Posts Tagged ‘மொக்கை’

இந்த வாரம் ரணகளம்தான்டி

நவம்பர் 12, 2007

கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை ஆடிகிட்டு இருந்திச்சாம், அது மாதிரி ஏதோ சமீபகாலமா நல்லா இருக்குற தமிழுக்கும், தமிழ்மணத்துக்கும் வேட்டு வெக்கிற மாதிரி வந்துச்சி பாருங்க ஒரு கடுதாசி. நவம்பர் 12 முதல் 17 வரை நீங்க நட்சத்திரம் இருக்கணுமுன்னு.ஆகா மாட்டினாங்கடா தமிழ் மக்கள் இதை விட்டா கைப்புள்ளைங்களையும், செ.செ.சூ வெச்சிகிட்ட தமிழ்மணத்தையும் போட்டுத்தாக்க நல்ல வாய்ப்பு கிடைக்காது புடிச்சிகோடா சந்தோசுன்னு உள் மனசு சொல்ல, போட்டேன் பாருங்க ஒரு பதிலு அய்யா சாமி தமிழ்மண தர்மகத்தாவே, நீங்க ஆள் தெரியாம எனக்கு அனுப்பி இருந்தாலும் பரவாயில்லை இந்த வாய்ப்பை நான் விட மாட்டேன், நான் தான் அந்த வாரத்துல நட்சத்திரமா இருப்பேன்னு அவங்க யோசிக்கிறதுக்கு கூட டைம் குடுக்காம கெட்டியா புடிச்சிகிட்டேன். 

அந்த கடுதாசி வந்ததுல இருந்து எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை(அது எப்பவும் ஓடாதுங்கிறது வேற விஷயம்).பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் நட்சத்திரமா இருந்து என்ன என்னத்தை எல்லாம் எழுதி பெருமை சேர்த்து இருக்காங்க. எனக்கு என்னத்தை தெரியும் சொல்லுங்க, நான் என்னாத்தனு எழுத முடியும்? இருந்தாலும் விடுவோமா?

அப்புறம் இன்னொன்னும் சொல்லிடறேன், இளகிய மனசு உள்ளவங்க, மொக்கையை தாங்க முடியாதவங்க, தமிழ் பற்று உள்ளவங்க, தமிழுக்கு கொடுமை நேர்வதை கண்டு பொங்குறவங்க எல்லாம் தமிழ்மணம் பக்கம் ஒரு வாரம் வந்துடாதிங்க, ஏன்னா இந்த வாரம் முழுவதும் தமிழுக்கு சோதனைக்காலம் தமிழ் கொலை பண்ணி பண்ணி தமிழ்மணம் முழுவதும் ரத்த ஆறா ஓடப்போவுது. பேச்சை குறைடான்னு நீங்க சொல்றது எனக்கு கேக்குது ரைட்டு விடுங்க, இம்முட்டு சொல்லியும் என் பேச்சை கேக்காட்டி என்ன பண்றது, சோலிய முடிச்சிட வேண்டியது தான், இதுக்கு மேல உங்க தமிழுக்கு என்னால உத்திரவாதம் குடுக்க முடியாது, நம்மளோட அடுத்த மீட்டிங்கு டைரக்டா ரத்த பூமியில தான் வரட்டா.

அப்ப நானெல்லாம் பதிவர் இல்லியா?

ஒக்ரோபர் 10, 2007

கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு நாள் பதிவுகளை இந்தியாவுல தடை செஞ்சிட்டாங்க. இதனால பல பெரிய பெரிய பதிவருங்கோ சாப்பிட முடியாம, தூங்க முடியாம, கொட்டாவி கூட விட முடியாம ரொம்ப கஷ்டப்பட்டாங்க. சில பேருக்கு கை கால் எல்லாம் கூட நடுங்க ஆரம்பிச்சிடிச்சி. ஒரே போன் தான் மெயில் தான் என்னடா இப்படி ஆகிப்போச்சே?  இதுக்கு மேல நாம் இந்த உலகத்துல வாழ முடியுமா? பதிவு இல்லாத உலகத்துல வாழத்தான் வேணுமான்னு சில பேர் சீரியசா யோசிக்க கூட ஆரம்பிச்சிடங்க. சில பெரிய பதிவருங்க அக்கம் பக்கத்து நாடுகளுக்கு போயி பதிவுகளை பாத்துட்டு வந்தாங்க. இதே நிலைமை தான் தமிழ்மணம் ஒரு நாள் டவுன் ஆன பொழுதும் ஏற்பட்டது.

நான் கூட ஒரு முறை யோசிச்சி இருக்கேன் அட்டா, நம்ம கூட இந்தியாவுக்கு போகப்போறோமே ஆபீசுல பதிவுக்கு எல்லாம் ஆப்பு வெச்சி இருப்பாங்களே நம்ம கை கால் எல்லாம் கூட நடுங்க ஆரம்பிக்குமான்னு, ஆனா பாருங்க இங்க வந்து ஒரு மாசம் பக்கம் இந்த பக்கம் வரவே இல்லை ஆனாலும் எனக்கு அது மாதிரி எல்லாம் எதுவும் நடக்கைலையே? எனக்கு மட்டும் இப்படியா இல்ல உங்களில் யாருக்காவது இப்படி நடந்து இருக்கா? ஏங்க அப்ப நானெல்லாம் பதிவர் இல்லிங்களா?

வீடு எப்படிங்க இருக்கு?

ஒக்ரோபர் 8, 2007

நீங்க பாத்திங்கன்னா மாற்றம் ஒன்றே மாறாதது(நீங்க பாக்காட்டியும் அது தாங்க மாறாதது). எம்முட்டு நாள் தாள் பிளாக்கருக்குள்ளேயே இருக்குறது நமக்குள்ள ஒரு மாற்றம் வேண்டாமா? அதனால தான் வூட்டை மாத்திட்டேன், பிளாக்கருல இருந்து வேர்டுபிரஸ்ஸுக்கு மாறிட்டேன், மாற்றம் கீற்றமுன்னு சீனை போடுறானே புதுசா ஏதாவது எழுதிடப்போறன்னு நீங்க தப்பு கணக்கு போட்டா அதுக்கு நான் பொறுப்பு இல்ல ஆமாம் சொல்லிட்டேன். ஏரியா தான் மாறி இருக்கு ஆள் மாறலை அதனால சேம் மொக்கை, copy paste தான் இங்கேயும்.

எலேய் எவன்டா அது ஆபீசுல பிளக்கருக்கு ஆப்பு வெச்சிட்டாங்க அதனால இதுக்கு மாறிட்டு என்ன சீனை போடுறான் பாரு இவன்னு சொல்லுறது, பிச்சி புடுவேன் பிச்சி. இதனால நான் சொல்லிகிறது என்னானா மக்களே நம்ம புது ஏரியாவுக்கும் அடிக்கடி வாங்க (நீ முதல்ல ரெகுலரா எழுது அப்புறம் நாங்க வருவதை பத்தி முடிவு பண்ணிக்கிறோமுன்னு சொல்லுறீங்களா அதுவும் சரிதான்.) பழகிப்பாருங்க புடிச்சா திரும்ப திரும்ப வாங்க பழகலாம்.