Archive for the ‘Politics’ Category

புலிக்கு பொறந்தது பூனையாகுமா?

ஒக்ரோபர் 23, 2007

கொஞ்ச நாளைக்கு முன்னாடி சி.என்.என் ஜபிஎனின் டெவில்ஸ் அட்வகேட் நிகழ்ச்சியில் கனிமொழியை பேட்டி கண்டார்கள். கனிமொழி கரணின் கேள்விகளுக்கு நன்றாகவே பதில் சொன்னார்கள். நான் பார்த்த வரையில் அந்த நிகழ்ச்சியில் கேள்விகள் மிக சாதாரணமாக இருந்தன. பல இடங்களில் கனிமொழியை  அட்டாக் செய்ய வாய்ப்பு கிடைத்த பொழுதும் கரண் அதை அப்படியே விட்டு விட்ட மாதிரி தான் எனக்கு தெரிகிறது. சரி அதை விடுங்க அதுல ஒரு முக்கியமான கேள்வி,

பந்த் அன்று உச்ச நீதி மன்றம் கண்டனம் எழுப்பியவுடன் உங்க தந்தையும் மற்ற அமைச்சர்களும் உண்ணாவிரத பந்தலை விட்டு ஏன் வெளியேறி அலுவலகம் சென்றனர்? காலையில் இருந்து ஓடாத பஸ் உடனடியாக ஓடத்துவங்கியது ஏன்? மூடிய கடைகள் திடீரென திறந்த மாயம் என்ன?

அதுக்கு உட்டாங்க பாருங்க ஒரு பதில் பொதுமக்கள்(யாருங்க அந்த பொது சனம் இங்க வாங்க சாமி கொஞ்சம்?) மற்றும் அரசியல் தலிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர் பந்தலுக்கு திரும்ப வரவில்லையாம். மேலும் தலிவரு உண்ணாவிரதம் இருக்க போகிறேன்னு எப்ப சொன்னாரு? அவரு அதை துவக்கி வைக்கத்தான் வந்தார், நீயூஸ் மீடியா தான் அதை திரித்து வெளியிட்டு விட்டதுன்னு ஒரு அந்தர் பல்டி அடிச்சாரு பாருங்க. இப்ப சொல்லுங்க புலிக்கு பொறந்தது பூனையாகுமான்னு?

இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் தலிவரோட வாரிசுங்க, பேரப்புள்ளைங்களும் கலந்துகிட்டு இங்லீபீசிலையும் ஹிந்திபீசிலையும் பொளந்து கட்டும் பொழுது ஹிந்தி ஒழிப்பு போராட்டம் நியாபகத்துக்கு வந்து தொலைக்குது.

206. இது தாங்க உண்மை

ஒக்ரோபர் 1, 2007

சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று உண்மையான அக்கரை உள்ளது போல தி.மு.காவும் அதன் கூட்டணி கட்சிகளும் நாடகமாடுகின்றன அவர்களுக்கு ஈடுஈணையாக எதிர்கட்சிகளும் நாடகம் ஆடுகின்றன. உண்மையான அக்கரை இருந்தால், இந்த திட்டம் விரைவாக முடிக்கபடாவிட்டால் நாங்கள் எங்களின் ஆதரவை வாபஸ் வாங்கிக்கொள்வோம் என்று சொல்ல வேண்டியது தானே? பேரனுக்கு அமைச்சர் பதவி பெற்றுத்தர டில்லிக்கு நடையா நடந்தவர், தமிழ்நாட்டின் வாழ்வாதார பிரச்சனையான இந்த பிரச்சனைக்கு ஒரு பந்த்/உண்ணாவிரத்த்தோட முடிச்சிக்கிட்டாரு.

அதையாவது ஒழுங்கா செய்தாரா? பதவி என்பது எனக்கு துண்டு போல, மானம் என்பது வேட்டி (எனக்கு சரியாக தெரியவில்லை இது போன்ற பொருள் தரக்கூடிய வாக்கியம் ஒன்றை சொல்லி இருந்தார்) போல அப்படின்னு சொன்னவரு. ஆனா இன்னிக்கு பாருங்க பந்த் நடத்தியது தவறு, தமிழகத்தில் ஏன் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த கூடாது அப்படின்னு கேட்ட உடனே, நம்ம தலைவரு துண்டை கையில புடிச்சிகிட்டு உண்ணாவிரத பந்தலில் இருந்து கிளம்பி போயி கோட்டையில உட்கார்ந்து கொண்டார். ஏன் சாமி எனக்கு பதிவி போனாலும் பரவாயில்லை சேது சமுத்திர கால்வாய் தான் முக்கியம் அப்படின்னு முழு நாளும் உக்கார வேண்டியது தானே? இவரு கதை தான் இப்படின்னா,

பிஜேபி ஆட்சியில் இந்த சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்த பொழுது இன்னொரு தலைவரு, வெற்றி வெற்றி தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனையை நிறைவேற்றி விட்டோம், அப்படின்னு அழுகாச்சியோட கூவிகினே தமிழ்நாடு முழுவது சுத்தினாரு, அப்ப தெரியலையா அவருக்கு ராமர் பாலத்தை இடிப்பாங்கன்னு, இப்ப கட்சி மாறின உடனே சகோதரி பாசத்துல அய்யோ பாலத்தை உடைக்கிறாங்களே எப்பேர்பட்ட பாலம் அப்படின்னு ஒரே சவுண்டு இவரு.

அம்மா என்னடான்னா சீன் ஓப்பனிங்கல சவுண்டே இல்லாம இருந்தாங்க, ராமரு சீன்ல வந்த உடனே, அய்யோ இடிக்கிறாங்களே இடிக்கிறாங்களே அப்படின்னு சவுண்டு, அடுத்து பந்த் நடத்தறாங்களேன்னு ஒரு சவுண்டு. அடுத்து ஆளுங்கட்சிகளே சும்மா இருக்கும் பொழுது இவங்க “பந்த் வெற்றி பந்த் வெற்றி அப்படின்னு” சவுண்டு விட்டு, ஆட்சியை கவிழ்க்க பாக்குறாங்க.

நல்ல வேளை இந்த விசயத்துல கூத்தாடிங்க அவ்வுளவா சவுண்டு விட்டு மாட்டிகலை, இல்லாட்டி அவனுங்க சாயமும் இதுல வெளுத்து போயி இருக்கும்.

இப்படி அரசியல கட்சிங்க தான் இருக்காங்கன்னா, நம்ம மக்களை பாருங்க அவங்க மாநிலத்தின் முதல்வரின் தலைக்கு ஒரு சாமியார் விலை வைக்கிறார் அதை எதிர்த்து ஒருத்தன் கூட சவுண்டு விடலை(ஒரு வாரம் கழிச்சி ஏதோ நாலு கல்லு வுட்டாங்க அம்முட்டு தான்). இதுவே மத்த மாநிலங்களில் நடத்து இருந்த என்ன நடத்து இருக்கு யோசித்து பாருங்க.

இந்த சேது சமுத்திர திட்டத்துல ரெண்டு மேட்டர் தெளிவா புரியுதுங்க, ஒண்ணு தமிழன் மானெங்கெட்டவன், கோழை, சுயநலவாதி, ஒற்றுமை இல்லாதவன், எவன் எக்கேடு கேட்டா நமக்கு என்ன அப்படின்னு இருப்பான். இன்னொன்னு தமிழநாட்டோட முன்னேற்றத்துக்கு எந்த கட்சியும் பாடுபடலை.

சேது சமுத்திர திட்டம் ஒரு உதவாக்கரை திட்டம் அப்படின்னு நரேன் இங்க அழகா சொல்லி இருக்காரு போயி படிச்சித்தான் பாருங்க.