Archive for the ‘Review’ Category

சிவாஜி – The Boss – படம் பாக்குறவங்க ஆவுறாங்க லூசு

ஜூன் 21, 2007

படத்துல யார் யார் நடிச்சி இருக்காங்க, அப்படிங்கிற விவரம் எல்லாம் உங்களுக்கே தெரிஞ்சி இருக்கும். அதனால நேரடியா விமர்சனத்துக்கு போயிடலாம். படத்தோட கதை நம்ம சிவாஜி அமெரிக்காவுல ஒரு பெரிய Software Architect. அவரோட கனவு ஒரு உலகத்துல என்ன என்ன படிப்பு இருக்குமோ அதை எல்லாம் ஏழை மாணவர்களுக்கு இலவசமா தருகிற மாதிரி ஒரு பல்கலைகழகத்தை துவக்குவது தான். அந்த முயற்சிக்கு தமிழகத்துல கல்வித்தந்தையாக இருக்கும் சுமனால் ஏகப்பட்ட தடைகள் உருவாக்கப்பட்டு, ஒரு கட்டத்தில் அவரது சொத்து முழுவதும் விற்று கட்டப்பட்ட பல்கலைகழகம் இடிக்கப்பட்டு தெருவுக்கு வருகிறார். பிறகு என்ன அவரை பழிவாங்கப்புறப்படும் பொழுது. தமிழகத்துல நடமாடுகிற கருப்பு பணத்தின் அளவு தெரிய வருது. அப்புறம் என்ன தமிழ்நாட்டுல இருக்குற அம்முட்டு கருப்பு பண முதலாளிகளிடம் இருக்கும் பணத்தை எல்லாம் ஒரு மாதிரியா கொள்ளை அடிச்சி, அதை அமெரிக்காவுக்கு அனுப்பி வெள்ளையாக்கி இந்தியாவுக்கு கொண்டு வந்து, அதுல இலவச கல்வி நிலையங்கள், தொழிற்சாலைகள் அப்படி இப்படின்னு ஏகப்பட்ட நல்லது செய்கிறார்.

படத்துல நல்ல விஷயங்கள் அப்படின்னு பாத்தா நயன்தாரா எப்படி இருந்த நயன்தாரா இப்படி கும்முன்னு ஆயிட்டாங்க. அப்புறம் “அதிரடி” பாடல் படமாக்கப்பட்ட விதம் நல்லா இருக்கு. எல்லா பாட்டுக்கும் பிரம்மாண்டமான செட், டி.ஆர் படம் பாக்குற மாதிரி இருந்தது. ரஜினிக்கு மேக்கப் நல்லா போட்டு இருந்தாங்க, பழைய ரஜினியை பார்க்கிற மாதிரி இருந்தது ஒரு சில இடங்களில். Constumerக்கும், பாடலுக்கு set போட்டவரும் கலக்கி இருக்காங்க. சரி இப்ப பட்டையை கிளப்புவோமா?

படத்தை எடுக்கு பொழுது சங்கருக்கு ஏகப்பட்ட குழப்பம் போல, படம் ரஜினி படம் போல இருக்கணுமா இல்ல சங்கர் படம் போல இருக்கணுமான்னு. கடைசியில இரண்டையும் போட்டு கலந்து படம் ஏதோ மாதிரி வந்து இருக்கும். முதல் பாதியை கடனேன்னு நகத்தி இருக்காங்க. தியேட்டர் முழுவது இளசுகள், இன்னிக்கு அமெரிக்காவை கிழிச்சிடலாம் அப்படின்னு முடிவோட வந்தும் ஒரு விசில் அடிக்கிற மாதிரி கூட ஸீன் இல்லிங்க :(. பின்னாடி பாதியில் படம் ஏதோ கொஞ்ச நகருது. இரண்டாம் பாதியில் டைரக்டருக்கு முழிப்பு வந்து படத்தை வேக வேகமாக முடிக்க முயல்கிறாரோ அப்படின்னு தோணுது. வழக்கமா ரஜினி படம் அப்படின்னா திரைக்கதை வேகமாக இருக்கும் இதுல மெதுவா நகருது.

இசை, என்ன தான் இசை புயலா இருந்தாலும் நம்ம தேவா மாதிரி வராதுங்க. அவரு பஞ்ச் டயலாக் பேசுறாரு அப்படியே சும்மா அதிர வேண்டாம், “சும்மா அதிருதுல்ல” அப்படின்னு சொல்லும் பொழுது “என்னாது உடம்பு சரியில்லையா? உடம்புக்கு என்னா பண்ணுது?” அப்படின்னு கேக்க தோணுது. பொதுவா படம் முடியும் பொமுது எல்லாருக்கும் அதுல வருகிற பஞ்ச் டயலாக் மறக்கவே மறக்காது. அதுலேயும் குட்டி குட்டி குழந்தைங்க, படம் முடிஞ்ச பின்னாடியும் சொல்லிடே இருக்கும், ஆனா இதுல பாருங்க ரஜினி ரசிகர்களுக்கே டயலாக் எல்லாம் நியாபகம் இல்லங்கிற மாதிரி ஆயிடிச்சி நிலைமை.

காமெடி என்ற பெயரில் அசிங்கத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள். . இவரு foreignல இருந்து வரும் பொழுது பொண்ணுங்க Qல நின்னு ஜொள்ளு விடுவது, சாலமன் பாப்பையாவின் பெண்களுக்கு கருப்பு கலர் அடிச்சி காமெடிங்கிற பெரியரில் அவங்க வீட்டுல போயி சிரிக்க முடியலைடா சாமிங்களா. வழக்கம் போல நம்ம சின்ன கலைவாணரு இதுலேயும் இரட்டை அர்த்த வசனங்களில் பொளந்து கட்டுகிறார்(கலைவாணர் உயிரோட இருந்து இருந்தா தன்னோட பெயரை மாத்தி இருப்பாரு).

ரஜினி படம் அப்படின்னா குடும்பத்தோட போயி பார்க்கலாம் அப்படிங்கிற மாறிட்டுட்டு வருது. பாடல் காட்சிகளில் ஸ்ரேயாவின் ஆடைகளும் (இம்முட்டு செலவு பண்ணி இருக்காங்க பாவம் இந்த புள்ளைக்கு கொஞ்சம் டிரஸ் வாங்கி போட்டு இருக்கலாம்), இரட்டை அர்த்த காமெடி காட்சிகளி. பணத்தை போட்டா திரும்ப வருமான்னே தெரியாத பிரகாஷ்ராஜ் எல்லாம் தன்னை வளர்த்து விட்ட துறைக்கு ஏதாவது நல்லது செய்யணும் அப்படின்னு நல்ல தரமான படங்களை கொடுக்கிறார்கள் ஆனால் இங்க எந்த கருமத்தை போட்டாலும் கோடி கோடியா அள்ள போறாங்க அப்படி இருந்தும் ஏன் இப்படி ஒரு மட்டமா காமெடியோட ஒரு படத்தை குடுக்குறாங்கன்னு தெரியலை.

கதை ஹீம்.. சங்கரின் வழக்கமான தனியாளாக இருந்து கொண்டு நாட்டை திருத்துகிற மாதிரியான வேலைக்கே உதவாத கதை தான். கொஞ்சம் ஜென்டில்மேன், கொஞ்சம் இந்தியன், கொஞ்சம் அந்நியன் கலந்த கலவை. சகிக்க முடியாத லாஜிக் 20 லட்சம் கோடி மதிப்புள்ள கருப்பு பண சந்தையை ரஜினியும் ஒரு 4-5 ரவுடிகளும் சேர்ந்து கொண்டு ஒழிக்கிறார்களாம் அய்யோ அய்யோ இவங்க கூட ஒரே தமாசு தான் போங்க. படத்தோட லாஜிக் மேல சைக்கிளில் ஆரம்பிச்சி புல்டோசர் வரைக்கும் எல்லாத்தையும் ஏத்திவுட்டு இருக்காங்க. கையில இருக்குற 240 கோடியையும் காலேஜ் கட்டவே பயன்படுத்திவிட்டால் நாளைக்கு செலவுக்கு என்ன செய்வார்கள்? அப்புறம் அந்த Voice Recognition உடன் இருக்கும் laptopஜ திறக்க பலகுரலில் பேசுபவர்களை அழைந்து வந்து ரஜினி போல பேச வைத்து அதை திறக்க முயல்கிறார்களாம் இவங்க அடிக்கு கூத்து இருக்கிறதே அய்யோ அப்படின்னு கத்த தோணுது. சிவாஜி பவுண்டேஷனுக்கு எப்படி அவ்வுளவு பணம் வருகிறது என்று தெரியாமல் CBI முதல் கொண்டு யாருமே தெரியாமல் முழிக்கிறார்களாம் முடியலைடா சாமி. அதுவும் அந்த climaxஇல் ரஜினி இறந்து போயி, சிகிச்சை அளிக்கப்பட்டு உயிருடன் வருவது. டேய் தெரியாம இந்த பக்கம் வந்துட்டோம்டா விட்டுடுங்கடா இதுக்கு மேல வரமாட்டோம்டான்னு கத்த தோணுதுங்க. படம் எடுக்க எடுத்துக்கொண்ட 11/2 வருடங்களில் ஒரு 2 வாரம் கதை, திரைக்கதைக்கு ஒதுக்கி இருக்கலாம்.

வழக்கமா ரஜினி படம் முடிந்து வெளியே வரும் பொழுது எல்லார் முகத்திலும் ஒரு புன்னகை இருக்கும் இந்த படம் முடிஞ்சி வெளியே வருபவர்களை பார்த்தால் ஏதோ ஒரு விபத்தில் இருந்து தப்பி வெளியே வந்த மாதிரி இருந்தது. இதுக்குத்தான் இம்முட்டு பில்டப்பாஆஆஆஆஆஆஆஆஅ. தலை நம்ம படத்துக்கு இந்த சங்கர், A.R. ரகுமான் எல்லாம் சரியா வர மாட்டாங்க. சுரேஷ் கிருஷ்ணாவையோ இல்ல கே.எஸ் ரவிக்குமாரையோ புடிச்சி ஒரு தத்துவ பாட்டு, ஒரு சோக பாட்டு, ஒரு ரொமான்ஸ், நாலு பஞ்ச் டயலாக்கு, 45 நாள் படப்பிடிப்பு, சொந்த தயாரிப்பு, செலவு 5 கோடி வரவு 500 கோடி, தமிழ்நாட்டுல கல்லாவை கட்டினோமா கர்நாடகாவுல கல்லாவை தொறந்தோமான்னு இருக்குறதை விட்டு இது எல்லாம் நமக்கு தேவையா?

Ocean 13 – திரைப்பட விமர்சனம்

ஜூன் 12, 2007

இது Ocean 11, Ocean 12 படங்களின் தொடர்ச்சியாக அடுத்து வந்துள்ள படம். இந்த படங்களின் கரு லாஸ் வேகாஸ் நகரில் இருக்கு சூதாட்ட விடுதிகளை Dapper Danny Ocean (George Clooney) தலைமையிலான குழு கொள்ளை அடிப்பதே. கொள்ளை அப்படின்னா சும்மா இல்லிங்க துல்லியமான திட்டமிடுதல் மற்றும் Hitech முறையில் இதை செய்வாங்க. முதல் பகுதியில் அவரோட குழுவில் 11 பேர் இருப்பாங்க இரண்டாவது பகுதியில் 12 பேர், மூன்றாவது பாகத்தில் 13 பேர், அதுவே படத்தின் தலைப்பாக அமைகிறது. முதல் பகுதியை நான் பார்த்து இருக்கேன். இதுல Dannyயின் மனைவி சூதாட்ட விடுதி உரிமையாளருடன் போயிடுவாங்க (she will be dating with him), அவங்களோட திரும்ப சேரவும், அந்த விடுதியில் கொள்ளை அடிக்கவும் முடிவு செய்து 11 பேரி கொண்ட ஒரு குழுவை தேர்ந்து எடுத்து அந்த கொள்ளையில் எப்படி வெற்றி பெறுகிறார் அப்படிங்கிறது தான் படமே. படம் சும்மா விறுவிறுப்பாவும், எதிர்பாராத திருப்பங்களுடனும் நல்லா இருக்கும். இரண்டாம் பாகம் இன்னும் பார்க்கவில்லை கொஞ்சம் கடி அப்படின்னு சொன்னாங்க. சரி இந்த படத்தோட விமர்சனத்தை பாக்கலாமா?

Dannyயின்(George Clooney) நண்பன் Reuben Tishkoff (Elliott Gould), அவரை வில்லன் Willy Bank (Al Pacino), Reubenயும், Willyயும் நெருங்கிய நண்பர்களாக இருந்த பொழுதும், தொழில் முறையில் Reubenஜ Willy Bank ஏமாற்றி விடுகிறார். அதனால் மனம் உடைந்த Reuben, உடல் நலம் குன்றி மருத்துமனையில் மோசமான நிலையில் சேர்க்கப்படுகிறார். Danny, Willy Bankகிடம் அய்யா சாமி நீ செஞ்சது சரி இல்லை ஒழுங்கா தப்ப திருத்திக்கோ அப்படின்னு கேட்க Willy Bank முடியாது அப்படின்னு சொல்ல. “அடுத்த வருஷம் இந்த நாள் இதே நாள்” அப்படின்னு எல்லாம் வசனம் பேசாமல், அமைதியாக சிரித்துக்கொண்டே பாடம் கற்பிக்க முடிவு செய்கிறார். Bank புதியதாக திறக்கு இருக்கு சூதாட்ட விடுதியின் துவக்க நாளிலேயே அவருக்கு பெருத்த நஷ்டத்தை உண்டாக்கி, அவருக்கு பொருளாதார அடிப்படையிலும், அவர் இவ்வுளவு நாட்களாக வியாபாரத்துறையில் பெற்று நற்பெயறையும் காலி செய்ய முடிவு செய்கிறார். அவர் அதை எப்படி செய்கிறார் அப்படிங்கிறது தான் கதையே.

இந்த படத்தோட நல்ல விஷயமே படம் முதல் பாகம் போல விறுவிறுப்பாகவும், திருப்பங்களுடனும் அதே சமயம் ஒரு மெல்லிய நகைச்சுவை இழையோடவும் போயிட்டு இருக்கும். அந்த மொத்த அணியையும் அவங்க வேலை செய்யும் விதத்தையும் பாக்கும் பொழுது நம்மளும் அதுல ஒரு ஆளா இருக்க மாட்டோமா? அது மாதிரி ஒரு Challenging task கிடைக்குமா என்று நமக்கும் தோன்றும். அதே மாதிரி அணியின் பெரும்பாலானோர் Danny மீது வைத்திருக்கு நம்பிக்கையும், அவரோட பாத்திர படைப்பு மற்றும் நடிப்பை பார்த்தால் அவர் ஒரு தலை அப்படிங்கிற உணர்வை நமக்கு குடுக்கும். Brad Pitயும் இதில் கலக்கி இருப்பாரு. அதே மாதிரி இருவரும் ஒரே “Wave Length”ல இருப்பாங்க. அதே மாதிரி அணியில் இருக்கும் மத்தவங்க கிட்ட நல்லா வேலை வாங்குவாங்க.

அதே மாதிரி ஒரு காரியத்தில் இறங்கினால் அதற்காக அவர்கள் செய்யும் Ground Work பிரமிக்க வைக்கும். எ.கா இந்த படத்தில் Bank தனது சூதாட்ட விடுதிக்கு மெக்சிகோவில் உள்ள ஒரு நிறுவனத்தில் “dice” தயார் செய்ய order கொடுத்து இருப்பார், இவர்கள் அங்கேயே ஆள் பிடித்து தங்களின் தில்லு முல்லு வேலையை ஆரம்பிப்பார்கள், இது மாதிரி நிறைய சின்ன சின்ன விஷயங்கள்.
படத்துல ஒரு திருப்பமா முதல் பகுதியின் (Ocean 11 பகுதியின்) வில்லனிடம் Terry Benedict (ANDY GARCIA) பணத்துக்காக செல்ல வேண்டிய நிர்பந்தம், அவருக்கும் Bankஇனால் துவக்கப்படும் புதிய சூதாட்டவிடுதியினால் ஏற்படப்போகும் வியாபார இழப்பின் காரணமாக Dannyயுடன் சேர வேண்டிய நிர்பந்தம், பிறகு அவன் Dannyக்கு செய்ய நினைக்கும் துரோகம் அதை Danny எவ்வாறு எதிர்கொள்கிறார் என படம் முழுவதும் விறுவிறுப்பாக செல்கிறது.

படத்தில் ஏகப்பட்ட பூ சுற்றல்கள் இருந்தாலும், பார்க்கும் பொழுது நமக்கு இவனுங்க இதை செஞ்சாலும் செய்வானுங்க அப்படிங்கிற நினைப்பு தான் வரும். அது ஒரு பெரிய விஷயமாகவோ அல்லது மத்த படங்களை பார்க்கும் பொழுது இந்த பூ சுற்றல்கள் ஏற்படுத்தும் தொய்வோ இதில் நமக்கு ஏற்படுவதில்லை, அதற்கு காரணம் வேகமாக நகரும் திரைக்கதையும், காட்சிகளும் தான். அதே மாதிரி இரண்டு பேரும் சேந்துகிட்டு மத்த ஆளுங்க கிட்ட வேலை வாங்குவாங்க பாருங்க ரசிக்கத்தக்கதாக இருக்கும்.

நான் இங்கே ஆண்டவன் கிட்ட வேண்டியது அவருக்கு கேட்டுடிச்சி போல இது ஒரு நல்ல படமா போச்சி. மொத்தத்துல இது ஒரு நல்ல படம் பார்க்கலாம்.

181. இலக்கணம் – திரைப்பட விமர்சனம்

ஏப்ரல் 23, 2007

கொஞ்ச நாளைக்கு முன்னாடியே கவனிச்சேன். பேரே சரியில்லையே என்னத்த படம் எடுத்து இருக்க போறாங்க ஏதாவது மொக்கை போட்டு இருப்பாங்கன்னு நினைச்சி விட்டுட்டேன். ஆனா வேற படம் இல்லாத காரணத்தினால் இதை download பண்ணிப்பார்த்தேன். நிஜமாலுமே படம் நல்லா இருக்குதுங்க. ரொம்ப யதார்த்தமான படம் அப்படின்னு சொல்ல முடியாது, நம்ம முன்னாபாய் மாதிரின்னு வெச்சிகோங்களேன். நம்முடைய வாழ்க்கையிலும் நேர்மையை நம்மால் முடிந்த அளவுக்கு கடைபிடிக்கலாம் அப்படின்னு ஏற்றுக்கொள்கிற மாதிரி சொல்லி இருக்காங்க. படத்துல எனக்கு புடிச்ச விஷயமே நீங்க நல்லாவரா இருப்பது மட்டும் பத்தாது உங்களுக்கு பின்னாடி வருகிற சந்ததியினரையும் நல்லவங்களா உருவாக்குவது அப்படிங்கிறது தான்.

தமிழ்செல்வன் அப்படிங்கிற ஒரு மனிதனின் வாழ்க்கையின் ஒரு பகுதியை படமாக காட்டுகிறார்கள். தமிழ்செல்வனாக கூத்துப்பட்டரையை சேர்ந்த ராம் ஒரு பத்திரிக்கையாளராக நடித்து இருக்காரு. அவரோட மனைவி கயல்விழியாக உமா நடிச்சி இருக்காங்க, சூழ்நிலை காரணமாக முதலில் தமிழ்செல்வனை பற்றி தவறான ஒரு அபிப்ராயம் உண்டாகி கட்டாயத்தின் காரணமாக திருமணம் செய்கிற நிலை உருவாகுது. முதலில் கோபம் பின்னாடி உண்மை தெரிந்து காதல் அப்படி என்று நல்லா நடிச்சி இருக்காங்க.

படத்துல மசாலாத்தனம் கிடையாது அதே மாதிரி நல்லது சொல்றேன் அப்படின்னு திரைக்கு முன்னாடி நின்னு டயலாக் கிடையாது, ரத்த ஆறு பாய்வது இல்ல, திரைக்கு முன்னாடி வந்து டாய் டூய் அப்படிங்கிற வசனங்கள் இல்ல, தமிழ் படம் தான் பாக்குறோமா அப்படின்னு ஒரு பிரமிப்பு ஏற்படுகிறது. தமிழரசன் அப்படிங்கிற ஒரு மனிதனோட வாழ்க்கையை அப்படியே படம் பிடிச்சி காட்டி இருக்காங்க. அவரோட பொது வாழ்க்கையாகட்டும், கணவன் மனைவிக்கு இடையே ஆனா காதல் ஆகட்டும் ரொம்ப அழகா காட்டி இருக்காங்க.

படத்தின் இன்னொரு விஷேசம் பாரதியார் பாடலை இதில் உபயோகித்து இருக்காங்க, இது நல்ல விஷயம் தான் ஆனா பாடலுக்கு சரியா இசை அமைக்கலையோன்னு எனக்கு தோணுது இன்னும் கொஞ்ச நல்ல படியா இசை அமைத்து இருந்தா இன்னும் நிறைய பேருக்கு பாடல் போயி சேர்ந்து இருக்கும்.

படத்துல பல நச். ஆபாசம் ஆபாசம் அப்படின்னு சவுண்டு விட்டுகிட்டே பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் நமிதாவின் டூபீஸ் படம் போடும் பத்திரிக்கைகளின் போக்கிற்கு நல்ல சூடு போடுறாங்க. மக்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக எதையும் போட்டு அவர்களை ஏமாற்றி சமுதாயத்தை சீரழிக்க கூடாது அப்படின்னு சொல்றாங்க. அப்புறம் வழக்கம் போல டீவி நாடகம் (இதை எல்லாம் கேட்டு திருந்தி விடுவோமா?). அப்புறம் ஒரு இடத்துல பழைய பேப்பரை எடைக்கு போடும் பொழுது அவரிடம் உமா பேரம் பேசுகிறார் அதற்கு தமிழ்செல்வன் அந்த பழைய பேப்பர்காரன் உன் கிட்ட இருந்து பெறும் அதிகப்படியான லாபத்தால் என்ன மாளிகையா கட்டப்போகிறார், இது மாதிரி உழைக்கு வர்கத்திடம் பேரம் பேசாதே இது மாதிரி ஒரு வசனம் வரும், ரொம்ப உண்மை இவங்களை போன்றவர்களிடம் பேரம் பேசும் நாம் 150 ரூபாய் குடுத்து சத்யம் தியேட்டரில் குப்பை படத்ததை பார்ப்போம்.

படத்துல சில குறைகள் இருக்கு தேவையில்லாம ஒரு சண்டைக்காட்சி அதை தவிர்த்து இருக்கலாம். அப்புறம் தமிழ் அப்படிங்கிற ஒரு மனிதனை ரொம்ப நல்லவனா காட்டி இருக்க முயற்சி செய்து இருக்காங்க. இதை தவிர்த்து அவனையும் சாதாரண மனிதனா காட்டி இருக்கலாம், அப்படி செய்து இருந்தா படம் இன்னும் இயற்கையா இருந்து இருக்கும். தூய தமிழை பயன்படுத்தி இருக்காங்க ஆனாலும் Golden Beachஜ தங்க கடற்கரை, Cell phoneஜ கைத்தொலைபேசி, Hallஜ முற்றம், முன் அறை அப்படின்னு ரொம்ப ஓவரா செய்து இருக்க வேண்டாம். தமிழ் சொற்களை வரவேற்கலாம் ஆனால் நடைமுறை சொற்களை தமிழ்படுத்துவது பெரும்பாலோனோருக்கு புரியாது உபயோகத்துக்கும் வராது, ஒரு மாதிரி செயற்கை தனத்தை கொடுக்கும். சில இடங்களில் இது செம காமெடியாகி விடுகிறது.

அப்புறம் படத்துல ஏகப்பட்ட அரசியல் தலைகள் சுபவீரபாண்டியன், நெடுமாறம் இவர்களை தவிர்த்து இருக்கலாம். அப்புறம் படத்தோட பெரிய காமெடியே படத்துக்கு நம்ம மருத்துவர் அய்யா முன்னுரை குடுக்கும் பொழுது படத்துல வருகிற ஹீரோ மாதிரி எல்லாரும் வாழ்க்கையில் விட்டுக்குடுத்து வாழணும் அப்படின்னு சொல்றாரு. விட்டுக்குடுப்பதை பத்தி யாரு சொல்றாங்க பாருங்ண்ணா, முதலில் இவரையும் இவங்க குடும்பத்து ஆளுங்களையும் கட்சிக்காரங்களுக்கு கட்சியில ஒரு பதவியை விட்டுக்குடுக்கச்சொல்லுங்க. தமிழ், சுயமரியாதை திருமணம் அப்படின்னாலே இந்த தலைங்க தென்படுது எந்த அளவுக்கு இது உண்மை அப்படின்னு தெரியலை.

கொஞ்ச அசந்து இருந்தாலும் ஒரு முழு நீள பிரச்சார படமா மாறி இருக்கும் ஆனால் இயக்குனர் பார்த்து ரசிக்கிற மாதிரி எடுத்து இருக்காரு, திருமகன், வியாபாரி மாதிரியான குப்பைகளுக்கு இடையே இது ஒரு நல்ல படம் ஒரு முறை பார்க்கலாம்.

179. வியாபாரி – திரை விமர்சனம்

ஏப்ரல் 7, 2007

ஒரு நல்ல கதையை Highly Perverted Mind கொண்ட ஒரு கும்பலிடம் குடுத்து மாப்ளே அடிச்சி ஆடுங்கடா உங்களுக்கு முழுசுதந்திரமும் இருக்கு அப்படின்னு சொன்ன என்ன ஆவும் “வியாபாரி” அப்படின்னு ஒரு படமா வெளியே வரும்.

படத்துல வந்த ஒரு சில காட்சிகளை பாத்துட்டு பசங்களோட உக்காந்து பார்த்த நாங்களே நெளிந்து காரி துப்பியதில் மடிக்கணினியின் Monitor ஈரமானது தான் மிச்சம்.

டிஸ்கி : கொத்ஸ் என்னைய திட்டாதிங்க இங்கன ஊருல ஒரே குளிரு ஊட்ல இருக்குறது இரண்டு மடிக்கணினி தான். அதுல படம் பார்ப்பதை தவிர பெரிய இந்த குளிரில் பெரியதாக எதுவும் செய்ய முடியாதுன்னு உங்களுக்கு தெரிஞ்சி இருக்கும் :)).

178. சபரி – உனக்கு ஏன் இந்த கொலைவெறி

ஏப்ரல் 6, 2007

உங்களுக்கு ஒரு முளு நீள காமெடி படம் பார்க்க வேண்டுமா அப்ப நீங்க பார்க்க வேண்டிய படம் சபரி, நெஞ்சை ஈரமாக்கும் (படத்துல அந்த நக்கு நக்கறாங்கப்பா ஆளுக்கு ஒரு டஜன் துண்டு வாங்கிவெச்சோம் முதல் பகுதி முடியும் பொழுதே வாங்குன எல்லா துண்டும் ஈரமாயிடிச்சி) படத்தை பார்த்து ரொம்ப நாள் ஆச்சா அப்ப நீங்க பார்க்க வேண்டிய படம் சபரி, நெட்டுல பாடாவதி printடோட படம் பார்த்து வெறுத்து போயி எப்படா இதுக்கு எல்லாம் ஒரு விடிவு காலம் வந்து நல்ல ப்ரிண்டோட ஒரு படம் பார்க்க வேணுமா(பங்காளிங்க எல்லாம் நம்ம கேப்டனே உலகம் முழுவதும் வாழும் டமில் மக்களின் நலனுக்காக upload செய்து இருப்பாருங்ன்னு பேசிக்கிறாங்க) அப்ப நீங்க கண்டிப்பா பார்க்க வேண்டிய படம் சபரி. சரி படத்துக்கு ஏகப்பட்ட ஹைலைட்டு, படத்தோட பேரு சபரின்னு வெச்சதுக்கு ஹைலைட்டுன்னு வெச்சி இருக்கலாம் அந்தளவுக்கு பட்த்துல ஹைலைட்டு பதிவின் நீளம் கருதி கொஞ்சமா இங்க தரேன்.

முதலாவது ஹைலைட்டும் படத்தோட Heavy weightடும் நம்ம கேப்பு கேப்டன் தான். நல்லவருன்ன நல்லவரு நல்லதே இப்படி ஒரு நல்லவரான்னு யோசிக்கிற அளவுக்கு அப்படி ஒரு நல்லவரு. அவரு ஒரு டாக்டரு, உலகத்துலேயே பெரிய இருதய அறுவை சிகிச்சை நிபுணரு (body sizeலயான்னு தெரியலை). 3 வருசத்துல 1000 heart operation செஞ்சி இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், பாகிஸ்தான் அப்படின்னு உலகம் முழுவதும் இருக்குற நோயாளிகளை குணப்படுத்துற டாக்டர் cum தெய்வம் இவரு. இம்முட்டு பெரிய டாக்டரு அரசாங்க ஆஸ்பத்திரியில தான் வேலை செய்றாரு. தனியா கிளினிக் வெச்சி நடத்துனாலும் அதுல வருகிற காசை அப்படியே ஏழைங்களுக்கு குடுத்துடுவாரு. இவருக்கு காபி குடுக்க ஆஸ்பத்திரிக்கு வருகிற அவரது அப்பாவே டோக்கன் போட்டு லைன்ல நின்னு தான் குடுக்குறாருன்னா பாத்துகோங்க எம்முட்டு நல்லவருன்னு.

அடுத்த ஹைலைட்டு படத்தோட வில்லன். கேப்டனுக்கு ஈடு இணையா இவரும் நல்லவரு, பக்திமான் எப்படின்னு கேக்கறீங்களா? கொலை செஞ்சிட்டு வந்த கையோட அதுக்கு பரிகாரமும் செஞ்சிடுவாராம் இவரு. அப்புறம் வழக்கம் போல நீதிபதி, மந்திரி, கலெக்டர், அப்படின்னு கேப்டனை தவிர மத்த அரசாங்க ஊழியர்கள் எல்லாம் இவரோட கையாள்.

சென்னை என்னங்க நான் இங்க வந்த ரெண்டு வருசத்துல இம்முட்டு மோசமாயிடிச்சி. அரசு மருத்துவமனையில் special wardல நம்ம டாக்டர் சபரி வந்து அடிச்சி கேக்குற வரைக்கும் விபச்சாரம் நடக்குது, தண்ணி அடிக்கிறாங்க, ரெஸ்டு எடுக்க பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் வராங்க என்னவோ போங்க. அடுத்து என்னங்க இப்படி நடுரோட்டுல ஒரு 5000 பேர் சுத்தி நின்னுட்டு இருக்கும் பொழுது ஒரு அரசாங்க அதிகாரியை வில்லனோட அடியாளுங்க நிக்க வெச்சி வசனம் பேசி வெட்டிட்டு போறாங்க. சென்னையில் அரசாங்க அதிகாரிங்களுக்கு எல்லாம் பாதுகாப்பே இல்லையா?

அடுத்து ஒரு இன்ஸ்பெக்டர் என்னடான்னா lockupல வெச்சி கைதியை விசாரணை செய்யாம கொலை நடந்த இடத்துக்கு கூட்டிட்டு வந்து எப்படிடா வெட்டுன அப்படின்னு கேக்குறாரு, நம்ம வில்லன் வந்து அவரை வெட்டிட்டு இப்படி தான் அப்படின்னு live demo காட்டுறாரு. எனக்கு படம் பார்க்கும் பொழுது ரொம்ப பயமா போச்சிங்க.

அடுத்து எப்படியோ வில்லனோட மச்சானை கைது செஞ்சிடறாங்க, அவரை தப்பிக்க வெச்சி கூட்டிட்டு போக ஒரு 50-60 ரவுடிங்க சும்மா டூமில் டூமில்னு நடுரோட்டுல போலிசை எல்லாம் சுட்டுபுட்டு கூட்டிட்டு போறாங்க. ஊருல இருக்குறவங்க எல்லாம் கொஞ்சம் பார்த்து இருந்துகோங்க, இப்படி தெனமும் நடக்குற சண்டையில் நீங்க போயி மாட்டிகாதிங்க.

அடுத்த என்னானா ஒரு பத்து நிமிசத்துல நீதிமன்றத்துல விசாரணை முடிஞ்சி, தூக்கு தண்டனை குடுத்துடறாங்க அதுவும் அவருக்கு எதிரா சாட்சி சொல்ல யாருமே இல்லாத போதும். அதை விட பெரிய ஹைலைட்டு என்னானா தூக்கு தண்டனை குடுத்த மறு நிமிசம் அவரை தூக்குல போட்டுறாங்க. சே இந்தியாவின் நீதித்துறை இம்முட்டு வேகமா, புல்லரிச்சிப்போச்சிங்க (இது மாதிரி புல்லரிக்கும் காட்சிகள் நிறைய இருக்கு தனியா அதுக்கும் மருந்து வாங்க் தனியா வெச்சிகோங்க).

அடுத்த ஹைலைட்டு படத்தோட இறுதிக்காட்சியில ஒரு இடத்துல வில்லனுக்கு ஒரு டயலாக் விடுவாரு அதை கேட்டுட்டு வில்லன் இவரை கொல்லாம போயிடுவாரு சரி இம்சை முடிச்சிடிச்சிடா சாமியோவ் அப்படின்னு எஸ்கேப் ஆகலாம் அப்படின்னு பாத்தா அதுக்கு அப்புறம் சுமார் அரை மணி நேரம் படம் இருக்குது. படம் எப்ப முடியும் அப்படின்னு ஒரு திரில்லாவே இருக்கும் உங்களுக்கு.

அடுத்த ஹைலைட்டு சரியா பதினைந்து நிமிசத்துக்கு ஒரு தரம் படத்துல யாராவது ஒருத்தரு நம்ம கேப்டன் வந்து பிரச்சனையை தீர்க்கும் வரை அழுது ஆர்பாட்டம் பண்ணி ஒப்பாரி வெக்கிறாங்க. தாங்கலைடா சாமியோவ்.

படத்துல புல்லரிக்கு காட்சி இருக்குன்னு சொன்னே இல்லிங்களா அதுல ஒண்ணு நம்ம கேப்டனு ஒரு ஆப்ரேசன் செஞ்சிகிட்டே இருக்காரு டபால்ன்னு கரண்டு கட்டு ஆயிடுது. கூட இருக்குற டாக்டருங்க எல்லாம் டாக்டர் இன்னும் 5 செகண்டு தான் இருக்கு ஏதாவது பண்ணுங்கன்னு சொல்ல நம்ம ஆளு உடனே டக்குன்னு எல்லாருடைய மொபைல் போனையும் ஆன் பண்ண சொல்லி அந்த வெளிச்சத்துல அறுவை சிகிச்சையை முடிச்சி நோயாளியை காப்பாத்திடராரு (தலை முடியலை எப்படி உங்களால மட்டும் இப்படி எல்லாம் முடியுது எந்த ஹோட்டலில் ரூம் போட்டு இப்படி யோசிக்கிறீங்க). அப்புறம் முக்கியமான மேட்டரு heart weakஆ இருக்குறவங்க இந்த சீனை பாக்காம இருக்குறது நல்லதுங்க, ஏன்னா தலை அந்த நோயாளியை எப்படி காப்பாத்துவாருன்னு தெரியாம tensionஆகி ஒரு நாலு ஜந்து பேரு நெஞ்சி வெடிச்சி செத்து போயிட்டதா ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.

ஹீரோயினை பத்தி சொல்றத்துக்கு பெருசா எதுவும் இல்லிங்க, வழக்கமா கேப்டன் படத்துல எப்படி ஹுரோயின் எல்லாம் லூசா இருப்பாங்களோ இதுலையும் அதே மாதிரி ஜோதிர்மயி. இன்னொரு ஹைலைட்டு என்னானா நம்ம மாளவிகா ஒரு பாட்டுக்கு ஆட்டத்தை போட்டுட்டு நம்ம தலை மேல தெரியாம மோதி அவரோட காந்தத்துல attractஆகி இன்னொரு முறை இடிங்கன்னு கேக்குறாங்க. அப்புறம் கேப்டனின் அரை பக்க டயலாக்கை கேட்டு என்னை விட்டுடு சாமியோவ் அப்படின்னு அவரை விட்டு ஓடிப்போறாங்க (நம்மால முடியலைங்க).

அப்பா மற்றும் தங்கை வழக்கம் போல இவரோட அருமை பெருமைகளை ஊர் முழுக்க சொல்லுவது அப்புறம் நம்ம ஹீரோவை பொங்கி எழச்செய்வதற்காக வில்லனால் கொலை செய்யப்படுகிறார்கள்.

படத்துல ஜஸ்வர்யா கொஞ்ச நேரமே வந்தாலும் கலக்கி இருக்காங்க.

அப்புறம் கேப்டன் சார் தமிழ் மக்கள் மேல ஏன் உங்களுக்கு இந்த கொலைவெறி. எலக்சன் நேரத்துல இந்த மாதிரி படத்தை எடுத்து வெளியே விட்டுடாதிங்க அப்புறம் உங்களுக்கு வோட்டு போடலாம் அப்படின்னு நினைச்சிகிட்டு இருக்குற கொஞ்ச பேரும் படத்தை பாத்து செத்து போயிடப்போறாங்க. அப்புறம் உங்களுக்கு தான் ஓட்டு நஷ்டம்.