத்தை அடைந்து இருக்கீங்க” அப்படின்னு சொல்லி, அந்த தளத்தின் பெருமையை எல்லாம் விளக்கலாம். முடிந்தால் அங்க இறங்க முற்படுபவரை இழுத்து பிடித்து, ஒரு டூர் கைடு போல விளக்கினால் உங்களது அன்றைய பொழுது இனிமையாக கழியும்.

7. லிப்டுகுள்ள இருக்குற போனை எடுத்து ஹலோ பெப்சி உமாவான்னு ஆரம்பிச்சி உங்களுக்கு புடிச்ச பாட்டை கேளுங்க.ஆனா தயவு செய்து நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க மேடமுன்னு சொல்லிடாதிங்க, முடியலை அதை கேட்க கூட முடியலை.

8. என்னடா காத்தே வரலைன்னு சொல்லி அதுல இருக்குற “Stop” பட்டனை அழுத்துங்க.

9. நீங்க நிக்கிற ஏரியாவை சுத்தி ஒரு சின்ன வளையத்தை போட்டு, எங்க ஏரியா உள்ளே வராதேன்னு சொல்லுங்க.
10. உள்ளே யாருமே வராத பொழுது “டேய் அவன் தானே நீயி, உன்னைய வரவேணாமுன்னு சொன்னேனே ஏண்டா வந்த அப்படின்னு” சொல்லி அவரை உள்ள விடாதி மாதிரி ஸீன் போடுங்க.

11. லிப்டு ஒவ்வொரு தளத்துல நிக்கும் பொழுது அதை நிப்பாடி, லிப்டுல இருந்து ஓடிப்போயி தளத்துல இருக்குற ஏதையாவது ஒண்ணை தொட்டு மைபிரண்டு போல “மீ த பஸ்டுடூடூன்னு” சவுண்டு விட்டுகிட்டே லிப்டுக்குள்ள ஓடி வாங்க. இதை செய்யும் பொழுது ஒருவருக்கு மேல் இருப்பது நலம் அப்ப தான் ஒரு ரன்னிங்க ரேஸ் எபெக்டு வரும் (அப்படியே உங்க வேலை போனாலும் நீங்க மட்டும் தனியா வீட்டுக்கு போக மாட்டீங்க.).

உங்களுக்கும் இது மாதிரி நிறைய ஜடியாக்கள் தோன்றும் அதை எல்லாம் பின்னூட்டமா போடுங்க பாக்கலாம். சிறந்த பின்னூட்டத்துக்கு குசும்பன் பரிசு வேற குடுக்குறேன்னு சொல்லி இருக்காரு.

எவன்டா இங்க சந்தோசு?

நவம்பர் 13, 2007

நான் அமெரிக்காவுல இருக்கும் பொழுது ராஜ் அப்படின்னு ஒருத்தன் நமக்கு தோஸ்து ஆனான்.  நம்ம ரும்மேட் ஒருத்தர் சோம பானம் அடிச்ச அழகை (அவன் அவன் குவாட்டருக்கே சாய்ந்துகிட்டு இருக்கும் பொழுது. அந்த குடிகாரன் ஒரு முழு fullஜ மிக்ஸிங் பண்ணாம அடிச்சிட்டு எதுவுமே நடக்காத மாதிரி  ஒக்காந்து இருப்பான்.) பாத்து ரொம்ப Impress ஆகி தானும் அவரை போல வளரணும் (அடடா என்ன ஒரு லட்சியம்?) அப்படின்னு எங்க கூட சேர்ந்து சுத்த ஆரம்பிச்சான். என்ன பண்றது பொதுவா எல்லாருக்கு சனி புடிக்கும் இவன் சனியை புடிச்சிகிட்டான்.

ஒரு நாள் இவன் தண்ணியடிச்சிட்டு இருக்கும் பொழுது என்ன பாத்து “உனக்கு டென்னிஸ் விளையாட தெரியுமான்னு கேட்டாங்க?”. அதுக்கு நான் “எது! அந்த வடை சுடுற கரண்டியை ஆளுக்கு ஒண்ணு எடுத்துகிட்டு ஒரு கிழிஞ்சிபோன மீன் வலைக்கு இந்த பக்கமும் அந்த பக்கமுமா நின்னுகிட்டு, பந்தை தட்டிகிட்டு இருப்பாங்களே அதுவா? சே சே அது எல்லாம் ஒரு விளையாட்டா” அப்படின்னு கேட்டேங்க. அதுக்கு அவன் டேய் என்னோட 25 வருச பொது வாழ்க்கையிலையும் சரி பத்து மாச தனிபட்ட வாழ்க்கையிலும்  டென்னீசுக்கு இந்த மாதிரி ஒரு விளக்கம் சொல்லி கேட்டது இல்ல அப்படின்னு ரொம்ப பீலிங்க்ஸ் ஆயிட்டான்.

இந்த விளக்கதை கேட்ட பிறகாவது அடங்குவான் அப்படின்னு பாத்தா அவன் விடவில்லை. மச்சி “அமெரிக்கா வந்து நயாக்ரா பாக்காம போனா எம்முட்டு அசிங்கமோ அதே மாதிரி டென்னீஸ் விளையாடம போனா அசிங்கம்” அப்படின்னு சொன்னதோட, நான் Atlantaவுல ஒரு seeded player உன்னை Roger federar (அய்யோ பாவம் இது யார் பெத்த புள்ளையோ, விஷயம் தெரிஞ்சா அவரோட பெயரை மாத்தி வெச்சிகுவார்) ஆக்கி காட்டிட்டு தான் மறுவேலை அப்படின்னு சொன்னான். சரி குடிகாரன் பேச்சு விடிஞ்சாப்போச்சி அப்படின்னு பாத்தா.

அடுத்த நாள், ரெண்டு வடை கரண்டியோட வந்து நிக்கிறான். நானும் என்னடா கரண்டியோட நிக்கிற, ஏதாவது கல்யாண வீட்ல வேலை பாக்க போறீயா?  அப்படின்னு கேட்டேன். அவன் டென்ஷனாகி டேய் இதுக்கு பெயர் “Racquet” அப்படின்னு ஆரம்பிச்சி ஒரு பத்து நிமிசம் மொக்கையை போட்டான். வழக்கம் போல நமக்கு ஒண்ணும் புரியலை ஆனாலும் அவன் மொக்கைக்கு பயந்து சரி சரின்னு புரிஞ்ச மாதிரி மண்டையை ஆட்டிடேன்.

சரி வா கோர்டுக்கு போகலாமுன்னு சொன்னான், டேய் இப்ப என்ன ஆகிப்போச்சின்னு கோர்டுக்கு கூப்புடுறே, எங்கப்பா நான் கோர்டுக்கு போனது தெரிஞ்சா அவ்வுளவு தான் கொன்னே போட்டுவாரு. எதுனாலும் பேசி தீத்துகலாம் கோர்டு எல்லாம் வேணாமுன்னு சொன்னேன். அடசே அறிவுகெட்ட முண்டம்(உனக்கும் அது தெரிஞ்சி போச்சா?) டென்னீஸ் கோர்டுக்கு போவலாம் வான்னு கூட்டிகிட்டு போனான்.

அப்புறம் ஆரம்பித்தது பாருங்க அவனுக்கு சனி, தனி ஆளாக 8 set ஆடுற ஆளு என் கூட ஒரு 30 நிமிசம் விளையாடினதுல களைச்சிப்போயிட்டான். அதுவும் அந்த 30 நிமிசத்துல நான் அடிச்ச ஒரு பந்தை கூட அவனால தொட முடியால, எப்படி நம்ம திறமை(ஹிஹி.. பந்து கோர்டுக்குள்ள இருந்தா தானே தொட முடியும்.). இப்படியே ரெண்டு நாள் போச்சி தாங்காதுடா சாமி அப்படின்னு மூணாவது நாளில் பந்து எடுத்து போட ஒருத்தனை கூட்டிகிட்டு வந்தான், அதுக்கு அடுத்த வாரத்துல பாத்தா இன்னும் ரெண்டு பேர் அடடா என்னை சமாளிக்க நாலு பேரா அப்படின்னு புல்லரிச்சி போயிட்டேனுங்க.அப்புறம் என்னோட திறமையான ஆட்டத்தை பார்த்து வழக்கம் போல என்னைய பந்து எடுத்து போடவும், கை தட்டவும் (கிரிக்கெட் நியாபகத்துல பந்து வெளியே போகும் போது விசில் அடிச்சி திட்டு வாங்குனது வேற விசயம்) யூஸ் பண்ணிகிட்டாங்க.

கொஞ்ச நாள் கழிச்சி ஒரு வெள்ளைக்காரன் கோர்டுக்கு வந்து “எவன்டா இங்க சந்தோசு” (டைட்டிலை சொல்றதுக்குள்ள ஸ்ப்ப்ப்ப்பாஆஆ முடியலை…) அப்படின்னு சவுண்டு விட்டான். சரி நம்ம திறமையை பாத்து நம்மளை அடுத்த U.S Open பைனலுக்கு டைரக்டா விளையாட கூப்புடறாங்களோன்னு நினைச்சி நான் தான்னு சொல்ல வாய் எடுத்தேன். அதுக்குள்ள பின்னாடி இருந்து ஒரு சவுண்டு “எவன் அடிச்சா பந்து நெட்டையும் தாண்டாம கோர்டுக்குள்ளாரையும் இல்லாம இருக்கோ அவன் தான் சந்தோசுன்னு” அப்படின்னு, யாருடா அது நம்ம திறமையை இப்படி வெட்ட வெளிச்சம் ஆக்குறதுன்னு பாத்தா நம்ம ராஜ்.

அப்புறம் தான் தெரிஞ்சது அட்லாண்டாவுல முதல் பத்து இடத்துல இருந்த அவன் எனக்கு சொல்லி தர ஆரம்பிச்சதுக்கு அப்புறம் வேகமா வளர்ந்து 50வது இடத்துக்கு போயிட்டானாம். அந்த வெள்ளைக்காரன் வேற யாருமில்ல அவனோட கோச் தான், ஒரே மாசத்துல அவன் வாழ்க்கையில இம்முட்டு பெரிய மாற்றத்தை செய்ததை யாருன்னு தெரிஞ்சிக்க ஒரு கொலை வெறியோட வந்து இருக்காரு. நம்ம திறமைக்கு இதெல்லாம் சாதாரணமப்பா என்ன சொல்றீங்க?

இந்த வாரம் ரணகளம்தான்டி

நவம்பர் 12, 2007

கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை ஆடிகிட்டு இருந்திச்சாம், அது மாதிரி ஏதோ சமீபகாலமா நல்லா இருக்குற தமிழுக்கும், தமிழ்மணத்துக்கும் வேட்டு வெக்கிற மாதிரி வந்துச்சி பாருங்க ஒரு கடுதாசி. நவம்பர் 12 முதல் 17 வரை நீங்க நட்சத்திரம் இருக்கணுமுன்னு.ஆகா மாட்டினாங்கடா தமிழ் மக்கள் இதை விட்டா கைப்புள்ளைங்களையும், செ.செ.சூ வெச்சிகிட்ட தமிழ்மணத்தையும் போட்டுத்தாக்க நல்ல வாய்ப்பு கிடைக்காது புடிச்சிகோடா சந்தோசுன்னு உள் மனசு சொல்ல, போட்டேன் பாருங்க ஒரு பதிலு அய்யா சாமி தமிழ்மண தர்மகத்தாவே, நீங்க ஆள் தெரியாம எனக்கு அனுப்பி இருந்தாலும் பரவாயில்லை இந்த வாய்ப்பை நான் விட மாட்டேன், நான் தான் அந்த வாரத்துல நட்சத்திரமா இருப்பேன்னு அவங்க யோசிக்கிறதுக்கு கூட டைம் குடுக்காம கெட்டியா புடிச்சிகிட்டேன். 

அந்த கடுதாசி வந்ததுல இருந்து எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை(அது எப்பவும் ஓடாதுங்கிறது வேற விஷயம்).பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் நட்சத்திரமா இருந்து என்ன என்னத்தை எல்லாம் எழுதி பெருமை சேர்த்து இருக்காங்க. எனக்கு என்னத்தை தெரியும் சொல்லுங்க, நான் என்னாத்தனு எழுத முடியும்? இருந்தாலும் விடுவோமா?

அப்புறம் இன்னொன்னும் சொல்லிடறேன், இளகிய மனசு உள்ளவங்க, மொக்கையை தாங்க முடியாதவங்க, தமிழ் பற்று உள்ளவங்க, தமிழுக்கு கொடுமை நேர்வதை கண்டு பொங்குறவங்க எல்லாம் தமிழ்மணம் பக்கம் ஒரு வாரம் வந்துடாதிங்க, ஏன்னா இந்த வாரம் முழுவதும் தமிழுக்கு சோதனைக்காலம் தமிழ் கொலை பண்ணி பண்ணி தமிழ்மணம் முழுவதும் ரத்த ஆறா ஓடப்போவுது. பேச்சை குறைடான்னு நீங்க சொல்றது எனக்கு கேக்குது ரைட்டு விடுங்க, இம்முட்டு சொல்லியும் என் பேச்சை கேக்காட்டி என்ன பண்றது, சோலிய முடிச்சிட வேண்டியது தான், இதுக்கு மேல உங்க தமிழுக்கு என்னால உத்திரவாதம் குடுக்க முடியாது, நம்மளோட அடுத்த மீட்டிங்கு டைரக்டா ரத்த பூமியில தான் வரட்டா.

குடுத்த காசுக்கு மேல கூவுறானே

ஒக்ரோபர் 11, 2007

Photo Sharing and Video Hosting at Photobucket

 விஜய் : ஒய்யால குடுத்த காசுக்கு மேல கூவுறானே ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்…………..

201. ஆர்குட்டின் கேவலமான Profile

ஜூலை 6, 2007

ஆர்குட் நடத்திய வோட்டெடுப்பில் இந்த Profile தான் மிகக்கேவலமாக இருக்கிறது என்று பொதுமக்கள் வோட்டு போட்டு உள்ளனர் (இதை பார்வையிட ஆர்குட் கணக்கு தேவை) . சில பேர் ரொம்ப டென்ஷன் ஆகி தக்காளி, முட்டை எல்லாம் எடுத்து அடிச்சி இருக்காங்க :((.. அய்யோ பாவம் ஏன் தான் இப்படி எல்லாம் ஒரு profileஜ உருவாக்குறாங்களோ தெரியலை :(.

ஆபீஸர் இந்த எட்டுக்கு லைசென்ஸ் குடுப்பிங்களா?

ஜூன் 25, 2007

நம்மளையும் எட்டு போட வெக்கணும் அப்படின்னு அன்பா நம்ம RTOங்க கப்பியரு, சர்வேசரு, குசும்பரு, குட்டிபிசாசரு (எல்லாரும் RTOவாச்சே வாங்க ஆபீஸர் போங்க ஆபீஸர் அப்படின்னு கூப்பிடாட்டி கோச்சிகிட்டு லைசன்ஸ் கொடுக்காம போயிட்டா என்ன பண்றது) எல்லாம் கூப்பிட்டு இருக்காக.

இந்த விளையாட்டுல நம்மளை பத்தி எட்டு தகவல் குடுக்கணுமாமே? நம்ம என்ன அப்துல்கலாமா? இல்ல அப்ரகாம் லிங்கனா? நம்மளை பத்தி மக்கள் தெரிஞ்சிகிட்டு அதை பின்பற்றுவதற்கு. சரி நம்ம பதிவுலகுல இருக்கும் அண்ணன்களிடம்(பெண்களுக்கு இட ஒதுக்கீட தரலைன்னு யாரும் சண்டைக்கு வராதிங்க ஒரு ரைமிங்குக்காக இப்படி சொல்லி இருக்கேன்.) நமக்கு இருக்கும் எட்டு கேள்விகளை கேட்டு பதிலை தெரிஞ்சிகலாமுன்னு எட்டு கேள்விங்களை கேட்டு இருக்கேன் யாராவது பதிலை சொல்லுங்களேன்?

1. எல்லாரும் பெப்சிக்கு mixingகாக பிராந்தி, விஸ்கி, ரம்மு, ஜிம்முன்னு எதையோ ஊத்தி குடிக்கிறாங்க. நான் அவனுங்களுக்கு ஒரு படி மேல போயி பெப்சியை rawவாக குடிப்பேன். அப்படி இருந்தும் நான் குடிகாரன்னு என்னைய சொன்னா ஏண்ணே என்னைய கட்டி வெச்சி வெளுக்குறாங்க? mixing இல்லாம பெப்சிஜ rawவாக குடிக்கிறது தப்பாண்ணே?

2. இப்படித்தான் பாருங்க போன வாரம் நம்மாளு ஒருத்தன் “மச்சான் நம்ம ஊட்ல potlock(கூட்டாஞ்சோறு) இருக்கு உன்னால முடிஞ்சத எடுத்துட்டுவா” அப்படின்னு சொன்னான். நானும் அவங்க வீட்டுக்கு போனேன் ஒருத்தன் என்னடான்னா veg pulav அப்படிங்கிறான் இன்னொருத்தன் என்னடான்னா இட்லி சாம்பார் அப்படின்னான், நீ என்ன கொண்டு வந்தே அப்படின்னு கேட்டாங்க, அதுக்கு நான் “சாப்பிட வாயும் அதுக்கு உதவியா இருக்கட்டுமேன்னு கையையும் கொண்டு வந்தேன்” அப்படின்னு சொன்னதுக்கு அடுத்த வார கச்சேரியில வெளுத்துடாங்க? கூட்டாஞ்சோறுக்கு இதை எல்லாம் கொண்டு போக கூடாதாண்ணே?

3. டிவியில ஏதோ footballஆம், அதுல ஒரு பந்து பின்னாடி 20 பேர் முந்திஅடிச்சிகிட்டு ஓடிகிட்டு இருந்தாங்க, நான் கூட ஏண்டா கோடி கோடியா சம்பாதிக்கறீங்க சொந்தமா ஆளுக்கு ஒரு பந்து வாங்கி வெச்சி வெளையாட கூடாதான்னு சொன்னேன், அதுக்கு ஏண்ணே எல்லாரும் என்னைய ஒரு மாதிரி பாக்குறாங்க? உருப்படியான யோசனை சொல்றது தப்பாண்ணே?

4. கொஞ்ச நாளைக்கு முன்னாடி இங்க NASAவுக்கு போயி இருந்தேன், அங்கன ஒரு ஆளு ராக்கெட்டை காட்டி எல்லாத்தையும் விளக்கிட்டு “any questions” அப்படின்னு கேட்டாங்க. நான் சாமி சாமி இம்முட்டு செலவு செஞ்சி ராக்கெட் எல்லாம் செஞ்சி இருக்கீங்க, ஏன் சாமி காத்தாட ஒக்காரலாமுன்னு பாத்தா ஒரு சன்னல் கூட இல்லை ஏன் ஒரு சன்னல் வெக்க கூடாதா சாமி? அப்படின்னு கேட்டதுக்கு கழுத்தை புடிச்சி வெளியே தூக்கி கொண்டுவந்து போட்டுட்டாங்க. ஏண்ணே அறிவாளியா இருக்குறது தப்பாண்ணே?

5. இப்படித்தான் பாருங்க நான் நாலாவது படிக்கும் பொழுது ஏப்ரல் ஒண்ணாம் தேதி வந்தது எல்லாரும் மத்தவங்க சட்டையில ink penஜ உபயோகித்து ink தெளிச்சிகிட்டு இருந்தாங்க, நானும் இன்னொருவனும் மட்டும் கொஞ்சம் innovativeவாக யோசிச்சி ball point penனின் refillயின் முனையை எடுத்து பின்னாடி வழியா வாய் வெச்சி ஊதி அதை எடுத்து அடுத்தவன் சட்டையில தடவினோம்(சட்டை அத்தோட சரி தூக்கி போட வேண்டியது தான்). இதுக்கு போயி யாராவது நிக்க வெச்சி முதுகு தோலை உரிப்பாங்களா? ஏண்ணே Innovativeவாக இருப்பது தப்பாண்ணே?

6. காலேஜ் படிக்கும் பொழுது attendance sheetல வராதவங்க roll numberஜ எழுதுவாங்க. வாத்தியார் போயிட்ட பின்னாடி நாங்க அதுல நமக்கு கமிஷன் வெட்டுனவங்க நம்பரை எல்லாம் அடிச்சிட்டு வாத்தியார் மாதிரியே கையெழுத்து போடுவேன், அதுக்கு போயி இந்த சின்ன புள்ளை மேல விசாரணை கமிஷன் வெச்சிடாங்க. படிக்கு பொழுது மட்டும் வாத்தியார் மாதிரியே பெரிய ஆளா வரணும் அப்படின்னு சொல்றாங்க, அதுக்கு முதல் படியா அவரை மாதிரி (சமயத்துல அவரை விட கொஞ்ச நல்லாவே) கையெழுத்துப்போட்டா தப்பாண்ணே? வாத்தியார் மாதிரி பெரிய ஆளா வருவது தப்பாண்ணே?

7. ஒரு இரண்டு மாசத்துக்கு முன்னாடி 60 மைல் speed limit உள்ள ரோட்டில் 90 மைல் வேகத்துல போயிட்டு இருந்தேன் இது தப்பு அப்படின்னு போலீஸ் புடிச்சி fine போட்டுடாங்க. வாழ்கையில வேகமா முன்னேறுவது தப்பாண்ணே?

8. படத்தை ஓடவிட்டு அதுக்கு முன்னாடி கால் மேல கால் போட்டு ஒக்காந்துகிட்டு இது சரியில்லை அது சரியில்லை அப்படின்னு டிவி பொட்டில சொல்லும் பொழுது என்னமா பிரிச்சி மேயிறாங்க அப்படின்னு பாராட்டுறவங்க, நான் அதையே தியேட்டருல செய்யும் பொழுது ஏண்ணே என்னைய போட்டு அடிக்கிறாங்க? தியேட்டருக்குள்ள படம் ஓடும் போது அதை விமர்சனம் செய்றது தப்பாண்ணே?

எட்டு பேரை கூப்பிடவேண்டும் என்று சொல்லி இருக்காங்க. ஏதோ நம்ம புண்ணியத்துல இந்த 8 பேரும் எந்த சோதனையும் இல்லாம லைசென்ஸ் வாங்கட்டும்.

1. நம்ம சாத்தான்குளத்து அண்ணாச்சி ஆசிப்

2. இந்த வார நட்சத்திர மங்கை நந்தினி

3. பூனையாக இல்லாமல் போனதுக்கு பீல் பண்ணிட்டு இருக்கும் மோகன் தாஸ்

4. பக்தி மார்கத்துல முக்திக்கி வழி சொல்லிட்டு இருக்கும் KRS

5. நம்ம மருதநாயகம் அண்ணாச்சி

6. ஈழத்து இளம் புயல் கானா பிரபா

7. முன்னாடி பக்கத்தை காட்டாம மறுபக்கத்தை மட்டும் காட்டிகிட்டு இருக்கும் நம்ம மணியண்ணன்

8. நம்ம தாசண்ணே

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.

186 – SpiderMan – 3

ஜூன் 20, 2007

ஸபைடர்மேன் – 3 படம் வருவதற்கு ஒரு 6 மாசம் முன்னாடியே பில்டப்பை துவங்கிட்டங்க. Spiderman Vs Spiderman, He fights against his own dark side அப்படி இப்படின்னு ஒரே பில்டப்புங்க. இது பத்தாதுன்னு sand man இந்த மேன் அந்த மேனுன்னு படத்துல ஏகப்பட்ட மேனுங்க நீங்க கண்டிப்பா பாக்கவேணும் அப்படின்னு கூவிட்டு இருந்தாங்களேன்னு படம் வந்த ரெண்டாவது நாளே அடிச்சி புடிச்சி போனேனுங்க. அந்த கொடுமையை ஏன் கேக்கறீங்க முடியலைங்க நமக்கு எதிரா தமிழ்படத்து ஆளுங்க தான் திரண்டு இருக்காங்க அப்படின்னு பாத்தா இப்ப வெள்ளகாரனுங்களை ஆரம்பிச்சிடாங்கங்க.

படம் எடுக்கறத்துக்கு முன்னாடி விக்ரமன் படத்தை பார்த்து இருப்பாங்க போலங்க. அநியாயத்துக்கு எல்லாரும் நல்லவங்க ஆயிடறாங்க. இந்த டைரக்டரு விக்ரமனையே மிஞ்சிடாருங்க அவரோட படத்துல இந்த படத்தோட வில்லனுங்க நல்லவனுங்க ஆயிடுவாங்க ஆனா இதுல போன பாகத்தோட வில்லனுங்க எல்லாம் நல்லவங்க ஆகி நாட்டை காப்பாத்த கிளம்பிடுறாங்க (இப்படி எல்லாரும் நல்லவங்க ஆயிட்டா அப்புறம் எப்படிங்க ஹீரோ உருவாகுவது?). படத்துல ஸ்பைடர்மேன் பறக்குற நேரத்தை விட அழுகிற நேரம் தாங்க அதிகமா இருக்கு :(. அவரு அழுறதை பாத்து தியோட்டரில் இருக்குறவங்க எல்லாம் விழுந்து விழுந்து சிரிக்கிறாங்க முடியலைங்க. சரி ஹிரோயின் ஆவது நல்லா இருப்பாங்க அப்படின்னு பாத்தா ஒரு வயசான பாட்டியை ஹீரோயினா போட்டு இருக்காங்க. அந்த பாட்டி வேற சென்டிமென்டை போட்டு தாக்குது. மொத்தத்தில் நம்மளை போட்டு தாக்கிடாங்க.

தமிழ்படத்தை விட கேவலமா பூ சுத்துறாங்க. அதுவும் sand man கதை தான் ஒரே தமாசு ஏதோ மணல் குவாரியில ஒருத்தர் தவறி விழுந்துடறாரு ஏதோ ஒரு மிஷின் ஓடுது பாத்தா அவரு மணலாயிடுறாரு. அப்புறம் மனுசன் ஆயிடுறாரு அவரு தான் Sand Man. அவரு மேல தண்ணி ஊத்தினா அவரு கரைந்து போயிடறாரு. அவருக்கும் ஸபைடர்மேனுக்கும் என்ன பிரச்சனை அப்படின்னு தெரியலைங்க ஆனா இவரு அவர் கிட்ட பிரச்சனை பண்ணிட்டு இருக்காரு. அடுத்து எங்கேயோ வானத்துல இருந்து ஏதோ ஒண்ணு விழுது அது தாங்க கறுப்பு ஸபைடர்மேன். பொதுவா வில்லனுங்க எல்லாம் சவுண்டு விட்டுகிட்டு திரிவாங்க ஆனா பாருங்க இந்த கறுப்பு ஸ்பைடர்மேனுக்கு சவுண்டு அப்படின்னாலே ஆவாது. சவுண்டை பாத்து பயந்து ஓடிடுவாரு. என்னமோ போங்க இப்படி படம் போகுது. சரி இம்முட்டு பேர் இருக்காங்களே நம்மாளு ரவுண்டு கட்டி சண்டை போடுவாருன்னு பாத்தா ஒரே சென்டிமன்டுங்க படம் ஸபைடர்மேனு கோவி கோவி அழுறாரு. அதை பாத்து சனங்க எல்லாம் கை தட்டி சிரிக்கிறாங்க.

அந்த படத்தை பாத்து டென்ஷன் ஆனா யாரோ பாருங்க அத்தோட இந்தி வெர்ஷனை வேற இங்க வெளியே விட்டு இருக்காங்க. எல்லாருக்கும் நான் சொல்லிகிறது என்னானா போயிடாதிங்க மக்கா அந்த படத்துக்கு போயிடாதிங்க படம் செம மொக்கை.