Archive for the ‘விளையாட்டு’ Category

175. BCCIல வேலை வேணுமா வேலை

மார்ச் 29, 2007

BCCI பற்றி தனியாக உங்களுக்கு சொல்ல வேண்டும் என்று இல்லை, உலகத்துலேயே பணக்கார கிரிக்கெட் வாரியம். நாட்டுல கிரிக்கெட்டை தவிர மத்த எல்லாத்துக்கும் பணத்தை வாரி இறைப்போம். கிரிக்கெட்டுக்கு சம்மந்தமே இல்லாதவங்க தான் இதன் Board of Members மற்றும் வீரர்கள். இது போன்ற ஒரு உலக பிரசித்தி பெற்ற நிறுவனத்தில் வேலை புரிய உங்களை அன்புடன் அழைக்கிறோம். அப்புறம் வரும் காலங்களில் அத்திப்பட்டி ‘A’ team, ஆட்டையாம்பட்டி ‘B’ team போன்ற பலம் வாய்ந்த அணிகளுடன் முக்கியமான மேட்சுகள் இருக்கு எங்க கிட்ட வேலைக்கு சேர்ந்தால் ஒரு பிரகாசமான, Challenging எதிர்காலம் இருக்கு உங்களுக்கு.

பணியிடங்கள்

1. கேப்டன் (P-001)
2. துணை கேப்டன் (P-002)
3. பயிற்சியாளர் (P-003)
4. வீரர்கள் (P-004)

தேவையான தகுதிகள்

உலககோப்பை கிரிக்கெட் போட்டிகள் சிலவற்றையேனும் கண்டுகளித்து இருக்க வேண்டும். முக்கியமாக இந்திய அணியை பங்களாதேஷ் போன்ற பலம் வாய்ந்த நாடுகள் நாயடி அடித்து தோற்கடித்த மேட்சுகளை கோபப்படாமல் பார்த்து இருக்க வேண்டும். தெரு முனை கிரிகெட்டிலோ, வீட்டுக்குள்ள விளையாடும் கிரிக்கெட்டிலோ இல்ல குறைந்த பட்சம் புக் கிரிக்கெட்டிலேயோ 65 ரன் அடித்து இருக்க வேண்டும் (சின்ன புள்ள தனமா ஒரு மேட்சிலயான்னு கேக்கப்படாது, பங்களாதேஷ் டீமுக்கு இங்க யாரும் ஆள் எடுக்கலை).

உங்களுக்கு கிரிக்கெட் தெரியாட்டியும் பரவாயில்லை டெண்டூல்கர், டிராவிட் இப்படி யாரையாச்சும் தெரிஞ்சி இருந்தால் போதுமானது.

மொத்த டீமும் 10 ரன்னுக்குள்ள அவுட் ஆனாலும் எதைப்பற்றியும் கவலைப்படாம “ஹே தில் மாங்கே மோர்” அப்படின்னு மோர் குடிக்கும் அளவுக்கு Energetic Playerஆக இருப்பது அவசியம்.

கில்லி, கோலி, பம்பரம், மங்காத்தா, புட்பால், வாலிபால் தெரிந்து இருப்பது நலம், பயிற்சி காலத்தில் இவையே அதிகம் விளையாடப்படும்.

விளம்பர மாடல்கள், நடிகர்களுக்கு 150% இட ஒதுக்கீடு உண்டு.

நீங்க ஒரு சுற்றுலா பிரியராக இருக்க வேண்டும், முக்கியமாக பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பம் இடுவோர், உ.கோப்பைக்கு முன்னர் கோவா, மற்றும் இன்ன பிற சுற்றுலா தளங்களுக்கு குடும்பத்தோட சுற்றுலா செல்ல தயாராக இருக்க வேண்டும்.

தேர்வு முறை

Batsman – மட்டையை நேராக பிடித்து நிற்க தெரியவேண்டும். கப்சி விளம்பரத்தை குறைந்த Retake உடன் முடித்து கொடுக்க வேண்டும்.

Bowler – ஒரு ஓவர் பந்து வீச வாய்ப்பு அளிக்கப்படும், out side the off stick, offstick ஏரியாவில் எந்த பந்தும் விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக பீல்டர் இருக்கும் இடத்துக்கு பேட்ஸ்மேன் பந்தை அடிக்காமல் பந்து போட தெரிந்து இருக்கணும்.

பொதுவான விதிமுறை – விளையாடி விட்டு ஆடுகளைத்தை விட்டு வரும் பொழுது சட்டை மற்றும் டவுசர் கசங்கியோ அல்லது மண்பட்டு அழுக்காகவோ இருக்க கூடாது. அப்படி இருந்தால் உடனடியாக தேர்வில் இருந்து நீக்கப்படுவார்கள்.

உங்களுடைய Resumeவை அனுப்ப வேண்டிய முகவரி callformodels@bcci.com. அனுப்பும் பொழுது email subject இல் பெயர்/பணியிடம்/தகுதி அனுப்ப வேண்டும் எ.கா தோனி/p-004/அடிச்ச மொத்த ரன் 12.

தேர்வு நடக்கும் இடம்

YMCA கால்பந்து மைதானம், நந்தனம் மற்றும் நடேசன் பூங்கா தி.நகர்

தேதி

01/04/2007 (ஒவ்வொரு உ.கோ முடிஞ்ச உடனேன்னு வெச்சிகோங்களேன்.)

படிக்க வேண்டிய புத்தகங்கள்

1. 30 நாட்களில் மாடல் ஆவது எப்படி – தோனி

2. புக்கிகளிடம் கொக்கி போடுவது எப்படி – ஜடேஜா

3. தோற்கும் மேட்சில் சென்சுரி அடித்து உலக சாதனை புரிவது எப்படி – டெண்டூல்கர்

4. எதுவுமே தெரியாம டீமுக்குல் இருப்பது எப்படி – அகர்கர்

சம்பளம்

விளையாடினாலும் விளையாடாவிட்டாலும் சில கோடிகள் தருவோம். அதுக்கு அப்புறம் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை ஸ்பான்சரு அப்படி இப்படின்னு அதுல கொஞ்சம் தேத்தலாம், அப்புறம் புக்கிங்க வேற இருக்காங்க உங்க திறமையை பொருத்து அதுல ஒரு அமொண்டை பாக்கலாம்.

இந்த விளம்பரத்துக்கு ஸ்பான்சர் செய்தவர்கள்

1. மன்னார் & மன்னார் கம்பெனி
2. ஓட்டாரு செல்போன் கம்பெனி
3. கப்சி
4, அக்காமாலா
5. state bank of அத்திப்பட்டி

டிஸ்கி : இது மெயில் வந்த ஒரு மேட்டருங்க கொஞ்சம் மாத்தி இருக்கேன்.

168. உலக கோப்பை கிரிக்கெட் இலவச ஒளிபரப்பு (Bay Area)

மார்ச் 13, 2007

Bay area மக்களே உங்க பகுதியில் இருக்கும் IMC6 திரையரங்கம் இலவசமாக உலக கோப்பை கிரிக்கெட்டை ஒளிபரப்பு செய்ய போகிறார்களாம் இங்கன போய் பாருங்க. அதுவும் தம்மாத்தூண்டு பெட்டியில் இல்லங்கோ பெரிய திரையில் நல்ல வேட்டை தான் கிரிகெட் ரசிகர்களுக்கு. இலவச மேட்சுடன் காலை உணவும் இலவசமாம் (நல்லா சந்தோசமா பாருங்கப்பா. இங்கன நாங்க Dish டீவிக்கும், Direct டீவிக்கும் அது இல்லாத இடத்துல வருமா வராதான்னு தெரியாம websiteகளுக்கும் கப்பம் கட்டிட்டு இருக்கோம் )