Archive for the ‘Uncategorized’ Category

Avengers – அவிஞ்சி போன மண்டையன்ஸ்

மே 2, 2012
பக்கத்து உலகத்துல, தமிழ்நாடு மாதிரி ஒரு நாட்ல ஒரு பெருசுக்கு ரெண்டு புள்ளிங்கோ..அதுல ஒண்ணு கையில சுத்தியோட சுத்துற கன் பீஸு இன்னொன்னு டம்மி பீஸு..அந்த டம்மி பீஸுக்கு டில்லியை சாரி சாரி உலகத்தை எப்படியாச்சும் புடிச்சிடணுமுன்னு ஆசை. அதுக்கு அந்த கன் பீஸும், பெருசும் தம்பி நீ உள்ளுருல புடுங்குன ஆணியே தேவையில்லாதது..உலகமெல்லாம் தேவையான்னு கேக்குறாங்க..ஆனாலும் அந்த டம்மி பீசு டில்லிக்கு சாரி உலகத்துக்கு வந்து எப்படி சிக்கி சின்னாபின்னபட்டு சீரழியுதுங்கிறது தான் மெயின்கதை. நெக்ஸ்டு மிச்சம் மீதி இருக்குற கிளை கதைகளை பாக்கலாம்.
 
உலகத்துல சோனி கொம்பெனிக்கு சொந்தமான எல்லா  சூப்பர் ஹீரோஸை ஒண்ணு சேத்து அவிஞ்சி போன மண்டையன்ஸுன்னு சாரி சாரி Avengersன்னு ஐவர் குழுவை உருவாக்கி கணக்கு பாக்கணுமுன்னு சாரி  உலகத்தை காபாத்தணுமுன்னு இன்னொரு பெருசுக்கு ஆசை. அந்த அவிஞ்சி போன மண்டையனுங்க யார் யாருன்னா..
 
மொதல்ல கேப்டன் அமெரிக்கா, நம்ம கேப்டன் மாதிரி கையில குவாட்டரும் வாயில புள்ளி விவரமுமா இல்லைண்ணாலும் அமெரிக்கா ரேஞ்சுக்கு கையில இருக்குற வடை சட்டியை வெச்சி அணுகுண்டு முதல் கொண்டு எதை போட்டாலும் தடுத்துடுறாரு.
 
அடுத்ததா ஒரு அம்மா, அந்தம்மாவுக்கு என்ன தெரியுமும், எப்ப என்ன செய்யுமுன்னு யாருக்குமே தெரியாது ஆனா அதிரடியா ஏதாவது செய்துட்டே இருக்கும். கடைசியில எல்லா பொண்ணுங்க மாதிரி ஆப்பை சரியா வெச்சி பேரு வாங்கிட்டு போவுது. தோழி செண்டிமெண்டு, பிரிஞ்சி சேருவது, கடுதாசி சீன்னெல்லாம் எதிர்ப்பாத்து மொட்டையடிச்சிட்டு போயி ஏமாந்தா கம்பெனி பொறுப்பாகது.
 
அப்புறம் இம்சை அரசன் புலிகேசி மாதிரி கவச குண்டலத்தை போட்டுட்டு பறந்துட்டும் சுட்டுட்டும் திரியுற Iron Man.இறுதிக்காட்சியில கிழக்கு பக்கமா பாய்ந்து வர ஏவுகணைக்கு தன்னோட முதுகை முட்டுக்குடுத்து திசைதிருப்பி, தெற்கால வானத்துல இருக்குற ஓட்டை வழியா  அனுப்பி வில்லனோட விண்கலங்களை அழிக்கிறதை பாக்க பலகோடி கண்கள் வேணுமப்பா (ஒரு கண் அவிஞ்சா இன்னொணை வெச்சி பாக்க).. ஏவுகணையை முதுக்குல சுமந்துகிட்டு அவரோ பிகருக்கு போன் பண்ற கடமை உணர்ச்சியை பாத்து புல்லரிக்காத ஆளே இல்லை போங்க.
 
அடுத்த ஆளூ, அவன் அவன் கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்து தயாரிச்ச ஆயுதங்களை எல்லாம் ஒண்றையனா வில் அம்பை வெச்சி அசால்டா முறியடிக்கிற நவீன அர்சுனரு. இவரு வில் அம்போட எவ்ளோ தூரம் ஒன்றிப்போயிருக்காருன்னா பொம்பளை புள்ளையோட குழாய் சண்டை போடும் பொழுது கூட வில் அம்பை தான் யூஸ் பண்றாரு. 
 
நீதிடா நேர்மைடான்னு நியாம்டா பொதுவான டயலாக்கா பேசி இந்தாளு எந்தபக்கம்டான்னு பாக்குறவங்களை குழப்புற மாதிரி குழப்பி, கடைசியில ஜெயிக்கற பக்கம் ஜாயிண்டு அடிக்கிற (நீங்கெல்லாம் நெனைப்பிங்க நான் மருத்துவருன்னு சொல்லுவேன்னு அதான் இல்ல), பல்க்கான ஹல்க்கு. படத்துல இவர் மட்டும் கொஞ்சம் சிரிக்க வெக்கிறாரு.
 
பழங்காலத்துல நம்ம தாத்தன் பூட்டன் எல்லாம் சேவிங் செய்யறப்ப யூஸ் பண்ணுவாங்கில்ல படிகார கல்லு, அது மாதிரி பெரிய சைஸ் கல்லு ஒண்ணை  கண்டுபுடிச்சி அதை உபயோகித்து ஆயுதங்களை தயாரிக்க ஒத்தக்கண்ணனும் அவங்க கம்பெனியும் திட்டம் போடுறாங்க.
 
அந்த சேவிங் கல்லுல இருக்குற சக்தியை வெச்சி உலகத்தையே ஆளலாமுன்னு கண்டுபுடிக்கிற டம்மிபீஸு அவங்க உலகத்துல இருந்து இங்க வந்து அந்த கல்லை ஆட்டையை போட பாக்குது. அதை அவிஞ்சி போன மண்டையணுங்க பேசி பேசி எப்படி தடுத்து நிறுத்துறாங்கங்கிறதை படுபயங்கறமாவும்(பாக்குறவங்களுக்கு)  படுமொக்கையா சொல்லியிருக்காங்க. இந்த கருமத்தை பாக்குறதுக்கு வில்லு படத்தை நூறு முறை ரீவைண்ட் பண்ணி பாக்கலாம்.

இதெல்லாம் நல்லதுக்கு தானா?

மார்ச் 28, 2012

வழக்கமா நாலு உதை விட்டாலும் ஸ்டார்ட் ஆவாத பைக்(பெரும்பாலும் சாவி போட்டு இருக்க மாட்டேன் இல்லாட்டி சாவியை ஆன் பண்ணி இருக்க மாட்டேன் நோ நோ.. இதுக்கெல்லாம் பிளக்ஸ் பேனர் ரோம்ப ஓவர்) இன்னிக்கு ஒரே உதையில ஸ்டார்ட் ஆயிடிச்சி.

ஹோட்டல்ல போயி சட்னி கேட்டா சட்னி இல்ல கிட்னி வேணுமான்னு கேப்பானுங்க.. இன்னிக்குன்னு பாத்து சார் தேங்கா சட்னி,தக்காளி சட்னி, புதினா சட்னி எது வேணுமான்னு கேக்குறாங்க.

பசி உயிரை போவுற அன்னிக்கு நமக்கு முன்னாடி கியூவுல பத்தாயிரம் பேரு நிப்பான் அதுவும் நமக்கு முன்னாடி இருக்குறவனுக்கு கவுண்டர் கிட்ட வந்த அப்புறம் தான் எதை திங்கலாமுன்னு ஆராய்ச்சி செய்யுற ஆசையோ இல்ல இதை எப்படி செய்து இருப்பாங்க அதை எப்படி செய்து இருப்பாங்கன்னு டவுட் வந்து கவுண்டருல இருக்குறவன் கிட்ட கேள்வியா கேட்டு கொலையா கொல்லுவான்.. அதுவும் இல்லாட்டி அவனுக்கு தெரிந்த ஒரு பத்து பேரு வந்து எனக்கு சேத்து வாங்குடான்னு அவன் கிட்ட இருக்குற ஆயிரம் பக்க லிஸ்ட் பத்தாதுன்னு இவனுங்க ஒரு ஆயிர ஆயிட்டம் சொல்லுவானுங்க ஆனா இன்னிக்குன்னு பாத்து எல்லா கவுண்டரும் காலியா இருக்கு வசந்த் & கோ மாதிரி வாங்க வாங்கன்னு வரவேற்ப்பு வேற

வழக்கமா வங்கியில போயி விண்ணப்பம் இல்லைன்னு சொன்னா யோவ் அங்க தான் இருக்கும் போயி ஒழுங்கா பாருயான்னு அன்பா சொல்லுவாரு, ஆனா இன்னிக்கு பாருங்க ஒரு ஆபீசர் பணிவா வந்து பாத்து எடுத்து குடுக்குறாரு. கையெழுத்து போடுற இடத்துல இருந்த மல்லு ஆன்டி என்ன கோர்ஸ் படிக்கிறீங்க, நல்ல கோர்ஸா இருக்கேன்னு ஒரு ரெண்டு மூணு நிமிஷம் கடலை போட்டு கஸ்டமர் சேடிஸ்பேக்‌ஷனை வேற இம்ப்ரூவ் பண்ணுது.

நமக்கு தேவைன்னு வரும் பொழுது.. cartridge காலி ஆவுறது, பேப்பர் தீர்ந்து போவுறது, நடுவுல வேலை செய்யாம போவுறதுன்னு கெத்த காட்டும் பிரிண்டரு இன்னிக்கு பிரிண்ட் பட்டனை தட்டின உடனே சும்மா பள பளன்னு பிரிண்ட் அவுட்டு எடுத்து குடுக்குது.

இதெல்லாம் நல்லதுக்கா இல்ல பெரிய ஆப்போட சின்ன ஆரம்பமான்னு நெனைச்சிட்டே இருந்தா பின்னாடி ஒரு குரல் டேய் எருமை பத்து மணி ஆச்சி ஆபீசுக்கு போவாம அப்படி என்ன தூக்கமுன்னு, ஸ்யப்பா நல்ல வேளை கனவா போச்சி..இந்த மாதிரி பிரச்சனை இல்லாத உலகத்துல பிரச்சனையை fancy banianனா போட்டு பொங்கிட்டு இருக்குற நம்மால உயிர வாழ முடியுமா என்ன?

விகடனில் என் பதிவு

மார்ச் 1, 2012

பொதுவா பத்திரிக்கையில ஒரு ஓரத்துல துளியூண்டு பேரு வந்தாலே பெருமையா இருக்கும். ஒரு முழு பக்கமும் நம்மளை பத்தி வந்தா எப்படி இருக்கும்..

ஒரு 5 – 6 வருடங்களுக்கு முன்னாடி என் பதிவை பத்தி தினமலர்ல வந்தது அப்புறம் ஜுவில ஒரு கட்டுரை எழுதி தரச்சொன்னாங்க, அதெல்லாம் குட்டியா சிறு பத்தியில வந்தது. ஆனா இந்த தடவை ஒரு முழு பக்கம்.அதுவும் விகடன் மாதிரியான ஒரு பாரம்பரிய பத்திரிக்கையில ஒரு பக்கம் முழுவதும் வந்தா எப்படி இருக்கும்.

ஊர்ல ஒரு பய மதிக்காது இன்னிக்கு காலையில இருந்து ஒரு 5 – 6 பேரு போன் பண்ணி சொல்லி இருக்காங்களாம்.திரும்பவும் எழுதலாமுன்னு யோசிக்கிறேன்.. ஓடுங்க ஓடுங்க இந்த மிருகம் உங்களை நோக்கி தான் வந்துகிட்டே இருக்கு.. 🙂

 

Image

 

Image

பெண்ணியவியாதிகளும் மாற்று சிந்தனையாளர்களும் கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க

மார்ச் 7, 2010

நித்தியானந்தர் மேட்டர் வெளி வந்ததும் யாரு கொதிச்சாங்களோ இல்லையோ பெண்ணியவியாதிகள், சட்ட நிபுணர்கள், மாற்றுப்பார்வையாளர்கள், நடுநிலையாளர்கள் கொதிச்ச கொதியில் அரபிக்கடல் அரை மணிநேரம்
சூடாயிப்போச்சி, இவங்க அடிக்கிற ஜல்லியைதான் கொஞ்சம் பார்ப்போம்.

பாவம் அந்தப்பொண்ணு அது என்ன தப்பு பண்ணிச்சி நாளைக்கு ரோட்டுல எப்படி தல நிமிர்ந்து நடக்கும்?

அடிங்க அந்த பொண்ணு அங்க என்ன ஒலக சமாதானத்தை பத்தியா பேச போயி இருந்தது? சின்ன பாப்பா பாருங்க என்ன பண்றேன்னு தெரியாம பண்றதுக்கு. அது தல நிமிர்ந்து நடந்தா என்ன நடக்காட்டி என்ன? நாட்ல பசியாலும் பாலியல்
கொடுமையாளும் எவ்வுளவு பொண்ணுங்க செத்துட்டு இருக்காங்க அங்க போயி காட்டுங்கடா உங்க பரிதாபத்தை,கிளம்பிட்டானுங்க பெண்களைப்பார்த்து பரிதாபப்பட.

அடுத்து நம்ம சட்ட நிபுணர்கள், இவர்களின் கருத்துப்படி 18 வயது நிரம்பிய ஒரு ஆணும் 18 வயது நிரம்பிய ஒரு பெண்ணும் மனசு ஒத்து உறவு கொளவது சட்டப்படி தப்பில்லையாமா?

இதே சட்ட நியாயங்களை உங்க வீட்ல இருக்குற ஒருத்தர் இது மாதிரி செய்யும் பொழுது சொல்வீங்களா? உங்களுக்கெல்லாம் ethics, moral கிடையவே கிடையாதா? கோடிக்கணக்கான பேருக்கு உபதேசம் செய்துவிட்டு ப்ராடுதனம் பண்ணிகிட்டு இருக்கார் அவருக்கு வக்காலத்து வாங்க வந்துட்டாங்க (உடனே ஆரம்பிப்பாங்க ஜல்லியை ஏமாறுவதற்கு ஆட்கள் இருக்குற வரை
ஏமாற்றுவதற்கு ஆட்கள் இருப்பாங்கன்னு.ஏன்னா இவங்க ரெண்டு பேரும் இருந்தா தான் இவங்க பொழப்பு ஓடும்).

உங்களைபோன்ற சட்ட மேதாவிகளின் உதவியால் தான் ரத்தோர் போன்ற நல்லவங்க ரூச்சிகா போன்றவர்களின் வாழ்க்கையை சீரழிச்சிட்டு 6 மாச
கடுங்காவல் தண்டனைகளோட தப்பிக்கிறாங்க.நல்லா நிலைநாட்டுறாங்க சட்டத்தை.

அடுத்து நம்ம ஒசை செல்லா அண்ணனை போன்ற மாற்றுச்சிந்தனையாளர்கள் – இவங்க மேல சொன்ன சட்ட நுணுக்களோட, நாளைக்கே இது உங்களுக்கும் நடக்கலாம், privacy, papa racy போன்ற பூச்சாண்டிகளோடும், ராமகிருஷ்ண
பரமஹம்சரே செய்து இருக்காரு இந்து தர்மப்படி இது தப்பே இல்ல இது பார்பணியம் ஆர்மோனியமுன்னு வழக்கமான ஜல்லி.

இவிங்களை கண்டிச்சாலும் கண்டிக்காட்டியும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக எவன் படுக்கையறையையும் எவன் வேணா பாக்கலாமுங்கிற நிலைமை வந்துடிச்சி.நீங்க தப்பு செய்யாட்டி உங்க பெட்ரூமை அடுத்தவன் பார்ப்பானோங்கிற பயம் உங்களுக்கு எதுக்கு? இந்த மாதிரி detective journalism வளர்ந்தால் தான் பொதுவாழ்க்கையில இருக்குறவங்களுக்கு கொஞ்சமாவது பயம் வரும்.

ராமகிருஷண பரமஹம்சர் என்னா இவரை மாதிரி சினிமாக்காரியோடவா கூத்தடிச்சிட்டு இருந்தாரு இல்ல யோகம் போகமுன்னு கோடியில
வாழ்ந்துகிட்டு இருந்தாரா? இந்த கோஷ்டி காலையில காபியில ஈ இருந்தா கூட அதுக்கு காரணம் பார்பணீயம் தான்னு சத்தியம் பண்ணுவாங்க.

அடுத்த கோஷ்டி உண்மைத்தமிழன் போன்ற நடுநிலைவாதிகள். இவிங்க பிரச்சனையே எவன் எந்த பிரச்சனையை பத்தி பேசினாலும் நீ யோக்கியமான்னு ஒரு கேள்வியை எழுப்ப வேண்டியது. ஷகிலா படத்தை போட்டதாலும்,தினகரன் சம்பவத்துல பின்வாங்கியதாலும், தவறான வியாபாரக்கொள்கை வெச்சி இருப்பதாலும் சன் டிவிக்கு அந்த தகுதி இல்லையாமா.

ஏன் ஒரு அயோக்கியன் இன்னொரு அயோக்கியனை காட்டிக்குடுக்குறது தப்பா? இதே சன் டிவி இதை வெளிக்கொண்டுவராட்டி யோச்சிபாருங்க இந்தாளு அடுத்த ஜந்து ஆண்டுகளின் எப்பேர்பட்ட வளர்ச்சியை அடைந்து இருப்பாரு? எத்துணை பேரின் வாழ்க்கை பறிபோயி இருக்கும்.எவன் கொண்டுவரான்னு பாக்காதிங்க சாமி என்ன கொண்டுவரான்னு பாருங்க.அப்படி பாத்தா பக்கம் பக்கமா பதிவெழுதி எல்லா டவுசரையும் உருவரமே நாம எல்லாம் ரொம்ப யோக்கியமா?

ஒரு புது கண்டுபிடிப்பை வேற இவரு வெளியிட்டு இருக்காரு. அவரு மனுசனாம அதனால அவரோட மனுச குணத்தால இந்த தப்பு நடந்து போச்சாமா.கொலை செய்றவன், கொள்ளையடிக்கிறவன் கூட தான் மனுசன் வுட்டுடலாமான்னு கேட்டா, அதெப்படி அவங்களுக்கெல்லாம் மாத்து கருத்து இல்லை இவருக்கு இருக்கு அப்படிங்கிறாரு.கொஞ்சம் விட்ட ஜெ, கலைஞர் வகையராக்கள் கொள்ளையே அடிக்கலைன்னு சொல்லுவார் போல.

அடுத்து இணைய பெண்ணியவியாதிங்க(ஆண்கள், பெண்கள் தனி கேட்டகிரி).இவர்களில் நிறைய பேர் இங்க எழுதுறதே பொண்ணுங்க கிட்ட ஜொள்ளுவிடத்தான். இவங்களை முக்கிய வேலையே பெண் பதிவர்களின் பதிவுகளில் பின்னூட்டங்கிற பெயரில் ஈளிச்சிட்டு நிக்குறது தான். பொதுவா கதை கவிதன்னு சுத்திட்டு இருப்பாங்க.

இது மாதிரிஏதாவது சாக்கு கிடைக்கும் பொழுது ஆம்புளைங்களே இப்படி தான்னு (ஏதோ இவங்க எல்லாம் ஆம்பளைங்களே இல்லங்கிற மாதிரி) கிளம்பி, அய்யோ பாவம் அந்த பொண்ணு அத்தோட வாழ்க்கை இப்படி வீணாப்போச்சே, இதுக்கு மேல அந்த பொண்ணு தல நிமிர்ந்து எப்படி நடக்கும்? வாயால எப்படி சாப்புடும்? எப்படி வெளிய வருமுன்னு?தற்கொலை பண்ணிகிட்டா என்ன பண்றதுன்னு ஒரே ஒப்பாரி. இந்த மாதிரி பொண்ணுங்க இருந்தா என்ன இல்லாட்டி தான் என்ன?

அடுத்த கேட்டகிரி பெண் பதிவர்கள். முதலில் கண்மணிங்கிறவங்க கேட்டாங்க பாருங்க ஒரு கேள்வி ரஞ்சிதாங்கிறதால தானே வெளியிட்டிங்க இதுவே
அரசியல்வாதியோட பெண்ணாவோ இல்ல அதிகாரி வீட்டு பெண்ணாவோ இருந்தா இதை வெளியிட்டு இருப்பிங்களான்னு. ஏங்க ப்ரேமானந்தா என்ன நடிகையோடவா மாட்டினாரு? இவங்க சொல்றாங்க இந்த நடிகைகள் எல்லாம் நல்லவங்களாம் (புவனேஸ்வரியையும் சேர்த்து) ஆனா சாமியாருங்க மட்டும் கெட்டவங்களாமா. ஏன்னா இந்த நடிகைகள் எல்லாம் ஒண்ணும் தெரியாத பாப்பாகள் அவங்களை இந்த சாமியாருஙக சூனியம் வெச்சி கெடுத்துட்டாங்களாம்.

சின்ன அம்மணிக்கு ஒரு கவலை ஷோபாவை தற்கொலை செய்ய வைத்துவிட்டு, மவுனீகாவை வைத்துக்கொண்டு, அர்ச்சனாவுக்கு ரூட்டு விடும் பாலுமகேந்திரா போன்றவர்களைப்பற்றி யாரும் கவலைப்படுறது இல்லைன்னு.
எல்லார் கவலையும் ரஞ்சிதா, நயனதாரா மேல்தான்.என்ன கொடுமை இது.

அடுத்த சந்தனமுல்லை இவங்க புனித ஆத்துமா ரஞ்சிதாவை கண்ணகி,டயானா,அகலிகைன்னு யார் யாரோடவே ஒப்பிட்டு புனிதப்படுத்தி
இருக்காங்க. ஏங்க தெரசா,சீதா,மேரி இவங்களை எல்லாம் விட்டுடிங்க ஒரு வேளை இவங்க ரஞ்சிதா மேடம் ரேஞ்சுக்கு இறங்கி பொது சேவை செய்யலையோ?

அத்தோட நிறுத்தி இருக்கலாம் எதை நிலை நாட்டவோ எல்லா ஆம்புளைங்களும் எல்லா பெண்களிடமும் அளவு தேடுறவனுங்கன்னு சந்தடிசாக்குல அடிச்சி விட்டு இருக்காங்க..இதுக்கு ஒரு ஜம்பது பேர் சூப்பருங்க பின்னி பெடல் எடுத்துடிங்கன்னு பின்னூட்டம்..அதுல பாதி பேர் ஆம்பளைங்க மீதி பேர் பொண்கள், ஆனா அவங்களுக்கும் ஆண்களுக்கும் சம்மந்தமே இல்ல
ஏன்னா அவங்களுக்கு புருஷன்,புள்ளை,அண்ணன் தம்பின்னு யாரும் ஆண் இல்ல அப்படி இருந்தாலும் இருக்குறவன் எல்லாமே எல்லா பெண்களிடமும் அளவு தேடுறவங்க.நல்லா இருங்கடே.

இது எதுலையுமே சேராத இன்னொரு கோஷ்டி நம்ம தெ.கா.,ரஞ்சிதா அவரை காதலிக்குதாமா பாருங்கய்யா என்னா அழகா பக்தியோட அந்த புள்ள பணிவிடை செய்யுது அது இதுன்னு இவரு புளிகாகிதம் அடையிறாரு…இதைப்படிச்ச நித்யானந்த கம்பெனி டீலர் ஒருத்தர் அட இது நமக்கு தோணாமா போச்சேன்னு ரொம்ப பீல் பண்ணாரு.ஸ்யப்பா தெ.கா உங்க நிலைமையே ஏன் இப்படின்னு ஆகிப்போச்சே.

டிஸ்கி:என்னோட ஆதங்கமே ஏன் எல்லாரும் தனிமனித உரிமை, privacy, பெண்ணுரிமை அப்படிங்கிற காரணத்தினால் அவங்களை support செய்றீங்க? பல தனிமனித உரிமைகள் மீரப்பட்டாளும் இவங்க செய்தது தப்பு தான். இதை சன் டிவி வெளிக்கொணர்ந்ததில் தப்பே இல்லை.தனிமனித உரிமைகளும் மற்ற வெங்காயங்களும் மீறப்பட்டாலும் சமுதாயத்துக்கு ஒரு நன்மை விளைந்து இருக்கு, அது தான் நமக்கு தேவை.

மற்றபடி என்னை கேட்டா சாமியார்கள் தேவையே இல்லை சாமி டூ மனுஷன் மனுஷன் டூ சாமி ஒன் டூ ஒன் கனெஷன் இது தான் என்னோட நிலைப்பாடு.

இந்த ஆக்கத்தை சீர்ப்படுத்தி தந்த நண்பர்களுக்கு ரொம்ப நன்றி.

குடுத்த காசுக்கு மேல கூவுறானே

ஒக்ரோபர் 11, 2007

Photo Sharing and Video Hosting at Photobucket

 விஜய் : ஒய்யால குடுத்த காசுக்கு மேல கூவுறானே ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்…………..

157. Appleலின் ஜபோனுனுனுனு(iPhone)…

ஜனவரி 10, 2007

Apple நிறுவனம் பத்தி சொல்லவே வேண்டியது இல்ல புதுசு புதுசா மார்கெட்ல வெளியிட்டு நம்ம காசை காலி பண்றதுல கில்லாடிங்க. இப்ப புதுசா IPhone அப்படின்னு வெளியிட்டு இருக்காங்க. நீங்களே இங்க பாருங்க போன் சும்மா கும்முன்னு இருக்கு விலையை ரொம்ப அதிகம் இல்லிங்க ஜென்டில்மேன் 4 g.b கொள்ளவு உள்ளது 499$, 8GB உள்ளது $599 டாலர் தான். இந்த விலை Cingular Connection இரண்டு வருட Contract உடன் வாங்குபவர்களுக்கு தான். இதுவே இம்முட்டு விலை அப்படின்னா மொத்தமா காசு குடுத்து வாங்குனா எம்முட்டு ஆகும் அம்மாடியோவ். நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய மேட்டர் என்னானா cingular போன்ற கம்பெனிகளுக்கு மிகப்பெரிய தள்ளுபடி உண்டு மேலும் இந்த நிறுவனங்கள் விலையின் ஒரு பகுதியை தனது வாடிக்கையாளர்களுக்காக அதுவே ஏற்றுக்கொள்கிறது.. ஆப்பிள் ஓனர் மட்டும் தான் முழு காசு குடுத்து வாங்க முடியும் அப்படின்னு நினைக்கிறேன். இதன் விலை குறைய சாத்தியக்கூறுகள் மிகக்குறைவு. அது ஏன் அப்படின்னு பின்னாடி ஒரு பதிவில் கூறுகிறேன்.

என்னைய மாதிரி சாதாரண மக்கள் எல்லாம் வாயை பிளந்து இதை பார்த்துக்கொண்டு இருக்கும் பொழுது ஒரு சில நிபுணர்கள் இதை Smart Phone என்றே ஒத்துக்கொள்ள மறுக்கின்றனர் இது ஒரு குறிப்பிட்ட softwareகளை உள்ளடக்கிய ஒரு பொட்டி என்று குறிப்பிடுகின்றனர். இதுக்கு இம்முட்டு காசு குடுப்பது தண்டம் அப்படின்னு இங்க சொல்றாங்க.

எது எப்படியோ. இந்த போன் அமெரிக்காவில் அதுவும் cingular வாடிக்கையாளர்களுக்கு ஜூன் மாத வாக்கில் கிடைக்குமாம், ஜரோப்பாவிற்கு இந்த ஆண்டு இறுதியில், ஆசியாவில் 2008 ஆம் ஆண்டு தான் இது கிடைக்குமாம். அதுவரைக்கும் என்ன இந்த படத்தை பாத்து ஜபோனூ அப்படின்னு பெருமூச்சு விட்டுக்க வேண்டியது தான். அதுக்கு விலை இதே மாதிரி இருந்தா நம்ம நிலைமை படத்தை பாத்து ஜபோனுனுனு அப்படின்னு சொல்லிக்க வேண்டியது தான்.

156. பாக்குறவங்க கேணையா இருந்தால் …..

ஜனவரி 8, 2007

அரசி = சித்தி + அண்ணாமலை + செல்வி

என்னடா இது புது கணக்கா இருக்கேன்னு கேக்காதிங்க இது நம்ம கணக்கு இல்லிங்கோ புகம்பம் புகழ், ஆதிமுக புகழ், திமுகாவின் பாசப்புளை சித்தி கணக்குங்கோ இது. அடுத்ததா என்னவோ அரசின்னு ஒரு தொடரு ஆரம்பிக்கிறாங்கலாமா அத்தோட கதை(இந்த மேட்டரு இதுக்கு முன்னாடி எந்த தொடரில் இருந்து இருக்கு இதுல மட்டும் இருக்குறதுக்கு.). இதுக்கு முன்னாடி எடுத்த தொடர்களின் கதையின் சாராம்சமா இருக்குமாம், இந்த தொடரில் அடிக்கடி முன்னாடி தொடர்களில் இருந்து ஒரு சில கதாபாத்திரங்க வந்துட்டு போவாங்களாமா. இதுல ஒரு டெக்னிக் என்னான்னா யாரு எல்லாம் குடுக்குற துட்டை வாங்கிட்டு நடிக்கிறாங்களோ அவங்களை மட்டும் உள்ளார விட்டுகலாம். எவன் கேள்வி கேக்கப்போறான் காட்டுவதை கேள்வி கேட்காம் பக்குற கும்பல் தானே நம்ம கதையாவது கத்திரிக்காயாவது. இந்த தொடரின் கதை வந்து ஒரு அம்மாக்கும் புள்ளைக்கும் நடுவே நடக்கும் பாசப்போராட்டமாம்(தாய்குலங்களே ஒரு பெரிய bedsheetஆ எடுத்து வச்சிகோங்க பின்னாடி கண்ணை துடச்சிகிறதுக்கு யூஸ் புல்லா இருக்கும்.).

அப்புறம் குடும்பத்தின் குத்து விளக்கு ஓனருங்களா (பொண்டாட்டிங்க எல்லாம் குடும்ப குத்து விளக்கு அப்படின்ன புருசனுங்க எல்லாம் விளக்கு ஓனருங்க தானே?), அப்புறம் குடும்பத்துல சந்து பொந்துல இருக்குற அம்புளை சிங்களுக்கு எல்லாம் இதனால சொல்லிகிறது என்னானா இதுக்கு மேல கொட்டிக்க வரதுன்னா 9 மணிக்கு முன்னாடியோ இல்லாட்டி 11 மணிக்கு பின்னாடியோ வந்து சேருங்க வடிச்சதை கொட்டி தொலைக்கிறோம் சும்மா இதுக்கு நடுவுல வந்தா அம்முட்டு தான் பெண்கள் பாதுகாப்பு சட்டத்துல உள்ள தள்ளிபுடுவோம் ஆமாம். பெண்ணுரிமை கோஷ்டிங்க வந்து பொளக்கறதுக்கு முன்னாட்டி ஜ எம் தி எஸ்கேப்புங்கோ…..

155. பில் கிளின்டனின் மாப்ளே

ஜனவரி 2, 2007

இந்திய ஜனாதிபதி என லந்து செய்த மணப்பாறை நாகராஜனை ஜூ.வி. வாசகர்கள் சுலபத்தில் மறக்க மாட்டார்கள். அவரைப் போலவே இன் னொருவர் கிளம்பியிருக்கிறார் மதுரையில் இருந்து!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளின்ட்டனின் மாப்பிள்ளை என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் இந்த மதுரைக்காரர் பெயர் ராஜ் பில்கிளின்ட்டன்! நாக ராஜன் இந்திய ஜனாதிபதியாக மாறி ரவுசு செய்தார் என்றால், இந்த ராஜ் பில் கிளின்ட்டன், ஜெர்மன் நாட்டின் அதிபராகப் போகிறாராம்!

மடங்காத தலைமுடி, எப்போதும் பேன்ட்டில் இன் செய்யப்பட்டிருக்கும் முழுக்கைச் சட்டை, தேவைப்பட்டால் தலைக்குத் தொப்பி, கண்ணுக்குக் கறுப்பு கண்ணாடி… &இதுதான் ராஜ் பில்கிளின்ட்டனின் கெட்டப். மதுரை ரிசர்வ் லைன் அருகே ஒரு கார் செட்தான் இப்போதைக்கு கிளின்ட்டன் மாப் பிள்ளையின் ஜாகை. அங்கு சென்று அவரைச் சந்தித்தோம்.

நாம் போனபோது ஃபைலில் ஆங்கிலத்தில் எதையோ எழுதிக் கொண்டிருந்தவர் நம்மை விஷ் பண்ணி வரவேற்றுவிட்டு, ‘‘நான் தான் ராஜ் பில் கிளின்ட்டன். எங்கப்பா ஹானஸ்ட் ராஜும், பில் கிளின்ட்டனும் லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிடியில ஒண்ணா படிச்சவங்க. படிக்கிற காலத்துல எங்கப்பா அடிக்கடி கிளின்ட்டன் வீட்டுக்குப் போவாராம். அதனால கிளின்ட்டனோட தங்கச்சி மேரி கிரேஸியும் எங்கப்பாவும் காதலிக்க ஆரம்பிச்சு, கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அவங்களுக்குப் பொறந்த முதல் பிள்ளை நான்தான். எங்க மாமாவோட (பில் கிளின்ட்டன்தான்!) பேரையும், எங்கப்பாவோட பேரையும் சேர்த்து எனக்கு ‘ராஜ் பில்கிளின்ட்டன்’னு பேரு வச்சாங்க. அஞ்சு வயசு இருக்குறப்ப இங்கிலாந்துல இருக்கிற ‘பில் பிரின்டிக்ட் கான்வென்ட்’ல என்னைப் படிக்க வச்சாங்க. யூதர் இனத்தை சேர்ந்த எங்கப்பா, கிளின்ட்டனோட தங்கச்சிய கல்யாணம் பண்ணிக்கிட்டத அமெரிக்கா விரும்பல. எதிர்காலத்துல நான் ஜெர்மனுக்கு ஜனாதி பதியா வந்துடக்கூடாதுனு சதித்திட்டம் போட்டாங்க. அதனால என்னைக் கடத்தி கொண்டாந்து இந்தியாவுல விட்டுட்டுப் போயிட்டாங்க. புஷ்ஷ§க்கு மாமனாரு பெட்மன் மதுரையில இருக்குற அமெரிக்கன் காலேஜ்ல அப்ப பிரின்சிபலா இருந்தாரு. அவருதான் இந்தக் கடத்தல் வேலையை செஞ்சு, என்னை காலேஜ்ல தோட்ட வேலை பாத்துக்கிட்டிருந்த செல்வராஜ்கிட்ட குடுத்துட்டாரு.

ஹிட்லருக்கு முன்னாடி எங்க தாத்தா ஜீன், ஜெர்மனோட ஜனாதிபதியா இருந்துருக்காரு. ஸ்கூல் பேக்கோடதான் என்னைய கடத்திட்டு வந்தாங்க. அதுல முக்கியமான டைரி ஒண்ண வச்சுருந்தேன். எங்க குடும்பப் படத்தோட சேர்ந்து அறுபத்தெட்டு நாட்டுத் தலைவர்களின் குடும்பப் படம் அதுல இருந்துச்சு. எங்க குடும்ப படத்துல நானும் இருந்தேன். நான் ஜெர்மன் நாட்டு ராஜ குடும்பத்து வாரிசுன்றதுக்கு அதுதான் எனக்குக் கிடைச்ச முக்கிய ஆதாரமே’’ என்று நிறுத்தியவர், கார்மெண்ட்ஸ் விளம்பரம் ஒன்றில் வெளியாகியிருந்த சிறுவன் படம் ஒன்றைக் காட்டி, ‘‘இதுதான் நான். எனக்குத் தெரியாமலேயே என்னோட படத்த விளம்பரத்துல போட்டுருக்காங்க (அடங் கொப்புரானே!), பாருங்க’’ என்று ஆதங்கப்பட்டுவிட்டுத் தொடர்ந்தார்&

‘‘என்கிட்ட இருந்த அந்த டைரிய ஆபீஸர்ஸ் மூலமா அப்துல் கலாமுக்குக் குடுத்துவிட்டேன். டி.வி&யில பார்த்துருப்பீங்களே, அப்துல் கலாம் மஞ்சள் கலர்ல ஒரு டைரி வச்சுருப்பாரே.. அது என்னோட டைரிதான்! ஜெர்மன்ல ஓட்டோ ஹோஜல்ல எங்களோட பேலஸ் இருக்கு. ‘302, பேலஸ் ரோடு, ஹானஸ்ட் ரோஷன்பெர்க்’ & இதுதான் அட்ரஸ். இதுக்கு நடுவுல நான் உயிரோட இருக்குறத தெரிஞ்சுகிட்டு பதினெட்டு நாடுகள்ல என்னைய தேட ஆரம்பிச்சுட்டாங்க. என்னைய தீர்த்துகட்டுற வேலைய, புலித் தலைவர் பிரபாகரன்கிட்ட அமெரிக்கா ஒப்படைச்சிருக்கு. பிரபாகரன் ஏற்பாட்டுல ‘ராபர்ட், ரவிச்சந்திரன்’னு ரெண்டு பேரு என்னைய முடிக்கிறதுக்கு இந்த ஸ்பாட்டு வரைக்கும் வந்துட்டாங்க. நான் சுதாரிச்சுக்கிட்டு டியூப்லைட்டை எடுத்து அவங்கள விரட்டிட்டேன். ஓடுன அவசரத்துல அவங்களோட ஐ.டி. கார்டுல இருந்து எல்லா சமாசாரத்தையும் இங்கேயே போட்டுட்டு ஓடிட்டாங்க. குடுத்த வேலைய செஞ்சு முடிக்காம போக முடியாதுன்றதால ரெண்டு பேரும் ரயில்ல விழுந்து தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. எனக்குக் கெடைச்ச அட்ரஸ வச்சு எங்கம்மா வுக்கு லெட்டர் போட்டேன். பெத்த புள்ளைய பார்க்குறதுக்காக ஒரு வருசத்துக்கு முந்தி அவங்க டெல்லி வந்து இறங்குனப்ப, அவங்கள பின்தொடர்ந்து வந்த யாரோ அவங்ககிட்ட இருந்த பாஸ்போர்ட் உள்பட எல்லாத்தையுய்ம் பறிச்சுக்கிட்டுப் போய்ட்டாங்க. இதனால அங்க இங்க சுத்தி ஆறுமாசத்துக்கு முந்தி என்னை வந்து பார்த்துட்டாங்க. பாதுகாப்பு கருதி அவங்கள இப்ப காப்பகம் ஒண்ணுல ரகசியமா தங்க வச்சுருக்காங்க. இதுக்கு முன்னாடி எங்க தாத்தா ஜெர்மன்ல ‘கிரிஸ்டியன்ஸ் டெமாக்ரடிக் பார்ட்டி’னு ஒரு கட்சி வச்சிருந்தார். இப்ப அதையே மாற்றி ‘ஜெர்மனி இன்டிபெண்டன்ட் பார்டி’னு ஆறுமாசத்துக்கு முந்தி புதுசா ஒரு கட்சிய நான் தொடங்கிட்டேன். பிப்ரவரி மாசம் ஜெர்மன்ல எலெக்ஷன். எலெக்ஷன் முடிஞ்சதும் நான் அங்க பிரசிடெண்டா வந்துருவேன். அதுக்காகத்தான் இப்ப பாஸ்போர்ட்டுக்கு அப்ளை பண்ணியிருக்கேன்’’ என்று நம்மைத் திகைக்க வைத்தார் ராஜ் பில் கிளின்ட்டன்.

செ.கு.தமிழரசனின் இந்திய குடியரசு கட்சி, அம்பேத்கர் மக்கள் இயக்கம் உள்ளிட்ட கட்சிகளில் மதுரை மாவட்டச் செயலாளராக இருந்து அரசியலும் பண்ணியிருக்கிறார் ராஜ் கிளின்ட்டன். 1998&ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் சுப்பிரமணியம் சுவாமியும் இவரும் ஒரே ஜீப்பில் பிரசாரம் செய்திருக்கிறார்கள்.

இது குறித்தும் நம்மிடம் பேசிய மதுரை கிளின்ட்டன், ‘‘ஒருசமயம், ‘இவரு என்கிட்ட இருந்துருந்தா கட்சிக்கு பொதுச் செயலாளராக்கி இருப்பேன்யா. நீ வெறும் மாவட்ட செயலாளரா உட்கார வச்சுருக்கே. இவர அமெரிக்காக்காரன் வலை போட்டுத் தேடிக்கிட்டிருக்கான், தெரியுமா?’னு செ.கு.தமிழரசன்கிட்ட சுவாமி கேட்டாரு. அத்தோட பயந்துபோய், என்னைய ஓரங்கட்ட ஆரம்பிச்சுட்டாரு தமிழரசன். இப்ப வருத்தப்பட்டுக்கிட்டிருக்காரு. என்ன செய்யச் சொல்றீங்க?’’ என்றார்.

ராஜ் பில் கிளின்ட்டன் குறித்து ரிசர்வ் லைன் ஏரியாவில் விசாரித்தபோது, ‘‘இவனால யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லைங்க. இதுக்கு முன்னாடி தினமும் காலையில ஒரு இன்ஸ்பெக்டரம்மா வந்து இவனுக்கு சாப்பாடு குடுத்துட்டுப் போகும். இப்ப அதுவும் இல்ல. அரசியல விட்டதும் சொந்தமா பினாயில் தயார் பண்ணி கிறிஸ்டியன்ஸ் கல்வி நிறுவனங்களுக்கு வித்துக்கிட்டிருந்தான். அதுக்கப்புறம்தான் இப்படி மெண்டல் மாதிரி ஆயிட்டான். ஒரு மாசத்துக்கு முன்னாடி இவனோட அப்பா வந்து இவனை வீட்டுக்குக் கூப்பிட்டாரு. ‘நீ எனக்கு அப்பா இல்ல. எங்க அப்பா ஜெர்மன்ல இருக்காரு’னு சொல்லி அவர தள்ளிவிட்டுட்டான். அந்த மனுஷன் கண்கலங்கித் திரும்பிப் போயிட்டாரு’’ என்றார்கள்.

வடிவேல் சொல்ற மாதிரி… இப்புடியெல்லாம் காமெடி பண்ணி கலாய்க்கிறதுக்குன்னே உக்காந்து யோசிப்பாய்ங்கிய போலருக்கு! – நன்றி ஜீனியர் விகடன்.

ஆகா ஒரு மார்கமாத்தான் திரியராங்க. என்னப்பூ ஊருல கொஞ்சம் வெயில் அதிகமோ? பார்த்து உஷாரா இருந்துகோங்கய்யா அம்முட்டு தான் சொல்ல முடியும்.

154. உங்க நம்பிக்கையை நாய் கடிக்க

திசெம்பர் 31, 2006

சதாம் உசேனை ஏகாதசி அன்று தூக்கில் போட்டதால் ஹிந்து சாஸ்திரத்தின் படி அவர் செத்த பின்னாடி சொர்கத்துக்கு போவாராம். அப்படின்னு நான் சொல்லலை சாமியோவ் இங்க இந்த பத்திரிக்கையில சொல்லி இருக்காங்கோ. அட அவரு முஸ்லிமுங்கோ (ஆனா இதுக்கு ஜாதி மதம் கிடையாதாமாம் யார் செத்தாலும் சொர்க்கம் தானாம். இதுக்கு மட்டும் தான் ஜாதி கிடையாதா? கோவிலுக்குல்ல போறதுக்கு மட்டும் ஜாதி மதம் இருக்கோ? என்னங்கடா நியாயம் உங்களோடது?) அவரு இந்த கேட்டகரியில் வர மாட்டாருங்கோன்னு சொன்னா, சரி அப்படின்னா டிசம்பர் 30ஆம் தேதி அவங்களுக்கும் ஏதோ விஷேசமான(சாத்தானை கல்லெறிஞ்சி கொன்ன நாளாம். அப்ப சாத்தான் செத்த அன்னிக்கு செத்தவர் எப்படி சொர்கத்துக்கு போவாரு இவங்க கதை என்னான்னு புரியலை.) நாள் அதனால் அவரு இந்து முறைப்படி எடுத்துக்கிட்டாலும் இல்ல முஸ்லிம் முறைப்படி எடுத்துக்கிட்டாலும் சொர்கத்துக்கு போவாராம். அப்ப அவரு மக்களை கொன்னு குவிச்சாரே அதுக்கு எல்லாம் தண்டனை எதுவும் இல்லையா சாமி? என்ன தான் ஏகாதேசி அன்னிக்கு செத்தாலும் அது நல்ல முறையிலான இயற்கை மரணம் அப்படின்னா தான் சொர்கத்துக்கு போவாங்கன்னு என் பாட்டி சொல்லி கேள்விப்பட்டு இருக்கேன் அது எல்லாம் இல்லையா?

153. 2006 – சிறந்த முட்டாள்தனத்துக்கான டார்வின் விருதுகள்.

திசெம்பர் 29, 2006

டார்வின் விருது வாங்க தகுதியானவர்கள் யாருன்னு பாத்தா, டார்வினின் தத்துவமான மனிதனுக்கு ஆறு அறிவு அப்படிங்கிறத அசால்டா பொய்யாக்க முயற்சி செய்தவங்க. இந்த வருசம் அந்த விருதுக்கான போட்டியாளர்களையும் அவங்க செய்த சாதனைகளையும் பார்க்கலாமா?

ஏதோ நமக்கு புரிஞ்ச வரைக்கும் தமிழில் மொழி பெயர்த்து இருக்கேன் தப்பு இருந்தா சொல்லிடுங்கண்ணா. இந்த பதிவின் ஆங்கில வெர்ஷன் இங்க இருக்கு ஷேக்பியர் பெரு மக்கள் அங்கன போயி படிச்சிகலாம் (சும்மா தமாசுக்கு அடிச்சிடாதிங்க அப்பறம் நான் அழுதுடுவேன்.).

1. Detroitஜ சேர்ந்த 41 வயதான நம்ம தலை அவரோட கார் சாவியை தேடுகிறேன் பேர்விழி 2 அடி ஆழமும் 18″ அகலமும் இருக்கும் கால்வாய்க்குல் தலை விட்டு தேடி இருக்காரு.

ஏங்க பெரியவரே ஆண்டவன் எதுக்கு கை அப்படின்னு ஒண்ணு குடுத்து இருக்கான்? 2 அடி குழிக்குள்ள எப்படி தலையை விட்டு தேடணும் அப்படின்னு தோணி இருக்கு ரூம் போட்டு யோசிப்பிங்களோ? என்ன தான் நீங்க தலையா இருந்தாலும் எல்லாத்துக்கும் தலையை உபயோகப்படுத்தணுமா என்ன?

2. SanFrancisco நகரில் ஒரு 49 வயசு வாலிபர் அடிச்ச கூத்து இது. இந்த வயதான வாலிபர் jogging செய்து கொண்டு போகும் பொழுது ஆர்வம் அதிகமாயி வழியில் 100 அடி உயர குன்று இருப்பதை கூட கவனிக்காமல் தொடர்ந்து Jogg செய்து கொண்டே இருந்து இருக்கிறார் அப்புறம் என்ன சங்கு தான்.

வயசான காலத்துல எதுக்கு நமக்கு இந்த விபரீத விளையாட்டு. உங்க ஆர்வத்துக்கு ஒரு அளவே இல்லையா? விவேக் சொல்லுவார் இல்ல ஓடினேன் ஓடினேன் PWD காரர்கள் வெட்டி வைத்து இருந்த குழியில் இருந்து ஓடினேன், Highways காரர்கள் வெட்டி வைத்து இருந்த குழியில் இருந்து ஓடினேன்ன்னு அது மாதிரி இவரு ஏதோ முயற்சி செய்து இருக்காரு போல.

3. Buxton நகரில் ஜோன்ஸ் அப்படிங்கிற 21 வயதே நிரம்பிய இளம் அறிவாளி சும்மா தமாசுக்கு பீச்சில் ஒரு 8 அடி குழியை தோண்டி அதுக்குள்ள சேர் போட்டு ஒக்காந்து இருக்காரு, அப்புறம் என்ன காத்து அடிச்சி அந்த குழி மூடிவிட்டது. அப்புறம் என்ன இவரது சங்குக்கு பின்னாடி இவரை டார்வினின் இந்த விருதுக்கு பரிந்துரை செய்து இருக்காங்க.

ஒக்காந்து அப்படி என்ன தான் செய்து இருப்பாரோன்னு தெரியலை. எல்லாரும் ரூம் போட்டு யோசிக்கிறாங்க நம்ம ஏன் வித்தியாசமா எதாவது செய்யக்கூடாதுன்னு குழி வெட்டி அதுல ஒக்காந்து யோசிச்சி இருப்பாரோ?

4. Santiago நகரில் 24 வயது மதிக்கத்தக்க இவரு வாயில் tourch லைட்டை கவ்விகிட்டு விட்டத்தை பாத்துகிட்டு எதையோ உடைத்துக்கொண்டு இருந்து இருக்காரு, ஏதோ ஒண்ணு நடந்து அவரது வாயில் இருந்த tourch அவரது தலையை பதம் பார்த்து விட்டது.

இவரு எதுக்கோ tourch அடிக்க அது எமன் மேல பட்டு அவரு இவருக்கு tourch அடிச்சிட்டாரு போல..

5. Delaware நகரை சேர்ந்த இவரு பேர் sylvester. பேருக்கு ஏத்த மாதிரி தான் ஆளும் கொஞ்சம் adventure டைப் போல. நம்ம தமிழ் படத்துல வருகிற மாதிரி ஒரு துப்பாக்கியை எடுத்து அதுல 4 புல்லட்டை போட்டு சுத்தி விட்டு அவரது வாயில் வைத்து சுட முயற்சி செய்து இருக்காரு. இவரு என்ன கேப்டனா புல்லட் இவரை பாத்து பயப்படுவதற்கு? அப்புறம் என்ன புல்லட் பாய்ந்து சங்கு தான்.

அடப்பாவிங்களா உங்க விளையாட்டுக்கு ஒரு அளவே இல்லையா, நீ என்ன கேப்டனா இந்த மாதிரி விளையாடுவதற்கு அவர் தொட்டா கரண்டுக்கே shock அடிக்கும், அவரை பாத்தா புல்லட்டுகே பீதி ஆயிடும் (பின்ன அவரு சாகும் போது விடும் 10 பக்க டயலாக்கை கேட்டா யாருக்கு தான் பீதி வராது. அதனால தான் புல்லட்டே அவரை பாத்து பயப்படுது.)

6. New Jersyஜ (ஆமா இந்த ஏரியாவுல வெள்ளைக்காரங்களும் இருக்குறாங்களா என்ன? ) சேர்ந்த பவுல் அப்படிங்கிறவரு நைட் 2 மணிக்கு பொண்டாட்டியோட கார் ஓட்டிகிட்டு போயி இருக்காரு, வழியில் Bore அடிச்சி இருக்குது என்ன பண்ணலாம் அப்படின்னு யோசிச்சி இருக்காரு. அப்புறம் காருக்குள்ள இருந்த dynamiteஜ கொளுத்தி அதை காருக்கு வெளியே எறிய முறபட்டு இருக்காரு, ஆனால் கார் கண்ணாடி மூடி இருந்ததை அவரு கவனிக்கலை. மனுசன் உயிர் பிழைச்சிட்டாரு.

டேய் உங்க பரம்பரைகே டார்வின் விருது குடுக்கணும்டா எப்படி எப்படி உங்களால மட்டும் இப்படி எல்லாம் முடியுது.. யப்பா தாங்க முடியலைடா உங்க அறிவை பார்த்து Einsteinக்கு தலை சுத்துகிற மாதிரி இருக்குங்கடா… ஒரு படத்துல செந்தில் செய்வார் இல்ல கையெறி குண்டின் pinஜ நீக்கி விட்டு 1,2,3 எண்ணுவாரு, 10 வரைக்கும் எண்ண வேண்டும் 5 விரல் முடிந்த உடன் குண்டை அவரு தன்னோட இரு காலுக்கு இடையில் வைத்து விட்டு அடுத்த கை விரலை உபயோகித்து எண்ண ஆரம்பிப்பாரு.

7. Washingtonஜ சேர்ந்த கெர்ரி அப்படின்னு ஒரு ஆளு தண்ணியை போட்டு விட்ட அலும்பலை கேளுங்க. தண்ணியை போட்டு ஒருத்தர் “எனக்கு Tacoma Bridgeல இருந்து bungee jump செய்தவனை தெரியும் அப்படின்னு சொல்லி இருக்காரு”, அதை கேட்ட இவரு என்னவோ சொல்ல பிரச்சனன பெருசாகி, சவால் ஆகி நம்ம கெர்ரி bungee jump செய்வது அப்படின்னு அதிகாலை 4.30 மணிக்கு முடிவாகியது.

எல்லாம் போட்டியை நடத்த அந்த பாலத்து கிட்ட போறாங்க. அங்க போன பின்னாடி தான் தெரியுது bungee Jump செய்ய கயிற்றை யாரும் எடுத்து வர வில்லை என. ஆனா வீராதி வீரன் சூராதி சூரன் நம்ம கெர்ரி விட்டேனா பாருன்னு அங்க இருந்த கரண்ட் கம்பியின் ஒரு முனையை பாலத்துல கட்டி மறுமுனையை தன்னோட காலில் கட்டிக்கொண்டு குதித்து இருக்காரு, தலை 40 அடியில இருக்கும் பொழுது கால் தனியா போயிடிச்சி. ஆனா யார் செய்த புண்ணியமோ தெரியலை உயிர் பிழைச்சிகிட்டாரு ஆனா இன்னும் கால்ஜ தேடிக்கொண்டு இருக்காங்கலாம் யாருக்காவது கிடைச்ச கொஞ்சம் சொல்லி விடுங்க புண்ணியமா போகும் உங்களுக்கு.

சில பேருக்கு தண்ணியை போட்டா எதாவது adventure செய்ய வேண்டும் போல இருக்கும் அந்த கோஷ்டி போல இவரு. எனக்கு தெரிந்து என்னொட ஒரு நண்பனுக்கு தண்ணி மப்பு ஏறினால் அவனோட பைக்கை ஒட்டியே ஆகவேண்டும் என்று உயிரை எடுப்பான். அவன் தனியா போனா கூட பரவாயில்லைங்க மாப்பு நீ வா நான் இவ்வுளவு மப்பிலும் எப்படி steadyஆ பைக் ஓட்டுகிறேன் அப்படின்னு பாருன்னு கூட எவனையாவது கூட்டிகிட்டு போவாங்க.

8. ஜெர்மனியை சேர்ந்த friedrich அப்படிங்கிறவரு விலங்கியல் பூங்காவில் யானையை பராமரிப்பு செய்கிறவர். ஒரு யானைக்கு உடம்பு சரியில்ல போல அதுக்கு வைத்தியம் பார்க்கிறேன்ன்னு அந்த யானைக்கு olive oil enema குடுத்து இருக்காரு. யானை டென்ஷன் ஆயி இவரு மேல விட்டத்தை போட்டுடிச்சி அதுவும் கொஞ்சம் நஞ்சம் இல்லிங்கண்ணா200 பவுண்டு(ஏறக்குறைய 90 கிலோ).

சொல்றதுக்கு ஒண்ணுமே இல்லிங்க.. நம்ம கைப்புள்ள மாதிரி “விட்டத்தை வாங்குன பாகன் நிலைமை இப்படின்னா போட்ட யானை எப்படி இருக்கோ?”.

அப்புறம் மேலே இருக்குற போட்டியாளர்களில் கடுமையான போட்டிக்கு இடையில் முதல் பரிசை தட்டிச்செல்பவர் ஜெர்மனியை சேர்ந்த தீஞ்ச பணக்காரன் (ஹிஹி friedrich அந்த பெயரை தமிழ் படுத்தினேன்) அடுத்த இடத்தை நம்ம குவாட்டர் கோயிந்தன் கெர்ரி தான். மூணாவது இடத்தை புடிச்சவரு நம்ம adventure அய்யா சாமி கெர்ரி. எல்லாம் ஜோரா கை தட்டுங்கோஓஓஓஓஓஓஓஒ….

இதை படிச்சி எல்லாரும் சிரிச்சி சந்தோஷமா இருப்பிங்கன்னு நினைக்கிறேன். இது மாதிரியே வர போகிற வருசத்திலும் நீங்க சிரிச்சிகிட்டே சந்தோசமா இருக்கணும் அப்படின்னு ஆண்டவன் கிட்ட வேண்டிக்கிறேன். எல்லாருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.