Archive for the ‘India’ Category

நல்லாஇருங்கடா

ஜனவரி 7, 2008

ஹர்பஜன்சிங்கை மூன்று டெஸ்டு போட்டிகளில் இருந்து தடை செய்ததை எதிர்த்து போராட்டம் — செய்தி

நந்திகிரமுல நூத்துக்கணக்கான பேர் செத்துப்போனாங்க, ஒரு பொம்பளை புள்ளையை ஒட்டு துணி இல்லாம தெருவுல ஓட விட்டாங்க(அந்த புள்ளைக்கு துணி குடுக்குறதை விட்டுட்டு அதையும் சுத்தி சுத்தி படம் புடிச்சி TRB ரேட்டிங்கை ஏத்திகிட்டாங்க நம்ம மானங்கெட்ட பத்திரிக்கைகாரனுங்க).

இது வரைக்கும் நூத்துக்கணக்கான விவசாயிங்க சோத்துக்கு வழியில்லாம செத்து போயி இருக்காங்க.

நாட்டை எப்படிடா அமெரிக்காகாரனுக்கு அடகு வெக்கலாமுன்னு அதிகாரத்துல இருக்குற ஒரு கூட்டம் ரூம் போட்டு யோசிச்சிகிட்டு இருக்குது.

 இதை எல்லாம் தாண்டி நாட்டுல தினமும் நூத்துக்கணக்கான பிரச்சனை நடந்துகிட்டு இருக்குது.இதுக்கெல்லாம் கொதிக்காத இந்த கூட்டம் ஹர்பஜன்சிங்கை தடை செஞ்சதை கேட்டு கொதிச்சி போயி ரோட்டுல இறங்கி இருக்கு.

 பிரச்சனை இப்படி இருக்க CNN IBNல என்னடான்னா அவங்க அம்மாவை பேட்டி எடுக்குறாங்க, அவங்க பாட்டியை பேட்டி எடுக்குறாங்க,  பஞ்சாப்புல தலப்பா கட்டிட்டு ரோட்டுல யார் போனாலும், அவங்களுக்கு கிரிக்கெட் தெரியுதோ இல்லையோ அவங்களை எல்லாம் சுத்தி சுத்தி பேட்டி எடுக்குறாங்க.

களத்துல என்ன நடந்ததுன்னு யாருக்கு தெரியாது அதுக்குள்ள என் புள்ள தப்பே பண்ணலை, இதை எல்லாம் பாக்கும் பொழுது எனக்கு கோவம் கோவமா வருதுன்னு அவங்கம்மா(அந்தம்மாக்கு ஒரு 60-70 வயசாகும் அந்தம்மாவால சரியா பாக்க முடியுமான்னே தெரியலை) ஒரே சீன். ஏம்மா ஏன் ஏன் இந்த விளம்பரம் உங்களுக்கு?

 இது காலை நிலவரம் மதியதுக்கு மேல வேலை வெட்டி இல்லாம வூட்ல சும்மா இருக்குற கிரிகெட்டருங்க எல்லாம் மைக்கை எடுத்துட்டு ஆஸிக்களின் நிறவெறி, ICCயின் நிறவெறின்னு களத்துல ஆடுனாங்களோ இல்லையோ வாயால வடை சுட்டுட்டு கிளம்பிடுவாங்க.

 எங்க அடுத்த டெஸ்டு ஆடுனா சுலுகெடுதுடுவானுங்களோன்னு, நம்மாளுங்களும் இந்த பிரச்சனை முடியிற வரைக்கும் அடுத்த ஆட்டங்களை ஆட மாட்டோமுன்னு நம்மாளுங்க ஜகா வாங்கிடாங்க.

ஆஸ்திரேலியாகாரனுங்க வாய் கொழுப்பெடுத்தவனுங்க, அவனுங்ககிட்ட வாயும் இருக்கு ஆட்டமும் இருக்கு நமக்கு அப்படியா? பத்து பேர் சேர்ந்து 50 ஓவர் ஆட துப்பு இல்லாத நமக்கு எதுக்கு இந்த் வாய். முதல்ல ஆடுங்க அப்புறம் பேசுங்க.

ரோட்டுல இறங்கி போராடிகிட்டு இருக்கிற அண்ணனுங்களா அவரு ஆடுனாலும் காசு ஆடாட்டியும் காசு நமக்கு அப்படியா? நம்ம வாங்குற அஞ்சி பத்துக்கு இது தேவையா? போங்க போயி உருப்படுற வழியை பாருங்க.

சாப்டுவேர் என்ஜினியர்களும் சமூக சீரழிவும்

நவம்பர் 14, 2007

இப்பொழுது தலை தூக்கி வரும் பிரச்சனைகளில் மிக முக்கியமானது சாப்டுவேர் கம்பெனியில் வேலை செய்பவர்களால் உண்டாகும் செயற்கை விலை உயர்வு. இதை பத்தி கொஞ்சம் பார்ப்போம்

1. தி.நகரில் ஒரு சாப்பாடு(Meals) 30+ ரூபாய், அதுவே OMR சாலையில் ஏதாவது ஒரு சாப்டுவேர் கம்பெனிக்கு அருகில் இருக்கும் ஓட்டலில் சாப்பாடு குறைந்த பட்சம் 60. என்னுடைய அலுவலகத்திற்கு பக்கத்தில் உள்ள ஆந்திர  உணவகத்தில் அது 99 + VAT (ஏறக்குறைய 120 ரூபாய் வரும் டிப்ஸை சேர்த்தால். 10 ரூபாக்கு குறைந்து டிப்ஸ்   இருந்தால் அடுத்த தடவை நீங்க போகும் பொழுது விக்கி செத்தாலும் தண்ணி கிடைக்காது.)

2. அடையாரில் உள்ள ஒரு Forex நிறுவனத்தில், சாப்டுவேர் இன்ஜினியர் அதுவும் குறிப்பாக விப்ரோ, டிசிஎஸ், இன்பொசிஸ் கம்பெனிகளில் இருந்து சென்றால் மற்றவர்களுக்கு கொடுக்கப்படும் எக்ஸ்சேஞ் ரேட்டை விட ஒரு ரூபாய் குறைவு. கேட்டால் அது அப்படி தான் சார் வேண்டுமானல் குடுங்கள் இல்லாவிட்டால் போங்க.

3. வேளச்சேரியில் 800-1000 சதுர அடி வீட்டின் வாடகை 6000+ அதே, கோடம்பாக்கம், வடபழனி போன்ற இடங்களில் அதிகபட்சம் 4000.

4. 1200 சதுர அடி வீட்டின் விலை வேளச்சேரியில் சுமார் 50 – 60 லட்சம் வரை.

5. Ascendasஇல் (இது Tidel Parkஜ போன்றது)  ஒரு Milk Shakeஇன் விலை 170.

6. ஒரு சாப்டுவேர் கம்பெனிக்கு பக்கத்தில் இருக்கும் ஆட்டோ ஸ்டாண்டில் குறைந்த பட்சம் 20 – 30 ரூபாயாவது அதிகமாக இருக்கும்.

7. இரண்டு வருடத்துக்கு முன்னர் 50ரூபாயாக இருந்த சினிமா டிக்கெட் இன்று குறைந்த பட்சம் 120, 10 ரூபாயாக இருந்த பாப்கான் இன்று 50.

8. தீபாவளிக்கு முதல் நாள் சென்னையில் இருந்து சேலத்துக்கு செல்ல தனியார் பேருந்துகளில் ஒரு டிக்கெட்டின் விலை ரூபாய் 1100. சாதாரணமாக அது ரூபாய் 300.

இது போல் சொல்லிக்கொண்டே போகலாம். இதில் எல்லாரும் சொல்லும் பொதுவான விஷயம் சாப்டுவேர் கம்பெனியில் இருக்குறவன் எவன் சார் விலையை கேக்குறான் இல்ல சாப்டுவேர் கம்பெனிகளில் இருக்குறவனுக்கு என்ன சார், ஆயிர ஆயிரமா சம்பாதிக்கிறான் குடுத்துட்டு போறான். நம்மைப்போன்றவர்களுக்கு பணம் ஒரு பிரச்சனையே இல்லை ஆனா யோசித்து பாருங்க, இப்படி துவங்கும் விலை உயர்வு, படிப்படியாக அப்படியே கொஞ்ச நாள் கழித்து சாதாரண பொது மக்களை போயி அடையும். அவங்க என்ன செய்வாங்க யோசிங்க?

யோசித்து பாருங்க. என்னிக்காவது ஒரு நாள் நாம கேட்டு இருக்கோமா? ஏன் அதிக விலை என்று? இல்ல அவன் இவ்வுளவு விலை விற்கிறானே அவனிடம் வாங்க வேண்டாம் என்று  யோசித்து இருக்கோமா? அப்ப என்ன அர்த்தம் காசு கொழுப்பு தானே? வாங்குறவன் இருக்குற வரையில் விற்பவன் விற்கத்தானே செய்வான்? இதற்கு சிறந்த உதாரணம் கடந்த சில மாதங்களாக சென்னை, பெங்களூரில் கட்டிடங்களின் விலையில் 10 – 20% குறைந்துள்ளதே? என்ன காரணம் நகரங்கள் வளர்ந்து விட்டனவா? இல்லையே வாங்க ஆள் இல்லை அதனால் தான் இந்த விலை குறைப்பு.

ரூபாயின் மதிப்பு ஏறுமுகமாக இருக்கும் இந்த காலத்தில், நம்முடைய சம்பளங்களும் வருங்காலங்களில் இது போன்று இருக்கும் என்று சொல்ல முடியாது. முன்று வருடத்துக்கு முன்னர் இருந்த விலையை வைத்து பார்க்கும் பொழ்து இந்த விலை எல்லாம் இரண்டு அல்லது முன்று மடங்கு உயர்ந்து உள்ளது ஆனால் நம்முடைய சம்பள உயர்வு அவ்வுளவு இருக்கிறதா என்ன? பொருட்களை வாங்குங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் அதற்கு உண்டான சரியான விலையை குடுத்து வாங்குங்கள்.

சமீபகாலமாக வெயிட் காலர் குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளது. கைதாகும் பெரும்பாலோனோர் சொல்லும் காரணம், கடன் அட்டைகள், கடன் வாங்கி ஆடம்பரமாக செலவு செய்துவிட்டேன், இப்பொழுது கடன்காரர்கள் தொல்லையில் இருந்து தப்பிக்க இது போன்று செய்தேன் என்று.நமக்கும் இது போன்ற நிலை வர வேண்டுமா? இது எல்லாம் மாற நாம பெருசா ஒண்ணுமே பண்ண வேண்டியது இல்ல, இது மாதிரி ஏமாத்துறவங்களை புறக்கணிச்சாலே போதும், தன்னால அவங்க மாறுவாங்க.

195. இந்தியாவுக்கு வயசாயிடிச்சா?

ஜூன் 14, 2007

என்னவோ தெரிலைங்க இரண்டு மூணு நாட்களாக வந்துகொண்டு இருக்கும் செய்திகளை பார்க்கும் பொழுது இந்தியாவுக்கு வயசாயிடிச்சோன்னு தோணுது. கிரிக்கெட் டீமுக்கு என்னடான்னா ஒரு 72 வயசு இளைஞரை(@#$%^&) மேனேஜரா தேர்ந்து எடுத்து இருக்காங்க. உலகத்தில் எல்லா விளையாட்டு அணியிலும் இளமை, புதுமை மற்றும் Technologyஜ புகுத்தி கொண்டு இருக்கும் வேளையில் இந்தியா அணி மட்டுமே மாற்று திசையில் பயணித்து வருகிறது (ஒரு வேளை இது ஒரு வகையான Lateral Thinking ஆக இருக்குமோ?). 72 வயது இளைஞர் அணியின் மேளாலர், பயிற்சியாளரே இல்லாத அணி, Mafiaக்களாக செயல்பட்டுவரும் அணியின் மூத்த வீரர்கள், அவர்கள் ஆடும் ஆட்டத்துக்கு எல்லாம் தலையாட்டும் கையாளாகாத BCCI ஹும் வெளங்கிடும். ஒரே ஒரு நம்பிக்கை Zee நிறுவனம் தன்னுடைய திட்டத்தை தொடர்ந்து நடத்த போகிறதாம், அதற்கு கபில்தேவ் மற்றும் சில முன்னால் வீரர்களின் ஆதரவு இருக்கிறது போல பார்க்கலாம்.

அடுத்து ஜனாதிபதிக்கான வேட்பாளர் ஒரு 72வயது பெண். ஏற்கனவே முதல்வர், ஆளுநர், பிரதமர், அடுத்த முதல்வர், முன்னால் முதல்வர், தமிழ் பட ஹீரோக்கள் முதல் கொண்டு சட்டங்கள் வரை எங்க பாத்தாலும் ஒரே வயசான ஆளுங்களா இடத்தை அடைச்சிகிட்டு இருக்காங்க. ஏங்க நாட்டுல தகுதி வாய்ந்த இளைஞர்கள் யாருமே இல்லையா? இன்னும் எம்முட்டு நாள் தான் அனுபவ ஜல்லியை அடிச்சிகிட்டு இருப்பாங்க இவங்க எல்லாரும்?

190. ஒரு வேண்டுகோள்

ஜூன் 3, 2007

American Express நிறுவனம் ஒரு புதிய திட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் AMEX Credit Card வைத்து இருக்கும் அனைவரும் ஒரு திட்டத்தை அவர்களிடம் அளிக்கலாம் எ.கா “அனாதை குழந்தைகளுக்கு உதவ ஒரு நிதி ஏற்படுத்துவோம்” இது மாதிரி உங்களுக்கு தோன்றும் ஒரு திட்டத்தை அவர்களிடம் அளிக்கலாம், பின்னர் அதன் மீது ஓட்டெடுப்பு நடைபெறும், உங்களின் திட்டம் தேர்ந்து எடுக்கப்ப்ட்டால் நிதி உதவி செய்யப்படும். நான் இந்தியா என்று தேடியதில், இந்தியாவுக்கு நன்மை அளிக்கும் வகையில் சில திட்டங்கள் இருந்தன. அதில் சில நல்ல திட்டங்களாக எனக்குப்பட்டன. நம்மில் பலர் AMEX கடன் அட்டையை வைத்து இருப்போம், கீழே உள்ள ஏதாவது ஒரு திட்டத்துக்கு வாக்களித்து அத்திட்டம் வெற்றி பெற உதவலாமே?

1. Child Education to Rural India – Project ID: 00420
2. Schools for Barefoot Children in India – Project ID: 00870
3. Computer Literacy for trafficked children – Project ID: 02590

இந்த திட்டத்தை பற்றி மேலும் அறிய இங்கே செல்லவும் . இதை பற்றி உங்கள் நண்பர்களிடம் தெரிவிக்கலாமே?