Archive for the ‘படம் காட்டுவது’ Category

ஒரு வேளை நம்மளைத்தான் சொல்லுறாங்களோ?

ஜனவரி 2, 2010

எங் ஊரு பக்கமெல்லாம் சொல்லுவாங்க வாய்ல வடை சுடுறவன்னு. இந்த போட்டோவை பாத்த உடனே பதிவுலகத்திலையும் ஆன்லைன் அரட்டை அரங்களிலும் சவுண்டு விடும் நம்ம ஆளுங்க தான் ஞாபகத்துக்கு வராங்க. யோசிச்சி பாத்தா அது கூட உண்மையாத்தான் இருக்கு எவ்வுளவோ பிரச்சனைகளுக்கு சும்மா உய் உய்ன்னு சவுண்டு விட்ட நாம் இது வரைக்கும் எதுக்காவது தெருவுல இறங்கி போராடி இருக்கோமா?
null

204. சொன்னா நம்பணும்.

ஜூலை 19, 2007

இந்த படம் வந்து smokey mountains அப்படிங்கிற இடத்துக்கு போகும் பொழுது எடுத்தது. இந்த இடம் மலைக்கு போகும் வழி. இந்த படத்தை புடிக்க காரின் மேல் இருக்கும் moon roofஜ திறந்து சீட்டுக்கு மேல எழுந்து நின்னு எடுத்தது. அப்ப தான் ஊருக்கு வந்த புதுசு கேமிரா வேற கைல இருந்ததா படம் புடிக்கிறேன் பேர்விழி ஏகப்பட்ட பேருக்கு இம்சை குடுத்தேன்.


இந்த படமும் Smokiesல எடுத்தது தான். இலையுதிர் காலத்துல இந்த இடத்துக்கு போகணுங்க அவ்வுளவு நல்லா இருக்கும். எல்லா இலையும் உதிர தயாராக மஞ்சள் மற்றும் பிரவுன் கலருல செம கலர்புல்லா இருக்கும்.

இது வந்து keywest அப்படின்னு florida பக்கத்துல அமெரிக்காவின் ஒரு முனை இந்த இடம். சூரியன் உதயம் ஆவதும் மறைவது சும்மா சூப்பரா இருக்கும்.

இதுவும் அந்த இடம் தான். இந்த படத்துல சின்ன சின்ன படகு மாதிரி தெரியுது பாத்தீங்களா? இதுல மக்களை கூட்டிட்டு போயி சூரியன் உதிப்பதையும் மறைவதையும் கடலுக்குள்ள இருந்து காட்டுவாங்க.

சொன்னா நம்பணும் இந்த படத்தை எல்லாம் எடுத்தது நான் தான். பெருமை அடிச்சிகிற மாதிரி அம்முட்டு நல்லா இருக்கான்னு தெரிலை ஆனாலும் எங்களுக்கும் படம் காட்ட தெரியுமுன்னு சொல்லிக்குவோமுல்ல. கிளாசுக்கு ஒழுங்க போற எல்லாரும் படம் எடுத்து வீட்டுப்பாடத்தை முடிச்சிட்டாங்க வழக்கம் போல சோம்பேறி, நான் தான் கடைசி. படம் எப்படி இருக்குன்னு சொல்லிட்டு போங்க. இல்லாட்டி படம் ரொம்ப நல்லா வந்து இருக்கு, அதை புகழ தமிழில் வார்த்தைகள் இல்லை அதனால யாரும் கருத்து சொல்லலை அப்படின்னு நினைச்சி கேமிராவும் கையுமா சுத்தி P.C.Sriram, K.V. Ananda மாதிரியான ஆளுங்களோட வேலைக்கு உலை வெச்சிடபோறேன்.

டிஸ்கி : இது இங்க நடக்குற புகைப்பட போட்டிக்காக எடுக்கப்பட்ட புகைப்படம். இதுல 2,4 படங்களை போட்டிக்காக வைக்கிறேன்.