Archive for the ‘பதிவு சம்பந்தமானது’ Category

ஒரு வேளை நம்மளைத்தான் சொல்லுறாங்களோ?

ஜனவரி 2, 2010

எங் ஊரு பக்கமெல்லாம் சொல்லுவாங்க வாய்ல வடை சுடுறவன்னு. இந்த போட்டோவை பாத்த உடனே பதிவுலகத்திலையும் ஆன்லைன் அரட்டை அரங்களிலும் சவுண்டு விடும் நம்ம ஆளுங்க தான் ஞாபகத்துக்கு வராங்க. யோசிச்சி பாத்தா அது கூட உண்மையாத்தான் இருக்கு எவ்வுளவோ பிரச்சனைகளுக்கு சும்மா உய் உய்ன்னு சவுண்டு விட்ட நாம் இது வரைக்கும் எதுக்காவது தெருவுல இறங்கி போராடி இருக்கோமா?
null

இந்த வாரம் ரணகளம்தான்டி

நவம்பர் 12, 2007

கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை ஆடிகிட்டு இருந்திச்சாம், அது மாதிரி ஏதோ சமீபகாலமா நல்லா இருக்குற தமிழுக்கும், தமிழ்மணத்துக்கும் வேட்டு வெக்கிற மாதிரி வந்துச்சி பாருங்க ஒரு கடுதாசி. நவம்பர் 12 முதல் 17 வரை நீங்க நட்சத்திரம் இருக்கணுமுன்னு.ஆகா மாட்டினாங்கடா தமிழ் மக்கள் இதை விட்டா கைப்புள்ளைங்களையும், செ.செ.சூ வெச்சிகிட்ட தமிழ்மணத்தையும் போட்டுத்தாக்க நல்ல வாய்ப்பு கிடைக்காது புடிச்சிகோடா சந்தோசுன்னு உள் மனசு சொல்ல, போட்டேன் பாருங்க ஒரு பதிலு அய்யா சாமி தமிழ்மண தர்மகத்தாவே, நீங்க ஆள் தெரியாம எனக்கு அனுப்பி இருந்தாலும் பரவாயில்லை இந்த வாய்ப்பை நான் விட மாட்டேன், நான் தான் அந்த வாரத்துல நட்சத்திரமா இருப்பேன்னு அவங்க யோசிக்கிறதுக்கு கூட டைம் குடுக்காம கெட்டியா புடிச்சிகிட்டேன். 

அந்த கடுதாசி வந்ததுல இருந்து எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை(அது எப்பவும் ஓடாதுங்கிறது வேற விஷயம்).பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் நட்சத்திரமா இருந்து என்ன என்னத்தை எல்லாம் எழுதி பெருமை சேர்த்து இருக்காங்க. எனக்கு என்னத்தை தெரியும் சொல்லுங்க, நான் என்னாத்தனு எழுத முடியும்? இருந்தாலும் விடுவோமா?

அப்புறம் இன்னொன்னும் சொல்லிடறேன், இளகிய மனசு உள்ளவங்க, மொக்கையை தாங்க முடியாதவங்க, தமிழ் பற்று உள்ளவங்க, தமிழுக்கு கொடுமை நேர்வதை கண்டு பொங்குறவங்க எல்லாம் தமிழ்மணம் பக்கம் ஒரு வாரம் வந்துடாதிங்க, ஏன்னா இந்த வாரம் முழுவதும் தமிழுக்கு சோதனைக்காலம் தமிழ் கொலை பண்ணி பண்ணி தமிழ்மணம் முழுவதும் ரத்த ஆறா ஓடப்போவுது. பேச்சை குறைடான்னு நீங்க சொல்றது எனக்கு கேக்குது ரைட்டு விடுங்க, இம்முட்டு சொல்லியும் என் பேச்சை கேக்காட்டி என்ன பண்றது, சோலிய முடிச்சிட வேண்டியது தான், இதுக்கு மேல உங்க தமிழுக்கு என்னால உத்திரவாதம் குடுக்க முடியாது, நம்மளோட அடுத்த மீட்டிங்கு டைரக்டா ரத்த பூமியில தான் வரட்டா.

196. சோக்காளியின் கூகுள் சேட்டைகள்

ஜூன் 22, 2007

நம்ம சோக்காளில் ஒருத்தன் பதிவர், பெரிய எழுத்தாளர்(அப்படின்னு நினனப்பு). எவனாவது தெரியாம Bloggerஜ பத்தி கேட்டுட்டா கூகுல் கம்பெனியின் Chief Marketing Officer கூட அம்முட்டு கதை சொல்ல மாட்டான் இவன் அந்த கதையை விடுவான். அதுவும் Google adsenseல இருந்து கொஞ்சம் டாலர் வேற வந்துடிச்சா அதுக்கு அப்புறம், எவனாவது ரோட்டுல போறவன் Googleஜ பத்தியோ இல்ல bloggerஜ பத்தியோ தப்பா பேசினா கூட அவனுக்கு கோவம் வந்துடும், ஆளு கொஞ்சம் ஏமாந்த மாதிரி இருந்தா அடிக்க கூட போயிடுவாரு (அம்முட்டு வீரரு அவரு).

அப்படி இருந்தவன் ஒரு நாள் என்கிட்ட வந்து மச்சி blogger எதுவும் சரியில்லடா சரியான் இத்து போன தளம் அப்படி இப்படின்னு சொல்லிட்டு, worldpressஜ பாரு, அத்தோட அழகை பாரு, இதை பாரு அதை பாரு அப்படின்னு சவுண்டு விட்டுகிட்டு இருந்தவன். திடீரென்று தன்னோட தளத்தை worldpressக்கு மாத்திட்டான், ஆனா அவனோட பழைய இடுக்கைகள் எதையும் காணோம். என்னடான்னு கேட்டா இல்ல மச்சி நொள்ள மச்சி அப்படின்னு சொல்லிட்டு இருந்தான். என்னடா இவன் பெரிய எழுத்தாளன் ஆச்சே இதுல என்னவோ மேட்டரு இருக்கு சனிக்கிழமை சபையை கூட்டிட வேண்டியது தான் அப்படின்னு முடிவு பண்ணோம்.

சனிக்கிழமை நைட்டு சபை வழக்கம் போல கூடிச்சி, Johnie Walkerயும், RC, Jackdanieal எல்லாம் அந்த வார சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாங்க. நேரம் போக போக சிறப்பு விருந்தினர்கள் தயவுல சபை களை கட்டியது. நம்ம சோக்காளி வாயை மெதுவா புடுங்க ஆரபிச்சோம். அவரு கிட்ட எப்படி மச்சி உன்னால மட்டும் இம்முட்டு அருமையா எழுத முடியுது அப்படி இப்படின்னு பொய்யா சொல்லி மெதுவா ஏத்தி விட்டோம், அவனும் போதை தலைக்கேறி நாங்க எல்லாம் பொறக்கும் போதே ஒரு கையில keyboardயும் இன்னொரு கையில e-கலப்பையோட பொறந்தவங்களாக்கும், நாங்க எல்லாம் அப்படி இப்படின்னு ஒரு 1/2 மணி நேரம் வாயிலேயே வடை சுட்டான். அதை கேட்ட எனக்கே ஸ்ஸ்ஸ்யப்பா கண்ணு காது வாய் மூக்கு எல்லாம் கட்டிபோச்சி. பாதி பேருக்கு ஏறின போதை இறங்கிப்போச்சி.

ஒரு வழியா அவனை அடக்கி Bloggerல சந்தேகம் கேக்குறமாதிரி கேட்டு, கடைசியில அந்த மேட்டருக்கு வந்தோம். அப்புறம் தான் தெரிஞ்சது இந்த நாதாறி Google Adsense display பண்ண advtஜ எல்லாம் அவனும் அவனோட சோக்காளிங்களும் சேந்துகிட்டு, வரும் பொழுது போகும் பொழுது அப்படி இப்படின்னு click பண்ணி முதல் மாசம் ஒரு 100$க்கு Revenue Generate செய்து அதை கூகுள்கிட்ட இருந்து வாங்கிட்டாங்க. இதே மாதிரி டகால்டி வேலையை ஒரு இரண்டு மூணு மாசம் பண்ணி இருக்காங்க கூகுள்காரனுங்களுக்கு சந்தேகம் வந்து click வந்த முகவரியை (IP) எல்லாம் சரி பார்த்ததில் இவனுங்களோட திருட்டு வேலையை கண்டுபுடிச்சிடாங்க. உடனே அவனோட Google கணக்கையே முடக்கியதோடு மட்டுமில்லாம மவனே இதுக்கு மேல இந்த பக்கம் வந்த இருக்குடி உனக்கு அப்படின்னு துரத்தி விட்டு இருக்காங்க. இதனால தான் நம்ம சோக்காளி wordpressக்கு ஓடிட்டாரு.

171. FireFox IE போல வேலை செய்ய வேண்டுமா

மார்ச் 19, 2007

நிறைய பேரின் வலைபதிவுகள் FireFoxஇல் தெளிவாக தெரிவதில்லை, அதற்கு காரணம் அது பதிவை Render செய்யும் முறை IE(Internet Explorer) போல் இல்லாமல் வேறு படுவதால் தான். நிறைய பேர் இதனால் இன்னும் IEஜ வைத்து அழுது கொண்டு இருக்கின்றனர். அதற்கும் ஒரு வழி வந்து விட்டது. Firefoxஇல் இந்த Pluginஜ Install செய்தால் அதுவும் IE போன்றே வேலை செய்யும். இதில் ஒரு சில சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்தாலும் நான் உபயோகித்த வரை மிகவும் நன்றாக இருக்கிறது. Plug-inஜ download செய்ய இங்கே அழுத்தவும்.